சமீபத்திய பதிவுகள்

யுத்தம் முடிந்துவிட்டதா? இராணுவம் தனது இலக்கை அடைந்து விட்டதா? ஒரு ரிப்போர்ட்

>> Saturday, May 16, 2009யுத்தம் முடிந்துவிட்டதா இராணுவம் தனது இலக்கை அடைந்துவிட்டதா அதிர்வின் ரிப்போர்ட்
பிரசுரித்த திகதி : 16 May 2009

இராணுவத்தின் முன் நகர்வுகள் என்ன தற்போது இராணுவம் எங்கு நிலை கொண்டுள்ளது என்பது பற்றி பல குழப்பமான தகவல்கள் பல இணையங்களில் உலாவருகின்றன. உண்மை நிலை என்ன என ஆராய்ந்து பார்த்தால், கடந்த 2 வாரமாக இராணுவம் ஒரு தரையிறக்க முயற்சியை மேற்கொண்டு எஞ்சியுள்ள இடங்களை கைப்பற்ற பாரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நாங்கள் இங்கு இணைத்திருக்கும் வரைபடத்தை பார்வையிடுங்கள்.இராணுவத்தின் Task Force வலைஞர் மடப்பகுதில் நிலைகொண்டிருந்தது, 53வது படையணி மத்தளான் புதுமத்தளான்னில் இருந்து வட்டுவாகல் பக்கமாக நகர்ந்தது, வட்டுவாகல் பாலத்திற்கு பின்புறமாக நிலைகொண்டிருந்த 59வது படைப்பிரிவினர் முறையே வலைஞர்மடம் நோக்கி நகரத்தொடங்கினர். இதனால் பெரும் சமர் மூண்டது. வட்டுவாகல் பகுதியில் இருந்து முன்னேறிய இராணுவத்தினரை வட்டுவாகல் பாலத்தில் வழிமறித்து புலிகள் கடும் முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருந்தனர், பெரும் இழப்பைச் சந்தித்த 59வது படைப்பிரிவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வரை அவ்விடத்திலேயே புலிகளால் முடக்கப்பட்டனர். பாரிய சூட்டாதரவுடன் 58வது படைப்பிரிவினர் கடலேரமாக முன்னேறத் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்தபோது புலிகளின் பாரிய தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.


இத்தாக்குதலை சமாளிக்க முடியாது அவர்கள் பலதடவை விமானப்படையினரது உதவியை நாடியுள்ளனர், சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் சுமார் 17 முறை வான் தாக்குதல்கள் இப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது, இதில் பல பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றைமேற்கொண்டால் எஞ்சியிருக்கும் இடங்களை இலகுவில் மீட்டுவிடலாம் என கருதிய சரத்பொன்சேகா அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க, பல தரையிறக்க முயற்சிகளை இராணுவம் மேற்கொள்ள முனைந்தன.


இந்த வேளையில் கடற் கரும்புலிகள் தமது திறமையால் பல தரையிறக்க முயற்சிகளை தோற்கடித்தனர். முள்ளிவாய்கால் பகுதியில் புலிகள் அமைத்திருந்த பாரிய மன் அரன் இராணுவத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. அத்துடன் தரையிறக்க முயற்சிகளும் தோல்வியைத்தழுவ, கடந்த 3 தினங்களுக்கு முன் ராணுவத்தினர் கடும் எறிகணைத் தாக்குதல்களை தொடுத்தனர். மக்கள் செறிந்துவாழும் பகுதி என்று கூட்ப்பாராமல் அகோர குண்டுமழை பொழிந்தனர். இதன் காரணமாக பல பொதுமக்கள் இறந்தனர்.


நேற்றை தினம் நடந்த உக்கிரமோதலில் கடல்கரை ஓரமாக நகர்ந்த 59வது படையணியின் ஒரு பகுதியினர் முன்னேறி 58வது படைப்பிரிவினரை சந்தித்துள்ளனர். இராணுவத்தின் தரையிறக்கம் காரணமாகவே இவ்விரு படையணிகளும் சந்தித்தனர். தற்போது நந்திக்கடல் களப்பு வழியாக நகரும் 59 படையணியினர் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து நகரும் 53வது படையணியுடன் தொடர்புகளை ஏற்படுத்த முணைகிறது.


தற்போது எஞ்சியுள்ள சுமார் 1சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் உக்கிர சமர் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகிறது. அதாவது இராணுவத்தின் 53வது படையணியும், 59வது படையணியும் ஒன்றிணையும் போது அவர்கள் இலக்கு பூர்த்தியாகிவிடும். தற்போது வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் சமர் இடம்பெற்றுவருகிறது. இருப்பினும் ஒரு சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்த யுத்தம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்படலாம்.


கொழும்பில் உள்ள சிங்கள மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை தயார்நிலையில் இருக்குமாறு இராணுவம் அறிவித்துள்ளது. எந்தநேரத்திலும் தாம் அவர்களை முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.


இராணுவம் தனது இலக்கை அடைந்தாலும், இடங்களை காப்பற்றுவதை விட அதைத் தக்கவைப்பதே பெரும் கஷ்டம் என்பது வரலாற்று பூர்வமான உண்மை. ஈராக்கை அமெரிக்கப் படையினர் கைப்பற்றும் போது ஒரு இராணுவ வீரரைக் கூட  இழக்கவில்லை. அனால் தற்போது ஆயிரக்கணக்கில் அமெரிக்க இராணுவம்கொல்லப்பட்டுள்ளது. எனவே பரப்பளவு பெரிதாகப் பெரிதாக அதை தக்கவைப்பது, பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான விடையம். மன்னாரிலோ அல்லது மட்டக்கிளப்பிலோ ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறனை புலிகள் இன்னும் இழக்கவில்லை என்பதில் ஜயமில்லை. சிறிய ஒரு பரப்பை இறுதியாக கைப்பற்றி, அதனை ஒரு மாபெரும் யுத்தவெற்றியாக காட்டி சிங்கள மக்களிடம் நற்பெயர் எடுக்க இலங்கை அரசு முயல்கிறது.


யுத்தத்திற்கு பின் என ஒரு அத்தியாயம் இருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர். அந்த அத்தியாயம் இனி தொடரும்போது இலங்கை அரசு அதிர்ச்சியடையும்  என்பதில் ஜயமில்லை.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP