சமீபத்திய பதிவுகள்

நடேசன், புலித்தேவன் செத்த பின்தான் வெள்ளைக்கொடியை தூக்கினர்.-இலங்கை இராணுவ தளபதி

>> Monday, June 1, 2009

"நடேசன், புலித்தேவன் செத்த பின்தான் வெள்ளைக்கொடியை தூக்கினர்."என்னடா இப்படி ஜோக் எல்லாம் அடிக்கிறார்களே என்று நினைக்கிறீர்களா?பின்ன என்னங்க இந்த இலங்கை இராணுவ தளபதிக்கு பொய் சொல்லுறதுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை.நடேசன், புலித்தேவன் செத்த பின்தான் வெள்ளைக்கொடியை தூக்கினர் அப்படின்னு சொன்னாலும் சொல்லிடுவாரு போலிருக்குது.இது வரை சமாதான பேச்சு,வெள்ளை கொடி போன்ற வார்த்தைகள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாத இலங்கை அரசாங்கம் திடீர்ன்னு
 
 "அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும்"         
 
என்று காதில் பூ சுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்கள் விடும் ரீல் கொஞ்சம் பெருசாவே இருக்குது.
 
அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அவர்களிருவரும் சரணடையப் போவதான விடயத்தினை எனக்குத் தெரிவித்தார்.  
 
இதெல்லாம் கேட்டு இலங்கை அரசாங்கத்தை தலையில் வைத்து கூத்தாட ஒரு சில கருங்காலிகள் இல்லாமலா இருக்கப்போகிறது.
 
செய்தியை முழுமையாக படிக்க கீழே செல்லுங்கள்.
 
நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும்: இராணுவ தளபதி தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையப்போவதான விடயம் அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னரே தெரியவந்தது. என  இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெள்ளைக் கொடியோடு வந்து சரணடையப் போவது குறித்த விடயம் சுமார் 7, 8 மணித்தியாலங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்களை உயிரோடு கைது செய்திருப்போம் என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உயிரோடு பிடிப்பதன் அவசியம் குறித்து நாமும் அறிவோம். அவர்களைக் கைது செய்வதன் மூலம் பல்வேறு விடயங்களை நாம் அறியக்கூடும். அவர்கள் சரணடையப் போவதைத் தெரிவிக்க தாமதமானதே கொல்லப்பட்டதற்கான காரணமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளதாவது :

புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் சரணடைய வந்த போதே படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர் என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போர் நடவடிக்கைகளின் போது புலி உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 300 மீற்றர் நிலப்பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 17ஆம் திகதி இரவு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது அவ்வியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன் 18ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டமையும் உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அவர்களிருவரும் சரணடையப் போவதான விடயத்தினை எனக்குத் தெரிவித்தார்.

ஆயினும் அதற்குள் படையினரின் துப்பாக்கி ரவைகள் அவர்களிருவரின் உடலைத் துளைத்துவிட்டன. அவர்கள் சரணடையப் போவதை சுமார் 7அல்லது 8 மணித்தியாலங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தால் நாம் அவர்களைக் கைது செய்திருப்போம்.

சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு வழங்கப்படும் அழுத்தங்கள் காரணமாக காப்பாற்றப்படுவோம் என்று எண்ணியே அவர்கள் அதுவரையில் சரணடையாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும்." இவ்வாறு அவர் கூறினார்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous June 1, 2009 at 9:57 AM  

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,


நன்றி
தமிழ்ர்ஸ்

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP