சமீபத்திய பதிவுகள்

போரை உடனடியாக நிறுத்துமாறு பாப்பரசர் வேண்டுகோள்

>> Wednesday, February 4, 2009

 
 
இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வத்திக்கானில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் பாப்பரசர் கூறியதாவது:
சிறிலங்கா அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மோசமடைந்து செல்லும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் தொகையும், எம்மை இவ்வாறு கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
இரு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமான சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அனுமதிப்பதும், இரு தரப்பினதும் கடமை.
மிக அருமையான அந்த நாட்டில், அமைதியும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு, கத்தோலிக்கர் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.puthinam.com/full.php?2b34OO44b33M6Dhe4d45Vo6ca0bc4AO24d2ISmA3e0dq0Mtbce03f1eW0cc3mcYAde

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

2 கருத்துரைகள்:

எல்லாளன் February 4, 2009 at 6:49 PM  

புதுவை இரத்தினதுரையின் ஒலி வடிவத்தை தந்துதவ முடியுமா ?
tamilpuli@gmail.com

நன்றி

தெய்வமகன் February 4, 2009 at 10:53 PM  

தங்கள் வருகைக்கு நன்றி எல்லாளன்.

புதுவை இரத்தினதுரையின் ஒலிவடிவம் இணையத்தில் கேட்ட ஞாபக்கம் இல்லை.இருந்தும் முயற்சிக்கிறேன்.
நன்றி

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP