சமீபத்திய பதிவுகள்

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து,கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது

>> Thursday, August 28, 2008


ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து
கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது
பெங்களூர் பேராயர் பெர்னார்டு மோரஸ் பேட்டி


பெங்களூர், ஆக.29-

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என்று பெங்களூர் கிறிஸ்தவ பேராயர் பெர்னார்டு மோரஸ் தெரிவித்தார்.

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

பெங்களூர் கிறிஸ்தவ பேராயரும், கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சிலின் தலைவருமான பெர்னால்டு மோரஸ் நேற்று பெங்களூர் பிஷப் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிறிஸ்தவ மதம் அமைதி, அன்பை விரும்பும் மதமாகும். மக்கள் நிம்மதியாக வாழ கல்வி போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில், ஒரிசாவில், நடந்த வன்முறையில், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் கிறிஸ்தவர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் நடத்தும் ஆதரவற்றோர் விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் கிறிஸ்தவர்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.

இன்று மூடப்படுகிறது

ஒரிசாவில், லட்சுமணானந்தா சரசுவதி சுவாமிகள் மற்றும் அவரது 5 சீடர்கள் கொல்லப்பட்ட பழியை கிறிஸ்தவர்கள் மீது சுமத்தி உள்ளனர்.

மக்களிடையே அன்பை போதிக்கும் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியல்ல.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயம் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் மூடப்படுகின்றன. இதேபோல கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று மூடப்பட்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம்.

உண்ணாவிரதம்

மேலும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள வன்முறையை, அந்த மாநில அரசும், மத்திய அரசும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ சமுதாயத்துக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளது என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். தாக்குதலுக்கு ஆளான கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு பேராயர் பெர்னால்டு மோரஸ் கூறினார்.

கண்டிக்கத்தக்கது

பேட்டியின் போது உடன் இருந்த கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சில் செயலாளர் ஜெயநாதன் கூறும்போது, கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மதம் உள்ளூர் கலாசாரத்தை, சீரழிப்பதாக கூறுவது தவறு என்றார்.

பேட்டியின் போது, பெங்களூர் மறை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அடால்ப் வாஷிங்டன், நிதி அதிகாரி பிரான்சிஸ், செயலாளர் வேதகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆதரவு

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று நடத்தும் போராட்டத்துக்கு, கர்நாடக கிறிஸ்தவ சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது.
 
 

StumbleUpon.com Read more...

ரூபாய் நோட்டுகள் வாபசாகிறது:கள்ள நோட்டு எதிரொலி:ரிசர்வ் வங்கி அதிரடி

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் தொடர்கிறது கலவரம்: வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுட உத்தரவு

 

 
 
lankasri.comவன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுட காந்தமால் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது. ஒரிசா மாநிலம் துமிதிபந்த் பகுதியில் உள்ள ஜலேஸ்பேட்டாவில் சனிக்கிழமை இரவு விஎச்பி தலைவர் லட்சுமணானந்த சரஸ்வதி நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார்.

இதை அடுத்து மாவட்டத்தில் ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டு பிற மாவட்டங்களுக்கும் பரவியது. விஎச்பி தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பந்த் போராட்டத்தின்போது பல தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் அநாதை இல்லமும் கொளுத்தப்பட்டது. இதில் ஒரு பெண் இறந்தார்.

இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயினும் இந்த எண்ணிக்கை 14 ஆக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் காந்தமால் மாவட்டத்தில் வன்முறை தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதை பெரும்பாலான மக்கள் மதிக்கவில்லை. பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன. எனவே வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் கோட்ட ஆணையர் சத்யவிரத சாகு தெரிவித்தார்.

காந்தமால் மாவட்டம் பாலிகுடா மற்றும் உதயகிரிக்கு இடையே உள்ள பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுக்கு செவி சாய்க்காமல் ஏராளமானவர்கள் தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். ஆயுதங்கள் மற்றும் மரத்தடிகளை ஏந்தியபடி வன்முறை கும்பல் நடமாடுகிறது.

மாவட்டத்தில் உள்ள ரைகியா பகுதியில் கும்பலாக வந்த சிலர் பெரிய அளவில் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் ரைகியாவில் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜான் நாயக் வீட்டின் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது.

ஆதாரம் இல்லாமல் புகார் வேண்டாம்: சிவராஜ் பாட்டீல்

காந்தமால் வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து பரவிவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாதவரை யாரையும் குற்றம் சாட்டவேண்டாம் என்று கூறியுள் ளார் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். லட்சுமணானந்தா கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கதே. ஆனால் அதற்காக போராட்டம் என்ற பெயரில் மற்றவர்களுக்கு சேதம் விளைவிப்பது ஏற்கத் தக்கதல்ல.

ஒரிசாவில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர 20 கம்பெனி துணை ராணுவ படையும் ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் சிவராஜ் பாட்டீல்.

 

 

StumbleUpon.com Read more...

தொடரை வென்றது இந்தியா!

தொடரை வென்றது இந்தியா!
lankasri.comதோனி தலைமையிலான இளம் இந்திய அணியின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் தோனி, சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. இதன்மூலம் ஒரு நாள் தொடரை 3-1 என கைப்பற்றி, ஆசிய கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இலங்கையும், அடுத்த இரண்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்திய அணி தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது. நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய நான்காவது போட்டி மழையின் காரணமாக ஒரு நாள் தாமதமாக நேற்று கொழும்புவில் நடந்தது. இத்தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

சமரசில்வா நீக்கம்: இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, மூன்றாவது போட்டியில் வென்ற அதே 11 வீரர்களுடன் களமிறங்கியது. இலங்கை அணியில் சமரசில்வா நீக்கப்பட்டு, வர்ணபுரா இடம்பிடித்தார்.

கோஹ்லி அரைசதம்:துவக்க வீரர்களாக காம்பிர், கோஹ்லி களமிறங்கினர். துவக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, இலங்கை பந்துவீச்சை ஓரளவு சமாளித்தது. முதல் விக்கெட்டுக்கு இவர் 44 ரன்கள் எடுத்தநிலையில் காம்பிர் (17), குலசேகரா பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த யுவராஜ் இம்முறையும் சொதப்பினார். இவர் வாஸ் பந்தில் ஜெயவர்தனாவிடம் "கேட்ச்' கொடுத்து "டக்' அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோஹ்லி ஒரு நாள் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். இவர் 7 பவுண்டரி உட்பட 54 ரன்கள் எடுத்து, வெளியேறினார்.

ரெய்னா அதிரடி: ஐந்தாவது வீரராக வந்த தோனி, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். மூன்றாவது போட்டியில் கலக்கிய இந்த ஜோடி நேற்றும் அசத்தியது. இலங்கை பந்துவீச்சை ஒரு கைபார்த்த ரெய்னா, முரளிதரன் பந்தில் பவுண்டரி அடித்து ஒரு நாள் போட்டிகளில் 7வது அரைசதம் பதிவு செய்தார்.

தோனி அசத்தல்: மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த தோனியும் தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 24வது அரைசதமாக அமைந்தது. அதிரடி காட்டிய ரெய்னா, முரளிதரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து, மிரட்டினார். இந்த ஜோடி தொடர்ந்து அசத்த, இந்திய அணி 38வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. நான்காவது விக்கெட்டுக்கு இவர்கள் 143 ரன்கள் எடுத்தநிலையில் ரெய்னா, துஷாரா பந்தில் அவுட்டானார். இவர் ஒரு சிக்சர், 6 பவுண்டரி உட்பட 78 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். இவரை தொடர்ந்து தோனியும் பெவிலியன் திரும்பினார். இவர் 4 பவுண்டரிகளின் உதவியுடன் 71 ரன்கள் எடுத்தார்.

பத்ரிநாத் ஏமாற்றம்: அடுத்து வந்த பத்ரிநாத், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். கடைசிக்கட்டத்தில் மந்தமாக விளையாடிய இந்த ஜோடி இந்தியாவின் ரன்வேகத்தை குறைத்தது. பத்ரிநாத் (6), ரோகித் (18) விரைவில் வெளியேறி, ஏமாற்றம் அளித்தனர். டெயிலெண்டர்களும் வரிசையாக நடையை கட்ட, இந்திய அணி 49.4 ஓவரில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஜெயசூர்யா அதிரடி: இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஜெயசூர்யா அதிரடி துவக்கம் தந்தார். ஆனால், மறுமுனையில் இவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. வர்ணபுரா (0), சங்ககரா (6) விரைவில் அவுட்டாயினர். இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஜெயசூர்யா, முனாப் பந்தில் பவுண்டரி அடித்து ஒரு நாள் அரங்கில் 66வது அரைசதம் கடந்தார். வேகப்பந்து வீச்சை இவர் அடித்து நொறுக்க, கேப்டன் தோனி பந்தை ஹர்பஜனிடம் கொடுத்தார். இதற்கு <உடனடி பலன் கிடைத்தது. இவர், ஜெயசூர்யாவை வெளியேற்றி, இந்தியாவுக்கு நம்பிக்கை தந்தார். ஜெயசூர்யா 2 சிக்சர், 8 பவுண்டரியுடன் 52 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் சிறப் பாக விளையாடிய கேப்டன் ஜெயவர்தனா இம்முறை 16 ரன்களுக்கு அவுட்டானார். கபுகேதரா 30, தில்ஷன் 12 ரன்களுக்கு அவுட்டாக, இந்தியாவின் வெற்றி உறுதியானது. அடுத்து வந்த டெயிலெண்டர்கள் விரைவில் பெவிலியன் திரும்ப, இலங்கை 46.3 ஓவரில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய தொடரை 3-1 என கைப்பற்றியது.

சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி, சமீபத்தில் ஆசிய கோப்பை பைனலில் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது. ஆட்டநாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.

சபாஷ் தோனி: சச்சின், சேவக், டிராவிட், கங்குலி என முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று சாதித்து காட்டியுள்ளது.

10 ஆண்டுக்கு பின்...: நான்காவது போட்டியில் வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என கைப்பற்றியது. இதன்மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, சாதனை படைத்துள்ளது. கடைசியாக அசார் தலைமையிலான இந்திய அணி கடந்த 1998ல் இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பை பைனலில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றிருந்தது.

வாஸ் "400": நேற்று யுவராஜின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை வீரர் சமிந்தா வாஸ் ஒரு நாள் போட்டிகளில் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1219832538&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

சிரஞ்சீவிக்கு சிக்கல்

சிரஞ்சீவிக்கு சிக்கல்    

Imageநடிகர் சிரஞ்சீவியின் கட்சி பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி, கடந்த 26-ந் தேதி அன்று `பிரஜா ராஜ்யம்' என்ற புதிய கட்சியை தொடங்கினார். திருப்பதியில், 10 லட்சம் ரசிகர்கள் மத்தியில் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்திய அவர், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனில் தனது கட்சியின் பெயரை பதிவு செய்ய கடந்த 26-ந் தேதி அவர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

இதற்கிடையில் சிரஞ்சீவியின் கட்சி பெயரை "பிரஜா ராஜ்யம்'' என்று பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதே பெயரில் கட்சி தொடங்க, தேர்தல் கமிஷனிடம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் 4 மாதங்களுக்கு முன்பே மனு தாக்கல் செய்து இருக்கிறார். அவரது மனுவை தேர்தல் கமிஷன் பரிசீலித்து, அவருக்கு பதில் கடிதமும் எழுதி இருக்கிறது.

 

எனவே சிரஞ்சீவியின் கட்சியின் பெயரையும் "பிரஜா ராஜ்யம்'' என்று வைத்துக்கொள்ள தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்க முடியாது. என்றாலும் இதுபற்றி பரிசீலித்து அவருக்கு இன்னும் ஒரு வாரத்தில் கடிதம் அனுப்ப தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், கட்சியின் உயர்மட்ட செயற்குழு, பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் கட்சியின் கொள்கை ஆகியவை குறித்து சிறந்த வல்லுனர்கள் குழுவுடன், சிரஞ்சீவி ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டவும் முடிவு செய்துள்ளார்.

 

இது குறித்து கட்சி அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த சிரஞ்சீவி, "முதல் கட்டமாக மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்ய ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் வகையில் என்னுடைய சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது'' என்றார்.

 

இது தவிர, தனக்கு எந்த அரசியல் தலைவரும் எதிரி கிடையாது என்று கூறும் சிரஞ்சீவி, `அனைத்து கட்சி தலைவர்களும் என்னுடைய நண்பர்களே. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை விரைவில் சந்தித்து பேச இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

http://www.adhikaalai.com/index.php?/en/?????????/???????/?????????????-???????

StumbleUpon.com Read more...

புலிகள் விமானம் குண்டு மழை

புலிகள் விமானம் குண்டு மழை
.
.
 கொழும்பு,  ஆக.27: இலங்கையில் திரிகோணமலை துறைமுகம் பகுதியில் உள்ள இலங்கை கடற்படை தளம் மீது  விடுதலைப் புலிகளின் விமானம் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி உள்ளது.
.
இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. புலிகளின் கட்டுப்பாட்டிலில் உள்ள பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ராணுவத்தின் இந்த தொடர் தாக்குதல்களில் ஏராளமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிகோணமலையில் உள்ள துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தளம் மீது நேற்றிரவு 9 மணிக்கு விடுதலைப் புலிகளின் போர் விமானம் குண்டு மழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்ததாகவும், மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகளின் போர் விமானம் துறைமுகத்தின் மீது 2 குண்டுகளை வீசி தாக்கியதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துறைமுகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்ட சத்தம் பயங்கரமாக கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக பீரங்கியால் தாக்கியது.

புலிகள் நடத்திய இந்த அதிரடி தாக்குதலைத் தொடர்ந்து அந்த பகுதியில் தொலைத் தொடர்பு சேவை மற்றும் மின் விநியோகம் பாதிக்கப் பட்டதாகவும், மேலும் அப்பகுதியில்  பதட்டம் நீடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் போர் விமானம் திரிகோணமலை துறைமுகத்தில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை போர் விமானங்கள் வன்னிப் பகுதிக்கு தாக்குதல் நடத்த விரைந்திருப்பதாக வவுனியாவில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையினரை யாழ்ப் பாணத்திற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் ஜெட்லைனர் என்ற கப்பலை குறி வைத்து விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தாக்கியதாக திரிகோணிமலை கடற்படை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே, நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு விடுதலைப் புலிகளின் போர் விமானம் மீண்டும் திரிகோணமலை துறைமுகம் மீது குண்டுகளை பொழிந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த 2வது தாக்குதல் குறித்து இலங்கை ராணுவத் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப் படவில்லை

 

 

StumbleUpon.com Read more...

சூரிய சக்தியால் இயங்கும் அதிசய விமானம் 83 மணி நேரம் பறந்து உலக சாதனை

சூரிய சக்தியால் இயங்கும் கார்கள் ஏற்கனவே வெளி வந்து விட்டன. இப்போது சூரிய சக்தியால் இயங்கும் விமானங்களும் பறக்கத் தொடங்கி விட்டன.

இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் `செபிர்-6' என்ற புதிய ரக குட்டி விமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவுக்காக இந்த சூரிய சக்தி விமானம் உரு வாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இந்த சூரிய சக்தி விமானத்தின் சோதனை ஓட்டம் நடந் தது.

இந்த ஆள் இல்லாத குட்டி விமானம் 83 மணி 37 நிமிட நேரம் இரவு பகலாக தொடர்ச்சியாக பறந்து உலக சாதனை படைத்துள்ளது.

30 கிலோ எடை உள்ள இந்த குட்டி விமானம் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறக் கும் ஆற்றல் கொண்டது. பகல் நேரத்தில் சூரிய சக்தியை பயன்படுத்தி பேட்டரி ரீசார்ஜ் செய்து கொண்டு இரவு நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளும்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1219665933&archive=&start_from=&ucat=2&

StumbleUpon.com Read more...

பீஜிங் ஒலிம்பிக் 2008 : முழு கண்ணோட்டம்!

lankasri.comபீஜிங்கில் நடந்த 29வது ஒலிம்பிக் அத்தியாயம் நிறைவடைந்தாலும் அதில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனைகளும், அதற்கு சொந்தமான வீரர்களின் பெயர்களையும் உலக மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர் என்பது மட்டும் திண்ணம்.

உலகம் முழுவதும் இருந்து 202 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச விளையாட்டு திருவிழாவில் 87 நாடுகள் பதக்கங்களை வென்றுள்ளன.

பதக்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பஹ்ரைன் (ஒரு தங்கம்) தஜிகிஸ்தான் (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), சூடான் (ஒரு வெள்ளி), ஆப்கானிஸ்தான், டோகோ (தலா ஒரு வெண்கலம்) உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இதுவே முதல் ஒலிம்பிக் பதக்கம் என்பது பீஜிங் ஒலிம்பிக் வரலாற்றுப் புத்தக்கத்தில் சிறப்பு பக்கங்களாக என்றும் திகழும் என்பதில் ஐயமில்லை.

உலக சாதனையிலும் பீஜிங் சாதனை: ஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கை என்றாலும், இதிலும் பீஜிங் ஒலிம்பிக் போட்டி முன்னிலை வகிக்கிறது. கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 33 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. ஆனால் பீஜிங் ஒலிம்பிக் அதனை விடக் கூடுதலாக 10 சாதனைகள் (மொத்தம் 43) நிகழ்த்தப்பட்டுள்ளன. (இதில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் 7 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்).

ஆசியாவின் ஆதிக்கம் ஓங்குகிறது: பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆசியாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. மொத்தமுள்ள 302 தங்கங்களில், 90 தங்கப் பதக்கங்களை ஆசிய நாடுகள் கைப்பற்றியுள்ளன.

இதேபோல் 56 வெள்ளி, 86 வெண்கலம் என மொத்தம் 232 பதக்கங்கள் (அதாவது மொத்த பதக்க எண்ணிக்கையில் சுமார் 25%) ஆசிய நாடுகளின் வசம் உள்ளது. ஆசிய நாடுகள் பதக்கப் பட்டியலில் சீனா 100 பதக்கங்களுடன் முதலிடத்திலும், தென்கொரியா 31 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.

lankasri.comஇந்திய தங்கமகன் பிந்த்ரா: ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு சரித்திரப் பெருமை கிடைத்தது பீஜிங் நகரில் தான். ஆடவர் 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றது, இந்திய சரித்திரத்தில் முதல் தனிநபர் தங்கமாக அமைந்தது.

இந்தப் பதக்கம் தந்த கூடுதல் உத்வேகத்தால் அடுத்தடுத்த நாட்களில் நடந்த பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினர். இதன் காரணமாக இந்தியாவுக்கு மேலும் 2 வெண்கலப் பதக்கங்கள் (விஜேந்தர், சுஷில்குமார்) கிடைத்தது.

lankasri.comமின்னல் வேக நாடு ஜமைக்கா: பீஜிங் ஒலிம்பிக் தொடரில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றதன் மூலம் உலகின் அதிவேக நாடு என்ற பட்டத்தை ஜமைக்கா பெற்றுள்ளது.

ஆடவர் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றதன் மூலம் கடந்த 1984இல் அமெரிக்க வீரர் கார்ல் லூயிஸ் படைத்த சாதனையை, ஜமைக்கா வீரர் யுசைன் போல்ட் சமன் செய்துள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் 9.69 நொடிகளிலும், 200 மீடடர் ஓட்டத்தில் 19.30 நொடிகளிலும் ஓடி இவர் புதிய உலக சாதனை படைத்தது இந்த ஒலிம்பிக் போட்டியின் மிகப் பெரிய பெருமையாகும். இவர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்று 3வது தங்கத்தை தட்டிச் சென்றதன் மூலம் பீஜிங் ஒலிம்பிக் தடகளத்தில் தனது ஆதிக்கத்தை உலகிற்கு உணர்த்தினார். இதிலும் ஜமைக்கா அணி (37.10 நொடிகள்) உலக சாதனை படைத்தது.

lankasri.comத்ரீ-ரோசஸ்: ஜமைக்கா தடகள வீராங்கனைகளும் தங்கள் பிரிவுகளில் பதக்கங்களை அள்ளிச் சென்றனர். 100 மீட்டர் ஓட்டத்தில் வீராங்கனை ஷெல்லி-ப்ரேஸர் தங்கமும், கெர்ரோன் ஸ்டீவர்ட், ஷிரோன் சிம்ப்ஸன் இருவரும் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஒலிம்பிக் தொடரில் ஒரே நாட்டைச் சேர்ந்த மூவர் ஒரு போட்டியில் அனைத்து பதக்கங்களையும் தட்டிச் செல்வது இதுவே முதல் முறை என்பதும் ஜமைக்காவுக்கு பெருமையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

lankasri.comசாதித்தது சீனா: திபெத்திற்கு சுயாட்சி கோரி புத்த பிட்சுகள் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பீஜிங் ஒலிம்பிக் போட்டியை சீனா சிறப்பாக நடத்தி முடிக்குமா என உலகமே சந்தேகித்த நிலையில், தனது திறமையான திட்டமிடல் மற்றும் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்தல் போன்ற திறமைகளால் சீன திட்டமிட்டதை விட சிறப்பாகவே போட்டிகளை நடத்தி முடித்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 32 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது சீனா. பீஜிங் ஒலிம்பிக்கில் நிச்சயம் முதலிடத்தைப் பிடிப்போம் என சூளுரைத்தத சீனா 51 தங்கப் பதக்கங்களை வென்று அதனை சாதித்தும் காட்டி தனது ஆதிக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது.

lankasri.comஅமெரிக்காவுக்கு 2வது இடம்: பீஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர் பெல்ப்ஸ் மட்டும் 8 தங்கங்களை வென்றிருந்தாலும், மொத்தம் 36 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் அமெரிக்காவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் 4 x 100 தொடர் ஓட்டத்தில் உலக சாம்பியனாக வலம் வந்த அமெரிக்காவுக்கு, பீஜிங் ஒலிம்பிக்கில் மரண அடி விழுந்துள்ளது. பேட்டன் மாற்றும் போது ஏற்பட்ட குழப்பத்தால் அமெரிக்க ஆடவர், மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறியது மொத்த அமெரிக்காவையும் நிலைகுலைய வைத்தது என்றால் மிகையில்லை.

எனினும் மொத்த பதக்கங்களின் (110 பதக்கம்) அடிப்படையில் பார்த்தால் பீஜிங் ஒலிம்பிக் அமெரிக்காவுக்கு சிறப்பானதாகவே அமைந்துள்ளது. கடந்த 1904இல் செயின்ட் லூயிஸ் நகரிலும் (இதில் 242 பதக்கம்), கடந்த 1984இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் (இதில் 174 பதக்கம்) நடந்த போட்டிகளுக்கு பின்னர் பீஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்கா அதிக பதக்கங்களை வென்றுள்ளது.

செயின்ட் லூயிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்று இருந்தால் அமெரிக்கா இத்தனை பதக்கங்களை வென்றிருக்க முடியாது என சில விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்ததையும் நினைவில் கொள்ளவேண்டும்.

சர்க்கரை கிண்ணத்திற்கு சுவைக்கவில்லை பீஜிங்: சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிப்பதால் உலகின் 'சர்க்கரைக் கிண்ணம்' என செல்லப் பெயர் பெற்றுள்ள கியூபா, குத்துச் சண்டையிலும் சிறந்து விளங்கியது. ஆனால் பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தப் பெருமையை அதனால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

கடந்த 1968க்கு பின்னர் நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்த கியூபாவின் வெற்றி நடைக்கு பீஜிங்கில் இடறல் ஏற்பட்டுள்ளது.

பான்டம் வெயிட் பிரிவு இறுதிக்கு முன்னேறிய யான்கீல் லியான் மற்றும் வெல்டர்வெயிட் பிரிவு இறுதியில் சண்டையிட்ட கர்லோஸ் பான்டியாக்ஸ் இருவரும் தோல்வியடைந்ததால் கியூபாவின் குத்துச்சண்டை தங்கக் கனவு சுக்குநூறாக உடைந்தது என்று தான் கூறவேண்டும். எனினும் 120 கிலோ மல்யுத்தம், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தலா ஒரு தங்கத்தை கியூபா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

lankasri.comமின்னிய நட்சத்திரங்கள்: பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் பெல்ப்ஸ் (8 தங்கம்), ஜமைக்காவின் யுசைன் போல்ட் (3 தங்கம்) ஆகியோர் தவிர வேறு சில பிரபலங்களும் தங்களின் ஆதிக்கத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

சைக்கிள் வீரன்: இங்கிலாந்து வீரர் கிரிஸ் ஹோய் பீஜிங் ஒலிம்பிக் தொடரில் நடந்த சைக்கிள் பந்தயங்களில் 3 பதக்கங்களை வென்று பீஜிங்கில் அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளார். 100 ஆண்டுக்கு பின்னர் ஒரே ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

பெண் சுறா: ஆஸ்திரேலியா வீராங்கனை ஸ்டீபனி ரைஸ் மகளிருக்கான நீச்சல் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதில் 2 உலக சாதனைத் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

lankasri.comபோல்வால்ட் ராணி: ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பிடித்த போல்வால்ட் ராணி இசின்பயீவா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.

ஒலிம்பிக் துவங்குவதற்கு முன்பே 5 மீட்டர் உயரத்தை தாண்டி புதிய உலக சாதனை படைத்த பயீவா, போல்வால்ட் இறுதியில் 5.05 மீட்டர் தாண்டி தனது முந்தைய உலக சாதனையை மீண்டும் முறியடித்தார்.

lankasri.comடேபிள் டென்னிஸ் நாயகன்: டேபிள் டென்னிஸில் தொடர்ந்து சாதித்து வரும் சீனா, பீஜிங்கிலும் மின்னத் தவறவில்லை. இறுதிப் போட்டியில் சீனா வீரர் மா-லின், சகநாட்டு வீரரும், உலக சாம்பியனுமான வாங்-ஹோவை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் சீன டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் வரிசையில் மா-லின் புதிய வரவாக இடம் பிடித்துள்ளார்.

lankasri.comஜிம்னாஸ்டிக் ராஜா: சீன வீரர் சோ-கை, ஆடவர் பிரிவு ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், ஜிம்னாஸ்டிக் உலகின் புதிய ராஜா என்பதை பீஜிங் ஒலிம்பிக்கில் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

டைவிங் இளவரசி: பல குட்டிக்கரணங்கள் அடித்து நீச்சல் குளத்தில் சாகஸம் நிகழ்த்தும் டைவிங் பிரிவு போட்டியில், சீன வீராங்கனை ஜிங்ஜிங்-குவோ பீஜிங்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 2 தங்கம், சிட்னி ஒலிம்பிக்கில் 2 வெள்ளிப் பதக்கங்களை ஏற்கனவே வென்றிருந்த ஜிங்ஜிங், பீஜிங்கில் 2 தங்கம் வென்றதன் மூலம், மொத்தம் 6 பதக்கங்களை வென்ற முதல் டைவிங் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நீண்ட தூர ஓட்டத்தின் ராஜா: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவின் 5,000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீரர் கினினிஸா பிக்கீலே தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றார். கடந்த 1980க்கு பின்னர் 2 பிரிவிலும் தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை இவர் பீஜிங் ஒலிம்பிக்கில் பெற்றுள்ளார்.

நீண்ட தூர ஓட்டத்தின் ராணி: இதேபோல் மகளிர் 5,000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீராங்கனை திருனேஷ் டிபாபா தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்றதன் மூலம் நீண்ட தூர ஓட்டத்தின் ராணி என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

lankasri.comஜொலிக்கத் தவறிய லியு-ஜியாங்: ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை 2001ல் சீனா பெற்று விட்டாலும், ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் தொடரில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் சீனா வீரர் லியு-ஜியாங் தங்கப் பதக்கம் வென்ற பின்னரே சீன மக்களிடையே ஒரு உத்வேகம் ஏற்பட்டது.

இந்த உத்வேகத்தை சரியாகக் கூற வேண்டுமென்றால், பீஜிங் ஒலிம்பிக் தடை ஓட்டத்தில் லியு-ஜியாங் மீண்டும் தங்கம் வென்றால் சீனாவுக்கு அதை விடப் பெரிய சந்தோஷம் எதுவும் இருக்காது என்று கூறலாம். அதேவேளை லியு-ஜியாங் முதலிடத்தை தவற விட்டால் அன்றைய தினம் சீனர்களுக்கு கருப்பு தினமாக அமையும் என்று சர்வதேச பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன.

ஆனால் இந்த இரண்டு விஷயங்களுமே நடக்காததால், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சீனாவின் தங்க மகன் லியு-ஜியாங் ஜொலிக்கத் தவறினார். 110 மீட்டர் தடை ஓட்டத்திற்கான தகுதிச் சுற்றில் பங்கேற்ற போது காலில் காயமடைந்ததால் களத்திலேயே நிலைகுலைந்த லியு-ஜியாங், ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது சீனர்கள் பலர் கண்ணீர் வடித்தனர். அவர்களில் ஜியாங்கின் பயிற்சியாளரும் ஒருவர் என்பது சோகத்தின் உச்சத்தை உணர்த்துவதாக அமைந்தது.

lankasri.comவீராங்கனைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் பஹ்ரைன் வீராங்கனை ரோகாயா அல்-கஸரா உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை (முகம், கை விரல், கால் பாதம் தவிர) மறைத்த உடையுடன் ஓடியது போட்டியை பார்த்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு அதிக சுதந்திரம் இல்லாத பஹ்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனை பீஜிங் போட்டியில் பங்கேற்றுள்ளது ஒலிம்பிக் போட்டிகளில் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணர்த்துவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

இதனை நாமும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காரணம்... கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பஹ்ரைனில் இருந்து 2 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றனர். பீஜிங்கில் அது 4 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த போட்டியாளர்களில் 42% பேர் பெண்கள். இதன் மூலம் அதிக பெண்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி என்ற பெருமையையும் பீஜிங் பெற்றுள்ளது. கடந்த 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் மொத்த போட்டியாளர்களில் 34.2% பெண்கள் பங்கேற்றதே இதுவரை அதிக அளவாக இருந்தது.

சில தவறுகள்: பீஜிங் ஒலிம்பிக்கில் பல சிறப்பான விஷயங்கள் நடந்திருந்தாலும், ஒரு சில தவறுகள் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.

உலகமே மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளித்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில், சிறுமி லின் மியாகே சிறப்பாக பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த சில நாளில் உண்மை வெளியானது. துவக்க நிகழ்ச்சியில் சிறுமி உதடுகளை மட்டுமே அசைத்தார்; பாடலைப் பாடியவர் வேறு ஒருவர் என்ற உண்மை தான் அது. இது ஒலிம்பிக் ரசிகர்கள் மனதில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற ஹீ-கெக்ஸின் 16 வயது நிரம்பாதவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவர் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

பீஜிங் ஒலிம்பிக் ஊக்க மருந்து பயன்பாடற்ற ஒலிம்பிக் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உக்ரைன் வீரர் ரஸோரோனோவ் (பளு தூக்குதல்) மற்றும் வீராங்கனை லுட்மிலா ப்ளோன்ஸ்கா (ஹெப்டத்லான்), கிரீஸ் வீராங்கனை ஹல்கியா (தடை ஓட்டம்), வடகொரியாவின் கிம் ஜோங்-சு (துப்பாக்கி சுடுதல்), ஸ்பெயினின் இஸபெல் மோரினோ (சைக்கிள் போட்டி), வியட்நாம் வீராங்கனை தி-கன் துவோங் (ஜிம்னாஸ்டிக்) ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள நடுவருக்கு உதை: ஆடவர் டேக்வான்டோ போட்டிகளின் போது கள நடுவரை முகத்தில் உதைத்த குற்றத்திற்காக கியூபா வீரர் ஏஞ்சல் வலோடியாவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஏஞ்சல் வாலோடியா மடோஸ், கஜகஸ்தானின் அர்மன் சில்மனொவை எதிர்த்து மோதினார். இப்போட்டியில் வாலோடியா முன்னிலையில் இருந்தாலும், கஜகஸ்தான் வீரர் வெற்றி பெற்றதாக அறிவித்து நடுவர் போட்டியை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வாலோடியா நடுவரை காலால் எட்டி உதைத்தார். இதையடுத்து வாலோடியாவுக்கும், அவரது பயிற்சியாளருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெஞ்சைத் தொட்டது: ஒலிம்பிக் போட்டி நடந்த சமயத்தில் ரஷ்யாவுக்கும், அதன் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கும் உக்கிர போர் மூண்டது. மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர்-பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்ற ஜார்ஜிய வீராங்கனை நினோ, வெள்ளிப் பதக்கம் வென்ற நடாலியா படெரினாவை கட்டித் தழுவி தனது நட்புணர்வை வெளிப்படுத்தியது ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டது.

ஒரு சில குறைகள் இருந்தாலும், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சீனா மிகச் சிறப்பாக நடத்தியது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறைவு விழாவில் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக் ரோஜே, அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் இங்கிலாந்துக்கு விடுத்த கோரிக்கை என்னவெனில், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து நடத்தி தர வேண்டும் என்பதே.

"Webdunia"

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1219858630&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

ஒரிசா வன்முறைக்கு போப் ஆண்டவர் கண்டனம்

lankasri.comஒரிசா மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று ஆசிரமத்தில் பூஜை செய்து கொண்டிருந்த விசுவ இந்து பரிசத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி (வயது 85) மற்றும் சீடர்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்து அமைப்புகள் நடத்திய "பந்த்"தின்போது கலவரம் வெடித்தது. அதில் கிறிஸ்துவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.

கிறிஸ்தவர்கள் வீடுகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகினர். கலவர கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இன்னும் பல்வேறு பகுதிகளில் கலவரம் நீடித்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மீது நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சுவாமி லட்சுமணானந்தா மறைவுக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாடிகனில் நேற்று போப் ஆண்டவர் கூறுகையில், "மனித உயிர்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும் நான் கண்டிக்கிறேன். அனைவரிடத்திலும் அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும். வன்முறை சம்பவங்களில் பலியான அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1219902291&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP