சமீபத்திய பதிவுகள்

நல்ல உடல்நலம் உள்ளவர்களுக்கு சவால்விடும் சிறு பெண்

>> Monday, December 15, 2008


http://nitharsanam.net/wp-content/uploads/2008/07/nitb0109.jpg

StumbleUpon.com Read more...

பெல்ஜியத்தில் அல்கொய்தா பெண் தீவிரவாதி கைது;ஐரோப்பிய தலைவர்களை கொல்லும் சதி முறியடிப்பு

 
 
பிlankasri.comன்லேடனின் அல் கொய்தா தீவிரவாத இயக்கம் பல்வேறு நாடுகளில் கிளைகள் அமைத்து செயல்பட்டு வருகிறது.ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி இருக்கும் பின்லேடன் அவ்வப்போது அவர்கள் தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்து வருகிறான்.

பெல்ஜியம் நாட்டின் புருசேல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மாநாடு 2-நாட்களாக நடந்தது.இந்த மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்களை அங்கு பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்தது.இதை அடுத்து பெல்ஜியம் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.இதில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் உள்பட 14தீவிரவாதிகள் பிடிபட்டனர்.தலைவர்களை கொல்லும் சதியும் முறியடிக்கப்பட்டது.

பிடிபட்டவர்களில் ஒருவர் அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதி.அவரது பெயர் மாலிசா எல்.ஆரூத்.இந்த பெண் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்று சமீபத்தில் தான் பெல்ஜியம் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.இவரது கணவரும் பின் லேடனின் தீவிர ஆதரவாளர் நெட்டோ படைக்கு எதிராக தற்கொலை படை தாக்குதல் நடத்தி உயிர் விட்டார்.

கைதானவர்கள் மீது பெல்ஜியம் கோர்ட்டில் விசாரணை நடை பெற்று வருகிறது.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1229246866&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

மதுரையைச் சேர்ந்த சிறுமி உலக சாதனை

மதுரையைச் சேர்ந்த சிறுமி உலக சாதனை
 
lankasri.comகம்ப்யூட்டர் துறையில் பல வழிகளில் ஆராய்ந்து சோதிக்கக் கூடிய எம்.சி.பி.,தேர்வில் மதுரையைச் சேர்ந்த லவினாஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி வெற்றி பெற்று,புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

கம்ப்யூட்டர் பயிலும் மாணவர்களிடையே,அவர்களது கணிக்கும் திறன், ஆங்கில நுண்ணறிவுத் திறன்,தொழில்நுட்ப முறையில் தீர்வு காணும் திறன்,பிரச்னைகளைத் தீர்ப்பது,முடிவுகளை எடுக்கும் திறன் ஆகியவற்றை சோதித்துப் பார்க்கக் கூடிய மிக கடுமையான படிப்பு எம்.சி.பி.,இது 25-வயது முதல்30-வயது உடைய எம்.சி.ஏ.,-எம்.பி.ஏ.பி.இ.,மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வு.

உலகளவில் நடக்கும் இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள்,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்சால் பாராட்டப்படுவது வழக்கம்.இந்தத் தேர்வில்,மதுரையைச் சேர்ந்த எட்டு வயது லவினாஸ்ரீ, 1,000 மதிப்பெண்களுக்கு 842 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உலகளவில் சாதனை படைத்துள்ளார்.கடந்த 2005ம் ஆண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த 10 வயது அர்பாகரீம் ரந்தாஹா என்ற சிறுமி இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

இந்தச் சாதனையை லவினாஸ்ரீ முறியடித்து புதிய உலக சாதனை நிகழ்த்தி,இந்தியாவுக்குப் பெருமையை தேடித்தந்துள்ளார்.லவினாஸ்ரீ மூன்று வயதிலேயே 1,330 திருக்குறளையும் ஒப்பிவித்து, "லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" புத்தகத்தில் இடம்பிடித்தவர்.

ஏழு வயதில் மத்திய அரசின் தேசிய விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.லவினாஸ்ரீயை குடியரசுத் தலைவரும்,பிரதமர் மன்மேகன்சிங்கும் பாராட்டியுள்ளனர்.நேற்று அவர் முதல்வர் கருணாநிதியை,தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1229331671&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

தெண்டுல்கரின் உருக்கமான பேட்டி

 



இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

196 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து சச்சின் புதிய சாதனை படைத்துள்ளார். இது இவருடைய 41வது டெஸ்ட் சதம் ஆகும்.

தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட மும்பை மக்களின் காயங்களுக்கு மருந்து தடவும் வகையில், தனது 41வது சதத்தை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெண்டுல்கர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்த சதமும், இந்திய அணியின் வெற்றியும் மும்பையில் நடந்தவவைகளை மறக்கச் செய்துவிடும் என்றோ, அல்லது அங்கு உற்றார், உறவினர்களை இழந்து வாடும் மக்களுக்கு நிம்மதி தரும் என்றோ அர்த்தம் இல்லை.

எனது சதம் அங்குள்ள மக்களுக்கு ஏதோ ஒரு சிறிய மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
 

StumbleUpon.com Read more...

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி - இந்தியா அபார வெற்றி

 





இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

196 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து சச்சின் புதிய சாதனை படைத்துள்ளார். இது இவருடைய 41வது டெஸ்ட் சதம் ஆகும்.

இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 14ஆம் தேதி மதியம் ஆட்டத்தைத் துவக்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக ஆடிய சேவக் 83 ரன்களை எடுத்தார்.

9 விக்கெட்டுகள் கையில் உள்ள நிலையில், மேலும் 256 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டிராவிட் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிளின்டாப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து கம்பீருடன் தெண்டுல்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடி அரைச்சதம் கடந்த கம்பீர், ஆன்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 66. அதன் பிறகு வி.வி.எஸ். லட்சுமண் ஆட வந்தார். இவர் தன் பங்குக்கு 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 224.

பின்னர் ஆடவந்த யுவராஜ், தெண்டுகருடன் இணைந்து அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினார். இதனால் அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. இருவருமே அரைச்சதம் கடந்த நிலையில், வெற்றி உறுதியானது.

பொறுப்புடன் ஆடிய தெண்டுல்கர் சதமடித்தார். மறுமுனையில் யுவராஜ் சிங் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.


தெண்டுல்கர் 103 ரன்களுடனும், யுவராஜ் 85 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=988

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP