சமீபத்திய பதிவுகள்

மீண்டும் போர்! ஓயாத புலிகள்! அதிர்ச்சியில் ராணுவம்!

>> Thursday, July 9, 2009

 

 
 

வாங்கிய அடிக்கு வாய்விட்டு அலறக்கூட முடியாமல் உள்ளுக்குள்ளேயே முனகிக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசுக்கு இடுப்பு சுளுக்கு ஏற்படும் அளவுக்கு புலிகள் கொடுத்திருக்கும் புதிய அடிதான் சிங்கள ராணுவத் தலைமைக்கு உள்காயத்தை உண்டாக்கியிருக்கிறது.

இறுதி கட்டப் போரின்போதே யுத்த யுக்தியாக ஆயுதங்களேந்தி அணிஅணியாக அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்தது விடுதலைப்புலிகளின் படையணி. மாதக்கணக்கில் தாங்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் காட்டிலேயே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில்தான், காட்டுப்பகுதியில் புலிகள் முகாமிட்டிருப்பதை அறிந்து ஜூன் 2-வது வாரத்தில் சிங்கள ராணுவத்தினர் 150 பேர் தாக்குதல் நடத்த வந்தனர். ஆரம்பகட்டத்தில் எந்த எதிர்ப்பையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை. பலவீனமான நிலையில் காட்டுக்குள் புலிகள் பதுங்கி யிருப்பதாக நினைத்து முன்னேறிச் சென்றது ராணுவம். நெடுங்கேணி என்ற பகுதிக்குச் செல்லும் வரை ராணுவத்தினர் விசிலடித்துக் கொண்டுதான் போனார்கள். அதன்பிறகுதான்
... ... ...

காட்டுப்பகுதிக்குள் நுழைந்த ராணுவத்தினர் 150 பேரையும் சுற்றி வளைத்தனர் புலிகள். இது விடுதலைப் புலிகளுக்கேயுரிய தனித்துவமான போர் யுக்தியாகும். ராணுவத்தினரை முன்னேற விடுவதுபோல போக்கு காட்டி, சரியான தருணத்தில் அவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவது புலிகளின் அசாத் திய போர் முறை. அதன்படி நெடுங்கேணியில் சிக்கிய ராணுவத்தினர் மீது புலிகள் கடுமை யான தாக்குதல் நடத்தினர். அவர்களிட மிருந்த ஆயுதமும், சரியான இலக்கும், விடுதலை உணர்வும் சிங்கள ராணுவத்தை சிதறடித்தன. முன்வரிசைகளில் இருந்த ராணுவ வீரர்களின் உயிரற்ற உடல்கள் பொத் பொத்தென தமிழீழக் காடுகளில் விழ, அடுத்த வரிசைகளிலிருந்து ராணுவத்தினர் சிதறி ஓடினர். அவர்களில் பலர், புலிகள் வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி பலியானார்கள். சிங்கள ராணுவம் தப்பமுடியாதபடி படை வளையம் அமைத்த புலிகள், பல திசைகளிலிருந்தும் தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் 125-க்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் உயிரை விட்டனர். எஞ்சியவர்களில் பலருக்கும் பலத்த காயம். நடை பிணங்களாகத்தான் காட்டிலிருந்து தப்பியுள்ளனர்
.

நெடுங்கேணி தாக்குதலை நம்மால் நெடுநாளைக்கு மறக்க முடியாது என்ற கருத்து ராணுவ வட்டாரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கும் மேலாக புலிகள் செயல் பாட்டுடன் இருப்பதையும் வலுவான ஆயுத பலத்துடன் அவர்கள் இருப்பதையும் நேரில் கண்டுவிட்ட ராணுவம் மிரட்சியின் உச்சத் தில் இருக்கிறது. இலங்கை அதிபர் ராஜ பக்சே, ""உலகத்தை நம்பவைப்பதற்கு அரசுத் தரப்பிலிருந்தும் ராணுவத் தரப்பிலிருந்தும் நாம் பல கதைகளை விடலாம். ஆனால் விடுதலைப்புலிகளை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது'' என்று எச்சரிக்கையான குரலில் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், இந்த பலத்த அடி பற்றிய தகவல் வெளியே கசிந்துவிடக் கூடாது என பொத்தி வைத் துள்ளது ராணுவத் தலைமை.

ஈழத்தின் காட்டுப் பகுதி களுக்குச் செல்லும் ராணுவத் தினரின் உயிருக்கு உத்தரவாத மில்லை என்கிற அளவுக்கு உக்கிரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிலிருந்து நடத்தும் புலிகள். நெடுங்கேணி பகுதியில் மட்டுமின்றி, பல காடுகளிலும் புலிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேரடித் தாக்குதலிலும் கண்ணிவெடி களாலும் பலியாகும் ராணுவத்தினரின் எண்ணிக்கையை மறைப்பதிலேயே குறியாக இருக்கும் சிங்கள அரசு, தமிழர்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தனது படையைப் பாதுகாத்துக் கொள்ள வடக்கு வசந்தம் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிரமாகிவிட்டது
.

தமிழர் பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து அங்கே விளை நிலங்களை உருவாக்குவது என்பதே "வடக்கு வசந்தம்' திட்டமாகும். காடுகளை அழிப்பதன் மூலமாக விடுதலைப்புலி களை அழிக்க முடியும் என நினைக்கிறது இலங்கை அரசு. ஆனால், காட்டுக்குள் நுழைந்தால் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்துவதால், "வடக்கு வசந்தம்' திட்டத்திற்காக மலையகத் தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களையும் தமிழகத்தின் அகதி முகாம்களில் இருப்பவர்களையும் கொண்டு செல்வதற்கு ராஜபக்சே அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் தமிழகத் தமிழர்களுக்கும் தங்கள் செலவில் விசா எடுத்து அழைத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தமிழர்களை நம்பச் செய்வதற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாத னை "வடக்கு வசந்த'த்தின் ஆலோசகராகவும் நியமித்துள்ளது
.

உரிமைகள் மறுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு வழங்குவதாக வெளியுலகுக்கு காட்டி, அவர்களை காடுகள் அழிப்பு திட்டத்தில் இறக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. இதன் மூலமாக காட்டுப் பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளில் சிங்கள ராணுவத்தினர் சிக்காமல், தமிழர்களை உயிர்ப்பலி கொடுத்து, தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளையும் அழிக்கலாம் என கணக்குப் போட்டுள்ளது ராஜபக்சே அரசு
.

காடு அழிப்பில் தமிழர்களை பலி கொடுப்பதுடன் காட்டில் உள்ள விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை அழிக்க இந்தியாவின் நவீன ரேடார் உதவி தேவை என்பது பற்றியும் சிங்கள அரசும் ராணுவமும் ஆலோசித் துள்ளது. அதன் அடுத்த கட்ட மாகத்தான் ராஜ பக்சேவின் சகோதரர் கள் டெல்லிக்கு விசிட் அடித்தார்கள் என்கிற கொழும்பு வட்டாரத்தினர், கோத்தபய ராஜ பக்சேவும் பசில் ராஜபக்சேவும் இந்தியா பறந்ததன் நோக்கம் இதுதான். தங்களின் திட்டத்திற்கு ஒப்புதலும் உதவியும் பெறுவதற்காகத்தான் இந்திய அரசின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்தனர்
.

இந்தியாவின் ஒத்துழைப்பு நிச்சயமாகக் கிடைக்கும் என்று கொழும்பு திரும்பியதும் ராஜபக்சே விடம் சகோதரர்கள் தெரிவித்திருக் கிறார்கள் என்பதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் என்கிறார்கள்
.

இந்திய ரேடார்களின் உதவி யுடன் காட்டில் உள்ள புலிகளின் மீது ரசாயன குண்டுகளை வீசிக் கொல்ல வும், காடு அழிப்பில் ஈடுபடும் தமிழர்களை கண்ணிவெடிகளில் பலி கொடுக்கவும் "வடக்கு வசந்தம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை உருவாக்கி யுள்ள ராஜபக்சே அரசுக்கு புதிய தாக்குதல்கள் மூலமாக கிலியை உண்டாக்கியிருக்கிறார்கள் புலிகள்
.

-
கொழும்பிலிருந்து எழில்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP