சமீபத்திய பதிவுகள்

மௌனம் கலைத்து கண்டனம் தெரிவித்தது நோர்வே

>> Tuesday, January 27, 2009

(
 
இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளாவதை நோர்வே வன்மையாக கண்டித்துள்ளது.
இலங்கையில் பொதுமக்களுக்கு பேரவலத்தை ஏற்படுத்தும் போரினை நோர்வே வன்மையாக கண்டிப்பதாக, நோர்வே வெளியுறவு அமைச்சகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வெளியுறவு அமைச்சர் யூணாஸ் கார் ஸ்தோர மற்றும் நோர்வேயின் அனைத்துலக விவகாரங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்கெய்ம் ஆகியோர் மேற்கண்ட கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் எரிக் சொல்கெய்ம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையின் வடபகுதியில் மோதல் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் உடனே நிறுத்த வேண்டும்.
இருதரப்பு மோதல்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இது மிகவும் பாரிய கவலைக்குரியதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்புக்குரியவர்கள். மேலதிகமாக பொதுமக்கள் உயிரிழப்பதை இரு தரப்பும் தவிர்க்க வேண்டும்.
மோதலில் சிக்கியுள்ள மக்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாடுவதை இருதரப்பும் மதிக்க வேண்டும். அப்படி வெளியேறும் மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின் படியும் அனைத்துலக நடைமுறைகளின் படியும் கண்ணியமாக நடத்த வேண்டும்.
பொதுமக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட மனிதாபிமான பொருட்கள் சென்றடைவதை இருதரப்பும் உறுதிப்படுத்த வேண்டும். படுகாயமடைந்துள்ள பொதுமக்கள்- மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கான நோயாளர் காவு வாகனங்கள் உள்ளிட்டவைகளை அனுமதிக்க வேண்டும் என்று அதில் எரிக் சொல்கெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.puthinam.com/full.php?2b3PrKe0dFj030ecQF424b4G8FP4d2l1d2cc2Iu03d436VX3b034Lq3e

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP