சூடான இடுகை,சூடான இடுகை எப்ப பாத்தாலும் இதே புலம்பல்,வேற வேலயே இல்லீய உங்களுக்கு
>> Sunday, March 16, 2008
இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
முன்னுரை: தலைப்பே ஒரு விதமாக உள்ளதே என்று திகைக்கவேண்டாம், எல்லாம் காரணமாகத்தான் இந்த தலைப்பை நான் வைத்தேன். அதாவது, இஸ்லாம் கல்வியில் வெளியான கட்டுரையில் இயேசுவைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நாம் தொடர்ச்சியாக பதில்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த கட்டுரையில், எம். எம். அக்பர் அவர்கள் முன்வைக்கும் திராட்சை ரசம் குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.
எம். எம். அக்பர் அவர்கள் எழுத, தேங்கை முனீப் அவர்கள் மொழிபெயர்க்க, இஸ்லாம் கல்வி வெளியிட்ட கட்டுரையிலுருந்து சில வரிகள்:
தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா?
...
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து ...... திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது. ...
Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm Formats mine
எம். எம். அக்பர் அவர்களின் குற்றச்சாட்டு:
ஒரு திருமண விருந்தில் இயேசு தண்ணீரை மதுவாக மாற்றினார். அதை மக்களுக்கு கொடுத்து அவர்களுக்கு போதையூட்டினார்.
இந்த முடிவுக்கு எம். எம். அக்பர் அவர்கள் எப்படி வந்தார்கள் என்று கேட்டால்?
a) அவர் யோவான் 2 : 1-11 வசனங்களை படித்துள்ளார்,
b) அதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்,
c) சிந்தித்துள்ளார்,
d) கடைசியாக தன் கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார்.
இது தான் இஸ்லாமிய அறிஞரின் ஆராய்ச்சியின் முடிவு.
10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு ஒரு பரிட்சை:
நான் இந்த யோவான் 2:1-11 வசனங்களை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கோ, மாணவிக்கோ கொடுத்து, இவ்வசனங்களை படிக்கச்சொல்லி, கீழ் கண்ட சில கேள்விகளுக்கு பதில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இந்த மாண(வி)வன் என்ன பதில் சொல்வா(ள்)ன் என்பதை, இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சிந்தித்துப்பாருங்கள். பிறகு நாம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களின் ஆராய்ச்சியைப்பற்றி சிறிது சிந்திப்போம்.
கீழ் கண்ட இரண்டு பத்திகளை படித்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் எழுதவும்:
யோவான் 2:1-11 வசனங்கள்:
மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு; ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.
யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவர்டத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
கேள்விகள்:
கேள்வி 1: திருமணத்திற்கு யார் யார் அழைக்கப்பட்டு இருந்தார்கள்?
A) மரியாளும் இயேசுவும்
B) மரியாளும், இயேசுவின் சீடர்களும், மற்றும் இயேசுவும் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
C) இயேசுவின் சீடர்களும், மரியாளும்
10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: B
கேள்வி 2: யூதர்களின் திருமணங்களில்(குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசம் என்பது, திருமண விருந்தில் ஒரு பாகமா? இல்லையா?
A) திருமண விருந்துகளில் (குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசமும் ஒரு பாகம் தான்.
B) இல்லை, யூத திருமண விருந்துகளில் (குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசம் ஒரு பாகம் அல்ல.
10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: A
கேள்வி 3: இயேசு ஏன் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்?
A) திருமண விருந்தில் திராட்சை ரசம் பற்றாக்குறை ஏற்பட்டதால்.
B) திராட்சை ரசம் பற்றாக்குறை இல்லை, இருந்தும் வேண்டுமென்றே மக்களுக்கு போதையூட்டவேண்டும் என்ற கெட்ட தீய எண்ணத்தோடு இயேசு அற்புதம் செய்தார்.
C) இயேசுவின் தாய் மரியாள், இயேசுவை வேண்டிக்கொண்டதால்.
D) A மற்றும் C இவை இரண்டும்.
10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: D
கேள்வி 4: இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட திராட்சை ரசம் என்பது "போதை அளிப்பதாக கருதப்பட்டு ஒரு குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு(பெரியவர்களுக்கு ) மட்டும் பரிமாறப்பட்டதா"?
அல்லது
போதை தரும் ரசமாக இல்லாமல், சாதாரண விருந்து திராட்சை ரசமாக எல்லாருக்கும் பரிமாறப்பட்டதா?
A) பெரியவர்களுக்கு மட்டும் பரிமாறப்பட்டது
B) எல்லாருக்கும் பரிமாறப்பட்டது. பெரியவர்களுக்கும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பரிமாறப்பட்டதாக எந்த தகவலும் இந்த பத்தியில் இல்லை.
10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்:B
கேள்வி 5: திருமணவிருந்தில் இப்படி திராட்சை ரசம் பரிமாறப்பட்டது, யூதர்களின் திருமண முறையில் இல்லாததால், விருந்தினர்கள் தங்கள் முன் வைக்கப்பட்ட திராட்சை ரசம் குறித்து, "இப்படி போதை தரும் பொருளை எப்படி திருமணத்தில் பரிமாறினாய்?" என்று கேள்வி கேட்டு விருந்துக்கு அழைத்தவரிடம் முறையிட்டார்களா? மற்றும் எதுவும் சாப்பிடாமல் எழுந்துவிட்டார்களா?
A) ஆம், திராட்சை ரசம் திருமணங்களில் சாதாரணமாக பரிமாறப்படும் பொருளாக இல்லாததினால், விருந்தாளிகள் விருந்துக்கு அழைத்தவரை திட்டி, எழுந்து போய் விட்டார்கள்.
B) இல்லை, யூதர்கள் திருமணங்களில் பயன்படுத்தும் போதையில்லாத திராட்சை ரசம் என்பதால், விருந்துக்கு அழைத்தவரை கூப்பிட்டு, நல்ல ரசத்தை கடைசி வரை வைத்ததற்காக அவரை புகழ்ந்தார்கள்.
10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: B
கேள்வி 6: இயேசு திராட்சை ரசமாக மாற்றியதை குடித்துவிட்டு, விருந்தாளிகள், எல்லாரும் போதையில் திளைத்து, சண்டை போட்டுக்கொண்டு, ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, திருமண விருந்தின் சந்தோஷத்தை கெடுத்தார்களா? இதனால், கோபமுற்ற திருமண விருந்துக்கு அழைத்தவர், இயேசுவை அழைத்து ஏன் இப்படி செய்தீர் என்று கேட்டாரா?
A) இல்லை, படித்த பாகத்தில் இப்படி நடந்ததாக எந்த தகவலும் இல்லை.
B) ஆம், இப்படியே நடந்தது, மாப்பிள்ளை இயேசு கடிந்துக்கொண்டார்.எல்லாரும் போதையில் திருமண விருந்தின் மகிழ்ச்சியை கெடுக்கும் அளவிற்கு பிரச்சனை செய்தார்கள்.
10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: A
மேற்கண்ட 6 கேள்விகளுக்கும் ஒரு 10ம் வகுப்பு மாணவன் என்ன பதில் சொல்வான் என்று நானே பதில் கொடுத்துள்ளேன். இதை படிக்கும் நீங்கள், மேலே உள்ள 11 வசனங்களை படித்து புரிந்துக்கொண்டு, நான் கொடுத்த பதில்கள் சரியானவையா இல்லையா என்று சோதித்துப்பாருங்கள்.
[நீங்கள் ஒருவேளை நாத்தீகராக இருப்பீரானால், இயேசு எப்படி அற்புதம் செய்யமுடியும், இதை நாங்கள் நம்பத்தயாராக இல்லை என்றுச் சொல்வீர்கள். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், இந்த வசனங்கள் உண்மை என்று எண்ணி பதிலைத் தாருங்கள் என்பது தானே தவிர, அற்புதம் செய்தாரா இல்லையா என்பது இங்கு கேள்வியில்லை]
மேலேயுள்ள 11 வசனங்களை, எம். எம். அக்பர் அவர்கள் கீழ்கண்டவாறு புரிந்துக்கொண்டுள்ளார்.
மற்றுமொரு முறை அவர் எழுதியதை படித்துப்பார்க்கவும்:
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து ...... திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.
1) இந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட திராட்சை ரசம் "போதை தரக்கூடியது" என்று தவறாக கருதிவிட்டார் எம். எம். அக்பர் அவர்கள்.
2) அதாவது, சில இந்திய திருமணங்களில் காண்பது போல, மாப்பிள்ளை தன் நண்பர்களுக்கு நல்ல விருந்து கொடுப்பார், அதாவது மதுபானங்களை வாங்கி நண்பர்களுக்கு தனியாக ஹோட்டல்களில் அறைபோட்டு கொடுப்பார். அவர்கள் இரவெல்லாம் குடித்து கும்மாளம் போடுவார்கள். இப்படி நடந்ததாக இவர் எண்ணிவிட்டார் (மக்கனிக்கவும், எண்ணிவிடவில்லை, வேண்டுமென்றே தெரிந்தே இப்படி எழுதுகிறார்).
3) திராட்சை ரசத்திற்கும் போதை தரும் திராட்சை ரசத்திற்கும் நம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போய் விட்டது. [ஆனால், இஸ்லாமிய சொர்க்கத்தில் அல்லா முஸ்லீம்களுக்காக ஓடவிட்டு இருக்கும் "மதுபான நதியில்" எடுத்துக்குடித்தால், போதையிருக்காது என்று அவருக்குத் தெரியும்.]
எம். எம். அக்பர் அவர்களுக்கு சில கேள்விகள்:
1) முதலாவது, நீங்கள் யோவான் 2:1:11 வரையுள்ள வசனங்களை உண்மையாக படித்து தான் இந்த வரிகளை எழுதினீர்களா?
2) யூத திருமணங்களில் திராட்சை ரசம் பரிமாறுவது ஒரு பொதுவான பழக்கம் என்பதை மேற்கண்ட 11 வசனங்களை படித்தும் உங்களுக்கு விளங்கவில்லையா?
கீழ் கண்ட வசனங்களை படித்துப்பாருங்கள், இந்த வசனங்கள் எதை உங்களுக்கு தெரிவிக்கிறது?
யோவான் 2:9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
யோவான் 2:10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்
(உங்களுக்கு முஸ்லீம்கள் திருமணங்களுக்கு கால தாமதாக சென்ற பழக்கமில்லை போல் இருக்கிறது, அப்படி சென்று இருந்தீர்களானால், உங்களுக்கு புரிந்திருக்கும், அதாவது காலதாமதாக வந்தால் என்ன கிடைக்கும் என்று, வெறும் பிரியாணி மட்டும் தான் கிடைக்கும், அதில் துண்டுகள் இருக்காது ஏனென்றால், முதலில் எல்லாருக்கும் திருப்தியாக பரிமாறிவிடுவார்கள். பெரும்பான்மையாக நடுத்தர குடும்ப திருமணங்களில் இப்படி நடப்பது உண்டு.)
3) திராட்சை ரசம் எந்தெந்த சூழ்நிலையில் பைபிள் காலங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று நீங்கள் படித்துள்ளீர்களா?
4) நீங்கள் மேற்கோள் காட்டிய வசனங்களில், மக்கள் குடித்து "போதை கொண்டு" கும்மாளம் போட்டதாக அல்லது மதி மயங்கியதாக ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா?
எம். எம். அக்பர் அவர்களுக்கு சவால்:
யூதர்களுக்கு திராட்சை ரசம் திருமண விருந்துகளில் பரிமாறப்படுவது பழக்கமில்லை, அதை முதல் முதலில் இயேசு தான் புகுத்தினார், மக்களை போதைக்கு உட்படுத்தினார் என்று உங்களால் நிருபிக்கமுடியுமா?
பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு காலங்களில் மக்கள் திராட்சை ரசத்தை தினமும் பயன்படுத்தவில்லை, திருமண விருந்துகளில் போதை இல்லாத ரசத்தை பயன்படுத்த வில்லை. இயேசு மட்டும் தான் அதை முதல் முதலில் இப்படி அற்புதம் செய்து, மக்களை போதைக்கு உட்படுத்தினார் என்று உங்களால் நிருபிக்க முடியுமா?
திராட்சை ரசம் பற்றிய சிலவிவரங்கள்:
திராட்சை ரசத்தை பழங்களிலிருந்து பிழியும் போது, அதில் போதை இருக்காது, அதை சரியான அளவில் எடுத்துக்கொண்டால், அது நன்மையைத் தரும். அதே நேரத்தில் பல நாட்கள் அந்த இரசத்தை அப்படியே வைத்தால், அதில் ஆல்கஹால் உருவாகி அது ஒரு போதைப் பொருளாக மாறிவிடும். ஆனால், அந்த போதை தரும் மதுபானத்தையே முஸ்லீம்கள் குடிக்கலாம் என்று அல்லா ஆரம்பத்தில் அனுமதி கொடுத்துள்ளாரே
அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்ஆன் வசனம் சொல்கிறதே.
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்ஆன் 2:219)
இந்த கானா ஊர் திருமணத்தில் விருந்தினருக்கு கொடுத்தது, போதை இல்லாத ரசமாகும். நீங்கள் இல்லை என்று வாதாடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒருவன் தன் திருமணத்திற்கு அழைக்கும் அனைவருக்கும் சாப்பிடும்போது, மிகவும் அதிக அளவு போதைத் தரும் ரசத்தை கொடுத்து, அவர்கள் அதை அதிகமாக சாப்பிட்டு, போதை அடைந்து திருமண வீட்டை ஒரு சந்தையாக மாற்ற விரும்புவானா? சிந்தித்துப்பாருங்கள்.
தன் மகனை ஆசீர்வதிக்கும் போது, ஈசாக்கு கீழ் கண்டவாறு ஆசீர்வதிக்கிறார்:
தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.(ஆதியாகமம் 27:28)
அந்த காலத்தில் அவர்கள் இடங்களுக்கு ஏற்ப பயிர்வகைகளை பயிரிட்டனர், அதனால், தானியமும்,திராட்சை இரசமும் குறையாமல் இருக்கவேண்டும் என்று ஆசி வழங்கினர். தானியமும் திராட்சை இரசமும் அவர்களுக்கு செழுமையை குறிக்கிறது, இவைகள் அவர்களது பயிர்வகைகள் ஆகும். இதே இந்தியாவாக இருந்திருக்குமானால், அரிசியும்,பருப்பு, பாலும் தேனும் நெய்யும் என்றுச் சொல்லி ஆசீர்வதித்து இருப்பார்கள்.
தேவன் மக்களை ஆசீர்வதிக்கும் போதும், திராட்சை பயிர் வகையைப்பற்றியும் குறிப்பிடுகிறார்:
உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். (உபாகமம் 7:13)
நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, (உபாகமம் 11:14)
இதே திராட்சை ரசம் போதையுள்ளதாக மாறின மதுபானத்தை குறித்து எச்சரிக்கை:
மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. (நீதிமொழிகள் 23:20)
நீதிமொழிகள்: 23:29-33
ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே .
மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.உன் கண்கள் பரஸ்திர்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
1 தீமோ 3:3
அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசையில்லாதவனுமாயிருந்து,
புதிய ஏற்பாட்டு காலத்தில் போதையில்லாத திராட்சை ரசத்தையும் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டார்கள். இன்னும் திராட்சை ரசத்தைப்பற்றி அதிகமாக எழுதலாம், ஆனால், இப்போதைக்கு இது போதும், யாராவது இக்கட்டுரைக்கு மறுப்பு அல்லது பதில் எழுதுவீர்களானால், மற்ற விவரங்களை தருகிறேன்.
இஸ்லாமும் மதுபானமும்: முஸ்லீம்கள் குடித்து போதைக்கொண்டு நமாஜ் செய்ய அனுமதித்த அல்லா
எம். எம். அக்பர் அவர்கள், இயேசு ஒரு திருமண விருந்தில் போதையில்லாத திராட்சை இரசத்தை மக்களுக்காக கொடுத்ததை குற்றம் சாட்டுகிறார், ஆனால், இஸ்லாம் மதுபானம் பற்றி என்ன சொல்கிறது என்று கவனித்தாரோ இல்லையோ?
முகமது நபியாக தன்னை வெளிக்காட்டிய பிறகு கூட இஸ்லாமிய மக்கள் குடிக்கவும், போதைக்கொள்ளவும் அல்லா அனுமதி அளித்துள்ளார்.
1. குடிக்க அல்லாவின் அனுமதி:
மதுபானம் குடிக்கலாமா இல்லையா என்று முகமதுவிடம் முஸ்லீம்கள் கேட்ட போது, அல்லா மதுபானத்தை தடை செய்யாமல், மதுபானம் குடிப்பதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. நன்மையை விட தீமை தான் அதிகம் என்றுச் சொன்னாரே தவிர, பாருங்கள் முஸ்லீம்களே இனி நீங்கள் குடிக்கவேண்டாம் இது என் கட்டளை என்று சொல்லவில்லை. அதனால், முஸ்லீம்கள் குடித்தார்கள், போதை கொண்டார்கள். அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்ஆன் வசனம் சொல்கிறதே.
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்ஆன் 2:219)
இவ்வசனம் இறக்கிய பிறகு முஸ்லீம்கள் குடியை நிறுத்தவில்லை, காரணம் அல்லா தடை செய்யவில்லையே அதனால் தான்.
2. குடித்து போதை கொண்டு, நமாஜ் செய்யும் போது உளரும் முஸ்லீம்கள்:
அல்லா மதுபானத்திற்கு அனுமதி அளித்தவுடன் முஸ்லீம்கள் நன்றாக குடிக்க ஆரம்பித்தார்கள். எந்த அளவிற்கு என்றால், நமாஜ் செய்யும் போது, சொல்லப்படும் சூராக்களை குடிமயக்கத்தில் தாறுமாறாக சொல்ல ஆரம்பித்தார்கள். பாவம் அல்லா என்ன செய்வார்? மறுபடியும் ஒரு வசனத்தை இறக்கினார். "மதுபான தடை வசனம்" அல்லா இறக்கியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கணிப்பு தவறு. அதாவது, முஸ்லீம்களே குடியுங்கள் பரவாயில்லை, ஆனால், குடித்து நமாஜ் செய்யும் போது, போதையில் உளரும் அளவிற்கு குடித்துவிட்டால், தொழுகைக்கு வரவேண்டாம் என்று அல்லா வசனம் இறக்கினார். முஸ்லீம்களின் "குடியை நிறுத்தக்கூடாது என்பதில்" அல்லா எவ்வளவு அக்கரை உள்ளவராக இருக்கிறார் பாருங்கள். அல்லாவை விட நம் நாட்டு மருத்துவர்களே மேல், மதுசாப்பிட்டாலும் கொஞ்சமாக சாப்பிடுங்கள், அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டாம், முடிந்தால் விட்டு விடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், அல்லா இப்படி இல்லை, குடியுங்கள், போதை ஏறட்டும், அப்படி ஏறினால், தொழுகைக்கு வராதீர்கள், தொழுகைக்கு வரவேண்டுமானால், அதற்கு முன்பு குடிக்காதீர்கள் என்றார். என்னே தெய்வம்!
(குர்ஆன் 4:43) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. ........ நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
இந்த வசனத்தை நன்றாக கவனியுங்கள், யாரை குறிப்பிட்டு அல்லா இந்த வசனத்தை இறக்குகிறார்? முஸ்லீம்களை குறித்து தான் என்பது தெள்ளத்தெளிவு. பாவம் அல்லா, குடிபோதையில் நாக்கு குழம்பி தொழுகையில் ஓதும் சூராக்கள் புரியாமல் போகும் அளவிற்கு போதை இருக்குமானால் முஸ்லீம்களுக்கு, தொழுகைக்கு வராதீர்கள் என்று கட்டளையிடுகிறார். அப்படியென்றால், எப்போதும் ஸ்டடியாக பேசும் குடிக்காரன் நமாஜ் படிக்கலாம். அல்லது தொழுகை ஆன பிறகு நாக்கு குழம்பும் அளவிற்கு குடிக்கலாம் என்று தானே இதன் பொருள்.
The Prohibition of Approaching Prayer When Drunk or Junub:
Allah forbade His believing servants from praying while drunk, for one does not know the meaning of what he is saying in that state, and He forbade them from attending the Masjids while sexually impure, except when one is just passing through the Masjid from one door to another. This Ayah was revealed before alcohol consumption was completely prohibited, as evident by the Hadith that we mentioned in Surat Al-Baqarah when we explained Allah's statement,
Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=59
சரி, இந்த வசனம் இறங்கிய பிறகு தொழுகைக்கு வரும்போது மட்டும் முஸ்லீம்கள் குடிக்கவில்லை என்பது தெளிவு. ஏனென்றால், அல்லா எதை முகமது மூலம் சொன்னாலும் அப்படியே முஸ்லீம்கள் கேட்பார்கள். எனவே, தொழுமை நேரம் தவிர மற்ற நேரங்களில் குடித்தார்கள், போதையில் மயங்கினார்கள் நம் அருமை இஸ்லாமிய நபித்தோழர்கள். அதாவது முகமது நபியாக தன்னை காட்டிவிட்ட பிறகு, குர்ஆனின் வசனங்கள் இறங்கிக்கொண்டு இருக்கும் போது, மதுபானம் குடிப்பது தடை செய்யப்படவில்லை. நான் கேட்கிறேன், இஸ்லாமிய அறிஞர்களே, மதுபானம் தடை வரும் வரை, முஸ்லீம்கள் குடித்தார்களா? இல்லையா?
இந்த வசனத்தின் படி சில முஸ்லீம்கள் குடித்துவிட்டு, தொழும் போது, சொல்லப்படும் குர்ஆன் சூராக்களை மாற்றி மாற்றி சொல்லியுள்ளார்
