சமீபத்திய பதிவுகள்

வட இந்தியர்கள் மீது தாக்குதல்:ராஜ் தாக்கரே கைது-ஆதரவாளர்கள் கலவரம்-தீ வைப்பு

>> Tuesday, October 21, 2008

lankasri.comமராட்டியத்தில் வாழும் வட மாநில மக்களுக்கு எதி ராக மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வன்முறையை தூண்டும் வகையில் பேசி வந்தார்.இதனால் அந்த கட்சியினர் வட மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

ராஜ்தாக்கரேவின் பேச்சை எதிர்த்து ஜார்க் கண்ட் மாநிலம் ஜாம் ஷெட்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அவரை கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதனால் கோர்ட்டு அவருக்கு கடந்த 30-ந்தேதி ஜாமீனில் வர முடியாத பிடி வாரண்டு பிறப்பித்தது.இதை ஜாம்ஷெட்பூர் போலீசார் நேற்று மும்பை போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் ரெயில்வே ஊழியர் தேர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது.அதில் கலந்து கொள்ள வந்த வட மாநிலத்தவரை ராஜ் தாக்கரே கட்சியினர் அடித்து உதைத்தனர். இதனால் ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எனவே கோர்ட்டு பிடி வாரண்டு மற்றும் மும்பை தாக்குதல் தொடர்பாக ராஜ் தாக்கரே எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.இது பற்றி அரசு ஆலோசித்து வந்தது.

இதனால் ராஜ் தாக்கரே கடும் கோபம் அடைந்தார்."என்னை கைது செய்து பாருங்கள்,என்னை கைது செய்தால் மராட்டிய மாநிலமே பற்றி எரியும்"என்று சவால் விடுத்தார்.

ராஜ் தாக்கரே நேற்று தெற்கு மராட்டிய மாநில பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வந்தார்.இரவு ரத்னகிரியில் உள்ள அரசு சுற்றுலா விடுதியில் தங்கி இருந்தார்.இன்று அதிகாலை 3.45மணிக்கு போலீசார் விடுதிக்கு சென்றனர்.அங்கு தூங்கி கொண்டிருந்த அவரை எழுப்பி கைது செய்தனர்.

அவரை அங்கிருந்து மும்பை கொண்டு வந்து பாந்த்ரா கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர்.இதற்காக அவரை ரத்னகிரியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வருகின்றனர்.இன்று மாலை அவரை ஆஜர்படுத்த உள்ளனர்.பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ் தாக்கரே கைதான தகவல் இன்று காலை மராட்டியம் முழுவதும் பரவியது.உடனே மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சியினர் வன்முறையில் இறங்கினார்கள்.

நி#2990;ும்பையில் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள்.மும்பையில் ஜோகேஸ்வரி சென்ட்ரல்,போரிவெலிவில் பார்லே பகுதியில் தொண்டர்கள் சாலைகளில் திரண்டு மறியல் செய்தனர்.சாலைகளில் ஓடிய கார்-ஆட்டோ போன்ற வாகனங்களை தாக்கினார்கள்.கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடந்தது.அங்கு அமைக்கப்பட்டிருந்த சுங்க சாவடியில் பணம் வசூலிக்கும் கவுண்டருக்கு தீ வைத்தனர்.நிலைமை மோசமாகாமல் தடுக்க மும்பை மற்றும் மராட்டியம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

புனாவில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.இதில் ஈடுபட்ட 100பேரை போலீசார் கைது செய்தனர்.நாசிக் அருகே ஒரு லாரிக்கு தீ வைத்தனர். மற்றொரு லாரி சேதப்படுத்தப்பட்டது.அங்கு 70பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜ்தாக்கரேவை ஆஜர் படுத்த உள்ள பாந்த்ரா கோர்ட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.அவர்கள் திடீரென போலீ சார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.கலவரம் வெடித்து இருப்பதை அடுத்து மும்பையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ் தாக்கரே கைது குறித்து மராட்டிய நவநிர் மான் சேனா செய்தி தொடர்பாளர் சிரீஸ் பார்கர் கூறும் போது,"ராஜ் தாக்கரேயை கைது செய்யும் அளவுக்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை.மத்திய அரசின் வற்புறுத்தலால் அவரை கைது செய்து இருக்கிறார்கள்.இதில் அரசியல் பழி வாங்குதலும்,மாநில அரசின் சதியும் இருக்கிறது"என்றார்.

இதுபற்றி மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் கூறும்போது,"எந்த வற்புறுத்தலாலும் ராஜ் தாக்கரேவை கைது செய்ய வில்லை. சட்டம் தனது கடமையை செய்துள்ளது.அவர் சட்டத்தை தனது கையில் எடுத்ததால் கைதை சந்தித்து இருக்கிறார்"என்றார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1224578052&archive=&start_from=&ucat=1&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP