சமீபத்திய பதிவுகள்

புலிகள் வெளியிட்டு உள்ள சிங்கள ராணுவ‌வீரர்களின் உடல்களின் புகைபடங்கள்

>> Thursday, December 11, 2008

இருமுனை முன்நகர்வு முறியடிப்பு - 90 படையினர் பலி - 180 பேர் படுகாயம்; - 12 உடலங்கள் புலிகள் வசம்

December 11, 2008 by அமுதன்  

கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 120ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயங்களுடன் களமுனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அறிவியல் நகர் ஊடாக முன்னேற முனைந்த படையினரில் 29 படையினர் கொல்லப்பட்டு 60ற்கும் மேற்பட்ட படையினர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர். களமுனைகளில் சிதறிக்கிடந்த படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது, புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை மணிக்கு பல்குழல் எறிகணைகள், ஆட்டிலெறிப் பீரங்கிககள் ஆகியனவற்றின் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தினர். இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்களும், பெருமளவு ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, கிளிநொச்சியின் தென் எல்லைப்பகுதியான முறிகண்டிக்கு வடமேற்கு பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது, முறிகண்டிக்கு வடமேற்கில் உள்ள அறிவியல்நகர் பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு செறிவான எறிகணை மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களுடன் சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர முறியடிப்புத் தாக்குதல் இன்று மாலை ஆறு மணி வரை நீடித்தது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர். 

 

StumbleUpon.com Read more...

கடந்த இருநாட்கள் மோதலில் 120 படையினர் பலி. 280 பேர் படுகாயம்: மலையாளபுரம் வரை படையினர் பின்நகர்த்தல்: புலிகள்-with photo

கடந்த இருநாட்கள் மோதலில் 120 படையினர் பலி. 280 பேர் படுகாயம்: மலையாளபுரம் வரை படையினர் பின்நகர்த்தல்: புலிகள்
 
 
கடந்த இருதினங்களாக கிளிநொச்சி நோக்கி இருமுனைகளில் முன்னேறிய சிறிலங்கா படையினரின் பெருமளவிலான முன்நகர்வை விடுதலைப்புலிகள் முறியடித்து படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.
கிளிநொச்சிக்கு மேற்குப்புறமான புதுமுறிப்பை நோக்கியும். தெற்குப்புறமான அறிவியல் நகரை நோக்கியும் முநகர்வை மேற்கொண்ட சிறிலங்கா இராணுவத்தினரின் இப்பாரியபடை நகர்வை வெற்றிகரமாக முறியடித்த தமிழீழ விடுதலைப் புலிகள் புதன்கிழமை இரவு இராணுவத்தினரை மலையாளபுரம் வரை பின்நகர்த்தியுள்ளனர்.
இம்முறியடிப்புத் தாக்குதலில் 120 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 280 க்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் சிலர் புதிதாக படைக்குச் சேர்க்கப்பட்ட இளைஞர்களும் அடங்குகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இம்மோதல்களில் படைத்தரப்பில் 23பேர் உயிரிழந்ததாகவும் 27 புலிகள் கொல்லப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இதன்போது கொல்லப்பட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட சடலங்கள் யுத்த சூனிய பிரதேசங்களில் சிதறிக்கிடப்பதாக படைத்தரப்பினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தெரிவித்துள்ளனர்.

 

 

StumbleUpon.com Read more...

கிளிநொச்சி : சிங்கள படைக்கு பின்னடைவு

 


கிளிநொச்சியை பிடிக்க சிங்களராணுவம் 1 மாதமாக முற்றுகையிட்டு உள்ளது. 50 ஆயிரம் சிங்கள வீரர் கள் 3 முனைகளில் முன்னேறி கிளிநொச்சியை தாக்கினார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகள் அரண்போல் நின்று அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நின்றனர்.

நேற்று கிளிநொச்சியில் உள்ள புது முறிப்பு பகுதியை நோக்கி சிங்கள படையினர் 2 பகுதிகள் வழியாக முன்னேறி தாக்கி வந்தனர். அவர்களை சிறிது நேரம் முன்னேற விட்டு விடுதலைப்புலிகள் பிறகு திடீரென சிங்கள ராணுவம் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் சிங்கள ராணுவம் நிலை குலைந்து போனது. இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. விடுதலைப்புலிகள் தாக்குதலில் ஏராளமான சிங்கள வீரர்கள் இறந்தனர் . மேலும் தாக்கு பிடிக்க முடியாமல் அவர் கள் முற்றுகையை கைவிட்டு பின் வாங்கி ஓடினார்கள்.

இந்த தாக்குதலில் 60 சிங்கள வீரர்கள் பலியானார்கள். 120 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியான சிங்கள வீரர்கள் பலரின் உடல்கள் பதுங்கு குழியில் சிதறி கிடந்தன.

இதே போல கிளி நொச்சியின் தெற்கு பகுதியில் உள்ள அறிவியல் நகரிலும் சிங்கள படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கடும் சண்டை நடந்தது. இதிலும் சிங்கள படையினர் தாக்கு பிடிக்க முடியாமல் பின் வாங்கி ஓடினார்கள். இந்த சண்டையில் 29 சிங்கள வீரர்கள் பலியானார்கள் 60 பேர் படுகாயம் அடைந்தனர். இங்கு காலை 9 மணிக்கு தொடங்கிய சண்டை மாலை 6 மணி வரை நீடித்தது.

இரு சண்டையிலும் சேர்த்து 90 க்கும் அதிகமான சிங்கள வீரர்கள் பலியாகி உள்ளனர். 180 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

கிளிநொச்சி நகரை சுற்றி சிங்கள வீரர்கள் பதுங்கு குழிகளை அமைத்து இருந்தனர். அங்கிருந்து அவர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த இடத்தில் சென்று பார்த்த போது ஏராளமான சிங்கள வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

சிங்கள படையினருக்கு நேற்று கிடைத்த மரண அடி பெரும் பின்னடையாக அமைந்துள்ளது.
 

StumbleUpon.com Read more...

மனித வெடிகுண்டு தாக்குதல் : 55 பேர் பலி

 

உலகமெங்கிலும் இனக்கலவரங்கள் மேலோங்கிவிட்டன.   இதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று  ஆலோசனை நடந்த கூட்டத்தில் குண்டு வைத்து அராஜகம் செய்திருப்பது உலகையே வருந்தவைத்திருக்கிறது.

ஈராக்கில் கிர்குக் நகரில் ஒரு ஓட்டலில் குர்தீஷ் இன தலைவர்கள்,   இனக் கலவரத்தை தடுப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.    பல்வேறு இனத் தலைவர்கள் கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தனர்.

அந்த ஓட்டலில் ஈத் பண்டிகை விழாவை யொட்டி சிறப்பு விருந்து நிகழ்ச்சியும் இன்னொரு அரங்கில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ஓட்டலுக்குள் மனித வெடிகுண்டாக புகுந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்துள்ளான். இதில் பழங்குடி இன தலைவர்கள், விருந்து நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பேர் உடல் சிதறி பலியாகியிருக்கிறார்கள்.
 

StumbleUpon.com Read more...

இந்திய அரசியலில் முன்னுக்கு வரவேண்டுமென்றால்

இந்திய அரசியலில் முன்னுக்கு வரவேண்டுமென்றால், கட்சித் தலைவரைத் `திருப்தி' செய்யவேண்டும்! அவர் சந்தோஷப்படும்படி நடந்துகொள்ள வேண்டும். மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டுக் கட்சித் தலைவரின் `கொள்கைகளுக்கு'த் தலையாட்ட வேண்டும்.

எந்த மேடையில் பேசினாலும் தலைவரை வானளாவப் புகழவேண்டும். வழியைப் பற்றிக் கவலைப்படாமல், கட்சி நிதிக்குப் பணம் சேர்த்துத் தரவேண்டும். உங்கள் பிறந்தநாளாக இருந்தாலும், தலைவரின் பிறந்தநாளாக இருந்தாலும் தலைவருக்குப் `பெரிய அளவில்' ரூபாய் நோட்டுக்களாலான மாலையை அவருக்கு அணிவித்து, அவரது `ஆசி'யைப் பெறவேண்டும்.

சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் கட்சித் தலைவரின் `திருவடிகளில்' சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும். அவரது கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டால் மிகவும் நல்லது. தலைவரின் திருக்கண் பார்வை உங்கள் மீது படும்போது, அளவற்ற மரியாதையினால் உங்கள் உடல் உங்களையும் அறியாமல் கூனிக்குறுகி நெளிய வேண்டும். அதாவது, அந்த அரசியல் தலைவரின் கண் பார்வை படுவதற்கு நீங்கள் மகத்தான பாக்கியம் செய்திருப்பதாக நீங்கள் உணர்வதை அவருக்கு வெளிப்படுத்தவேண்டும்! பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

அரசியலில் உறுதியாக வெற்றி பெற இத்தகைய `உன்னதமான' வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்க நம் நாட்டில் பள்ளிகள் இல்லை. ஆதலால், உங்கள் கணவரிடம் சொல்லி இவ்வழிமுறைகளைப் பின்பற்றி இன்று `நல்ல' பதவிகளில் அமர்ந்துள்ள `அரசியல் பட்டதாரிகளிடம்' சீடனாகச் சேர்ந்து கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். எவ்வளவு சீக்கிரம் இதில் தேர்ச்சி பெறுகிறாரோ, அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளை அவர் அடைவார் என்பது அவரது `திறமை'யைப் பொறுத்தது. அரசியல் வெற்றிக்கு இது ஒன்றே தக்க `பரிகாரம்' ஆகும்.

நன்றி : குமுதம் ஜோதிடம்
 
 

StumbleUpon.com Read more...

சென்னை டெஸ்டில் ஸ்ட்ராஸ் சதம்: இங்கி. 229/5

 
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட், சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

தொடக்க வீரர்கள் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், அலைஸ்டர் குக் ஆகியோர் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துத் தந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். 52 ரன்கள் எடுத்த நிலையில் குக் வெளியேறினார்.

பின்னர் வந்த பெல் 14 ரன்களுக்கும், கேப்டன் பீட்டர்சன் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த காலிங்வுட், 9 ரன்களுக்கு வெளியேறினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தார் ஸ்ட்ராஸ். அபாரமாக விளையாடிய அவர், தனது 13-வது சதத்தை நிறைவு செய்தார். மேலும் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டிராஸ் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் (90 ஓவர்களில்) இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. பிளின்டாப் 18 ரன்களுடனும், ஆண்டர்சன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் தலா 2 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
(மூலம் - வெப்துனியா)
 

StumbleUpon.com Read more...

இலங்கை : புலிகள் தாக்குதலில் ராணுவத்தினர் 89 பேர் பலி

கிளிநொச்சி அருகே முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய இரு வெவ்வேறு தாக்குதலில், 89 ராணுவத்தினர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சிக்கு மேற்கே முன்னேறி வந்த ராணுவத்தின் 57வது பிரிவினரை புலிகள் எதிர்கொண்டு தாக்கினர். இரணைமடு அருகே நடந்த தெருமுருக்கண்டி என்ற இடத்தில் நடந்த இந்த மோதலில் 60 ராணுவத்தினர் பலியானதாக தமிழ் நெட் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே போல கிளிநொச்சிக்கு தெற்கே நடந்த மற்றொரு தாக்குதலில் சிங்கள ராணுவத்தினர் 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களது உடல்களை இன்னும் ராணுவத்தால் மீட்க முடியவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் இந்த பதிலடி தாக்குதலால், ராணுவம் கிளிநொச்சியிலிருந்து பின் வாங்கிவிட்டது. தப்பியோடிய ராணுவத்தினர் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே மேற்கூறிய இரு இடங்களிலும் நிகழ்ந்த மோதலில் புலிகள் தரப்பில் 27 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

கிளிநொச்சியை ஒருபோதும் நெருங்கவிடமாட்டோம் : பிரபாகரன் சபதம்

 

 

Imageவிடுதலைப்புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று பிரபாகரன் சபதம் பூண்டுள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே உச்ச கட்ட போர் நடந்து வருகிறது. முக்கிய கடற்படை தளமான பூநகரியை கைப்பற்றிய ராணுவம், விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகிறது.

இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களான சேனாதிராஜா ஜெனந்த மூர்த்தி மற்றும் சந்திரநேரு ஆகியோர், தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது, கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று, விடுதலைப்புலிகள் சபதம் ஏற்று இருப்பதாக அவர்களிடம் பிரபாகரன் தெரிவித்தார். "பூநகரி பிரதேசத்தில் இருந்து பின்வாங்கிச்சென்றது போர் தந்திர உபாயமே. இன்னும் 3 மாதங்களுக்குள் ராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் முன்னெடுக்கப்படும்'' என்றும் பிரபாகரன் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், கிளிநொச்சியில் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன. தரை வழியாக ராணுவமும் பீரங்கி தாக்குதல் மற்றும் ராக்கெட் குண்டுகளை வீசுகின்றன. கிளிநொச்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள், பொது கட்டிடங்கள், சாலைகள் மீது குண்டுகள் விழுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

பீரங்கி குண்டு, ராக்கெட் குண்டு மற்றும் விமான குண்டு என பலமுனை தாக்குதலில் இருந்து தப்பி காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். குண்டு வீச்சில் சிக்கி, ஏராளமான வீடுகள் சின்னா பின்னமாகி விட்டன. எனினும், தப்பிக்க வழியில்லாமல் ஒரு சிலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சியில் உள்ள மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஆகியவற்றின் வழியாக கண்டி செல்லும் சாலையையும் ராணுவம் தகர்த்து விட்டது. இதற்கிடையே முகமலை பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை விமானப்படை குண்டு வீசி அழித்தது.


http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7060&lang=ta&Itemid=52

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP