சமீபத்திய பதிவுகள்

விசுவமடுவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: கைக்குழந்தையும் 6 சிறுவர்களும் உட்பட 9 பேர் பலி; 33 பேர் காயம்

>> Sunday, January 18, 2009

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையும் 2 சிறுவர்களுமாக 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விசுவமடுவில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான முறையில் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தையும் 6 சிறுவர்களும் அடங்குவர்.
காயமடைந்தவர்களில் 14 மாதக் குழந்தையும் ஒன்றரை வயதுக் குழந்தையும் உட்பட 6 சிறுவர்களும் அடங்குவர். 

 




கறுப்பையா பெருமாள் (வயது 49)

பெருமாள் இந்திரா (வயது 40)
பெருமாள் சிந்துஜா (வயது 15)
பெருமாள் துசியந்தி (வயது 09)
பெருமாள் தர்மினி (வயது 08)
பெருமாள் கயல்விழி (08 மாத குழந்தை)
சோமசுந்தரம் உதயகுமார் (வயது 45)
ரகுநாதன் கீர்த்தனா (வயது 10)
 
தங்கராசா தவக்குமார் (வயது 14)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

 






தமிழினி (14 மாதங்கள்)
பிரான்சிகா ( ஒன்றரை வயது)
யதுசன் (வயது 07)
மதிவாணி  (வயது 08)
இ.இளநிலா (வயது 10)
மதிவண்ணன் (வயது 11)
ரதிகரன் (வயது 15)
திபாகரன் (வயது 15)
ச.தியாகராசா (வயது 56)
கருணாநிதி ரஞ்சினிதேவி (வயது 46)
சசிதரன் (வயது 26)
கதிர்காமநாதன் (வயது 37)
இராமநாதன் (வயது 71)
நடராசா (வயது 76)
பவளராணி (வயது 58)
இரட்ணராசா (வயது 46)
வினிதா (வயது 35)
வினோகௌரி (வயது 48)
இராஜ்குமரன் (வயது 47)
சுதர்சினி (வயது 37)
சிலம்பரசன் (வயது 19)
சசிகுமார் (வயது 26)
கயல்விழி (வயது 24)
இராமலிங்கம் (வயது 53)
சஞ்ஜீவன் (வயது 19)
சிவனம்மா (வயது 64)
விஜிகரன் விந்துஜா (வயது 21)
ஜெனிரோஸ் (வயது 31)
கண்ணகியம்மா (வயது 60)
சதீஸ் (வயது 28)
நல்லதம்பி இராசதுரை (வயது 70)
தங்கராசா கணேஸ் (வயது 09)
துரைராசா தங்கராசா (வயது 37)
ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP