சமீபத்திய பதிவுகள்

தங்கப்பதக்கம் தட்டிவந்த எட்டுவயது குட்டிப்பையன்

>> Thursday, December 4, 2008

 இன்றைய இந்தியச் சூழலில் பார்ப்பன வீட்டுக் குழந்தைகள் மட்டுமல்லாது தமிழர் களின் வீட்டுக் குழந்தைகளும் விளையாட்டு என்று வருகிறபோது கிரிக்கெட்டைத்தான் முதன்மையாக விளையாடுவார்கள். பார்ப்பனர் களிடம் இருந்து பரவிய ஜாதி என்னும் பார்ப்பனியம் நம்மிடம் பரவியது போலவே அவர்களின் விளையாட்டு என்றே ஆக்கப் பட்டுவிட்ட கிரிக்கெட் மோகத்திற்கு நம்மவர் களும் அமையாகி விட்டார்கள். ஆனால், பகுத்தறிவை துணையாக கொள்ளும் குடும்பங்களில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சரண்ராஜ் என்னும் எட்டு வயதே நிரம்பிய பகுத்தறிவுக் குடும்பத்துச் சிறுவன் செய்த சாதனை தமிழரை பெருமை கொள்வதாக இருக்கிறது.

ஆம் குழந்தைகளே, சரண்ராஜ் சாதனை செய்திருப்பது கராத்தே என்னும் தற்காப்பு கலையில் என்றால் நமக்கு பெருமைதானே. கடந்த செப்டம்பர் 2008இல் கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்தியா கராத்தே போட்டி யில் கலந்து கொண்டு 7-9 வயதுக்குட் பட்டவருக்காக முதன்முறையாக நடத்தப் பெற்ற போட்டியில் தன் திறமையை வெளிப் படுத்தி அரங்கத்தில் அனைவரையும் அசர வைத்து முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்று நம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் வசிக்கும் இராசசேகரன் - ஜோதிப்பிரியா ஆகியோரின் மகனாகிய சரண்ராஜைப் பற்றி அவர்கள் கூறும் பொழுது, மற்ற குழந்தைகள் விளை யாட்டில் காட்டும் ஆர்வத்தையும், வேகத் தையும் விட அதிக ஈடுபாட்டுடன் இருந்த தால் சரண்ராஜை கராத்தே கற்றுக் கொள்ள மாஸ்டர் ஜே.எஸ்.கலைமணி அவர்களிடம் சேர்த்துவிட்டோம். அங்கும் தனது நினை வாற்றல் மற்றும் வேகத்தோடும் பயிற்சிகளை கற்றுத் தேர்ந்தான். அதனால், மாஸ்டர் கலைமணி அவர்கள் 2007ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் நடைபெற்ற கராத்தே போட்டி யில் கலந்து கொள்ள வைத்தார். அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தான். அதோடு, 2008 ஆகஸ்ட்டில் கறுப்பு பட்டை (பிளாக் பெல்ட்) தேர்ச்சி பெற்றான். தற்பொழுது இந்தியா அளவில் முதன்முறையாக எட்டு வயதிலே தங்கம் வென்றது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றனர். மேலும் அவர்கள் சரண்ராஜின் தங்கை கராத்தே கலையில் ஆர்வம் செலுத்துகிறார் அவரையும் இதுபோல தற்காப்பு கலையில் சிறந்து விளங்க வைக்க வேண்டும் என்று கூறினர்.

கற்பனைச் சண்டை எனக்கூறும் கட்டாஸ் நடைகளை சரண்ராஜ் நமக்கு செய்து காட்டும் போது நம்மையறியாமல் அந்த தற்காப்பு கலையில் ஒரு ஈடுபாட்டை காட்டுகிறது. நமக்காக சில கட்டாஸை செய்து காட்டிய சரண்ராஜ், தனது லட்சியமாக கொண்டிருப் பது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்பதை கூறும் பொழுது, இவர் ஒலிம்பிக் மட்டுமல்ல உலக அளவிலான கராத்தே போட்டியிலும் கலந்து நமக்கு பெருமை சேர்ப்பார் என்றே தோன்று கிறது.

கராத்தே என்னும் தற்காப்பு கலை சிறந்த உடற்பயிற்சி முறையாகும். முறையான உடல் அசைவுகளை வெகு நேர்த்தியாக செய்யும் பொழுது பெரும்பாலான நோய்களை விரட்டி யடிக்க முடியும். சர்க்கரை நோய் என்னும் நீரழிவு நோய், மாரடைப்பு மற்றும் நெஞ்சுருக்கு நோய் மட்டுமல்லாது எப்படிப்பட்ட உடல் எடை கொண்டவரையும் இந்த தற்காப்பு கலை பயிற்சி மூலமாக ஆரோக்கியமானவராக மாற்ற முடியும் என்பது இந்த கராத்தே கலையின் சிறப்பாகும். இப்படிப்பட்ட தற்காப்பு கலை யான கராத்தே இந்திய அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த நமது சுட்டிப் பையன் சரண்ராஜை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நாம் அனைவரும் வாழ்த்துவோம்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP