சமீபத்திய பதிவுகள்

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீன தீவிரவாதிகள் 35ராக்கெட்டுகளை வீசி தாக்கினார்கள்

>> Friday, November 7, 2008

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீன தீவிரவாதிகள் 35ராக்கெட்டுகளை வீசி தாக்கினார்கள்
 
lankasri.comபாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது 35ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6தீவிரவாதிகள் பலியானார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் தீவிரவாதிகளின் ராக்கெட்டு தாக்குதல் நடந்தது.இந்த ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேல் பகுதியின் மீது விழுந்தது. இதனால் எந்த சேதமும் இல்லை என்றும் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்று உள்ளனர்.

எகிப்து நாட்டின் முயற்சியின் பேரில் கடந்த ஜுன் மாதம் 19-ந்தேதி முதல் அங்கு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்து வருகிறது.அதை மீறி இப்போது தாக்குதல் நடந்து உள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

யூசுஃபிற்கு பாக். தடை!

 
lankasri.comஅங்கீகாரமற்ற ஐ.சி.எல். கிரிக்கெட்டில் மீண்டும் சேர்ந்ததால் பாகிஸ்தான் பேட்ஸ்மென் மொகமது யூசுபிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான அவரது ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அபுதாபியில் இம்மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் ஒரு நாள் போட்டித் தொடரில் யூசுஃபிற்கு பதிலாக காலித் லடிஃப் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.எல். கிரிக்கெட்டில் சேர்ந்த அனைத்து வீரர்களையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது.

 

StumbleUpon.com Read more...

சச்சின் 40-வது சதம்

 
lankasri.comஇந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் இன்று டெஸ்ட் போட்டிகளில் 40-வது சதத்தை அடித்து மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது.

அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றதை அடுத்து புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள மகேந்திர சிங் டோனி,டாசில் வெற்றி பெற்று இந்தியா முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார்.இதனையடுத்து இந்தியா முதலில் பேட் செய்ய தொடங்கியது.

ஒரு போட்டியில் ஆட துவக்க வீரர் கவுதம் காம்பீருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து அவர் இந்த டெஸ்ட்டுக்கான அணியில் இடம் பெறவில்லை.அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக வீரர் விஜய்,ஷேவாக்கோடு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.

விஜய் மற்றும் ஷேவாக் ஆடி வருகின்றனர்.6-வது ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 32ரன்கள் எடுத்திருந்தது.தொடர்ந்து ஷேவாக் அதிரடியாக ஆடினார்.விஜய் அவருக்கு துணை நின்றார்.விஜய் 33ரன்னில் ஆட்டமிழந்தார்.ஷேவாக் 66ரன் எடுத்து அவுட்டானார்.

திராவிட் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கரும்,வி.வி.எஸ்.லஷ்மணனும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள்.64ரன்கள் எடுத்திருந்த போது லஷ்மண் ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் தனது 40-வது சதத்தை பூர்த்தி செய்தார்.166 பந்துகளில் 11பவுண்டரிகளை விளாசி அவர் சதமடித்தார்.இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 10-வது சதமாகும்.

உலகிலேயே அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 36சதங்களுடன் 2-ம் இடத்தில் இருக்கிறார்.

டெண்டுல்கர் சதமடித்ததை தொடர்ந்து இந்தியா 4விக்கெட் இழப்புக்கு 282ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP