சமீபத்திய பதிவுகள்

பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்

>> Wednesday, January 28, 2009

  PDF Print E-mail
   
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்
(உள்ளே:> பிறநாட்டு தலைவர்களுக்கான கடித மாதிரி மற்றும் கலைஞரிடம் ஒரு மனு தொர்பு இலக்கங்களுடன்)

உலக தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நேரம் இது.

அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே

எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின்  உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம்.

நாம் செய்ய கூடியவை

1."இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்?" என்று ஒவ்வொரு தமிழனும் காலையில் தன்னை தானே கேட்க வேண்டும்.

2. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள்.

3. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யுங்கள்.

4.இளையோர்களே உடனயாக உங்கள் Facebook Status இனை மாற்றுங்கள் "Pls stop genocide in Sri Lanka: More than 300 killed 1200 injured within a day"
அத்துடன் உங்கள் நாட்டு நண்பர்களுக்கும் இதனை உபதேசம் செய்து அவர்களையும் 2 நாட்களுக்கு இதனை போட செய்யுங்கள். (தமிழர் அல்லாத நண்பர்கள்)
வலிகளில் நொந்து கிடந்து அழுவதை விடுத்து வலிகளிலிருந்தும் வலிமை பெறுபவர்களாய் எழுவோம்! எழுவோம்!!! நாளையும் அதன் பின்வரும் நெடுங்கால மெங்கும் நிலைத்து வாழும் எங்களினம்!

வன்னியில் தமிழின அழிப்பை, ஒரு பெரும் மனிதப்படுகொலையை சிங்கள இனவெறி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எமது இனத்தைக் காக்க உடன் அழைப்போம். கீழ்வருபவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து உடன் பேசுங்கள். இன அழிப்பை உடன் நிறுத்த ஆவண செய்யுமாறு உடன் வேண்டுங்கள்.

அமெரிக்க ஜனாதிபதி மாண்புமிகு ஒபாமா 

தொலைபேசி: 001 202-456-1111
தொலை நகல் : 001 202-456-2461

கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் -


தொலைபேசி - 001 613-992-4211
தொலைநகல் - 001 613-941-6900

கனடிய வெளிவிவகார அமைச்சர் - லோரன்ஸ் கனன்
தொலைபேசி - 001 613-992-5516
தொலைநகல் - 001 613-992-6802

லிபரல் கட்சித்தலைவர் - மைக்கல் இக்னாட்டியெவ்
தொலைபேசி - 001 613-995-9364
தொலைநகல் - 001 613-992-5880

புதிய சனநாயகக்கட்சித்தலைவர் - ஐக் லேட்டன்

தொலைபேசி - 001 613-995-7224
தொலைநகல் - 001 613-995-4565

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி

இருப்பிடம் - 00 91 44 281 15225
காரியாலயம் - 00 91 44 256 72345

Sample Letter;

His Excellency;

Re: Tamils situation Vanni reached Crisis Level; Urging to Stop the Sri Lankan State Genocides against Tamils


I want to take this opportunity to state the terrible crisis deliberately created on the innocent Tamil civilians in Vanni by the government of Sri Lankan and its armed forces. The recent, Gaza tragedy
look too small, compared to what is happening in Vanni for our brethrens for past 25 days. Please break your silence and bring an end to this state enforced Sri Lankan army menace against innocent
Tamils civilians in Vanni.

The Sri Lankan government forces announced 'Safety Zone' few days ago to draw innocent civilians into the so called area such as Suthanthirapuram, Udaiyaarkaddu, and Vallipuram in the Mullaitivu
District. Now, these innocent civilians are being continuously shelled with heavy artilleries and multibarrels by the Sri Lankan Army. According to the government own medical officer in declare the
situation in the Vanni is beyond them. I am calling immediate intervention of the international community to save these civilians from enforced genocides.

The U.N agency says situation in Mulaitivu, Vanni deteriorated to the crisis level. Today alone, at least 300 civilians were dead and over 1000 civilians are badly wounded. A government medical officer working a hospital says, him and medical staff in Vanni unable to treat the large amount of wounded civilians as medical supplies and personals are in very short supply even the hospitals are coming under terrible shell attacks.Wounded even includes Red Cross (ICRC) personals. Genocides continue unabated while the world watching silently. This cannot be accepted, it is the moral duty of the U.N to step in to save the Tamils, please do not allow another Darfur in Sri Lanka.

It is most disheartening to see thousands of our mothers, fathers, sons, daughters, brothers, sisters,infants and children are being brutally killed by the occupying Sri Lankan security forces and we are
unable to continue with our daily lives.Please use your good offices to press the Sri Lankan government to stop the war, stop the genocides of Tamils, send the international monitoring mission to save civilians, send medial staff and supply immediately as thousands are bleeding to their deaths. Please see the attached info rmation SOS call from the Mulaitivu government medical officer.
I earnestly urge you to do your utmost to bring an immediate end to the genocides of Tamils by the Sri Lanka . Recognize their rights to self-determination as this is the only meaningful solution will bring end to the crisis to permanent end.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28151

Thank you for your kind attention on this matter.

Yours Truly,

---

கலைஞர் கருணாநிதிக்கான கடிதம்


உலக தமிழினத் தலைவரும்,
தமிழினக் காவலருமாகிய,
மாண்புமிகு முதல்வர்,
கலைஞர் கருணாநிதி அவர்களே
,

இரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனுக்காக  உயிர் கசியும் ஈழத் தமிழனின் கண்ணீர் மனு!!!!
"யாரொடு நோகேன் யார்க்கெடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்"


முன்னூறு தமிழர்கள் மூன்றே மணி நேர இடைவெளியில் தாங்குதற்கு யாருமன்றி ஓடிச் சென்று தூக்குதற்கு எவருமன்றி இரத்தம் சிந்தியே மாண்டுவிட்டனர்.ஆயிரத்துக்கு மேலானோர் படுகாயமடைந்து அரவணைக்க யாருமின்றி ஈழ மண்ணை குருதிகளால் அபிஷேகிக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் எறிகணை பல்குழல் பீரங்கிகள் ஓய்ந்தபாடில்லை.காயப்பட்டோரை தூக்குதற்கு யாருமில்லை.பதுங்கு குழிகளே கல்லறைகளாகிவிட்டன ஐயா.

ஏன் என்று கேட்க யாருமற்று நாதியற்று தெருவோரம் பிணமாய் குவியும் ஈனத்தமிழராய் இன்று உங்கள் முன் ஓலமிடும் எங்களின் குரல்கள் கேட்கவில்லையா?

நாங்கள் நீதி கூட கேட்கவில்லை. உங்களிடம் உயிர் பிச்சை வேண்டி இரந்து பாவிகளாய் உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றோம் ஐயா.

ஸ்ரீலங்கா அரசின் கோரமான  இன சுத்திகரிப்பில் ரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனை இன்று உங்களால் -  உங்களால் மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து காக்க முடியும். நாங்கள் யாரிடம் போவோம். யார்கெடுத்து உரைப்போம்.

கலைஞரே எம் காவல் தலைவரே,ஐயா

நீங்கள் எங்களுக்காக ஆட்சி இழந்து சிறை சென்ற பெரும் தலைவர். இன்று கூவி அழும் எங்கள் இனத்துக்காய் ஓங்கி ஒரு குரல் கொடுக்க மாட்டீர்களா.

காலகாலத்துக்கும் உங்களுக்கு நாம் நன்றி உடையோராய் இருப்போம்.

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"


தருணம் பிந்தினால் மரணம் என்று தமிழன் தவிக்கின்றான். இதற்கு மேலும் சற்றும் தாமதிக்காமல் ஈழ தமிழனின் சுருக்கு கயிறை இன்றே அறுத்தெறியுங்கள் ஐயா.

தமிழின தலைவரே , தமிழ் உணர்வாளரே எமக்காக ஒரு குரல் எமக்காக ஒரு கரம் எமக்காக ஒரு ஆணை ஐயா


உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,

அன்புள்ள

எம் அன்பிற்கினிய மக்களே இபொழுதே மின்னஞ்சல் அல்லது  தொலைநகல் அனுப்புங்கள்

தொலைநகல் விரும்பத்தக்கது

கலைஞர் தொலைநகல்:0091 44 281 11133
கலைஞர் மின்னஞ்சல்: cmcell @ tn . gov . in ( CMCELL @ TN . GOV . IN )

கலைஞர் இருப்பிடம் : 00 91 44 281 15225
கலைஞர் அலுவலகம்: 00914425672345 

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும்  தமிழன் மாய்ந்து கொண்டிருக்கிறான்
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP