சமீபத்திய பதிவுகள்

ஒபாமாவை தீர்த்துக்கட்டுவதே பயங்கரவாதிகளின் இலக்கு:அமெரிக்க பத்திரிகை அபாய எச்சரிக்கை

>> Wednesday, January 21, 2009

ஒபாமாவை தீர்த்துக்கட்டுவதே பயங்கரவாதிகளின் இலக்கு:அமெரிக்க பத்திரிகை அபாய எச்சரிக்கை
 
lankasri.comவெள்ளையர்கள் ஆதிக்கம் நிறைந்த அமெரிக்க வல்லரசின் முதல் கருப்பின அதிபராக பராக் ஒபாமா (47)பதவியேற்றுக்கொண்டுள்ளார்.இது உலகம் முழுவதும் வாழும் கருப்பின மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

எனினும்,பராக் ஒபாமாவை தீர்த்துக்கட்டுவதுதான் தங்களின் பெரும் இலக்காக பயங்கரவாதிகள் சபதம் ஏற்றுள்ளதாக அமெரிக்காவின் டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது உலகம் முழுவதும் வாழும் கருப்பின மக்களை கடும் வேதனையில் ஆழ்த்தாமல் இல்லை.

இருந்தபோதிலும்,எங்களது முன்னாள் அதிபர் கென்னடியை இழந்தது போல் நாங்கள் ஒபாமாவை இழந்திடமாட்டோம்;இரும்பு அரண் அமைத்து அவரை பாதுகாப்போம் என்பதில் அமெரிக்க பாதுகாப்புப் படைகள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளன.

இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதத்திலேயே வாஷிங்டனில் நடந்த ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒபாமாவின் பதவியேற்பு விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடனும்,அவரது முதல் உரையைக் கேட்க ஆவலுடனும் குழுமியிருந்தனர்.

இந்த விழா அரங்கைச் சுற்றி போலீஸார்,தேசிய பாதுகாப்புப் படையினர்,உளவுத் துறையினர் உள்பட 45-ஆயிரம் பேர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.காற்றுகூட தங்களிடம் அனுமதி பெறாமல் விழா அரங்குக்குள் நுழைந்திட முடியாது என்ற விதத்தில் பாதுகாப்பு வீரர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்கொள்ளத் தயார்:பயங்கரவாதிகள் எந்த வழியில் வேண்டுமானாலும் தங்களது தாக்குதலை தொடுக்கலாம் என்பதை நினைத்து அதைச் சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு வீரர்கள் ஆயத்தமாக இருந்தனர்.ரசாயன ஆயுதத்தின் மூலமும் பயங்கரவாதிகள் ஒபாமாவை குறிவைக்கலாம் என்று நினைத்து அதை எதிர்கொள்வதற்கும் பாதுகாப்பு வீரர்கள் தயாராக இருந்தனர்.

வான்வழித்தாக்குதல் நடத்துவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது என்று கருதி,விழா அரங்கின் வான் பகுதியில் போர் விமானங்கள் வட்டமிட்ட வண்ணம் இருந்தன.

ஒபாமாவுக்கு எந்த அளவுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.அதுகுறித்து நாங்கள் பலகட்டமாக விரிவான ஆலோசனைகளும் மேற்கொண்டுவிட்டோம் என்று அமெரிக்காவின் தேசிய புலனாய்வு உதவி இயக்குநர் ஜோய் பெர்ஸிசினி தெரிவித்தார்.

 

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP