சமீபத்திய பதிவுகள்

இலங்கையை அடித்து நொருக்கிய இந்திய வீரர்கள்

>> Wednesday, February 4, 2009

தொடரை வென்றது இந்தியா! யுவராஜ், சேவக் அதிரடி சதம்
lankasri.com கொழும்புவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் யுவராஜ், சேவக்கின் அதிரடி சதம் கைகொடுக்க இந்திய அணி, இலங் கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 3-0 என சூப்பராக கைப்பற்றியது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. மிக முக்கியமான மூன்றாவது போட்டி(பகலிரவு) இன்று கொழும்புவில் நடந்தது.

இதில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற உற்சாகத்தில் இந்தியா களமிறங்கியது. இலங்கையை பொறுத்தவரை இது வாழ்வா...சாவா போட்டி. துஷாரா நீக்கப்பட்டு, பெர்னாண்டோ வாய்ப்பு பெற்றார். இந்திய வெற்றி கூட்டணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் பேட்டிங் தேர்வு செய்தார்.

காம்பிர் பரிதாபம்: பெர்னாண்டோ வீசிய 2வது ஓவரிலேயே அதிர்ச்சி. முதல் பந்தை இவர் "நோ-பாலாக' வீச, "பிரி-ஹிட்' வாய்ப்பில் சச்சின் "சூப்பராக' சிக்சர் அடித்தார். 6வது பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் வெறும் 7 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த காம்பிருக்கு அதிர்ஷ்டம் இல்லை. முதலில் இவர் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை கண்டம்பி நழுவிட, கண்டம் தப்பினார். சிறிது நேரத்தில் சேவக் அடித்த பந்தை பெர்னாண்டோ லேசாக தொட்டு விட, "கிரீசை' விட்டு வெளியே நின்ற காம்பிர்(10) பரிதாபமாக ரன் அவுட்டானார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து இருந்தது.

சாதனை ஜோடி: இதற்கு பின் சேவக், யுவராஜ் இணைந்து தூள் கிளப்பினர். இவர்களது அதிரடியில் முரளிதரன், மெண்டிஸ் உள் ளிட்ட அனைத்து இலங்கை பவுலர்களும் திணறிப் போயினர். குலசேகரா வீசிய 9வது ஓவரில் சேவக் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். தன் பங்குக்கு மகரூப் வீசிய 16வது ஓவரில் யுவராஜும் "ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் எகிறியது. இருவரும் சதம் கடந்து அசத்தினர். ஒரு நாள் அரங்கில் 11வது சதம் அடித்த யுவராஜ் 117 ரன்களுக்கு(17 பவுண்டரி, 1 சிக்சர்) முரளிதரன் சுழலில் வீழ்ந்தார். தனது 10வது சதம் கடந்த சேவக் 116 ரன்களுக்கு(17 பவுண்டரி) ரன் அவுட்டானார். ரெய்னா(9) ஏமாற்றினார்.

யூசுப் அதிரடி: கடைசி கட்டத்தில் தோனி, யூசுப் பதான் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப் புக்கு 363 ரன்கள் எடுத்தது. யூசுப் 59(4 பவுண்டரி, 3 சிக்சர்), தோனி 35 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை திணறல்: மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஜெயசூர்யா(0), பிரவீண் குமார் வேகத் தில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். தில்ஷன்(30), கேப்டன் ஜெயவர்தனா(30), கண்டம்பி(10), கபுகேதரா(2) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சங்ககரா அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார்.

இலங்கை அணி 41.4 ஓவரில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1233683786&archive=&start_from=&ucat=4&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP