சமீபத்திய பதிவுகள்

அலங்காரமாக சாப்பிடுங்கள்!

>> Friday, January 16, 2009

 
 
   

குறிப்பிட்ட பழத்தை தனித்தனியாக சாப்பிட விரும்பாதவர்கள் பல்வேறு பழங்களை ஒன்றாக கலந்து சாப்பிடலாம். இதைத்தான் ஸ்டைலாக சார்ட் என்கிறார்கள்.

எப்போதும் பந்தாவாக சாப்பிட விரும்பும் ரகமா நீங்கள்ப

ஒவ்வொரு பழத்தையும் எப்படி வெட்டினால் அலங்காரமாக இருக்கும், என்பது பற்றி சில டிப்ஸ்.

பச்சை மற்றும் கறுப்பு திராட்சைகளை சாலட்டின் மீது அலங்காரமாக அடுக்கி வைத்தால் நன்றாக இருக்கும்.

மாதுளைகளையும் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை தோலை நூல் நூலாக சீவி சாலட் மீது தூவ லாம். இந்த எலுமிச்சை நூல்களைப் பொடிப் பொடியாக நறுக்கி சாலட் மீது தூவினால் வித்தியாசமான டேஸ்ட் கிடைக்கும்.

எலுமிச்சை ஸ்லைஸ்களை முறுக்கி அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம்.

ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களின் தோலை சீவி எடுத்து, சுருட்டி விட்டால், அட சிவப்பு மற்றும் பச்சை நிற ரோஜாக்கள் ரெடி!

சதைப்பகுதி சிவப்பாக இருக்கும். கொய்யா மற்றும் அத்திப்பழங்களை வெட்டி வைத்து பூ போல அலங்கரிக்க லாம்.

ஆரஞ்சு தோல், கிர்ணிப் பழத்தோல் போன்றவற்றை சாலட்டுக்கான கப்களாக்கி அதில் பழங்களை நிரப்பி பரிமாறலாம்!
 
 
சமையலோ சமையல் 
   
கண்ணாடிப்பாத்திரங்களில் உள்ள கறையை நீக்க உப்பும் வினிகரும் உபயோகித்து கழுவலாம்.

லிப்ஸ்டிக் கறையை போக்க ïகலிப்டஸ் ஆயில் உபயோகியுங்கள்.

எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரங்களை சுத்தப்படுத்த முதலில் கடலை மாவைத் தடவி பின் நீர் கொண்டு அலம்புங்கள்.

மட்டன் சிக்கன் இவற்றை அரைக்க மிக்சி பயன்படுததப்பட்டால் அதன் பின் 2 பிரட் துண்டுகள் போட்டு அரையுங்கள். பிசுக்கும் வாடையும் போயே போச்சு.

பாத்திரங்கள் சமையலின் போது அடிப்பிடித்து விட்டால் அதில் சோப் நீரை நிரப்பி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்த பின் கழுவுங்கள்.
 
 
7 வகை வடை! 
   

பீட்ரூட் வடை


தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒருகப், உளுத்தம் பருப்பு - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, பெரிய வெங்காயம் - 2, கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம் பருப்பைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து அதிகம் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மாவில் பீட்ரூட் துருவல், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். எண்ணெய் காய்ந்ததும் மாவுக் கலவையை எடுத்து வடைகளாக தட்டி, நடுவில்துவாரமிட்டு எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சுவையான பீட்ரூட் வடை ரெடி!


உருளைக்கிழங்கு வடை

தேவையானவை: தோல் சீவி துருவிய உருளைக்கிழங்கு - அரைகப், உளுத்தம் பருப்பு-ஒருகப், பச்சரிசி -கால் கப், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சைமிளகாய் -5, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம் பருப்பை ஊற வைத்து, தண்ணீரை வடித்து, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து, துருவிய உருளைகிழங்கு, உப்பு போட்டு கலந்து கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து கனமான வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.


மக்காச்சோள வடை

தேவையானவை: மக்காச்சோள ரவை - ஒரு கப், பச்சரிசி - அரை கப், உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மக்காச்சோள ரவை, அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியே ஊற வைத்து தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கெட்டியாக வடை பதத்தில் அரைக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடையாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.


சேமியா வடை

தேவையானவை: சேமியா - ஒரு கப், கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1, கேரட் - 1, கடலை மாவு - அரை கப், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சேமியாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், கேரட்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு கடலை மாவு, கரம் மசாலா, உப்பு, மல்லித்தழை, கறிவேப்பிலை, வெங்காயம், கேரட்டை சேமியாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் வடையைத் தட்டிப்போட்டு வேக விட்டு எடுக்கவும்.

சூடாக சாப்பிட சுவையான வடை இது.


எள்ளு வடை

தேவையானவை: பச்சரிசி -2 கப், எள் -2 டேபிள்ஸ்பூன், வெல்லம் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஊற வைத்து வடித்து, இடித்து, சலித்துக் கொள்ளவும். எள்ளை வறுத்து மாவில் கொட்டி, வெல்லத்தைப் பொடித்துப் போடவும். பிறகு மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் மாவு கலவையை வாழை இலையில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


வாழைக்காய் வடை

தேவையானவை: பெரிய துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் -2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், பச்சை மிளகாய் -6, கடலை மாவு - 2 கப், இஞ்சி -ஒரு துண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயில் அளவாக தண்ணீர் ஊற்றி, நன்றாக வேக வைக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை இவற்றைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு வேகவைத்து தோலுரித்த வாழைக்காய், வெங்காயம் மற்றும் நறுக்கியவற்றைப் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் வாழையிலையிலோ அல்லது பால் கவரிலோ எண்ணெய் தடவி வடைகளாக தட்டி சிவந்ததும் எடுக்கவும்.

புதினா சட்னியுடன் சாப்பிட செம ருசி!


கோதுமை ரவை வடை

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், கெட்டித்தயிர் -ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தயிரில் கோதுமை ரவை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். எண்ணெய் காய்ந்ததும் வடைகளைத் தட்டி பொன்னிறமாக எடுக்கவும்.

குறிப்பு: இஞ்சி, பச்சைமிளகாயை அரைத்தும் சேர்க்கலாம்.
 
 
ஆப்பிள் சட்னி 
   

தேவை: ஒண்ணேகால் கிலோ ஆப்பிள், 2 வெங்காயம், இஞ்சி சிறியது. 500 கிராம் சர்க்கரை, ஒரு பெரிய தேக்கரண்டி உப்பு, ஒரு பெரிய தேக்கரண்டி மிளகாய்த் தூள், 6 கிராம் க்ளேஷியல் அசிடிக் அமிலம்.

செய்முறை: ஆப்பிளைத் தோல் சீவி விதைகளை அகற்றி துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் இஞ்சியைக் கூட தோல் உரித்து ஆப்பிளோடு சேர்த்து இதனையும் மிக்ஸியில் கூழாக்கிக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் இந்த கூழோடு, சர்க்கரையைச் சேர்த்து வேக விடவும். சற்று வெந்த பிறகு உப்பு, கரம் மசாலா மிளகாய்த் தூளைச் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். க்ளேஷியல் அசிடிக் அமிலம் சேர்த்துக் கலக்கவும். பிறகு சுடச்சுட பாட்டிலில் நிரப்பி வைக்கவும்.
 
 
5 வகை பூரி 
   

பாலக் பூரி

தேவையானவை: கோதுமை மாவு-2 கப், உப்பு-சுவைக்கேற்ப, சீரகம்-கால் டீஸ்பூன்,பாலக் கீரை (பசலைக் கீரை) ஒரு கட்டு, மிளகாய்தூள்-கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய்-ஒரு டீஸ்பூன்,எண்ணெய்-பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : பசலைக் கீரையை ஆய்ந்து, கழுவி, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டு, தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் சிறிது தண்ணீர் தெளித்து மையாக அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் உப்பு, சீரகம், நெய் அல்லது எண்ணெய், மிளகாய்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். தண்ணீருக்கு பதிலாக பாலக் கீரை அரைத்த விழுதைச் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது சேர்த்துக்கொள்ளலாம். பிசைந்த மாவை சிறு பூரிகளாக தேய்த்துப் பொரித்தெடுக்கவும். (குறிப்பு: கீரையை அரைக்கும் போது ஐஸ் வாட்டர் தெளித்து அரைத்தால் பச்சை நிறம் அப்படியே இருக்கும்).

கடலைமாவு தயிர் பூரி

தேவையானவை : கடலை மாவு-2 கப், தயிர்-அரை கப், கரம் மசாலாதூள்-அரை டீஸ்பூன், மிளகாய்தூள்-அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகத்தூள்-அரை டீஸ்பூன், தனியாதூள் அரை டீஸ்பூன், உப்பு-சுவைக்கேற்ப ஓமம்-அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, தண்ணீர்-சிறிதளவு, நெய் அல்லது எண்ணெய்-ஒரு டீஸ்பூன், எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : எண்ணெய் தவிர மீதி எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, பூரிகளாகத் தேய்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும். மசாலா தயிர் (மிளகாய்தூள்,உப்பு, வறுத்த சீரகத்தூள் சேர்த்தது) இதற்கான சூப்பர் சைட்-டிஷ்.

மேத்தி பூரி

தேவையானவை: கோதுமை மாவு-2 கப், மேத்தி (வெந்தயக் கீரை) ஆய்ந்தது-ஒரு கப், உப்பு-சுவைக்கேற்ப, சீரகம்-கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய்-ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், மிளகாய்தூள்-கால் டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : வெந்தயக்கீரையை சுத்தம் செய்து மற்ற எல்லாப் பொருட்களுடனும் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ஒரு ஈரமான துணியில் மாவை வைத்து சுற்றி, 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பச்சை பட்டாணி பூரி

தேவையானவை: கோதுமை மாவு-ஒரு கப், மைதா மாவு-ஒரு கப், உப்பு-சுவைக்கேற்ப, சீரகம்-கால் டீஸ்பூன், இஞ்சி, பச்சைமிளகாய் விழுது-அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள்-கால் டீஸ்பூன் பச்சை பட்டாணி அரை கப், எண்ணெய்-தேவையான அளவு.

(பட்டாணியை ஊறவைத்து உபயோகிக்கலாம்). கோதுமை மாவையும் மைதா மாவையும் கலந்து, உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பச்சைப்பட்டாணி விழுது, சீரகம், மிளகாய் விழுது, கரம் மசாலா எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

பூரி மாவை செப்பு போல செய்து உள்ளே பட்டாணி மசாலாவை வைத்து மீண்டும் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பாதாம் பூரி

தேவையானவை : மைதா-2 கப், இனிப்பு சேர்த்த கோவா-அரை கப், வெல்லம் (பொடித்தது) 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் கால் டீஸ்பூன் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், உலர்திராட்சை (எல்லாம் சேர்த்துப் பொடித்தது) 2 டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, நெய் ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : மைதாவில் துளி உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலில் சிறிது நெய்யைக் காயவைத்து, கோவா, பொடித்த பருப்புகள், வெல்லம், ஏலக்காய் எல்லாவற்றையும் போட்டுக் கிளறி வைக்கவும். மைதாமாவில் சிறு செப்புகளாக செய்து, பூரணத்தை ஸ்டாப் செய்து பூரிகளாகத் தேய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதில் கலந்திருப்பவை எல்லாமே, சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் என்பதால், இதை வடநாட்டில் `ராஜபோக' பூரி என்பார்கள். 
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP