சமீபத்திய பதிவுகள்

காபிர் : அன்று சொன்னதை இன்று வழிமொழிகிறார்

>> Thursday, April 24, 2008






காபிர் : அன்று சொன்னதை இன்று வழிமொழிகிறார்


முன்பொருமுறை என்னிடம் திண்ணையில் திரு.ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் விவாதம் புரிந்திருந்தார்கள். அதில் காபிர் என்றால் தவறில்லை 'எங்களுக்கு நீங்கள் காபிர், உங்களுக்கு நாங்கள் காபிர், அதனால் அது ஒரு சாதாரண விஷயம்' என்ற தொணியில் எழுதியிருந்தார்கள். இத்தருணத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அதை சுட்டிக் காட்டுவது நாகரிகமன்று என்று இந்த அறிவிப்பு திண்ணையில் வெளியான போது அமைதி காத்திருந்தேன்.

இப்போது இப்னு பஷீரா/அன்சார் அவர்களிடம் விவாதித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இது நினைவுக்கு வந்தது. ரசூல் அவர்களின் நூலில் இருக்கும் வாசகங்கள் இவை. இத்தனையாண்டுகளாக நான் என்ன சொல்லி வந்தேனோ, அதை இப்போது ரசூலே ஒத்துக் கொண்டுள்ளார் - அதாவது, காஃபிர் என்றால் அவரது உயிருக்கு ஈமான் கொண்ட முஸ்லீம்களிடமிருந்து பாதுகாப்பு கிடையாது, அவருக்கு அடிப்படை மரியாதை ஈமானிகளால் தரப்படாது, அவருடைய உடமைகள் கொள்ளையடிக்கப்படும் (அல்லாஹ்வின் அனுமதி இதற்கு உண்டு - ரசூல் சொல்லாமல் விட்டிருக்கும் விஷயம், பெண்களும் குடும்பத் தலைவரின் உடமைகள் என்கிறது இஸ்லாம்). இப்போது தனக்கு என்று வந்தவுடன், இந்த காஃபிர் பத்வா பற்றிய உண்மைகள் வெளிவருகின்றது பாருங்கள்.

இதில் நான் ரசூலைக் குறை சொல்லவோ, அவர் மோசமான நபர் என்று நிரூபிக்கவோ முயலவில்லை. நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் சில இஸ்லாமியர்களுள் அவரும் ஒருவர். ஆனால், என்ன சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றால், மதம் என்ற மாயக்கண்ணாடி நமது கண்களை எப்படியெல்லாம் கட்டிப் போடுகிறது பாருங்கள். ஜிகாதையும், காபிர் என்ற அடையாளப்படுத்துதலையும் நான் சுட்டிக் காட்டியபோது தனது மதத்தின் கோட்பாடுகள் நியாயம் என்று வாதிட்ட ரசூல், மிகச் சிறந்த சிந்தனையாளர், நல்ல மனிதர், பண்பானவர், ஆழமாக பல விஷயங்களையும் சிந்திப்பவர் - ஆனால், இவருக்கே தனது மதக்கோட்பாடு எவ்வளவு வன்முறை நிறைந்தது என்பது தான் பாதிக்கப் படும்போதுதான் புரிகிறது, இப்போதே கண் திறக்கிறது.

இந்நிலையில், அதிகம் சிந்திக்காமல் 'சாமி சொல்லிடுச்சு, பூதம் சொல்லிடுச்சு, அல்லாஹ் தண்டிப்பார், நம்ம நபி இதைச் சொல்லியிருக்கிறார், அதைச் சொல்லியிருக்கிறார்' என்று ஏடுகளைப் படித்தும், மதத்தலைவர்கள், மார்க்க 'மேதைகள்' சொல்வதையும், என்றோ ஒருநாள் வாழ்ந்து இறந்து போன ஒரு அரபி(நபி) சொன்னதையும் நம்பும் சாமான்ய இளைஞர்கள் அடிப்படைவாதிகளாக, கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றுகிறோம் என்று நம்பிக்கொண்டு குண்டு வைப்பவர்களாக, கொலை செய்பவர்களாக மாறிப்போவதில் என்ன அதிசயம் இருக்கிறது.

இந்து மதத்தை சீர்திருத்த முயன்றவர்களையெல்லாம் மறுத்துவிட்டீர்கள் என்று ஹமீது ஜாஃபர் ஒருமுறை திண்ணையில் எனக்கு பதிலெழுதியிருந்தார் (அது அபத்தத்தின் உச்சகட்டம் என்பது தனி விஷயம் - அது இஸ்லாம் மற்ற மதத்தவர்களைப் பார்த்து குறை கூறுவது, மற்ற மதத்தவரின் மீது வன்முறையைப் பிரயோகிப்பதை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் வாதம்). இந்து மதத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள், இன்னும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள், மதமே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர்களும் ஏராளமாக இருக்கின்றார்கள் - ஆனால், இஸ்லாமிய சமூகத்தில் எத்தனை நாத்திகர்களைப் பார்க்க முடிகிறது? எத்தனை சீர்திருத்தவாதிகளைப் பார்க்க முடிகிறது? கடவுளே வந்தால் கூட கல்லடிபடுவார் என்று தோன்றுகிறது, ஏனெனில், அது கடவுள் இல்லை - சைத்தான் ஏனெனில் என்றோ கட்டமைக்கப்பட்ட ஒரு அரபி நூலில் கடவுள் என்றால் இதுதான் என்று 1400 வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லி.

கடவுள் இவர்களை காப்பாற்றட்டும், இவர்களைக் காப்பாற்றுவதன் மூலம் நம்மையும், இந்த உலகையும் காப்பாற்றட்டும்.


நேச குமார்.


***

காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் - நூல் வெளிவந்துள்ளது

அறிவிப்பு


காபிர்பத்வா,ஊர்விலக்கம்

முஸ்லிம் உரையாடல்

காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் என்றதொரு நூல் தற்போது வெளிவந்துள்ளது.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்தம் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இரட்டை வன்முறைக்கு எதிரான 102 பக்கங்களைக் கொண்ட கருத்துப் பதிவு ஆவணம் இது. இதனை தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி வெளியிட்டு உள்ளது.

இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

முதற்பகுதி ஊர்விலக்கம் ஹெச்.ஜி.ரசூல் நேர்முகம் 9 அத்தியாயங்களையும்

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எழுத்து இரண்டாம் பகுதி குரானில் குடிக்கு தண்டனை உண்டா உள்ளிட்ட ஏழு அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.

மசூறா பகுதி மூன்றில் கருத்தாய்வு கூட்ட உரைகள் ,

உயிர்மை,காலச்சுவடு உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட தமிழகத்தின் மாற்று இதழ்களின் மதிப்பீடுகள்

,திண்ணை உள்ளிட்ட இணையதள வலைப் பதிவுகள்,

28க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் படைப்பாளிகளின் ஊர்விலக்கம் பற்றிய கருத்துரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

Excommunication தொடர்பான தமிழகத்தின் முதல் நூலாக கூட இது இருக்கலாம்.

காபிர் என்றால் அந்த நபருக்கு ஸலாம் சொல்லக் கூடாது,

பள்ளிவாசலில் தொழ அனுமதிக்க கூடாது,

அவரது மனைவி குழந்தைகளுடனான உறவு ரத்து செய்யப்படும்,

இறந்துவிட்டால் மய்யித்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்ய முடியாது,

அவரது சொத்துக்களை அபகரிக்கலாம்,

அவரைக் கொல்லக் கூட செய்யலாம்

என்பதான பிக்ஹ் சட்ட அம்சங்களைக் கொண்ட காபிர்பத்வாவையும்,

ஊர்விலக்கத்தையும் குமரிமாவட்ட உலமா சபையும், தக்கலை அபீமுஅ நிர்வாகமும்

சேர்ந்து ரசூல் மீது நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?

என்ற முன்னுரையின் கேள்விகளோடு இந்நூல்

மறைக்கப்பட்ட பல உண்மைகளை உரத்துப் பேசுகிறது.

நூலின் பெயர் : காபிர் பத்வா ஊர்விலக்கம்

முஸ்லிம் உரையாடல்

பக்கங்கள் : 102

விலை : ரூ.50/

வெளியீடு : இக்ரஹ்

பதிப்பாளர் ; தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி

(த.மு.எ.மு.)

: திருவண்ணாமலை.


http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803273&format=html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP