சமீபத்திய பதிவுகள்

300 தமிழர் பலி; பலநூறு பேர் படுகாயம்

>> Monday, January 26, 2009

      
 

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு - நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு லட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 நிமிடம் முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந் திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலனோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர்


 

 

மேலதிக செய்திகள்...

   
 

வன்னி மீது கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சிங்கள படைகள் ஏறிய கொரூர எறிகணைத் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவனிப்பார் யாரும் இன்றி வீதிகளில் மரணப்படுக்கையில் கிடப்பதாக வன்னித்தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு தரப்பினர் 'பாதுகாப்பு வலயம்'என்ற அறிவிக்கப்பட்ட பகுதி மீதே இந்த கொரூர தாக்குதல்களை சிங்கள வெறிபிடித்த படையினர் மேற்கொண்டுவருவதாக அங்கு மரணப்பிடியில் தப்பியோடும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயம் பகுதி நோக்கி படையினர் மாரி மழைபோன்று ஆட்லறி தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரந்தன் வீதியில் இருந்து 3 கிகோ மீற்றர் தூரத்தில் உள்ள விளைப்புனம் காளிகோவிலுக்கும் மூங்கிலாறு பிரதேசத்துக்கும் இடைப்பட்ட பகுதி எறிகணைத்தாக்குதலில் பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்த மக்களின் வாகனங்கள்,பொருட்கள் வீதிகளில் பற்றி எரிகின்றது.

இப்பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் வீதிகள் எங்கும் சிதறிக்கிடப்பதுடன் காயப்பட்ட மக்கள் இரத்த வெள்ளத்தில் உதவிக்கு யாரும் இன்றி ஓலமிட்டவண்ணம் உள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட அந்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.

 
 
மூங்கிலாறு காளி கோயில் அருகில் பல உடலங்கள் சிதறிகிடக்கின்றன. இறந்த குழந்தை ஒன்றின் உடலத்தை மிதிவண்டியில் யன்னலில் வைத்து கொண்டு செல்கின்றனர்.
முல்லை பரந்தன் உடையார்கட்டு
சாலையை மையமாக வைத்து தொடர்ச்சியாக எறிகணை
தாக்குதலை படைகள் தொடராக நடத்தி கொண்டு இருக்கிறது.

இந்த எறிகணைகள் உழவு இயந்திரங்கள் மீதும்
விழுந்து வெடித்து அதிலிருந்து மக்களும் பலியாகியுள்ளனர்.

4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தென்னந்தோப்புக்குள்ளும்
காடுகளிற்குள்ளும் மக்கள் செறவாக இருக்கின்றனர்.

அந்த மக்களை இலக்கு வைத்தே படையினர் தாக்குதலை
நடத்தி கொண்டு இருக்கின்றனர்

மக்களை தமது கட்டுப்பாட்டுக்கள் வர வைப்பதற்காகவும்
இன அழிப்பை நடத்துவதற்காகவும் திட்டமிட்டு
எறிகணைகள் நடத்தியுள்ளது.

மூங்கிலாறு கைவேலி சுதந்திரபுரம் பகுதிகளில்
எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிறது

உடையார்கட்டு வள்ளிபுன முல்லைத்தீவு மருத்துவமனைகள்
முற்ராக செயழிழந்து போயின்.

மருத்துவ வசதிகள் இன்றி காயப்பட்டவர்கள் தொடர்ச்சியாக
இறப்பு. குருதிப்பெருக்கால் பலர் இறந்துள்ளனர்.

அரை மைல்களை தாண்டி செல்வதற்கு 4 மணித்தியாலம் பிடிப்பதாக
வன்னியிலிருந்து கண்ணீரோடு மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாயோதிபர்களை விட்டுவிட்டு உறவுகள் சென்றபடி உள்ளனர்.

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP