சமீபத்திய பதிவுகள்

விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரை உயிரோடு பிடிக்கும் திட்டம்

>> Monday, April 6, 2009

மக்கள் பாதுகாப்பு வலயம்: இறுதிச் சமருக்கான களம்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமரின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருப்பதாக படைத்தரப்பு கூறுகிறது. இதுவரை புதுக்குடியிருப்பு நகரின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இடம்பெற்று வந்த சமர் இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை நெருங்கியிருக்கின்றது. பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிப் பிரதேசத்தையும், கடந்த புதன்கிழமை அரசபடையினர் கைப்பற்றியதை அடுத்தே சண்டைக் களம் சற்று இடம் மாறத் தொடங்கியிருக்கிறது.

புதுக்குடியிருப்புச் சமர் மிக மோசமானதாகவும் படையினரால் விரைவாக முன்னேற முடியாததாகவும் இருந்து வந்தது. இதற்கு முன்னர் புலிகள் நடத்திய வழிமறிப்புச் சமர்கள் எல்லாவற்றையும் விட இது மூர்க்கம் நிறைந்ததாக இருந்தது.

காரணம், இது அவர்களின் கடைசிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைத் தக்க வைப்பதற்கான வாழ்வா சாவா என்ற நிலையிலானதொரு சமராகவே இருந்தமையாகும். இதனால் படையினர் இரணைப்பாலை, ஆனந்தபுரம் போன்ற புதுக்குடியிருப்பின் சில பகுதிகளைக் கைப்பற்ற பலநாட்களாகத் தொடர்ந்து கடுமையாக சண்டையிட நேரிட்டது.

இந்தச் சமரில் புதுக்குடியிருப்பின் பெரும்பாலான வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மிகக் கோரமான ஷெல் தாக்குதல்கள் விமானத் தாக்குதல்களில் வீடுகள், கட்டடங்கள், மரங்கள் பெரும்பாலானவை நாசமாகிப் போக வெறும் சுடுகாடாகக் கிடந்த பிரதேசத்தையே படையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

போர் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்ட நிலையிலும், கடுமையாகப் போரிட்டு வந்த புலிகளை புதிய தந்திரோபாயத்தின் அடிப்படையில் மடக்குவதற்குப் படைத்தரப்பு கடந்தவாரம் முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரை உயிரோடு பிடிக்கும் திட்டம் அது.

படைத்தரப்பு மிக இரகசியமாக இந்தத் தாக்குதல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போதும் அவர்கள் தப்பிவிட்டனர். புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைக் களமுனையில் புலிகளின் அணிகளை வழிநடத்திக் கொண்டிருந்த புலிகளின் மூத்த தளபதி கேணல் பானுவையும், மற்றொரு தளபதி லோறன்ஸ் மற்றும் சிலரையும் பிடிப்பதே படைத்தரப்பின் திட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP