சமீபத்திய பதிவுகள்

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)

>> Thursday, March 27, 2008

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20304193&format=html

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)

ஒரு விவாத கருத்தரங்கு

அபுஹாலில்: ஒரு யூதரோ அல்லது கிறிஸ்தவரோ தனது ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் ஒரு பழைய ஏற்பாட்டு வசனத்தை தேடி ஓடுவதில்லை. அதைப்போலத்தான் ஒரு இஸ்லாமியனும். ஸ்பென்ஸர் மேற்கோள் காட்டும் குர்ரான் வசனங்கள் சில பழைய ஏற்பாடு வசனங்களை விட அதிக கொடூரத்தை கொண்டிருக்கவில்லை. அத்தகைய வசனங்கள் இன்று அவற்றின் வரலாற்று பின்புலத்தை அறிந்துகொள்ளும் ஒரே ஆர்வத்தால் மட்டுமே படிக்கப்படுகின்றன என்றாலும் ஒசாமா போன்ற வெறியர்கள் (அத்தகையவர்கள் எங்குதான் இல்லை) இத்தகைய வசனங்களை தவறாக பயன்படுத்தலாம். அதிர்ஷ்டவசமாக பின் லாடன் போன்றவர்கள் ஒரு சிறிய மதவெறிக்கூட்டத்தை தவிர பெரிய அளவில் யாரையும் கவர்ந்துவிட இயலவில்லை. அவனுக்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அவன் விடுத்த கோரிக்கை கூட பெரும்பான்மை இஸ்லாமிய உலகால் புறக்கணிக்கப்பட்டது.

ஸ்பென்ஸர்: ஆசாத் ...உண்மையிலேயே அதிர்ச்சிதான். முஸ்லீம்கள் குர்ரானாலும் ஹதீசாலும் தங்கள் வாழ்க்கையை நடத்தவில்லை என்பதை கேட்க எனக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால் எனக்கு இது ஏற்கனவே தெரியும். பெரும்பாலான முஸ்லீம்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதால் இரத்தத்தையும் வன்முறையையும் கோரும் வசனங்களை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதனை நான் அறிவேன். ஆனால் நாம் இப்போது விவாதிப்பது இஸ்லாம் அதன் தன் இயற்கையிலேயே ஒரு சுதந்திரமான கருத்து சுதந்திரமுடைய ஜனநாயக அமைப்பிற்கு ஒவ்வாத தன்மையுடன் உள்ளதா ? என்பதுதான். நான் 'ஆம் ' என நிறுவியுள்ளேன். அங்கொன்று இங்கொன்றாக பொறுக்கி எடுக்கப்பட்ட வசனங்களால் அல்ல, அதற்கு மாறாக வெகு நன்றாக பாரம்பரியச் செறிவுடன் விளக்கப்பட்ட ஒரு சித்தாந்தமாகவும் மரபாகவும் வன்முறைத்தன்மையுடைய ஜிகாத் நம்பிக்கையற்றோர் மீது விளங்குகிறது. நான் அறிவற்ற மூடனாக இருக்கலாம் ஆனால் இஸ்லாமிய உலகில் பயங்கரவாதம் வேரூன்றியுள்ள அளவு குறித்து நீங்கள் என் கண்ணில் மண் துெவும் அளவுக்கு நான் மடையனல்ல. பின் லேடன் இஸ்லாமிய உலகில் ஆதரவற்ற வெறியன் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்தோனேசியாவின் ஜஃபார் உமர் தாலிப்பும் 10,000 கிறிஸ்தவர்களை கொன்று குவித்துள்ள லக்ஷர் ஜிகாத் அமைப்பும் அப்படியா ? 'வெற்றி அல்லது புனித மரணம் வரை ஜிகாத் ' என அறிவிக்கும் பல்லாயிரக்கணக்கோரை கொன்ற ஹமாஸும் அப்படியா ? ஆயுதங்களும் இராசாயன போருக்கான பாதுகாப்பு கவசங்களும் கண்டெடுக்கப்பட்ட ஷூ வெடிகுண்டு பயங்கரவாதியின் மசூதியான பின்ஸ்பரி பார்க் மசூதியை நாம் எந்த கணக்கில் சேர்ப்பது ?

உலகம் முழுவதும் பரவியிருக்கும் பயங்கரவாத அமைப்புகளான அபு நிதால், அபு சையப், அஹில் ஈ ஹதீஸ், அல் அகுசாபுனித போராளிகள் பாசறை, அல் காமா அல் இஸ்லாமியா, அல் இதிஹாத் அல் இஸ்லாமி, ஹிஸ்புல்லா, இஸ்லாமிக் ஜிகாத், ஜைஷ் ஏ முகமது, லக்ஷர் இ தொய்பா மற்றும் ஏனயவற்றை எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது ? அனைவருமே ஆதரவற்ற தனிப்பட்ட வெறியர்கள் ? அனைவருமே இஸ்லாமுக்காக உயிரை கொடுக்க இஸ்லாமை தவறாக புரிந்து கொண்டவர்களா ? என்ன சொல்லுகிறீர்கள் ?

அபுஹாலில்: நீங்கள் வரிசைப்படுத்திய அனைத்துமே பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்க அரசால் அறிவிக்கப்பட்டவை.ஆனால் அமெரிக்க அரசுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய அமைப்புகளால் செய்யப்படும் பயங்கரவாத செயல்கள் மட்டுமே கண்காணிக்க தக்கவை போலும். பயங்கரவாதத்தை பொறுத்த வரை என்னுடைய வரைமுறை, எந்த அப்பாவியையும் கொல்வதுதான். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளுவோமானால், இஸ்ரேல், ஹமாஸ் இரண்டுமே பயங்கரவாதத்தில் தான் ஈடுபடுகின்றன. ஆனால் ஹமாசை விட இஸ்ரேல் அதிக உயிர்களை கொன்றுள்ளது. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை கொல்வதற்கு யூத அடிப்படைவாத ஆதரவு இருந்த போதிலும் கூட அது யூத பயங்கரவாதம், என கருதப்படுவதில்லை. அதைப்போலவே ஐ.ஆர்.ஏ (ஐரிஷ் விடுதலை அமைப்பு) கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டாலும் கூட அது கத்தோலிக்க பயங்கரவாதம் என அழைக்கப்படுவதில்லை. ஏன் அவையெல்லாம் வெறும் பயங்கரவாதம் என்று மட்டுமே மதப்பூச்சு இல்லாமல் அறியப்படுகின்றன ?

ஸ்பென்ஸர்: தாராளமாக ஆசாத். தாராளமாக அதை கத்தோலிக்க பயங்கரவாதம் என அழையுங்கள். பின்னர் கத்தோலிக்க பயங்கரவாதத்திற்கு ஐ.ஆர்.ஏக்கு அப்பால் பிறிதொரு உதாரணமும் தாருங்கள். ஐ.ஆர்.ஏயைக் கூட போப் கண்டிப்பதை காண்பீர்கள். ஆனால் இஸ்லாமை பொறுத்தவரையில் இஸ்லாமின் பெயரால் வன்முறை புரியும் அமைப்புகளின் ஒரு பெரும் வரிசையையே நான் இப்போதுதான் அடுக்கினேன். ஆனால் மதத்திரிபு வாதிகள் என தங்கள் சக மதத்தவர்களால் வேட்டையாடப்படும் சூஃபி வட்டத்துக்கு அப்பால் வன்முறையை கண்டிக்கும் ஒரு குரலை உங்களால் காட்டமுடியாது. ஜிகாத் எனும் பெயரில் நடத்தப்படும் வன்முறைகளை கண்டிக்கும் ஒரு ஆதாரபூர்வமான இஸ்லாமிய இறை அறிஞரை தாங்கள் காட்டும்படி நான் உங்களிடம் கேட்டு கொண்டேன். நீங்கள் அதை மட்டும் செய்யவில்லை ஏனெனில் அது உங்களால் முடியாது. ஜிகாத் என்பது நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் போர். நம்பிக்கையற்றோர் முன் ஜிகாத் மூன்று தேர்ந்தெடுப்புகளை வைக்கிறது. அவை மரணம், மதமாற்றம் அல்லது அடிபணிதல். இது முகமது நபி காலம் முதல் இஸ்லாமிய மறையியலின் பகுதியாக அவர் இம்மூன்று வாய்ப்புகளை உருவாக்கிய (ஷாஹி முஸ்லீம் 4294) காலம் முதல் உள்ளது, ஒருவேளை என்றென்றும் இனியும் தொடரலாம்.

அபுஹாலில்: ஜிகாத் அழைப்பினை முஸ்லீம்கள் புறக்கணித்த உதாரணங்களையே நான் தருகிறேன். 1991 இல் சதாம் அமெரிக்காவின் மீது ஜிகாத் அறிவித்த போது இஸ்லாமிய மத அறிஞர்களும் பொதுமக்களும் அதனை புறக்கணித்தனர். பின் லாடனும் அவனது சக வெறியர்களும் அமெரிக்கா மீது வாரத்திற்கொரு முறை ஜிகாத் அறிவித்த போதிலும், அந்த ஜிகாத் அழைப்புகள் புறக்கணிக்கப் படுகின்றன. மிக முக்கியமான இஸ்லாமிய அறிஞர்கள், முஃப்திகள், காஜிகள் மற்றும் அரபுலக எழுத்தாளர்கள் செப்டம்பர் 11 க்கு பின் வெளியிட்ட அறிக்கை அல் குட்ஸ் மற்றும் அல் அராபி பத்திரிகைகளில் வெளியாயிற்று. வழக்கம் போல் அமெரிக்க ஊடகங்கள் அவற்றை புறக்கணித்தன. இந்த அறிக்கையில் பின்லாடன் இஸ்லாமிய உலகின் முன்வைத்த ஜிகாத்திற்கான சமய ரீதியிலான வாதங்கள் மறுக்கப்பட்டிருந்தன.

புனிதப் போருக்கான கிறிஸ்தவ ஆதரவினை பொறுத்தவரையில் பில்லி கிரஹாமை எடுத்துக்கொள்ளலாம். அவர் ஒரு யூத வெறுப்பாளர் என்பது நிக்சனின்

வெள்ளை மாளிகை ஒலி நாடாபதிவுகள் மூலம் தெளிவாகியுள்ளது. முஸ்லீம் வெறுப்பினை ஏற்றுக்கொள்ளும் இபின் வராக் யூத வெறுப்புக்காகவாவது பில்லி கிரஹாமை கண்டிக்கலாம். பில்லி கிரஹாமால் ஆசிர்வதிக்கப்படாத ஒரு அமெரிக்க போர் கூட கிடையாது. இப்போதும் கூட 63% அமெரிக்க மக்கள் ஈராக் போரினை ஆதரிக்கின்றனர். இஸ்ரேலில் 'அரேபியர்களுக்கு சாவு ' என்பது அங்குள்ள அரசியலில் முக்கிய பாடலாகவே மாறிவிட்டது.

ஸ்பென்ஸர்: ஆசாத் மீண்டும் நீங்கள் நாம் விவாதிக்கும் விஷயத்தை பற்றி பேச மறுத்தால் எப்படி ? நான் உங்களை இஸ்லாமியர்கள் ஒரு குறிப்பிட்ட ஜிகாத் அழைப்பினை புறக்கணித்தது குறித்தல்ல கேட்டது. அவர்கள் பின் லாடனின் ஜிகாத் அழைப்பினை அவன் ஒரு ஜிகாத் அழைப்பினை விடுக்கும் மத அதிகாரமற்றவன் என நினைத்து புறக்கணித்திருக்கலாம் அல்லது ஜிகாத்திற்கான சந்தர்ப்பம் இது அல்ல என நினைத்து அதனை புறக்கணித்திருக்கலாம். எனவே அவர்கள் ஒசாமாவின் ஜிகாத் அழைப்பினை புறக்கணித்தார்கள் என்பது நான் கேட்ட ஆதாரத்தை அளிக்கவில்லை. வன்முறையான ஜிகாத் எனும் தத்துவத்தை மறுப்பது என்பதே நான் கேட்டது. இஸ்லாமின் வன்முறை மரபினை அவர்கள் துகெ¢கி எறிந்துவிட்டார்களா இல்லையா என்பதே நான் கேட்டது. முகமது நபி கட்டளையிட்டது படி நம்பிக்கையற்றோரினை மதமாற்றுதல் அல்லது

கொல்லுதல் அல்லது ஒடுக்குதல் என்பதே இஸ்லாமின் பணிநோக்கம் என்பதனை அவர்கள் மறுதலித்து விட்டார்களா என்பதே என் கேள்வி. அவ்வாறு செய்த ஒரு முஸ்லீம் மதத்தலைவரை நீங்கள் இன்னமும் எனக்கு கூற முடியவில்லை என்பதே உண்மை.

நீங்கள் ஏன் கூறவில்லை எனில் உங்களால் முடியாது. ஒருவேளை வன்முறையான ஜிகாத் கோட்பாட்டை தர்க்க ரீதியில் காப்பாற்ற முயலுவோர் இருக்கலாம். ஆனால் ஒடுக்கப்படும்

சூஃபி வட்டத்துக்கு வெளியே குர்ரான் மற்றும் ஹதீஸில் அது நன்கு வேரூன்றி நிற்பதை காண்பீர்கள். அதைப்போலவே பில்லி கிரஹமை எடுத்துக்கொண்டாலும் கிறிஸ்தவத்தின் எந்த கோட்பாடும் ஒரு போரினை ஆசிர்வதிப்பதைஅல்லது நம்பிக்கையற்றோர் மீதானதோர் போரை இன்றியமையாததாக்கவில்லை. கிறிஸ்தவத்தில் அத்தகையதோர் கோட்பாடு ஒல்லை; இஸ்லாமில் உண்டு. நீங்கள் மிகச்சரியாக மிகத்தீவிரமாக சுட்டிக்காட்டியபடி கடவுள் கருணையால் பெரும்பான்மை முஸ்லீம்கள் இக்கோட்பாட்டினை முக்கிய ஒன்றாக எடுத்துக்கொள்ளவில்லை.

அயலுஷெ¢: இஸ்லாமின் ஒரே நோக்கம் முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவதுதான் என்கிற ரீதியில் இஸ்லாமை காட்டுவது மட்டுமே ஸ்பென்ஸரின் நோக்கம். இது அவரது திருத்தமுடியாத மடத்தனத்தை அல்லது இன்னமும் வருத்தம் தரக்கூடிய இஸ்லாமீதான வெறுப்பச்சத்தை காட்டுகிறது. இதற்கு அவர் பயன்படுத்தும் செயல்முறை குர்ரானை தவறாக இடம் மாற்றி மேற்கோள் காட்டுவதுதான்.

இஸ்லாம் முஸ்லீம் அல்லாதவர்களுடன் கொள்ளும் உறவு பின்வரும் குர்ரான் வசனங்களால் விளக்கப்படுகிறது. 'மத விஷயத்தில் கட்டாயத்துக்கு இடமில்லை ' (2:256)

'உங்கள் நம்பிக்கையின் பேரில் உங்கள் மீது போரிடாதவர்கள் உங்கள் வீடுகளை அபகரிக்காதவர்களிடம் நீங்கள் அன்புடனும் நியாயத்துடனும் நடந்து கொள்வதனை இறைவன் தடைபடுத்தவில்லை.ஏனெனில் இறைவன் நியாயத்துடன் நடப்பவர்களிடம் பிரியமுடையவனாயிருக்கிறான். ' (60:8)

மேலும் முக்கியமாக இஸ்லாமின் சமயப்பொறுமையின் வரலாறே இதற்கு அத்தாட்சியாக உள்ளது. இஸ்லாமின் நோக்கம் முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவதுதான் எனில் 700 ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சியின் பின் ஏன் இந்தியா இன்னமும் 80% ஹிந்துக்களை கொண்டு விளங்குகிறது ?ஏன் ஸ்பெயினின் முஸ்லீம் ஆட்சிக்காலம் 'யூதர்களின் பொற்காலம் ' என வரலாற்றாசிரியர்களால் வழங்கப்படுகிறது ? ஏன் கிழக்கத்திய கிறிஸ்தவர்கள் தங்கள் முஸ்லீம் சகோதரர்களுடம் இணைந்து சிலுவைப்போர் படையெடுப்பாளர்களை எதிர்த்தனர் ? எவ்வாறு 1400 முஸ்லீம் அரசாட்சிக்கு பின்னும் இஸ்லாமிய உலகில் பல மில்லியன் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களுடன் அமைதியாக வாழ்கின்றனர் ? ஐரோப்பிய காலனியவாதிகளால் சில பத்தாண்டுகளில் அமெரிக்க பூர்விகவாசிகளை பூண்டோடு கொல்லமுடிந்தது.ஆனால் இஸ்லாமின் நோக்கம் முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவதுதான் எனில் 1400 ஆண்டுகளில் அது எத்தனை சுலபமாக முடிந்திருக்கும் ? இதன் விடை இஸ்லாமின் நோக்கம் மக்களை கொடுமைகளிலிருந்து விடுவித்து, இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமையான தங்கள் விருப்பப்படும் சமயத்தை பின்பற்றி இனம், மதம் , மொழி மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பால் மானுடன் எனும் முறையில் சுயமரியாதையுடன் வாழ வைப்பதே ஆகும்.

ஸ்பென்ஸர், இதுதான் பெரும்பாலான முஸ்லீம்கள் அறிந்து பின்பற்றும் இஸ்லாம்.

ஸ்பென்ஸர்: 'இடம் மாற்றி மேற்கோள் காட்டுவதுதான் ' உங்களால் வைக்க முடிந்த மிகப்பெரிய வாதமா ? இதோ சில இடம் மாறா வாதங்கள் உங்களுக்காக.

வரலாறு முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையான ஜிகாத்தினை முஸ்லீம் சமுதாயத்தின் பொறுப்பாகவே கொள்கின்றனர். அதனை அவர்கள் பின்வரும்விதத்தில் விளக்குகின்றனர்.

சுரா 9:29 கூறுகிறது, 'அல்லாவை , இறுதி தீர்ப்பு நாட்களை நம்பாதவர்கள் , அல்லாவால் விலக்கப்பட்டவற்றை விலக்காதவர்கள், அல்லா மீதும் அவர் துதெர் மீதும் நம்பிக்கை

கொள்ளாதவர்கள், உண்மையான சமயத்தின் மீது நம்பிக்கை வைக்காதவர்கள் அவர்கள் நுலெின் மக்களாக (கிறிஸ்தவர்களும் யூதர்களும்) இருந்தாலும் அவர்கள் ஜிஸியா வரியை

தானாகவே பணிவை ஏற்று கொடுக்க வேண்டும். தாங்கள் வெல்லப்பட்டதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். '

இதுவே மூன்று தேர்வு முறை. மதமாற்றம், மரணம் அல்லது பணிவு. இது சுரா அத் த்வாபா வெளிப்பாடென்னும் இறுதி வெளிப்பாடாகும். எனவே இஸ்லாமிய முறையான முன்கூறியதை தாண்டிச்செல்லுதல் (நாக்ஷ்) எனும் மரபின் படி இந்த சுராவின் வெளிச்சத்திலேயே நீங்கள் மேற்கோள் காட்டியவை அறியப்பட வேண்டும். இந்த அறிதல் முறை நான் உண்டாக்கி கூறவில்லை. இஸ்லாமிய பெரும் மறை அறிஞர்களான இபின் காதிர், இபின் ஜுசாயி, தஃப்சிர் அல் ஜலயன் மேலும் பல குர்ரான் அறிஞர்கள் இதனை கூறுகின்றனர், முகமதுவின் இந்த முத்தேர்வு முறை மிகத்தெளிவாக ஹாதித் ஷாகி முஸ்லீம் (4294) இல் வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் 'முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவது ' என கூறுகையில் மூன்றாவது வாய்ப்பான (இஸ்லாமிய ஆதிக்கத்திற்கு) பணிதலை விட்டுவிடுகிறீர்கள். அதுவே உங்களுக்கு பதில் அளிக்கிறது. ஹிந்துக்கள் போன்ற பெரும் மக்களுடன் மோதுகையில் முஸ்லீம்கள் வரலாற்றில் இந்த போக்கினை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் முஸ்லீம்களின் வரலாறு தொடர்ந்து ஹிந்துக்களை அடக்கி அவமானப்படுத்தியதேயாகும். அதன் விளைவாகவே இன்றும் அங்கு இரு சமுதாய மக்களுக்கிடையே பதட்டங்கள் நிலவி வருகின்றன. இஸ்லாமிய உலகில் வாழும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் பணிவின் சுவையினை தெரிந்தவர்கள்தான்.

அயுலோஷ் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் ஷரியாவின் படி( முகமதுவின் மூன்றுவாய்ப்பு நியதிக்கு இணங்க) யூதர்களும் கிறிஸ்தவர்களும்வைஸ்லாமிய உலகில் முஸ்லீம்களுக்கு இணையாக சட்டப்படி சமமாக நடத்தப்பட முடியாது. அயுலோஷ் இஸ்லாமிய சட்டத்தின் இனவாதத்தன்மையில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் திமிகளாக

அவமானத்துடன் நடத்தப்படுவது குறித்தும் அவ்வாறு நடத்தப்பட ஒப்புக்கொள்ளாவிட்டால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையிருப்பதையும் விளக்குகிறீர்களா ? யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய சட்டப்படியான ஒரு சமுதாயத்தில் முஸ்லீம்களுக்கு சமமாக நடத்தப்பட இஸ்லாமிய சட்டத்தில் இடமில்லை.

இஸ்லாமின் நோக்கம் 'மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதானால் ' ஏன் ஆசியா மைனரிலோ அல்லது வட ஆப்பிரிக்காவிலோ கிறிஸ்தவ மக்களை காண இயலவில்லை. ஓ அவர்கள் துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஏன் இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையரின் இல்லங்களை விட்டுவிட்டு விரைகின்றனர் ? இஸ்லாமிய கொடுமைகளிலிருந்து விடுபட. ஆனால் நீங்கள் 'பெரும்பாலான முஸ்லீம்கள் இதை எல்லாம் மறுக்கின்றனர் ' என கூறுவதை நான் ஏற்கிறேன். ஆனால் ஒரு இஸ்லாமிய மதகுருவாவது திமித்துவத்தையும் வன்முறை ஜிகாத் கோட்பாட்டையும் மறுக்கட்டும். அவற்றின் பெயரால் நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்கட்டும். அயுலோஷ் உண்மையான பிரச்சனையை பேசலாம். என்னை மடையன் என்று கூறுவது வாதமல்ல.

அயலுஷெ¢: ஆம் ஸ்பென்ஸர். வரலாற்றுப் பின்புலம் மிக முக்கியமானதுதான். இஸ்லாமிய வரலாற்றினை அறிந்தவர்கள் வெளிப்பாட்டின் பின்புலமறிதல் (அஸ்பாப் அன் நுஸூல்) ஒரு அறிவியலாகவே உள்ளதென அறிவர். எனவே ஒவ்வொரு வெளிப்பாட்டின் காலம், நிகழ்வு மற்றும் வரலாற்றுப்பின்புலம் ஆகியவை முக்கியமானவை. அது இன்றி குர்ரானின் வெளிப்பட்டு ஞானத்தை அறிதல் இயலாது. 23 வருடங்களாக முகமது நபிக்கு கபிரீயல் இறைதுதெனால் 6000 வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஏக இறைவணக்கம், வாழ்வியல் ஒழுக்கங்களை மேம்படுத்தல், நியாயமற்ற சமுதாய அமைப்பினை எதிர்த்தல்,

முந்தைய நபிகளையும் மற்ற தேசங்களையும் மதித்தல் என மாறும் சமுதாய அரசியல் உலகில் முஸ்லீம் வாழத் தேவையான அனைத்து வழிக்காட்டலையும் உள்ளடக்கியுள்ளன. உதாரணாமாக ஏக இறைவணக்கம் குறித்த வெளிப்பாடு வழங்கப்பட்ட போது மெக்காவின் விக்கிரக ஆராதனையாளர்கள் பெறும் உணர்வு பூர்வமான தடைகளை நம்பிக்கையாளர்கள் மீது வைத்தனர்.எனவே அப்போதைய வெளிப்பாடுகள் முஸ்லீம்களை தளராதிருக்கும் படியும் மெக்காவிலேயே இருக்கும்படியும் கூறியது. பின்னர் அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையினை பயன்படுத்த தொடங்கியதும் குர்ரானின் வெளிப்பாடு முஸ்லீம்களை மதினாவுக்கு செல்லும் படி பணித்தது. யூத இனக்குழு ஒன்று முஸ்லீம்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது குர்ரானின் வெளிப்பாடு அவர்களை மதிக்கவும் நியாயமாக நடத்தவும் முஸ்லீம்களை பணித்தது. ஆனால் அவர்கள் அந்த உடன்படிக்கையை முறித்து முஸ்லீம்களின் எதிரிகளுக்கு உதவ முற்பட்ட போது குர்ரான் தவறு செய்த அந்த யூத இனக்குழுவை மட்டுமே தண்டிக்குமாறு கூறியது. அவ்வாறே விக்கிரக ஆராதனையாளருடனான ஒப்பந்தங்களை மதிக்குமாறே இஸ்லாம் பணித்தது. அந்த ஒப்பந்தத்தை விக்கிரக ஆராதனையாளர்கள் மீறி அப்பாவி முஸ்லீம்களை துன்புறுத்திய போதே நியாயத்தை தேடுமாறு குர்ரான் முஸ்லீம்களை பணித்தது. இவை எல்லாமே விதி விலக்கான சூழ்நிலைகளில் முஸ்லீம்களை வழி நடத்தியவை ஆகும். ஆனால் போருக்கான சூழலில் கொடுக்கப்பட்ட ஒரு வசனத்தை வெளிப்பாட்டை அமைதி நிலவும் சூழலில் பயன்படுத்துவது என்பது ஸ்பென்ஸர் மற்றும் அல் கொய்தா போன்ற வெறி பிடித்தவர்களின் செயலேயாகும். முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதோருடனான உறவு முன் நான் மேற்கோள் காட்டிய வரிகளாலும் பின் வரும் வசனத்தாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 'ஓ மானுட குலமே! நாம் உங்களை ஆணும் பெண்ணுமாக படைத்தோம்; நீங்கள் உங்களை ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவே நாடுகளாகவும் இனங்களாகவும் ஆக்கினோம். உங்களைப் படைத்த இறைவனின் பார்வையில் மேன்மையானவர் உங்களுள் சிறந்த நன்னடத்தை உடையவரே ' (49:13)

ஸ்பென்ஸர்: நீங்கள் பின்புலம் குறித்து அளித்த விரிவுரைக்கு நன்றி. முதன்மையான முஸ்லீம் மறையியலாளர்கள் (குர்ரான் வசனங்களின்) பின்புலம் குறித்து கூறியவற்றை என் முந்தைய பேச்சில் கூறினேன். அதற்கு பதில் கூறிவதை நீங்கள் தவிர்த்துவிட்டார்கள். பரவாயில்லை. கூர்ந்து வாசிக்கும் எவரும் அதை கவனித்திருப்பார்கள்.

(முடிவுறுகிறது)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20304193&format=print

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP