சமீபத்திய பதிவுகள்

அவாள் விரிக்கும் நடை பாவாடை!

>> Monday, November 10, 2008

அவாள் விரிக்கும் நடை பாவாடை!

- மின்சாரம்

பார்ப்பனர்கள் பேசும் எழுதும் விஷயங்களில் சில மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது நியாயத் தொனி போல தோன்றும். சற்று ஆழமாகப் பார்த் தால் அது இடமாறு தோற்றப் பிழையாக இருக்கும்.

இலங்கையில் நடக்கும் பிரச்சினைகள்பற்றி இந்தப் பார்ப்பன ஏடுகள், இதழ்களின் நடத்தைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியாமல் போகாது.

எடுத்துக்காட்டாக, இவ்வார கல்கி இதழில் (9.11.2008) தலையங்கத்தைப் படித்து பார்த்தால் இந்த உண்மை வெளிப்படாமல் போகாது.

ராஜபக்சே இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி யில் வடக்கு - கிழக்குப் பிராந்திய தமிழர் பகுதிகளுக்கு படிப்படியாக அதிகாரமும், அந்தஸ்தும் வழங்க ஒரு திட்டத்தை விவரித்துள்ளார். இது வெளியான 24 மணி நேரத்தில் புலிகள் தலைநகரைத் தாக்கியிருப்பதால், இந்தத் திட்டம் செயலாற்றுவ தற்கான சாத்தியக் கூறுகளும் சேர்ந்தே தாக்கப் பட்டுள்ளன என்று கல்கி கவலை தெரிவிப்பது போல் பாசாங்கு செய்கிறது.

ராஜபக்சே இதுவரை எந்த வார்த்தையைக் காப்பாற்றி யிருக்கிறார்? அவர் என்றைக்காவது நம்பகத் தன்மையுடன் நடந்து கொண்டது உண்டா?

இவர் அதிபராகப் பொறுப்பேற்ற நிலையிலேயே இலங்கையில் ஒற்றை ஆட்சிமுறைதான் (Unitarystate) என்று அறிவித்தார்.

அவர் யாருடன் கூட்டுச் சேர்ந்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்? ஜனதா விமுக்த பெரமுனா (ஜெ.வி.பி)வுடன் கூட்டணி வைத்து ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அக்கட்சி ஒற்றை ஆட்சி முறையை முக்கியமாக வலியுறுத்தக் கூடிய சிங்கள வெறி கொண்டதாகும். அக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோதே, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே எதிர்த்தார். இது கட்சியின் கொள்கைக்கு விரோதமானது என்றும் கூறினார். அவர் அளித்த பேட்டி டெய்லி மிரர் என்னும் இதழில் வெளிவந்தது (10.11.2005)

இன்றைக்கு எந்த இந்து ஏட்டில் ராஜபக்சே கொடுத்த பேட்டியை எடுத்துக்காட்டி கல்கி ராஜ பக்சே நல்லெண்ணத்துடன் கூறுவதாகக் காட்ட முயலுகிறதோ அந்த இந்து ஏட்டுக்குக் (9.11.2005) கட்சியின் தலைவரான சந் திரிகா அளித்த பேட்டியை ஒரு முறை புரட்டிப் பார்ப்பது நல்லது.

ஜனதா விமுக்த பெரமுனா (ஜெ.வி.பி.) ஜாதிகா ஹெலா உருமயா (ஜே.எச்.யு) சிங்கள உருமயா ஆகிய மூன்று கட்சிகள் சிங்களத் தீவிரவாத கட்சிகள் என்று பேட்டியளித்த சந்திரிகா இக்கட்சிகளுடன் கூட்டு வைத்திருப்பது அடால்ஃப் ஹிட்லருடன் ஒத்துப் போவதற்குச் சமம் என்றாரே!

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் முக்கியமாக இடம் பெற்ற ஒன்றாகும் (1987).

அதன் நிலை இப்பொழுது என்ன? ஜெ.வி.பி. மூலம் வழக்குத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் மூலம் அது செல்லாது என்று தீர்ப்பினையும் பெற்றுக் கொண்டு விட்டாரே!

இதுதான் ராஜபக்சேயின் நல்லெண்ணத்துக்கான எடுத்துக்காட்டா? கிழக்கு மாகாணத்தில் வெறும் எட்டு விழுக்காடு இருந்த சிங்களவர்கள் இப்பொழுது 30 விழுக்காடாக எண்ணிக்கையில் அதிகமானது எப்படி? அது திட்டமிட்ட வகையில் சிங்களவர் களைக் குடியேற்றச் செய்த ஏற்பாடு அல்லவா!

இந்தக் கொடுமையாளரிடம் ஏதோ தமிழர்களுக் கான திட்டம் இருக்கிறதாம் - கல்கி எழுதுகிறது - இதனை நம்பிடத் தமிழர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா?

போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில் அதனைத் தானடித்த மூப்பாக முறியச் செய்தது யார்? கல்கிக்குத் தெரியாதா?

இலங்கையின் தலைநகரான கொழும்பில் விடுதலைப்புலிகள் குண்டு போட்ட காரணத்தால் தமிழர்களுக்காக ராஜபக்சே வைத்திருந்த திட்டம் தகர்க்கப்பட்டு விட்டதாம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களையெல்லாம் இலங்கை இராணுவம் மீட்டு விட்டது. இன்னும் சில நாள்களில் அனைத்துப் பகுதிகளும் இராணுவ வசம் வந்துவிடும். விடுதலைப்புலி களின் தலைவர் பிரபாகரன் இருக்கும் இடத்தை நோக்கி இராணுவம் நெருங்கிவிட் டது. அவரும் பிடிபடுவார் என்றெல்லாம் பார்ப்பன ஏடுகள் பலவாறு எழுதிக் குவித் தன.

புலிகள் பலகீனம் அடைந்துவிடவில்லை - நாங்கள் பலமாக இருக்கி றோம் என்பதற்கு ஒரு எடுத் துக்காட்டுதான் கொழும்பின் மீது புலிகள் விமானம் நடத் திய தாக்குதல்!

இவ்வளவு பாதுகாப்பு இருக்கும் பொழுது எப்படி அது சாத்தியமானது என்று இலங்கையின் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் மூளை யைக் கசக்கிப் பிழிந்து ஆராய்ச்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.

கல்கி வகையறாக்களுக்கு எது மாதிரியான செய்திகள் கிடைத்தால் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரியிருக்கும்?

விடுதலைப்புலிகள் முற் றாக அழிக்கப்பட்டு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தி வரும் போதுதான் அவர்களுக்கு நல்ல தூக்கம் வரும்.

பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டார். இதோ இறுதி ஊர்வலம் நடந்து கொண்டு இருக்கிறது என்று வருண னைகளைக் (Running Commentry) கொடுத்துக் கொண்டிருந்த கூட்டம் அல்லவா? அதற்காகவே கரு மாதி பத்திரிகை என்ற பட் டத்தைச் சூட்டிக் கொண் டதும் தினமலர் என்ற பார்ப்பன ஏடுதானே!

தினமலர் மட்டுமல்ல மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு எனப்படும் இந்து ஏடும்கூட பிரபாகரன் சுட்டுக் கொல்லப் பட்டார் என்ற செய்தியை வெளியிட்டு (24.7.1984) ஆனந்தக் கூத்தாடவில்லையா?

நரகாசுரனைக் கொன்று தீபாவளி கொண்டாடும் கொண்டாட வைக்கும் கொலைகாரக் கூட்டமா யிற்றே! தமிழர் எதிர்ப்பு என் னும் அந்த வஞ்சகம் இன்று வரை தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பதற்குச் சாட்சியங்களே இன்றைய நடப்புகளாகும்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் (Genocide) என்று அதிகாரப் பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தவர்தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி (16.8.1983) ஒரு நாட்டில் இனப்படு கொலை நடக்கிறது என்றால் அதனைத் தட்டி கேட்க தலையிட மற்ற நாடுகளுக்கும் உரிமை உண்டு. அய்.நா. அங்கீகரித்த சட்டம் இது (The Genocide Convention - 1948).

உண்மை இவ்வாறு இருக்க - இலங்கை - இன்னொரு நாடு - அதன் உள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை என்பது அப்பட்டமான அறியாமை அல்லது பொய்யுரையாகும்.

ராஜபக்சே என்னும் ஹிட் லரின் ஆட்சியின் போக்கை அவர் கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்காவே ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறீலங்கா சுதந்திரா கட்சியின் மாநாடு கொழும்பு புதியநகர மண்டபத்தில் நடை பெற்றது (12.6.2008). இதில் கலந்து கொண்டு உரையாற் றிய கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்கா மகிந்த ராஜபக்சேமீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினாரே!

பயங்கரவாதத்திற்கு எதிராக படை நடவடிக்கை அவசியமானது. ஆனால் ஆட்சியாளர்கள் ஒரு போதும் பயங்கரவாதிகள் போன்று செயல்படக் கூடாது. சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் நாட்டைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து பொது முன்னணியை அமைக்க வேண்டும்.

சிலர் யுத்தம் மூலமே தீர்வு என்கின்றனர். இது சாத்தியமா காத விடயம். சில அடிப்படை வாதிகள் இலங்கை சிங்களப் பவுத்தர்களுக்குச் சொந்தமான நாடென்றும், ஏனைய மக்கள் அடிமைகளாக வாழ வேண்டும் என்கிற போக்கில் நடந்து கொள் கின்றனர். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்களின் எண்ணம் அதுவல்ல.

எனவே, நாட்டை சீரழிவில் இருந்து பாதுகாக்க அரசியல் முரண்பாடுகளைக் கைவிட்டு, அனைவரும் இணைந்து பரந்த அளவிலான முன்னணியை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே!

கூறியிருப்பவர் முதல் அமைச்சர் கலைஞரல்லர். தமிழர் தலைவர் மானமிகு வீரமணியும் அல்லர். இலங் கைத் தீவின் முன்னாள் அதி பரும், அக்கட்சியின் (ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி) தலைவருமானவரே கூறுகி றாரே - கல்கிகளின் இந்து தினமலர் வகையறாக்களின் பதில் என்ன?

முன்னாள் பிரதமரும் இலங்கை அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்ககே என்ன கூறுகிறார்?

ராஜபக்சேயின் குடும்ப நிர்வாகமும், அரசாங்கமும் யுத்தத்தை விற்று அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது. நாட்டின் பிரச்சி னையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக் கிறது. எனினும் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கின்றனர். சகல தரப்புகளிலும் தலைக் குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் அரசாங்கத்தின் யுத்த வாதக் கொள்கை தோல்வியை அடைந்திருப்பதுடன், சர்வதேசப் பகைமையையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும்.

ஊழலும், மோசடியும், பித்தலாட்டமும் நிறைந்து காணப் படுகின்ற குடும்ப நிர்வாகம் தனது அரசாங்கத்தின் அமைச்சர வையைப் பாதுகாத்துக் கொள் வதிலேயே குறியாக உள்ளது. (ஈழச் சுதந்திரன் 2008 நவம்பர்).

ராஜபக்சேயிடம் நல்லெண்ணம் மலர்ந்துள் ளது; இந்த நேரத்தில் யாழ்ப் பாணத்தில் விமானத் தாக் குதல் நடத்தலாமா என்று தமிழின அழிப்பாளர்களுக்கு நடை பாவாடை விரிக்கும் கூட்டத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

 

source:http://files.periyar.org.in/viduthalai/20081108/snews01.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP