சமீபத்திய பதிவுகள்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த மாட்டோம் இலங்கை ராணுவ செயலாளர் அறிவிப்பு

>> Sunday, October 19, 2008


கொழும்பு, அக்.20-

`விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த மாட்டோம். தோல்வியை தவிர்க்கவே இந்திய அரசியல்வாதிகளின் உதவியை விடுதலைப்புலிகள் நாடி இருக்கின்றனர்' என்று இலங்கை ராணுவ செயலாளரும், அதிபர் ராஜபக்சேயின் சகோதரருமான கோடபயா ராஜபக்சே தெரிவித்தார்.

மன்மோகன் சிங் வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினர்.

நேற்று முன்தினம் தன்னிடம் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம், "ஒருங்கிணைந்த இலங்கை என்ற வரையறைக்கு உட்பட்டு சுமூகமான அரசியல் உடன்பாடு எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

இந்த சூழ்நிலையில் இலங்கை ராணுவ செயலாளரும், அதிபர் ராஜபக்சேயின் சகோதரருமான கோடபயா ராஜபக்சே நேற்று கூறியதாவது:-

தோல்வியை தவிர்க்க ஆதரவு

இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் பெரிய அளவிலான சேதத்தை விடுதலைப்புலிகள் சந்தித்து வருகின்றனர். அவர்கள் கடைசி கட்டத்தில் இருப்பது தெளிவாக தெரிகிறது. அவர்களுடைய தோல்வியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தோல்வி பயம் காரணமாகவே, தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களிடம் இருந்து அதிகபட்ச ஆதரவை பெற முயற்சிக்கிறார்கள்.

அந்த தலைவர்களைக் கொண்டு, இந்திய அரசு மூலமாக இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். விடுதலைப்புலிகள் எதை விரும்புகிறார்கள்? ஏன் இந்த திடீர் நெருக்கடியை தொடங்கி உள்ளனர்? அவர்களுக்கு வேறு வழியே இல்லை என்பதே இதற்கு காரணம். இத்தகைய நிலைமை அவர்களுக்கு ஏற்படும் என்று எங்களுக்கு முன்பே தெரியும்.

தமிழக அரசியல் தலைவர்கள்

எது எப்படி இருந்தாலும், விடுதலைப்புலிகள் மீதான ராணுவ தாக்குதல் தொடரும். தாக்குதலை தற்போது நிறுத்த முடியாது. ராணுவத்திடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது. இந்த பிரச்சினையை எழுப்பி வரும் தமிழக தலைவர்கள் அனைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள்தான் கொலை செய்தனர் என்பதை மறக்கக் கூடாது.

வன்னி பகுதியில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருவதாக விடுதலைப்புலிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்பதை தமிழக அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் பிடியில் இருந்து தமிழர்களை காப்பாற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம். இந்த உண்மை நிலையை தமிழகத்தில் போராடும் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மீனவர்கள் மீதான தாக்குதல்

உணர்வு பூர்வமான விஷயத்தில் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதை தமிழக தலைவர்கள் நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு நல்லெண்ண அடிப்படையிலேயே, எங்கள் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிக்க இந்திய மீனவர்களை அனுமதிக்கிறோம்.

எல்லை தாண்டி வரும் அவர்களை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல் வெறுமனே விசாரணை செய்துவிட்டு விடுவிக்கிறோம். ஆனால், ஆயுதங்களை கடத்துவதற்காக தமிழக மீனவர்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி விட்டு ஏமாற்றி வருகின்றனர். எனவே ராணுவ முகாம்களும், கடற்படை தளங்களும் மிக அருகில் இருப்பதால் இங்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்று தமிழக மீனவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கோடபயா ராஜபக்சே தெரிவித்தார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=445549&disdate=10/20/2008

StumbleUpon.com Read more...

கிளிநொச்சி அருகே கடும்போர் ஏராளமான சிப்பாய்கள் பலியானதாக இலங்கை ராணுவம் ஒப்புதல்


கொழும்பு, அக்.20-

கிளிநொச்சி அருகே நேற்று நடந்த கடும் போரில் ஏராளமான சிப்பாய்கள் பலியானதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

13 கி.மீ. தொலைவில்

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தலைநகராக விளங்குவது கிளிநொச்சி. அந்த மாவட்டத்தை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எனினும் அந்த நகரை நெருங்குவதில் ராணுவத்துக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதலான படைகளை ராணுவம் அனுப்பி வைத்தது.

கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக மட்டும் ராணுவத்தின் 57 டிவிசன் துருப்புகள் சென்றுள்ளன. இதனால் அங்கு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள அக்கரையான் குளம் என்ற இடத்தில் ராணுவம் நேற்று கடும் தாக்குதல் நடத்தியது.

விஷவாயு தாக்குதல்

அந்த பகுதியில் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு ராணுவம் முன்னேறி சென்றது. மேலும் விடுதலைப் புலிகளின் 19 பதுங்கு குழிகளையும் ராணுவத்தினர் கைப்பற்றினர். இதையடுத்து விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறை சமயங்களில் பயன்படுத்தும் கண்ணீர் புகை குண்டுகளைப் போன்றவற்றை ராணுவம் மீது வீசினார்கள்.

விடுதலைப் புலிகள் வீசிய அந்த குண்டுகள் வெடித்தபோது, விஷ வாயு கசிந்தது. அவை அனைத்தும் ரசாயன குண்டுகள் என்பதால் ராணுவ வீரர்கள் செத்து மடிந்தனர். இதனால் ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்து ஒரு கி.மீ. தூரத்துக்கு பின் வாங்கினர். இறுதியில் 2 கி.மீ. தொலைவை கைப்பற்றியதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராணுவ அமைச்சக அறிக்கை

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், `விடுதலைப் புலிகளின் விஷவாயு தாக்குதல் இருந்தபோதிலும் 19 பதுங்கு குழிகளை கைப்பற்றினோம். இந்த தாக்குதலில் ஏராளமான வீரர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கரையான் குளத்தில் மெதுவாக முன்னேறிய உடனேயே, விஷவாயு தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே, அவர்கள் தரப்பில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை. எனினும், ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

கடற்படை தளம் முற்றுகை

விமானம் மற்றும் கடற்படை தாக்குதல்களை தொடர்ந்து விஷவாயு மூலமாகவும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி இருப்பதால் இலங்கை ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கிளிநொச்சியைப் போல முல்லைத் தீவு பகுதியிலும் கடுமையான போர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் ஏராளமான விடுதலைப் புலிகள் பலியானதாக ராணுவம் தெரிவித்தது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் கடற்படை தளமான நச்சிகுடா பகுதியை நோக்கி ராணுவம் முன்னேறி வருகிறது. நீண்ட சண்டைக்கு பிறகு இந்த தளத்தை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவித்து இருக்கிறது.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=445535&disdate=10/20/2008

StumbleUpon.com Read more...

பெட்டிச் செய்திகள்


புகையிலையால் உயிரிழப்போர் 10 இலட்சம் பேர்

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 70 சதவிகித ஆண்கள் புகையிலையை (புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை உண்ணுதல்) பயன்படுத்துகின்றனர். மகாராட்டிராவில் 48 சதவிகிதம், தமிழ்நாடு மற்றும் டெல்லியில் 40 சதவிகித ஆண்கள் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். பெண்களில் மேற்கு வங்காளத்தில் 16 சதவிகிதம், ஆந்திராவில் 5.2 சதவிகிதம், டெல்லியில் 3.1 சதவிகிதம், தமிழ்நாட்டில் 2.8 சதவிகிதம் பேரும் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 10 இலட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.


சபாஷ்! சிபு சோரன்

வடஇந்தியாவின் சில பகுதிகளில் விஜயதசமி பண்டிகையன்று இராவணன் உருவபொம் மைக்குத் தீவைக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இந்நிகழ்ச்சி நடைபெறு கிறதாம். கெட்டவைக்கு எதிராக நல்லவை வென்றதை இவ்விழா குறிப்பதாக அம்மாநில மக்கள் கூறுகின்றனர். இராமாயணத்தைப் பேச்சுவாக்கில் கதையாகச் சொல்லிச் சொல்லியே வந்ததைக் கேட்ட மக்களால் இப்படித்தான் விளங்கிக் கொள்ளமுடியும். இராமாயணத்தை முழுமையாகப் படித்துப்பார்த்தால் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பது தெரிந்துவிடும். என்றாலும் வடஇந்தியாவின் சில பகுதிகளில் ராவணனைக் கொண்டாடுவோரும் உள்ளனர். அவர்கள் தங்களை ராவணன் வழிவந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சமூகத்தினர். இந்த நிலையில், இந்த ஆண்டு ராஞ்சியில் மோராபாடி மைதானத்தில் நடக்கும் ராவணன் பொம்மைக்கு தீ வைக்கும் நிகழ்ச்சிக்கு ஜார்கண்ட் முதல்வர் சிபு சோரனை, பஞ்சாபி மற்றும் இந்து பிரதாரி அமைப்பினர் அழைத்துள்ளனர். ஆனால், சிபுசோரன் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
சிறந்த கல்வி நிபுணரான ராவணனின் உருவ பொம்மைக்கு நான் எப்படி தீ வைக்க முடியும்?. அவரை ஒரு பிரிவினர் குலகுருவாகக் கருதி வருகின்றனர். இது போன்ற நிலையில், இந்நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று சிபு சோரன் கூறியதாக அவரைச் சந்தித்தவர்கள் கூறியுள்ளனர்.

- அன்பன்

அறியாமை தந்த அவலம்

ஜான்சி ராணியின் இயற்பெயர் மனுபாய். சிறுமி மனுபாயின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர், ஜான்சியை ஆட்சி செய்த கங்காதரராவிடம், மனுபாயின் அழகையும், அவளுடையது யோக ஜாதகம் என்றும், அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டால், நாடே நன்மைபெறும் என்றும் கூறினார். ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, அரசர் மனுபாயைத் திருமணம் செய்த போது அவளுக்கு வயது ஏழு. பெயரை லட்சுமிபாய் என்று மாற்றினார்கள். லட்சுமிபாய்க்கு குழந்தை பிறந்தபோது, வயது பதினாறு. அரசர் கங்காதரராவ் இறந்தபோது, அவர் வயது பதினெட்டு. வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தபோது, அவர் வயது 23தான். ஏழுவயதுச் சிறுமியின் அழகை வர்ணித்த ஜோதிடர், அவர் பேச்சைக் கேட்டு சிறுமியை மணந்துகொண்ட அரசர், இருவருடைய அறியாமையால், ஒரு பெண்ணின் வாழ்வு அற்ப ஆயுளில் முடிந்துபோனது பரிதாபம்தான்.

- எம்.கதிர்வேல்

சந்திசிரிக்கும் கடவுள் சக்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தாசனபுரம் வெங்கடாசலபதி கோயில் செப்டம்பர் 18 அன்று இரவு கோயில் கருவறையின் கதவை உடைத்து ரூ.6 இலட்சம் மதிப்புள்ள 48 பவுன் தங்கம், 16 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வெங்கடாசலபதி சாமியின் சக்தியை (?) அறிந்த சில ஆசாமிகள் இத்திருட்டைச் செய்துள்ளனர். காவல்துறைக்குக் கிடைத்த புகாரை அடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.


விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர்

விண்வெளிக்கு ஆராய்ச்சியாளர்கள் சென்று வந்ததுண்டு. இப்போது விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் காலம் வந்துவிட்டது. அமெரிக்காவின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ்சின் வெர்ஜின் காலக்டிக் நிறுவனம் விண்வெளிச் சுற்றுலாவுக்கு ஆயத்த மாகி வருகிறது. இதில் பயணம் செய்ய கேரளா வைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து டிக்கட் பெற்றுள்ள இவர் லேபர் இந்தியா எனும் மலையாளக் கல்வி இதழை நடத்தி வருகிறார். உலகின் முதல் தனியார் விண்வெளி வாகனமான ஸ்பேஸ்ஷிப் 2 என்ற விமானத்தில் செல்லும் இவர் விண்வெளிக்குப் சுற்றுலாப் பயணம் சென்ற முதல் இந்தியப் பயணி என்கிற சிறப்பைப் பெறுகிறார்.


நல்ல தீர்ப்பு

பொதுவாக நாட்காட்டிகள் சம்பந்தமாக பல்வேறு விவாதங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகள் குறித்து பல்வேறு காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.
முற்காலங்களில் தமிழ் நாட்காட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது அரசு மாற்றி உள்ளது ஒன்றும் புதிதல்ல. அரசியல் சட்டப்படி அதுபோன்று மாற்றுவதற்கு, அரசுக்கு உரிமை உள்ளது. அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆலோசனை கேட்கலாம்.
அதேபோன்று சமஸ்கிருதத்தில் உள்ள தமிழ் ஆண்டுகளின் பெயர்களை மாற்றம் செய்யவும் ஆலோசனை கேட்கலாம். தமிழ் மொழிதான் ஆட்சி மொழி என்று கொண்டு வர அரசுக்கு எப்படி அதிகாரம் உள்ளதோ, அதே போன்று தமிழ் நாட்காட்டிகள் எப்படி இருக்க வேண்டும். என்று தீர்மானிக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.
எனவே தை மாதம் 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது சட்டவிரோதம் இல்லை. சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இந்து மத வழிபாடுகளில் ஒரு பகுதி என்று மனுதாரர் தெரிவித்து இருப்பது மதசாயம் பூசும் செயலாகும்.
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பில்...


நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இன்றைக்கு நீங்கள் முயற்சி செய்யுங்கோ, நாளைய கதையைக் கடவுள் பாத்துப்பார் என்கிறார் வைத்திய நாதய்யர்வாள், தினமணி கதிரில்! (IF WE TAKE CARE OF TODAY, GOD WILL TAKE CARE OF TOMORROW) நல்ல கருத்துதானே, என்றார் நண்பர்.
இன்று ரொக்கம், நாளை கடன் என்று பழைய பலசரக்குக் கடையோர்க்கும், ஆர்.எஸ். எஸ். அய்யர் எழுதும் ஆங்கிலத்துக்கும் வித்தியாசம் இல்லையே! என்றேன் நான்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


பிட்டி தியாகராயர்

சென்னை கொருக்குப்பேட்டையில் வணிகக் குடும்பத்தில் அய்யப்ப செட்டியார் என்ற பெருமகனாருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர்தான் பிட்டி தியாகராயர் (27.4.1852) சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றர் (1876) நெசவுத் தொழிலையும் தோல் பதனிடும் தொழிலையும் சீரும் சிறப்புமாக நடத்திய குடும்பம் அவருடைய குடும்பம் தென்னிந்திய வர்த்தகச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களுள் தியாகராயரும் ஒருவர் ஆவார்.
1892 முதல் 1925 வரை சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து தன்னேரில்லாத உறுப்பினராகயிருந்தார். 1920-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர நகராட்சி சட்டப்படி மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் தியாகராயரே ஆவார். 1922ஆம் ஆகண்டு வரை தொடர்ந்து மூன்று முறை தலைவராகயிருந்தவரும் இவர் ஒருவரே!
1933-ஆம் ஆண்டுவரை நகர மன்ற தலைவர் என்றுதான் பெயர்; 1933 முதல் தான் மேயர் என்று அழைக்கப்படலாயிற்று.
இலவச உணவு, இலவச புத்தகம் இவையெல்லாம் பள்ளிப் பிள்ளைகளுக்கு முதன் முதலாக வழங்கச் செய்தவர் பிட்டி தியாகராயரே!


 
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP