சமீபத்திய பதிவுகள்

வெற்றிக் களிப்பில் இலங்கை: -அவலத்தில் தமிழ் மக்கள்-விசேட படங்களுடன்

>> Wednesday, June 3, 2009

 








 

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்ற இராணுவ வெற்றியை ஒருவார விழாவாக கொண்டாடுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இலங்கை அரசு. அதன் நிறைவு விழா பிரமாண்டமான விழாவாக துறைமுக நகரான கொழும்பில்  உள்ள காலிமுகத்திடலில் மூன்று மணி நேர விழாவாக நடந்து.

முன்னர் மனைவியுடன் இந்த விழாவுக்கு சென்ற ராஜபக்ஸ பௌத்த மதகுருவுக்கு பரிகாரம் செய்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் நடந்த விழாவில் முப்படைத் தளபதிகளுக்கும் போர் முடிந்து விட்டது. புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். நாடு சுதந்திரமடைந்து விட்டது என்ற அறிவிப்போலையை அதிகாரபூர்வமாக வழங்கினார்.

கடற்கரை நகரம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் சிங்கள மக்கள் பெரும் வெற்றிக் கழிப்பில் மிதந்தனர். அங்கு புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் சிங்கள மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சிங்கள இராணுவத்தினரின் வீர தீரங்களைப் போற்றிப் புகழும் பாடல்களுக்கு மாணவ மாணவிகள் நடனமிட, இலங்கையின் முப்படைகளும் அணிவகுப்பு சாகச நிகழ்ச்சியை மக்களுக்கு நிகழ்த்திக்காட்ட் இறுதியாக கௌரவ ஏற்பு உறையை நிகழ்த்திய ராஜபக்ஸ போர் முடிந்து விட்டது. இது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல. இங்கு தமிழ் மக்கள் அச்சமின்றி ஒன்று பட்டு வாழ வழியேற்படுத்தும் பொறுப்பு பாசத்துக்குரிய இராணுவத்தினரான உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்றார்.
 
இவ்விழாவை அடுத்து கொழும்பு நகரம் முழுக்க உச்சபட்ச வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதால், தமிழ் மக்கள் பெருமளவில் வீடுகளிலேயே இருந்ததாக தெரியவருகிறது.
 











 
 
ஒன்றானதும் ஐக்கியமான நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை வளர்த்து கொள்ளக்கூடிய புதிய யுகம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கை எந்த நாட்டினதும் காபன் தாளாக மாறக்கூடாது, இதற்கு பதிலாக இலங்கையை ஆசியவிலேயே கௌரவமான நாடாக மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
 
கொழும்பு காலிமுகத் திடலில் இன்று ஆரம்பமான போர் வெற்றியை கொண்டாடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டினாலும் தோற்கடிக்க முடியாது எனக் கூறிய மிலேச்சத்தனமான பயங்கரவாத்தை மூன்றாண்டுகளும் குறைவான காலத்தில் தோற்கடித்து, முழு ஆசியாவுக்கும் புதிய தைரியத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
 
நாடு பிளவுப்படாத வகையிலும் பிராந்தியத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படாதவாறு இலங்கையின் முறையின்படியான வேலைத்திட்டத்திற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாபதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாகவே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
 




















source:http://www.globaltamilnews.net

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP