சமீபத்திய பதிவுகள்

ஒரிசாவில் இந்து மத தலைவரை கொன்றது நாங்கள்தான் மாவோ தீவிரவாத தலைவர் பேட்டி

>> Sunday, October 5, 2008



புவனேசுவரம், அக்.6-

ஒரிசாவில், இந்து மத தலைவரை கொன்றது நாங்கள்தான் என்று, மாவோ தீவிரவாத தலைவர் கூறினார்.

இந்து மத தலைவர் கொலை

ஒரிசா மாநிலம் கந்த்மால் மாவட்டத்தில் உள்ள ஜலபீட ஆசிரமத்தில், கடந்த ஆகஸ்டு 23-ந் தேதி, விசுவ இந்து பரிஷத் ததலைவர் சுவாமி லட்சுமானந்த சரசுவதியும் மற்றும் 4 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கந்த்மால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 35 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.

மாவோ தீவிரவாதிகள்

சுவாமி லட்சுமானந்த சரசுவதியின் படுகொலைக்கு, மாவோ தீவிரவாதிகள் பொறுப்பேற்று இருக்கிறார்கள். இந்த தகவலை மாவோ தீவிரவாதிகளின் தலைவர் சப்யா சாசி பந்தா என்ற சுனில், காட்டு பகுதியில் துணிவுடன் சென்று அவரை சந்தித்த 2 டெலிவிஷன் சேனல்களின் நிருபர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த சந்திப்பை அந்த ஒரியா மொழி சேனல்கள் வீடியோ காட்சிகளுடன் ஒளிபரப்பின. அப்போது தீவிரவாதிகளின் தலைவனும் மற்றும் அவனுடன் இருந்த தீவிரவாதிகளும் முகத்தை துணியால் மறைத்து இருந்தனர்.

டி.வி. சேனல் நிருபர்களிடம் மாவோ தீவிரவாத தலைவன் பந்தா கூறியதாவது:-

நாங்கள்தான் கொன்றோம்

லட்சுமானந்த சரசுவதி சுவாமி, பொது மக்களிடம் அமைதி சீர்குலைவை ஏற்படுத்தி வந்தார். இதனால் அவருக்கு, 2007-ம் ஆண்டு எச்சரிக்கை அனுப்பினோம். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

எனவே நாங்கள் அவரது ஆசிரமத்துக்குள் சென்று அவரையும், தடுத்த 4 பேரையும் சுட்டுக்கொன்றோம். இந்த கொலைகளுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்.

ஏற்கனவே கடிதம்

கொலை நடந்த இடத்தில் இருந்து நாங்கள் புறப்படும் முன், இந்த கொலைக்கு பொறுப்பு ஏற்று 2 கடிதங்களை போட்டு சென்றோம். ஆனால் அதை போலீசார் கைப்பற்றி மறைத்து விட்டார்கள். அந்த தகவல்கள் வெளியிடப்பட வில்லை.

அதன்பின் சில டெவிவிஷன் சேனல்களுக்கு தகவல் கொடுத்தோம். அவர்களும் இதை பொருட்படுத்தவில்லை. இதற்கிடையில் கிறிஸ்தவர்கள்தான், சுவாமியின் கொலைக்கு காரணம் என்று கூறி, அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து விட்டனர்.

இவ்வாறு மாவோ தவைவர் கூறினார்.

பல மைல் நடந்து சென்றோம்

இந்த பேட்டிக்கு சென்ற டி.வி. செய்தி சேகரிப்பு குழுவினர் கூறுகையில், "போலீசுக்கு தெரியாமல் வரும் படி தீவிரவாதிகள் கூறி இருந்தனர். எனவே நாங்கள், காட்டுக்குள் கஷ்டப்பட்டு பல மைல் தூரம் நடந்து சென்று, தீவிரவாதிகளை சந்தித்தோம். இந்த அனுபவம் மிகவும் கடினமானது'' என்று குறிப்பிட்டனர்.

தீவிரவாதிகளின் தலைவன் பந்தா மீது பல வழக்குகள் உள்ளன. அவர் போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442969&disdate=10/6/2008

StumbleUpon.com Read more...

இந்தியாவின் புகழுக்கு களங்கம்:பிரதமர்

 
 
lankasri.comஒரிசா மற்றும் கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், தமது அமெரிக்க பயணத்தின்போது இந்த விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஐரோப்பிய யூனியன் தலைவரும், பிரான்ஸ் அதிபருமான நிகோலஸ் சர்கோஸியும், தன்னிடம் இது குறித்து வருத்தம் தெரிவித்ததாக பிரதமர் கூறினார்.

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் தேசிய அவமானம் என்றும், இதனால் வெளிநாடுகளில் இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரிசா மற்றும் கர்நாடக மாநில கலவரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இந்த தகவல்களை மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் தாஸ்முன்ஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே, இந்த பிரச்னை குறித்து காங்கிரஸ் உயர்நிலை தலைவர்களின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

StumbleUpon.com Read more...

இந்திய தம்பதியர் செக்ஸ்க்கு ஏழாவது இடம்

ஆசிய பசிபிக் செக்ஸ், சுகாதாரம் மற்றும் ஒட்டு மொத்த நல வாழ்வு அமைப்பு சார்பில் உலகில் 13 நாட்டு மக்களிடம் புதிய ஆய்வு நடத்தப்பட்டது.

அவர்களிடம் வாழ்க்கைக்கு தேவையான 17 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில் இந்தியர்கள் குடும்ப வாழ்க்கை மீது அக்கறை செலுத்துவதில்தான் முதல் கவனம் வைத்துள்ளனர். அடுத்தபடியாக எதிர்காலம் பற்றிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர்.

இந்த வரிசையில் 3-வதாக பணம் சம்பாதிப்பதும், 4-வதாக உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதும் இடம் பெற்றுள்ளது.

இந்திய ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் செக்ஸ்சை 7-வது இடத்தில்தான் வைத்துள்ளனர். அதே சமயம் பெண்கள் இதனை 14-வது இடத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

உலகில் அதிக பட்சமாக இந்தியர்கள்தான் செக்ஸ் விஷயத்தில் அதிக திருப்தி அடைவதும் தெரிய வந்துள்ளது.

73 சதவீத இந்திய தம்பதிகள் முழு திருப்தி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிலிப்பைன்சில் 52 சதவீதம் பேரும், தாய்லாந்தில் 30 சதவீதம் பேரும், சீனாவில் 23 சதவீதம் பேரும் ஜப்பானில் 10 சதவீதம் பேரும் திருப்தியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்தியர்கள் 40 வயதுக்கு பிறகு தங்களது ஆண்மையை மெது, மெதுவாக இழப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.




http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

ஒரிசா கலவரம் நீடிப்பு: 50 ஆயிரம் பேர் வீடு இழப்பு-உயிருக்கு பயந்து காடுகளில் தஞ்சம்

ஒரிசா கலவரம் நீடிப்பு: 50 ஆயிரம் பேர் வீடு இழப்பு-உயிருக்கு பயந்து காடுகளில் தஞ்சம்

புவனேசுவரம், அக். 5-

ஒரிசாவில் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சாமியார் லட்சு மானந்தா நக்சலைட்டு களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனால் ஒரிசாவில் கலவரம் வெடித்தது. இந்து அமைப்புகளை சேர்ந்த வர்கள் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்கினார்கள். கிறிஸ்தவ ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. கிறிஸ் தவர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

கலவரம் மற்றும் போலீஸ் துப்பாக்கி சூடு ஆகியவற்றில் 15-க்கும் மேற்பட்டோர் பலி யானார்கள்.

இந்த கலவரம் தொடங்கி 1 மாதம் ஆகிவிட்ட நிலை யிலும் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது.

தினமும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. அவர்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளை இடித்து தள்ளி தீ வைக்கின்றனர்.

கலவரத்தில் கந்தமால் மாவட்டம்தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பல கிராமங்களுக்கும் போலீ சாரே நுழைய முடியவில்லை. ஒரிசா போலீசாருக்கு உதவ மத்திய போலீஸ் படையினர் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒரிசா போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அவர்களால் கல வரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்து அமைப்பினர் காடு களில் பதுங்கி இருந்து திடீரென கிறிஸ்தவ கிராமங்களுக்குள் புகுந்து தாக்குகின்றனர்.

இதனால் பயந்து போன கிறிஸ்தவர்கள் காடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் ஊருக்கு திரும்பினாலும் தங்குவதற்கு வீடுகள் இல்லை. அவற்றை கலவரக்காரர்கள் நாசமாக்கி விட்டார்கள். இதனால் 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக கந்தமால், கட்டாக், புவனேசுவரம் ஆகிய இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை நிரம்பி வழி கின்றன. வீடுகளை இழந்த 50 ஆயிரம் பேர் இங்குதான் தங்கி இருக்கின்றனர்.

கலவரத்தில் தப்ப ஓடிய வர்கள் பலர் குடும்பங்களை பிரிந்து விட்டனர். கணவரை பிரிந்த மனைவி, பெற்றோரை பிரிந்த குழந்தைகள் என பலரும் நிவாரண முகாம்களில் தவிக்கின்றனர்.

தொடர்ந்து கலவரம் நீடிப்பதால் அவர்கள் இப் போதைக்கு ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. அவர்களில் பலர் ஒரிசா போலீசாரையே குற்றஞ்சாட்டுகின்றனர். "கல வரக்காரர்கள் மீது போலீசார் சரியான நடவடிக்கை எடுப்பது இல்லை. போலீசார் முன்னிலையிலேயே கலவர கும்பல் எங்களை தாக்கினார்கள். எனவே போலீ சை நம்பி ஊருக்கு திரும்ப முடியாது. எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை'' என்கின்றனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறியதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா? என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

எனவே அங்குள்ள நிலைமை குறித்து அறிக்கை தரும்படி கவர்னருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கவர்னர் அறிக்கை கொடுத் ததும் அடுத்த கட்ட நட வடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

மத்திய உள்துறை மந்திரி சிவராஜ்பட்டீல் இதுபற்றி கூறும்போது, "ஒரிசா அரசால் கலவரத்தை அடக்க முடியவில்லை. அரசு தோல்வி அடைந்து விட்டது. இதனால் தான் கவர்னர் அறிக்கையை கேட்டு இருக்கிறோம்'' என்றார்.

ஆனால் இதுபற்றி ஒரிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கூறும் போது, "ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் அளவுக்கு ஒரிசாவில் நிலைமை மோசமாகி விடவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்துள் ளோம். நாங்கள் கேட்ட நேரத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பவில்லை. அவர்கள் தாமதமாக வந்தது தான் நிலைமை இவ்வளவு மோசமானதற்கு காரணம்'' என்றார்.
 
 

StumbleUpon.com Read more...

கிளிநொச்சியை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்தது: 2 லட்சம் தமிழர்கள் வெளியேற்றம்

கிளிநொச்சியை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்தது: 2 லட்சம் தமிழர்கள் வெளியேற்றம்

கொழும்பு, அக். 5-

கடந்த ஜனவரி மாதத்தில் பேர் நிறுத்தத்தை தன்னிச் சையாக வாபஸ் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளி நொச்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

கிளி நொச்சியை பிடிக்க இலங்கை ராணுவத்தின் முப்படைகளும் தாக்குதல் நடத்திய படி முன்னேறி வருகின்றன.

கிளிநொச்சியை பிடிக்க இன்னும் 2 கி.மீ.தூரம் தான் செல்ல வேண்டும். கிளிநொச்சியை முற்றுகை யிட்டு விட்டோம். விரைவில் அதை பிடித்து விடுவோம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறி உள்ளார். ராணுவத்துக்கு உதவியாக விமானகளும் விடுதலைப்புலிகளின் முகாம் கள், பதுங்கு குழிகள் மீது குண்டு வீசி வருகின்றன.

இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதால் பாதுகாப்பு கருதி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கிளிநொச்சியில் இருந்து வெளியேறி அதை சுற்றி உள்ள 10 கி.மீ. தூரத் தில் உள்ள போர் இல்லா பிரதேசத்துக்கு சென்று விட்டனர்.

கிளிநொச்சியைஅவ்வளவு எளிதில் பிடித்து விட முடியாது, விடு தலைப்புலிகளின் உள் கட்டு மானங்களை, அவர் களின் போர் தந்திரம் ஆகியவை வெளியே தெரி வதில்லை என்று ராணுவ வல்லுனர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்த விடுத லைப்புலிகள் புதிய விïகம் வகுத்துள்ளனர்.
 

StumbleUpon.com Read more...

நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு அவசர ஆலோசனை



புவனேசுவரம், அக்.5-

உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் அறிக்கை கேட்டதை தொடர்ந்து, ஒரிசா கவர்னர் முரளிதர் சந்திரகாந்த் பண்டாரே முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை அழைத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பு சுமார் 11/2 மணி நேரம் நடந்தது.

கவர்னர் மாளிகையை விட்டு வெளியே வந்த நவீன் பட்நாயக்கிடம் நிருபர்கள், ``மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் பிரச்சினை குறித்து கவர்னருடன் ஆலோசனை நடத்தினீர்களா?'' என்று கேட்டதற்கு, அப்படி எதுவும் பேசவில்லை என்றார். கந்தமால் நிலவரம் குறித்தும் வெள்ள சேதம் பற்றியும் கவர்னருடன் பேசியதாக அவர் கூறினார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442748&disdate=10/5/2008

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா?


கலவரம் நீடிப்பு எதிரொலி
ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா?
மாநில அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்கிறது


புவனேசுவரம், அக்.5-

ஒரிசா நிலவரம் குறித்து அந்த மாநில கவர்னரிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டு உள்ளது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

கலவரம் நீடிப்பு

ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கடந்த மாதம் விசுவ இந்து பரிஷத் தலைவர் லட்சுமணானந்தா சரசுவதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

போலீசாரின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து ஓரளவு அமைதி திரும்பி வந்த நிலையில், அந்த மாவட்டத்தில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. அங்குள்ள சிந்துபங்கா என்ற கிராமத்தில் ஒரு கும்பல் 2 பேரை வெட்டிக் கொன்றது. இதனால் ஒரிசா கலவர சாவு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

துணை ராணுவம்

மேலும் இந்த கலவரம் பக்கத்தில் உள்ள போத் மாவட்டத்துக்கும் பரவியது. அந்த கிராமத்தில் 4 கிராமங்களில் 111 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அந்த மாவட்டத்திலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கலவரத்தை ஒடுக்க போத் மாவட்டத்துக்கு 2 கம்பெனி துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

போத் மாவட்டத்திற்கு கலவரம் பரவியது துரதிருஷ்டமானது என்று கூறிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக், அங்கு மூத்த அதிகாரிகளும், கூடுதல் பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மத்திய அரசு அறிக்கை கேட்கிறது

கலவரத்தை அடக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோரி நவீன் பட்நாயக்குக்கு மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார்.

சிவராஜ் பட்டீல் நேற்று ஒரிசா கவர்னர் முரளிதர் சந்திரகாந்த் பண்டாரேயை தொடர்பு கொண்டு மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கேட்டு அறிந்தார். அப்போது, ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து அறிக்கை அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ஆட்சி வருமா?

சிவராஜ் பட்டீல் நேற்று தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்; ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருவதாக தெரிவித்தார். கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது குறித்து ஏற்கனவே 6 முறை மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒரிசாவில் நிலைமை மேலும் மோசம் அடைந்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தால், அதை மத்திய அரசு ஏற்கக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படுத்தப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

பா.ஜனதா எச்சரிக்கை

ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால், அதற்காக மத்திய அரசு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஒரிசாவில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை என்றும், ஆனால் அங்கு இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஊரடங்கு உத்தரவு

இதற்கிடையே, கந்தமால் மாவட்டத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், 12 போலீஸ் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த மாவட்டத்தில் லைசென்சு பெற்று துப்பாக்கி வைத்து இருப்பவர்களும், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களும் அவற்றை 3-ந் தேதிக்குள் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, 144 பேர் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைத்தனர். `கெடு' முடிந்ததை தொடர்ந்து, இன்னும் ஒப்படைக்காதவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாக கந்தமால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண் குமார் தெரிவித்தார்.

103 பேர் கைது

கலவரத்தை தூண்டியதாக 103 பேரை கைது செய்து இருப்பதாகவும், வன்முறை கும்பலை போலீசார் தொடர்ந்து வேட்டையாடி வருவதாகவும் அவர் கூறினார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442747&disdate=10/5/2008

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP