சமீபத்திய பதிவுகள்

ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று துடித்துக்கொண்டிருக்கிறோம்

>> Tuesday, February 24, 2009

ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று துடித்துக்கொண்டிருக்கிறோம்:வைகோ பேச்சு


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரையில் வக்கீல்கள் தொடர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வக்கீல்களை தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக நிறுவனர்  ராமதாஸ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.

மாலை 5 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசும்போது,


''தமிழீழ மக்களின் துன்பத்தை தவிர்க்க உறக்கத்தில் இருக்கும் தாய் தமிழகம் விழிக்காதா என்று நினைத்த நேரத்தில் தொப்புள்கொடி உறவினரான சகோதரர்களை பாதுகாக்க, வக்கீல்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது.

எந்த போராட்டம் என்றாலும் கந்தகம் என்னும் தீப்பொறி களம் பதிக்க வேண்டும். அதுபோல தீக்குளித்து இறந்த முத்துக்குமார் என்னும் கந்தகம் மூட்டிய தீயை இனி யாராலும் அணைக்க முடியாது.

 அது இன்று ஐ.நா.சபையிலும் எரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக 4 மாதங்களாக போராட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் இருந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்பிரமணியசாமி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை.

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முட்டைகளை வீசி உள்ளனர். தேனி மாவட்டத்தில் 400 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன் உயிர்பிழைக்க மாட்டானா என்று அவனது தயார் போல நாமும் எப்படி ஏங்கினோம்.

அதேபோல இலங்கையில் தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று நாங்கள் துடித்துக்கொண்டு இருக்கிறோம். சென்னை ஐகோர்ட்டில் கற்களே இருக்காது.

போலீசாரே திட்டமிட்டு மூட்டை, மூட்டையாக கற்களை கொண்டு வந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தற்காப்புக்காக வக்கீல்களும் தாக்குதலில் ஈடுபட்டதில் தவறில்லை.

வக்கீல்களின் அறவழி போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP