சமீபத்திய பதிவுகள்

இஸ்லாம்:ஒரு தீவிர முஸ்லீமை இயேசுகிறிஸ்து சந்தித்தார்

>> Tuesday, August 5, 2008

ஒரு தீவிர முஸ்லீமை இயேசுகிறிஸ்து சந்தித்தார்

இந்தக்கட்டுரை சகோதரர் பால் முகமது அவர்களின் அனுமதியுடன் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடபடுகிறது

ஒரு தீவிர முஸ்லீமை இயேசுகிறிஸ்து சந்தித்தார்

(திரு .சினிராஜ் முகமதுவின் (பால் முகமது ) சாட்சி

.

என்னுடைய பின்ணணி ;

தென் இநதியாவின் ஒரு நல்ல உயர்ந்த இஸ்லாமியக் குடுபத்தில் பிறந்து வளர்ந்தேன் .என்னுடைய தகப்பனார் "காசிம் பிள்ளை லப்பா" ஒரு ஓய்வு பெற்ற பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இஸ்லாமிய அறிஞராயுமிருந்தார். என் அம்மா பாத்திமா பீவி ஒரு இல்லத்தலைவியாய் இருந்தார். வழக்கத்தின் படி எங்கள் குடும்பன் " லப்பா குடும்பம்" என்று அழைக்கப்படும் ஒரு இஸ்லாமிய ஆசாரியக்குடும்பம்.

எங்கள் சமுதாயத்தில் லப்பாக்கள் ஆசாரியர்களைப் போல உயர்ந்தவர்கள்.

என்னுடைய குழந்தை பருவத்திலேயே நான் அரபி மொழியையும்(என் தாய் மொழியாக இல்லாவிட்டாலும் ) குரானையும் கற்றுக்கொண்டேன் .நான் குரானை பற்றிய புத்தகங்களை கூட எழுதி அச்சிட்டு இருக்கிறேன். ஆனால் பல வருடங்களுக்கு முன்பாக நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஆண்டவரும் ,இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபைக்குள் வந்தேன்.

இயேசுகிறிஸ்து யார் என்பதைக்குறித்து விளக்கப்பட்டிருந்த கைப்பிரதிகளை சில வாலிபர்கள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு முஸ்லீமாக இருந்த நான் அவர்கள் செயலுக்கு எதிர்பாளனாக இருந்தேன் . அவர்களை மிரட்டுவதும் சிலநேரங்களில் சரீரபிரகாரமாகவும் , மனதளவிலும் அவர்களுக்கு வேதனை கொடுத்து வந்தேன்.ஒரு இளைஞனாக ,என்னுடைய பார்வைக்கு சரியானவனாக இருந்த எனக்கு அவர்களை அவமானப்படுத்துவதும் , காயப்படுத்துவதும் தான் சரி என்ற எண்ணம் இருந்தது

.

இயேசு என்னுடைய பாவங்களை எடுத்துப்போட்டார்


.

ஒரு துண்டு கைப்பிரதி ;ஒரு நாள் என்னுடைய நோட்டுபுத்தகத்தில் ஒரு துண்டு கைபிரதி இருப்பதைக்கண்டேன் . அது எப்படி என் புத்தகத்தில் வந்த்து என்பது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது . நான் அதை குப்பைத்தொட்டியில் போடப்போகும்போது என் கண்கள் இந்த வார்த்தையை கவனித்தது." பாவத்தின் சம்பளம் மரணம், ஆனால் தேவனுடைய கிருபை வரமோ கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் நித்திய ஜீவன்"(ரோமர் 6;23).இந்த வார்த்தைகள் ஏதோ நெருடலை என் உள்ளத்துக்குள் ஏற்படுதியதை உணரமுடிந்தது. தொடர்ந்து அந்த வார்த்தையை வாசித்தேன் ."இந்த வார்த்தை உண்மையும் , எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமாயுமிருக்கிறது , பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார், அவர்களில் பிராதான பாவி நான்(1 தீமோத்தேயு 1;15)

இந்த நேரம் வரை ,நான் ஒரு கெட்ட மனிதன் இல்லை.என்னுடைய வாழ்க்கையை நான் சிறந்த வழியிலேயே வாழ்ந்திருக்கிறேன் என்ற மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன் .ஆனால் இப்போது திடிரென்று என்னுடைய நடத்தை மற்றும் எண்ணங்கள் எனக்கே சந்தேகம் வலுத்தது

.

அந்த தரிசனம்( சொப்பனம் );நான் என்னுடைய படுக்கைக்கு சென்றேன் . நீண்ட நேரம் வரைக்கும் அமைதியில்லாமல் ,தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்பட்டேன் .மிகவும் விநோதமான மற்றும் என்னைத் தொல்லை பண்ணுகிற அந்த தரிசனத்தைப் பார்த்தேன் . சினிமாவில் உள்ள காட்சிகளை போல ஒன்றன் பின் ஒன்றாக என்னுடைய சிறுவயதிலிருந்து நான் செய்த மிறுதல்கள் மற்றும் கொடுமைகள் எனக்கு முன்பாக திரையில் ஓடுவது போல் இருந்தது .

அதன் பின் என் உடல் முழுவதும் என் மிறுதல்கள் மற்றும் கொடுமைகள் ஒவ்வொன்றும் புண்களை போல கொப்புளங்களாக என் மீது படர்ந்தது.

என்னால் தாங்க முடியாத வேதனையை உணர்ந்தேன் .என்னையே அறியாமல் " தேவனே செவிகொடும்! என்னை இரட்சியும்"என்று அழுதேன்.

அப்பொழுது பிரகாசமான வெளிச்சத்தால் சூழப்பட்ட ஒருவர் கீழே இறங்கி வந்து என்னைத்தொட்டார். அவர் தான் இயேசு என்பதை உணர்ந்து கொண்டேன்.அவருக்கு விரோதமாய்தான் நான் போர் செய்துவந்தேன்.அவருடைய தொடுதல் என்னுடைய சரீரத்தையும் , மனதையும் குளிர செய்தது.நான் என் கண்களை மூடியிருந்தேன் . பரலோகத்தின் சந்தோசம் என்னை நிரப்பியது .நான் என் கண்களை திறந்து பார்தபோது அந்த கொப்புளங்களும் ,புண்களும் என் சரீரத்தில் இருந்து மறைந்தது.ஆனால் பிரகாசமாக வந்திருந்த இயேசுவின் மீது அந்த கொப்புளங்களும்,புண்களும் பரவி இருந்தது.

உடனடியாக என் தரிசனத்தின் அர்த்தம் புரிந்து கொண்டேன். பின் நாட்களில் அந்த வசனத்தை வேதத்தில் வாசித்தேன் ."நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படி பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் .(2 கொரி 5;21)

நான் புதிய மனிதனாக எழும்பினேன் .உடனடியாக என்னுடைய அனுபவத்தை என் தந்தையிடத்திலும்,தாயிடத்திலும் மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டேன் .ஆனால் என் தாயார் சொன்னார்கள் , இது கடவுளிடத்திலிருந்து வந்ததில்லை .இது இப்லீஸீன் (சாத்தான் ) தந்திரமாக இருக்கும் என்று. ஆனால் பிதாவாகிய பரலோக தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் அவருடைய ஒரே பேறான குமாரன் இயேசுகிறிஸ்துவை இரட்சிப்பின் வல்லமையினால் என்னை புது சிருஷ்டியாகவும் , அவருடைய சொந்த மகனாகவும் மாற்றிவிட்டார் என்பதில் பூரண நம்பிக்கையை அடைந்தேன் .

இப்படித்தான் நானும் பிறகு என் குடும்பமும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்தோம் .

குடும்பதிற்கும் குழந்தைகளுக்கும் உபத்திரவங்கள் :

உக்கிரத்தை எதிர்கொள்ளுதல் : என்னுடைய பிராயணம் எந்த வகையிலும் இலகுவானதாக இல்லை. நான் முன்பு சார்ந்திருந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ,

நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை , காட்டிக்கொடுக்கும் துரோகம் என்று எண்ணினார்கள் . அதற்காக என்னைப் பழிவாங்கவும் முயற்சித்தார்கள் .ஒருமுறை யாரோ என் மீது கந்தக அமிலத்தை தெளித்தார்கள்.

ஆனால் தேவனுடைய கிருபையால் அவை எந்த பயங்கர பாதிப்பையும் உண்டாக்கவில்லை . மற்றொரு முறை ஒரு கொலைகாரன் என்னை கொல்லுவதற்காக கத்தியால் தாக்கினான். என்னுடைய கீழ்த்தாடை மோசமாக பாதிக்கப்பட்டது , அநேக பற்களை இழக்கவேண்டியிருந்தாலும் ஆண்டவரின் கிருபையால் நான் உயிர் தப்பினேன் .

குழந்தைகளும் விட்டுவைக்கப்படவில்லை -எனக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு .

ஒரு ரகசிய தீவிரவாதக் குழு என் முழுக்குடும்பத்தையும் அழிப்பதற்கு ஒரு மனிதனை அனுப்பி இருந்தார்கள் .

அவன் எப்படியோ என் மூன்று குழந்தைகளையும் விஷத்தை சாப்பிட வைத்துவிட்டான். அவர்கள் மூன்று பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் அவர்களுக்காக ஊக்கமாக ஜெபித்தவந்தார்கள் . ஒருவர் பின் ஒருவராக அவர்கள் சுகமடையதுவங்கினார்கள்

. 30 நாட்கள் என்னுடைய மகள் கோமா நிலையிலிருந்து சுகம் அடைந்து எழும்பினாள்.அவளுடைய சுகம் மரித்துப் போய் ஒருவர் மீண்டும் எழுவது போல் இருந்தது .

என் குழந்தகளுக்கு விஷத்தைகொடுத்தவர் தேவனுடைய வல்லமையான செயல்களை கண்டு ஆடிப்போய் விட்டான். பின்பு அவரும் இயேசுவை பின்பற்றுகிறவராக மாறி முகமதியர்களுக்கு மத்தியில் அதிலும் குறிப்பாக பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்தார் .

போன வருடத்தில் என் சக ஊழியர் கிறிஸ்தவ எதிர்பாளர்களால் தாக்கப்பட்டார்.அவருடைய ஜெபவிட்டையும் அவர்கள் எரித்துப்போட்டார்கள் .சமீபத்தில் என்னை கொல்ல நடந்த திட்டத்தில் கர்த்தர் அற்புதமாக காத்துக்கொண்டார்எனக்கு ஒரு வித்தை நேரிடப்பண்ணி என்னை ஒருவர் கொல்ல முயற்சித்தார் .நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என் குழந்தைகளையும்,மனவியையும் கொல்ல முயற்சி செய்தார்கள் .கர்த்தர் தாமே அவர்களை அற்புதமாக காத்துக்கொண்டார் .

பெற்றோரும்,சகோதரர்களும் மீண்டும் இணைந்தார்கள்:

குடும்பம் மீண்டும் இணைந்தது ;

என்னுடைய பெற்றோரும்,சகோதரர்களும் , சகோதரிகளும் தீவிர இஸ்லாமியர்கள் என்பதை உங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.அதிகமான பேர் ஹாஜிஸ் ,ஹாஜீமாஸ் (மெக்காவிற்கு புனிதப்பயணம் செய்த ஆண்கள்,பெண்களை இப்படி அழைப்பார்கள்)

நான் இயேசுவை என் வாழ்க்கையில் அனுமதித்து இருந்தபடியால் என் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு இருந்தேன்.என் பெற்றோடுடனோ,அல்லது உடன் பிறந்தவர்களுடனோ எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள அனுமதியில்லை. நானும் , என் மனைவியும் இதைகுறித்து மிகவும் விசனப்பட்டோம் ,ஜெபத்தின் மூலமாக தேவனுக்கு தெரியப்படுத்தினோம் .

மெதுவாக என் குடும்பத்தாரோடு கடிதம் மூலமாகவும் ,தொலைபேசி மூலமாகவும் தொடர்பு வைக்க ஆரம்பித்தோம் . இறுதியாக ஒரு நாள் வந்தது அவர்கள் நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உண்மையை ஒத்துக்கொண்டார்கள் . எங்களுடைய இடத்துக்கு வந்து எங்களுடன் தங்கினார்கள். நானும் இயேசுவின் அன்பை குறித்து பேசினேன் . அவர்கள் கடந்து போய் விட்டார்கள் .அதன் பின் அவர்களுடன் எனக்கு நல்ல தொடர்பை வளர்த்து வருகிறோம்.

பிறகு நான் கேள்விப்பட்டேன் என் தகப்பானார் இறப்பதற்கு இரண்டு நாளுக்கு முன் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார் என்று.ஏன் என்றால் அவர் ஒரு தரிசனத்தில் கை , கால் களில் ஆணிகள் பாய்த தழும்புகளுடன் இயேசுகிறிஸ்துவை கண்டதாக சொல்லியிருக்கிறார்.

என் தாயும் மரிப்பதற்கு கொஞ்சக்காலத்துக்கு முன் விசுவாசியாக மாறினார்கள் .

மரணத்தருவாயை அனுபவித்தப்போதும் பின்மாற்றம் இல்லை :

அன்பின் செய்தியை பரப்புவதே கடன்;

என்னுடைய பாவங்களை எடுத்துப்போட்டவர்களுக்காக நான் தற்போது பணி செய்கிறேன் .என் குடும்பம் எனக்கு இந்த ஊழியத்தில் துணையாயிருக்கிறது .எங்கள் ஊழியத்தின் பெயர் "சாலேம் தொனி ஊழியம்" அதாவது இயேசு கிறிஸ்து சாலேமின் ராஜா (சமாதானத்தின் ராஜா ) மற்றும் உன்னதமானவருடைய ஆசாரியன் (எபிரேயர் 7;1)நாம் அவருடைய சத்தத்தை ( சுவிஷேசத்தை)அறிவிக்கிறோம். அது தான் "சாலேமின் தொனி"

நமது ஆண்டவர் எனக்கு பரிசுத்த ஆவியினால் வெளிபாடுகளை கொடுத்து வேதம் தொடர்பான அநேக புத்தகங்களை மலையாளத்தில் எழுதி, அச்சிட உதவி செய்திருக்கிறார்கள்.தேவனுடைய கிருபையால் அந்த புத்தகங்கள் மூலம் அநேகர் ஏவப்பட்டு ஆண்டவரை அறிந்துள்ளார்கள் .

இந்திய ஆர்தோடக்ஸ் சபைகளின் பிஷப் ஆலோசனைக் குழு மூலமாக நான் "மலங்கார சபா மிஷனரி " என்று கௌரவப்படுத்தப்பட்டுள்ளேன்." தாஷி " மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்க இந்திய வேதாகம சங்கத்திற்கு உதவி செய்து வருகிறேன்.

அன்பு நன்பர்களே இதுவரை நமது அன்புக்குரிய நண்பர் பால் முகமது சினிராஜ் அவர்களின் சாட்சியை படித்தீர்கள் .ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து அவரை சந்தித்த விதம் மிகவும் அற்புதமானது.அது போல் இன்று வரை அவர்கள் குடும்பத்தை அற்புதமாக பாதுகாத்து வருகிறார் .இவர் மூலம் அநேக காரியங்களை தொடர்ந்து ஆண்டவர் நடத்தும் படியாகவும்,இவர்கள் பாதுகாப்புக்காகவும் நீங்கள் அனைவரும் ஜெபித்துக்கொள்ளுங்கள்

.

http://salemvoice.org/index.html

http://sathyavaan.blogspot.com/2007/12/blog-post_4294.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP