சமீபத்திய பதிவுகள்

கடவுள் இல்லை,சொர்கம்,நரகம் இல்லை என்று சொல்பவர்களே ஜாக்கிரதை

>> Sunday, March 2, 2008

கடவுள் இல்லை,சொர்கம்,நரகம் இல்லை என்று சொல்பவர்கள் இன்று அதை பற்றிய ஒரு மிகப்பெரிய விவாதம் நடத்திவருகின்றனர்.
ஆனால் கடவுள் உண்டு,சொர்கம் நரகம் உண்டு என்று சொல்பவர்கள் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்வது இல்லை.எங்கள் நம்பிக்கையை யாரும் அசைக்கமுடியாது என்பதை போல்.
அதை பற்றிய ஒரு தொகுப்பு
ஒரு ஆத்திகரு,நாத்திகரு நண்பர்கள்,இரண்டு பேரும் பேசிக்கொள்ளுகிரார்கள்.
நாத்திகர்:டே ஏண்டா கடவுள்,சொர்கம், நரகம் இப்படி இல்லாத ஒன்ன புடிச்சு தொங்கரிங்க.
ஆத்திகர்: டேய் நண்பா அப்படி எல்லா சொல்லாதட கடவுள் உண்மையாகவே இருக்கார்டா,நம்மள சொர்கத்துக்கு அனுப்பரதுக்கும் ,நரகத்துக்கு அனுப்பறதுக்கும் அவருக்கு சக்து இருக்கு.நாம் செத்ததுக்கு அப்பறமா ஒரு மிக பெரிய வாழ்க்கை இருக்கு.
நாத்திகர்:என்ன செத்ததுக்கு அப்புறம் ஒரு வாழ்க்கையா?பூ.ஹா ஹா ஹா ஏண்டா இப்படி ஜோக் அடிக்கிறீங்க,முட்டாள் தனமா?
ஆத்திகர்:சரிடா நாண்பா நான் ஒன்னு கேக்கரேன்,பதில் சொல்லு
நாத்திகர்:சரி கேளு
ஆத்திகர்:நான் கடவுளை நம்புறேன்,சொர்கம்,நரகம் பற்றியும் நம்புறேன்.நீ இவைகளை நம்பவில்லை.நாம ரெண்டு பேருமே செத்து போகிறோம் வச்சுக்கோ,அங்கே நீ சொன்ன மாதிரியே கடவுளும் இல்லை,சொர்கம்,நரகம் இரண்டும் இல்லை என்று வைத்துக்கொள் அப்போ இந்த நம்பிக்கையில் வாழ்ந்த எனக்கோ,இந்த நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த உனக்கோ ஏதாவதும் பிரச்சனை இருக்கா?
நாத்திகர்:அப்பறம் என்ன பிறச்சனை நாம தான் செத்துடோம்மில்ல
ஆத்திகர்: சரி,இப்போ அடுத்த கேள்வியை கேக்கிறேன்.நாம ரெண்டு பேரும் செத்ததுக்கு அப்புறம் ஒரு வேளை நான் நம்பின மாதிரியே கடவுளும்,சொர்கமும்,நரகமும் இருந்துருச்சுன்னு வச்சுக்கோ அப்போ என் நம்பிக்கைக்கு பலன் கிடைக்கும்,ஆனால் அப்ப உன் நிலமை என்னவாகும்ன்னு யோசிச்சியோ?
நாத்திகர்:இது யோசிக்கவேண்டிய விசயம் ...???

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

5 கருத்துரைகள்:

மு. மயூரன் March 2, 2008 at 10:29 PM  

கடவுள் இருந்தால் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை, ஏனென்றால், அந்த நாத்திகரையும் அவரது கருத்துக்களையும் கூட கடவுள்தானே உருவாக்கியிருக்க வேண்டும்?

ஆனா, கடவுள் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்,


கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் இந்த உலகம் செய்யும் வீண் செலவுகளும், சச்சரவுகளும், சண்டைகளும், கொலைகளும் அநியாயங்களும் எல்லாம் ஒரு அர்த்தமில்லாமல் போய்விடும், விரக்தியின் விளிம்பில் ஆத்திகர் நரகத்தில் தற்கொலை செய்துகொள்ள வேண்டி வரும் ;-)

தெய்வமகன் March 3, 2008 at 1:07 AM  

//கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் இந்த உலகம் செய்யும் வீண் செலவுகளும், சச்சரவுகளும், சண்டைகளும், கொலைகளும் அநியாயங்களும் எல்லாம் ஒரு அர்த்தமில்லாமல் போய்விடும், விரக்தியின் விளிம்பில் ஆத்திகர் நரகத்தில் தற்கொலை செய்துகொள்ள வேண்டி வரும் ;-)//

நாத்திகர் கனிப்புப்படி நரகம்தான் இருக்காதே,செத்து போய்டா எல்லம் முடிஞ்சு போச்சு இல்லியா

Anonymous March 3, 2008 at 1:16 AM  

தலைவரே கலக்குறீங்க.

இந்த மாதிரி நாத்தீகர்கள் ஒரு கேள்வியை எதிர்பார்திருக்கமாட்டார்கள். அற்புதமான நகைச்சுவை.
உங்களின் எல்லா பதிவுகளும் மிகவும் நிறைய சிந்திக்ககூடியதாக உள்ளது வாழ்த்துக்கள்

தொடர்ந்து பதிவுகளை எழுதுங்கள்.

செல்வி

கருப்பன் (A) Sundar March 3, 2008 at 1:17 AM  

தயவு செய்து Alignmentஐ சரி செய்யுங்கள் ஃபயர் ஃபாக்ஸ் உலாவியில் படிக்க இயலவில்லை.

தெய்வமகன் March 3, 2008 at 1:28 AM  

//தயவு செய்து Alignmentஐ சரி செய்யுங்கள் ஃபயர் ஃபாக்ஸ் உலாவியில் படிக்க இயலவில்லை.//

எனக்கு தெரிஞ்ச அளவுக்கு பண்ணீட்டேன் இதுக்கு மேல எனக்கு தெரியாது

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP