சமீபத்திய பதிவுகள்

Mail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் - 1

>> Wednesday, January 28, 2009

 



 

ஈஸா குர்‍ஆனும் மெயில் விவாதங்களும்

 

அப்துல் மஜீத்

 

முன்னுரை: அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதற்கு எனது பதிலை அவருக்கு அனுப்பினேன். ஆனால், இந்த என் முதல் பதில் தனக்கு வந்து சேரவில்லை என்றுச் சொன்னார். எனவே, இவைகளை இங்கு பதிக்கிறேன்.


 
அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் 1
 
// Abdul Majeeth said:

அன்புள்ள ந‌ண்ப‌ர் ஈஸா குரான் அவ‌ர்க‌ளூக்கு உங்க‌ள் பெயர் தெரியாத‌தால் இப்ப‌டி குரிப்பிடுகிறேன்.த‌ங்க‌ளூடைய‌ க‌ட்டுரைக‌லை எல்லாம் ப‌டித்தேன் ந‌ல்ல‌ முய‌ற்சி. பாராட்டுக்க‌ள். //
 
 
அன்பான சகோதரர் அப்துல் மஜீத் அவர்களே, உங்கள் மெயிலுக்காக நன்றி.

என்னுடைய தளத்தின் பெயர் ஈஸா குர்‍ஆன் மற்றும் என் புனைப்பெயர் "உமர்". நீங்கள் இணையத்திற்கு புதியவராக இருந்திருப்பீர்கள், அதனால், என் பெயர் தெரியவில்லை என்றுச் சொல்கிறீர்கள். மற்றும் புதியவர்களுக்கு என் பெயர் தெரியாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், இஸ்லாமிய தளங்களாகும், அவர்கள் எழுதும் கட்டுரைகளில் என் தளத்தின் பெயரையும் என் பெயரையும் குறிப்பிடுவதில்லை, அதற்கு பதிலாக, "கிறிஸ்தவர்கள்" என்ற ஒரு பொதுப்படையான பெயரை குறிப்பிடுகிறார்கள். எங்கள் தளங்களின் தொடுப்பையும் கொடுக்கமாட்டார்கள், அவ்வளவு பயந்துள்ளார்கள், இஸ்லாமுக்காக இணையத்தில் உழைக்கும் அறிஞர்கள். எங்கே உங்களைப் போன்ற புதியவர்கள் எங்கள் தளங்களை படித்துவிடுவார்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம்.
 
 
// Abdul Majeeth said:

தங்க‌ளூடைய‌ கீழ்க்கண்ட க‌ட்டுரையில் அதில் முஸ்லிம்க‌ள் ப‌தில் சொல்வ‌தில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளீர்க‌ள். ஆனால் ந‌டைமுரையில் த‌மிழக‌த்தில் முஸ்லிம்க‌ள் ம‌ட்டும்தான் இஸ்லாம் ஒரு இனிய‌ மார்க்கம் மற்றூம் கேள்வி பிறந்தது இன்றூ ( IFT-PERAMBUR ANSWERS BY DR.K.V.S.HABEEB MOHAMMED) போன்ற நிக‌ழ்ச்சிக‌ளீன் மூல‌ம் முஸ்லிம‌ல்லாத‌வ‌ர்க‌ளூக்கு இஸ்லாத்தை ப‌ற்றீய‌ கேள்விக‌ளூக்கு ஒரு ச‌பையில் ப‌ல்வேறூ த‌ர‌ப்ப‌ட்ட‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் முன்னிலையில்,அழகிய‌ முரையில், த‌குந்த ஆதார‌ங்க‌ளோடடு ப‌தில் அளீக்கின்றார்க‌ள். //
 
 
உங்களின் இந்த மெயிலுக்கு சம்மந்தப்பட்டு நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன், அதனை இங்கே படிக்கவும்: "ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? ".

இந்த கட்டுரையில் இஸ்லாமியர்கள் ஏன் மேடைகள் போட்டு, இஸ்லாம் பற்றி விவரிக்கிறார்கள் என்று சொல்லியுள்ளேன் படிக்கவும். இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே, எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்கள் நடத்தும் நிகழ்ச்சிப் பற்றி தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

நீங்கள் மேற்கோள் காட்டிய என் வரிகள் கீழ் கண்ட கட்டுரையிலிருந்து எடுத்துள்ளீர்கள்.

பின் ஏன் இந்த கட்டுரையில் இப்படி எழுதினேன் என்று நீங்கள் யோசிக்கலாம். நான் எழுதிய வரிகளை நன்றாக கவனிக்கவும்.
 
முன்னுரை:

சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் "நாங்கள் கேள்விகள் மட்டுமே கேட்போம், பதில் சொல்லமாட்டோம், மற்ற மார்க்கங்களின் வேதங்களில் கை வைத்து, எங்களுக்கு ஏற்ற விதத்தில் பொருள் கூறுவோம், அவர்கள் பதில் சொன்னால் அதை காதில் வாங்க மாட்டோம், எங்கள் குர்‍ஆனை அவர்கள் படித்து கேள்விகள் கேட்டால், இஸ்லாமுக்கும், முகமதுவிற்கும் அவதூறு செய்கிறார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்போம், ஆனால், தப்பித்தவறியும் பதில் சொல்லமாட்டோம்" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

 
நான் மேலே எழுதிய வரிகள் முழுக்க முழுக்க இணையம் வைத்து எழுதுபவர்களுக்கு என்பதை கீழ் கண்ட வரிகளிலிருந்து நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.

// சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன. இதில் இஸ்லாமியர்கள் "...." என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர். //
 
 
அதாவது, இணையம் வைத்து இஸ்லாம் பர‌ப்புவர்கள் நாங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, "விஷமிகள், கோழைகள், தொடை நடுங்கிகள்" என்று வசை பாடுகிறார்கள். மற்றும் "இஸ்லாமுக்கும், எங்கள் நபிக்கும்" அவதூறு செய்கிறார்கள் என்றுச் சொல்கிறார்களே தவிர அறிவுடமையோடு பதில் சொல்வதில்லை. அப்படி பதில் சொல்ல விரும்புபவர்கள் கூட,

யாருக்கு பதில் சொல்கிறார்கள்?

அவர்களின் தளத்தின் பெயர் என்ன?

எந்த கட்டுரைக்கு பதில் சொல்கிறோம்?

என்று நியாயமான முறையில் பதில் சொல்வதில்லை.
 
 
// Abdul Majeeth said:

உங்க‌ளீட‌ம் ச‌த்திய‌ வேதாக‌ம‌ம் இருப்ப‌தாக‌ சொல்லும் நீங்க‌ள் (அல்ல‌து உங்க‌ள் போதகர்க‌ள்) இது போன்ற ஓர் நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்த‌லாம் அல்ல‌வா? முஸ்லிம்க‌ளாகிய‌ நாங்க‌ள் அத‌னை மிக‌வும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்க்கிறோம். //
 
 
நான் மேலே கொடுத்த கட்டுரையை நீங்கள் படித்தால் உங்களுக்குப் புரியும் ஏன் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள், இதற்கு பல காரணங்களை நான் கொடுத்துள்ளேன். மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நான் அக்கட்டுரையில் குறிப்பிட்ட அவசியங்கள் இல்லை, எனவே, நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆனால், அனேக இணையங்கள், புத்தகங்கள் எங்களுக்கு உண்டு, அதாவது இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கும் நபர்களுக்கு பதில் தருவதற்கு. தமிழில் கடந்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பித்துள்ளோம். இன்னும் காலம் செல்லச் செல்ல அனேக தளங்கள், கேள்வி பதில் தளங்கள் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

நான் மேலே எழுதிய கட்டுரையை படித்துவிட்டு, இந்த என் பதிலை(கடிதத்தை) படிப்பீர்களானால், உங்களுக்கு நான் சொல்வது நன்றாக புரியும்.

மற்றும் எங்களுக்கு இஸ்லாமில் உள்ளது போல (உபயோகமில்லாத) சடங்காச்சாரங்கள் இல்லை, அதாவது, இத்தனை முறை தொழுதுக்கொள், இத்தனை முறை கைகளை இப்படி கழுவு, நமாஜ் படிக்கும் போது இப்படி விரலை ஆட்டு போன்ற பழக்கங்கள் கிறிஸ்தவத்தில் இல்லாததால், கிறிஸ்தவர்களுக்கும் பெரும்பான்மையாக "இறைவனை தொழுதுக்கொள்ளும்" முறைப்பற்றி அதிக சந்தேகங்கள் வருவதில்லை. எனவே, கிறிஸ்தவர்களுக்காக நாங்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தத்தேவையில்லை.
 
// Abdul Majeeth said:

மேலும் என‌க்கு த‌ங்க‌ளால் ஒரு விஷய‌ம் தெரிய‌வேண்டும் அதாவ‌து பைபிளீன் வ‌ர‌லாறூ, புதிய‌ ம‌ற்றூம் ப‌ழய‌ ஏற்பாடு இய‌ற்றப்பட்ட‌து யாரால்?எப்பொழுது? தொகுக்க‌ப்ப‌ட்ட‌து யாரால்?எப்பொழுது? கால‌ங்க‌லை (கி.மு,கி.பி) தெளீவாக‌ குறீப்பிட‌வும். //
 
 
உங்களுக்கு பைபிள் பற்றிய விவரங்கள் தேவையானால், அவைகளை கீழ் கண்ட தொடுப்புகளில் சென்று ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளவும், தமிழில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அதே நேரத்தில், எந்த கேள்வியை நீங்கள் பைபிளுக்கு எதிராக கேட்பீர்களோ, அதே கேள்விக்கு நீங்கள் குர்‍ஆனுக்காகவும் பதில் சொல்லியாக வேண்டும்.

உங்கள் குர்‍ஆன் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் படிக்கவும், உங்களுக்கு உண்மை அப்போது விளங்கும்.

குர்‍ஆன் முழுமையானதா?

குர்‍ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது அவைகள் என்ன?

ஏன் குர்‍ஆனின் பிரதியை எரித்தார்கள்?

இப்போதுள்ள குர்‍ஆன் பிரதிகளில் உள்ள வித்தியாசங்கள் என்ன என்று பல கட்டுரைகள் உண்டு.
 
 
முதலாவது, குர்‍ஆன் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள், பைபிள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்களால் ஒரு முழுமையான நிலைக்கு வரமுடியும், உங்கள் இமாம்கள், அறிஞர்கள் சொல்வதை மட்டும் நம்பினால், நீங்கள் எதையும் முழுவதுமாக புரிந்துக்கொள்ளமாட்டீர்கள்.

நீங்கள் விவாதம் என்றுச் சொல்லியுள்ளீர்கள்.

நீங்கள் விவாதம் என்றுச் சொன்னதால், நான் விவாதம் பற்றிய சில விவரங்களை தரவிரும்புகிறேன்.

விவாதம் என்றுச் சொன்னால், அதற்கு ஒரு தலைப்பு வேண்டும், நீங்கள் எந்த தலைப்பையும் தெரிந்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு,
 
1) பைபிளின் வரலாறு மற்றும் குர்‍ஆனின் வரலாறு

2) இயேசுவின் வாழ்க்கை மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை

3) முஹம்மதுவின் திருமண வாழ்க்கை

4) இயேசு தேவ குமாரனா? மற்றும் முஹம்மது இறைத்தூதரா?

5) இஸ்லாம் அமைதி மார்க்கமா?

6) இஸ்லாம் எப்படி பரவியது?

7) பைபிள் முரண்பாடுகள், குர்‍ஆன் முரண்பாடுகள்

 
இத்தலைப்புக்கள் ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன், நீங்கள் உங்கள் சொந்தமாகவும் தலைப்புக்களைத் தரலாம். ஆனால், நீங்கள் பைபிள் பற்றி ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால், நான் என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் நான் குர்‍ஆன் பற்றி கேள்விகள் எழுப்புவேன்.

நீங்களும் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, அல்லது விளக்கலாம், இப்படி நாம் தொடருவோம்.

அதை விடுத்துவிட்டு, கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தால், அது விவாதம் என்று சொல்லமாட்டார்கள். என் பழக்கமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் முடிந்த பதிலைக் கொடுத்து, அதே தலைப்பில் குர்‍ஆனுக்கும், முஹம்மதுவிற்கும், இஸ்லாமுக்கும் கேள்விகள் கேட்பது தான்.

இதனை என் எல்லா கட்டுரைகளையும் படித்தால் உங்களுக்கு புரியும், படிக்கவும்,

என் தளங்கள்:

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளம்:

மற்றும் தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்திலும் என் கட்டுரைகள் வெளியாகின்றன.

மேற்கொண்டு விவாதம் பற்றிய விவரங்கள் எனக்கு தெரிவிக்கவும்.

 
1. எழுத்து விவாதத்தை மட்டுமே நான் ஏற்பேன்.

2. மெயில் மூல‌ம் ந‌ட‌ந்தாலும் ச‌ரி, அல்ல‌து

3. த‌மிழ் கிறிஸ்டிய‌ன்ஸ் போர‌ம் (www.tamilchristians.com) த‌ள‌த்தில் நாம் விவாதித்த‌லும் ச‌ரி.

4. மெயில் மூலம் நடந்தாலும், என் தளங்களில், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலும் உங்கள் பதிலும் என் பதிலும் பதிக்கப்படும், இதனால் எல்லா மக்களும் நம் உரையாடலை அறியா வாய்ப்பு உண்டாகும்.

 
உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும்.

உண்மையிலேயே நீங்கள் புதியவராக இருந்தால், என் தள அனைத்து கட்டுரைகளையும் படிக்கும் படி, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் கிறிஸ்தவம் பற்றியும், இஸ்லாம் பற்றியும் ஓரளவிற்கு உங்களுக்குப் புரியும்.

கீழ் கண்ட இஸ்லாமிய அறிஞர்களுக்கு(தளங்களுக்கு) கிறிஸ்தவர்களின் பதில்கள்

டாக்டர் அஹமத் தீதத்
டாக்டர் ஜாகிர் நாயக்
பி. ஜைனுல் ஆபீதீன்
இஸ்லாம் கல்வி தளம் மற்றும் எம். எம். அக்பர்
தமிழ் முஸ்லீம் (இது தான் இஸ்லாம் தளம்)
நேசமுடன் தளம்
அபூமுஹை தளம்
ஏகத்துவ தளம்
சுவர்ன தென்றல் தளம்
இஸ்லாம் இணைய பேரவை தளம்

இப்படிக்கு உங்கள் சகோதரன்

உமர்



 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP