சமீபத்திய பதிவுகள்

மொத்த இலங்கையையும் கைப்பற்றும் போர் நடக்கும்;ஒரு சிங்களன் கூட நிம்மதியாக இருக்க முடியாது

>> Sunday, June 7, 2009

இனி மொத்த இலங்கையையும் கைப்பற்றும் போர் நடக்கும்;ஒரு சிங்களன் கூட நிம்மதியாக இருக்க முடியாது:சீமான் பேச்சு


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பெங்களூரில் பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டம், பொதுக்கூட்டம் நடந்தது.


இந்நிகழ்வுகளில்  தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,

''இலங்கையில் தனி ஈழம் அமைவதற்கு முன்பு சொல்லப்பட்ட காரணத்தை விட, இப்போது நமக்கு அழுத்தமான காரணம் கிடைத்து உள்ளது. இறுதிப்போரின் போது 25 ஆயிரம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து உள்ளனர்.


பாதுகாப்பு வளையத்துக்குள் வா என்று கூறி, அங்கு வந்த அப்பாவி மக்களை நிர்வாணப்படுத்தி, பெண்களை விபசார விடுதியில் தள்ளி, உயிரை இறையாக்கி கொடூர செயலில் ஈடுபட்டனர். கொடூரமான அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்து இருப்பதால் தனி ஈழம் அமைப்பதற்கு அழுத்தமான காரணங்கள் அமைந்துள்ளன.


தமிழ் ஈழம்தான் தீர்வு என்பது முன்பு ஆங்காங்கே ஒலித்தது. அது தற்போது உலகம் முழுவதும் ஒலிக்கிறது. ஈழத்தில் புலிகளின் கொடி இறக்கப்பட்டது. தற்போது அந்த கொடி உலகம் முழுவதும் பறக்கிறது. ஈழ தமிழர்களின் நிலத்தை வேண்டுமானால் சிங்கள அரசு கைப்பற்றி இருக்கலாம். ஆனால் அவர்களின் இலட்சியத்தை ஒருபோதும் அழிக்க முடியாது.


சாகப்பயந்தவன் தரித்திரமாகிறான், சாக துணிந்தவன் சரித்திரமாகிறான் என்று பிரபாகரன் சொன்னார். அடிமையாக வாழ்வதை விட சுதந்திரமாக சாவதே மேல் என்று வியட்நாம் போராளி சொன்னான். அதேபோல அடிமையாக வாழ்வதை விட வீரமாக சாவேத மேல் என்று பிரபாகரன் சொல்லி உள்ளார்.


இலங்கைக்கு பிழைக்க வந்த சிங்களனாகிய நீ இன்றைக்கு எங்களை விரட்டுகிறாயா?. இவ்வளவு நாளும் தனி ஈழத்துக்காக போராடினோம். இனி மொத்த இலங்கையையும் கைப்பற்றும் போர் நடக்கும்.


இலங்கையில் தமிழர்களின் அழிவுக்கு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் மட்டும் காரணம் அல்ல. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்களும் காரணம்.

 சீக்கியன் ஒருவனின் தலைமுடி வெட்டப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிந்தது. ஆஸ்திரேலியாவில் சீக்கிய மதத்துக்குள் நடந்த மோதலில் மத குரு கொல்லப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் கொந்தளித்தது.


11/2 கோடி சீக்கியர்களுக்கு உள்ள உணர்வு 61/2 கோடி தமிழர்களாகிய நமக்கு இல்லை. காஷ்மீரில் ஒரு தமிழன் பாதிக்கப்பட்டால் கன்னியாகுமரி பற்றி எரியும் நாள் என்று வருமோ? அன்றுதான் உலக தமிழனுக்கு பாதுகாப்பு கிடைக்கும். தமிழகத்தில் தமிழன் தமிழனாக இல்லை என்பதால்தான் ராஜபக்சே துணிந்து இலங்கை தமிழர்களை அழித்தார்.


மாவீரன் பிரபாகரன் போரில் தனது மகன் சார்லஸ் அந்தோணியை இழந்தார். தனது குடும்பமே அழிந்தாலும் பரவாயில்லை, தனது இனம் காக்கப்பட வேண்டும் என்பது அவரது நோக்கம்.


தற்போது இந்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம், உங்களது வெளியுறவு கொள்கையை மாற்றி கொள்ளுங்கள். இலங்கை தமிழர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டாம். உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும்.


விடுதலைப்புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள். இலங்கை தமிழர்களை நாங்கள் காப்பாற்றி கொள்கிறோம். எங்களை ஒட்டுமொத்தமாக அழித்தாலும் கூட நாங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பிரபாகரன் சொன்னார். அதை கடைசிவரை நிரூபித்து காட்டினார்.


பிரபாகரன் தனது மக்களை காக்க நல்லாட்சி செய்து வந்தார். நீதி, நியாயத்துடன் ஆட்சி செய்து வந்தார். விடுதலைப்புலிகளுக்கு மது அருந்துவது உள்பட எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் படையை அமைத்தார்.


 ஈழ நாட்டை போல உலகத்தில் எந்த ஒரு நாட்டையும் பார்க்க முடியாது. பிச்சைக்காரர்களே இல்லாத ஈழத்தை அமைத்து அவர் அழகு பார்த்தார். ஆனால் இன்றைக்கு அங்குள்ள தமிழர்களை பிச்சைக்காரர்களாக மாற்றி விட்டார்கள்.


பிரபாகரன் இறந்து விட்டார் என்று சிலர் தம்பட்டம் அடிக்கிறார்கள். அவரை ஒருபோதும் அழிக்க முடியாது. இலங்கையில் என்ன நடக்கிறது என்று கொஞ்சநாள் பொறுத்து இருந்து பார்ப்போம்.


அங்குள்ள தமிழர்களுக்கு சமஉரிமை வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் இல்லை என்று அந்த நாட்டின் தலைமை நீதிபதியே உண்மையை தெரிவித்து விட்டார். ராஜபக்சே நிச்சயம் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க மாட்டார். இதனால் மீண்டும் போர் வெடிக்க போகிறது.


இதுவரை நடத்தி வந்த போர் மரபு சார்ந்த போர். ஆனால் இனி நடக்க போகும் போர் மரபுசாரா போர். இனிமேல் ஒரு சிங்களன் கூட நிம்மதியாக இருக்க முடியாது.


 ஈழ நாட்டை பிரித்து கொடுத்து விடுங்கள் என்று அவர்களே கதற போகிறார்கள். இதனால் இனி போர் தீவிரமடைய போகிறது. உலகம் முழுவதும் போராட்டமும் தீவிரமடையும்''என்று ஆவேசமாக பேசினார்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP