சமீபத்திய பதிவுகள்

சிறிலங்காவுக்கு பதிலடி கொடுத்த ஜேர்மனி

>> Sunday, January 18, 2009

சிறிலங்காவுக்கு பதிலடி கொடுத்த ஜேர்மனி
 
சிறிலங்கா அரசாங்கம் ஜேர்மனி நாட்டு தூதுவரை அழைத்து விசாரணைகளை நடத்திய 24 மணி நேரத்தில் ஜேர்மனி அரசாங்கம் தனது நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி நிகழ்வின் போது சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜேர்ஜன் வீத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கோபமடைந்த சிறிலங்கா அரசாங்கம், அவரை அழைத்து தனது கண்டணத்தை தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் ரி.பி.மதுவேகெடராவை ஜேர்மனி நாட்டின் வெளிவிவகார அலுவலகம் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்ட 24 மணி நேரத்திற்குள் ஜேர்மனி அரசாங்கம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி நிகழ்வின் போது ஜேர்ஜன் வீத் அப்படி எதனைத் தவறாக கூறியிருந்தார் என கூறமுடியுமா என ஜேர்மனி வெளிவிவகார அலுவலகம் ரி.பி.மதுவேகெடராவை கேட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.puthinam.com/full.php?2b1VoKe0dIcYK0ecAA4K3b4C6DN4d2f1e2cc2AmS2d434OO2a030Mt3e

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP