சமீபத்திய பதிவுகள்

பொய்களைக் கையிலெடுத்து புலத்தையும் ஊடுருவ எண்ணும் சிங்கள மேலாதிக்கம்

>> Friday, August 14, 2009

 

ஊடகவியல் என்பது ஒரு உன்னதமான துறை. உள்ளதை உள்ளபடி இயம்புவதே ஊடகத்தின் உன்னத பணி. ஆனால் அண்மைக் காலங்களில் புதிதாக பூத்து துர்நாற்றங்களை மட்டும் வீசும் சில ஊடகங்களில் எம் அழகிய தமிழ்மொழி எவ்வளவு இழிவாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கும்போது சிங்கள மேலாதிக்கத்தின் ஊடுருவுல் எவ்வளவுதூரம் புலம்பெயர்நாடுகளில் உருவெடுக்க முயல்கிறது என்பதை உணரமுடிகிறது.

எமது இனம் பட்ட, இன்றும் படும் இன்னல்களை வெளிக்கொணரமுடியாது ஊடக சுதந்திரமற்ற தேசமாக எமது தாய்நாட்டை வைத்திருப்பதை எண்ணி பூரித்து மார்தட்டிக்கொள்ளும் மகிந்த, மறுபுறத்தில் புலம்பெயர்நாடுகளில் உள்ள ஊடக சுதந்திரத்தையும் தனக்கு ஏற்றவகையில் பயன்படுத்த முயல்கிறார்.

காலா காலமாக தமிழினத்திற்குள் எட்டப்பர் கூட்டம் இருந்துவந்ததை வரலாறு எடுத்துரைக்கிறது. அது இன்றும் தொடர்வது நாம் அறிந்ததே. ஆனால் தமது சுயநலத்திற்காக எம்மினத்தை மட்டுமல்லாது இனிய எம் தாய்மொழியையே கேவலமான வார்த்தைக@டாக பயன்படுத்துவது எவ்வளவு கேவலமானது என்பதைக்கூட உணரக்கூடிய அறிவற்ற சில எட்டப்பர் தம்மை ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்வது மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இவ்வாறு தங்களுக்குத் தாங்களே ஊடவியலாளரகள் என பட்டம் கொடுத்துக்கொண்டு மிக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தும் இவர்கள் 'ள' எங்கு எழுதவேண்டும் என்றோ 'ழ' எங்கு எழுதவேண்டும் என்றோ தெரியாதவர்கள். இது ஓரிரு இடத்தில் தற்செயலாக விடப்பட்ட பிழை என்று கூட சொல்ல இயலாத அளவிற்கு எங்கெல்லாம் 'ள' பயன்படுத்தவேண்டுமோ அங்கெல்லாம் 'ழ' பயன்படுத்தியும் எங்கெல்லாம் 'ழ' பயன்படுத்தவேண்டுமோ அங்கெல்லாம் 'ள' பயன்படுத்தியும் தங்கள் புலமையை வெளிப்படுத்தும் பண்டிதர்கள்! ஐந்தாம் வகுப்பில் புலமைப்பரீட்சைக்காக படிக்கும்போதுகூட |ள| , |ழ| வித்தியாசத்தை படிக்காதவர்கள் என்றால் ஒன்றில் இவர்கள் ஐந்தாம் வகுப்புக்கூட படிக்காதவர்களாக இருக்கவேண்டும் அல்வாவிடல் இவர்களின் தாய் தந்தையர் தமிழர் அல்லாதவராக இருக்கவேண்டும்.

எம் மொழியை இழிவுபடுத்தவும் எம்மினத்தை அடிமைகளாகவே முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கவும் புலம்பெயர் மக்களாகிய எம்மிடையே பிரவினைகளை ஏற்படுத்தி எமது போராட்டத்தை திசைதிருப்பவும் சிங்கள மேலாதிக்கத்தால் தெரிவு செய்யப்பட்ட எட்டப்பர்களும் அவர்களைப் போன்ற மடையர்கள் என்பதை அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளும் வாக்கியங்களும் எமக்கு உணர்த்துகின்றன.

இதிலும் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சில காலத்திற்கு முன் தாய்மண் வாசத்தை சுமந்த சுதந்திர தேவதைகளாக தமக்கு பெயர்சூட்டிக்கொண்டு தம்மை புலனாய்வுப்பிரிவு என்று அரிதாரம் பூசிக்கொண்டு மற்றவரிகளிடையே மாயையை உருவாக்க முற்பட்டவர்கள் இன்று புலிகளைப் பற்றி விமர்சிப்பது ஊடாக 'மதில் மேல் பூனைகள்' தாம் என அடையாளம் காட்டியுள்ளனர்.

புலிகள் அழிந்துவிட்டார்கள் என்றும் புலிகள் பல பிரிவாக உடைந்து பதவி போட்டி இடம்பெறுவதாகவும் வெளியாகும் வதந்திகள் ஒரு புறம். மறுபுறம் புலிகள் மிரட்டுகிறார்கள் என்று புலம்பெயர்நாட்டு ஊடகங்களுக்கும் காவல்துறைக்கும் பொய்யாக முறையிட்டு எமது தமிழின உணர்வை அடியோடு பிடுங்கிவிடலாம் என செயற்படும் இவர்களை எட்டப்பர் என்று இன்னும் நாம் இனம் காணவில்லை என்றால் வரலாறு கற்றுக்கொடுத்த பாடத்தை நாம் புறம் தள்ளுவதாக அமைந்துவிடும்.

சுயநலத்திற்காக சிங்கள மேலாதிக்கம் போடும் இலட்சக்கணக்கான பிச்சைப்பணத்திற்காக இனத்தையும் மொழியையும் விற்பது பற்றாது என்று அந்தப் பணத்தைக் கொடுத்து பட்டம் பெறவிரும்பும் புகழ்விரும்பிகள். தமிழின உணர்;வுடன் உழைத்தவர்களுக்கு வழங்கப்படும் நாட்டுப்பற்றாளர் எனும் பட்டம் தமது உறவினர்களுக்கு கிடைக்க எவ்வளவு யூரோ வேண்;டுமென்றாலும் தரலாம் என்றும் அதை எப்படி பெறலாம் எனவும் அலையும் புகழ்விரும்பிகள்.

கூடவே இருந்து குழிபறித்த இவர்களது எட்டப்ப உறவினர்களுக்கு பணம் கொடுத்து பட்டம் கேட்கும் இவர்களின் புத்தி எவ்வளவு மட்டமானது என்பது தெட்டத்தெளிவாகிறது. பணத்திற்காக சிங்கள மேலாதிக்கத்திடம் தாம் விலைபோவது போல நாட்டுப்பற்றும் விலைகொடுத்துவாங்கும் பொருள் என்று எண்ணும் சுயநலவாசம் சுமந்த 'சுதந்திரா'க்கள்.

உண்மையிலேயே இவர்கள் தமிழ் பெற்றோருக்கு பிறந்திருந்தால் சரியாக வளர்;கப்டடிருந்தால் இவ்வாறு மிக கேவலமான வார்தைகளை பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பமே இல்லை. அடுத்தவர்களின் நடத்தை பற்றி விமர்சிப்பவர்கள் தங்களுடைய வார்த்தை பயன்பாட்டினூடாக தாம் எவ்வளவு கேவலமான நடத்தையாளர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றனர்.

தமிழை தன் காலடியில் விழவைத்து தமிழர்களை என்றும் அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என்று எண்ணும் சிங்கள மேலாதிக்கம் இவ்வாறான எட்டப்பர் ஊடாக முகாம்களுக்குள் முடங்கிக்கிடக்கும் எம் உறவுகளை சுதந்திரமாக வாழ வழிசெய்ய புலம்பெயர்ந்த எம்மவரால் எடுக்கப்படும் சிறு முயற்சிகளையும் முடக்கும் வகையில் இவ்வாறு அவதூறாக இணையத்தளங்களில் எழுதுவதோடு மட்டுமல்லாது எம்மக்களின் மனிதஉரிமைக்காக புலம்பெயர்நாடுகளிலிருந்து எழுப்பப்படும் குரல்கள் அடங்கவேண்டும் என்றும் தங்களின் கால்களில் வந்து விழுந்து மன்னிப்புக்கோரி சிறிலங்கா அரசிற்கு அடிமைகளாக தம்மைப்போல எட்டப்பர்களாக வாழவும் சம்மதிக்கும் வரை இவ்வாறு கேவலமாக இணையத்தில் எழுதப்படும் என்றும் எழுதும் எருதுகளை எண்ணி நாம் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும் என்று எனது நண்பர் ஒருவர் கூறினார்.

இந்த எட்டப்பவர்களால் விமர்சிக்கப்படுபவர்கள்கூட இதே கருத்தினைக் கொண்டிருக்கலாம். நாய் குரைக்கிறது என்று நாமும் திருப்பிக குரைத்தால் 'அட நான் குரைத்ததையும் பொருட்டாக எடுத்து என்னை மேலும் ஊக்கிவிக்கிறார்களே' என்று நினைத்து மேலும் குரைக்கத்தான் செய்யும் என்று இவர்களின் குரையலை பொருட்படுத்தாமல் தமது பணிகளைத் தொடரலாம்.

ஆனால் இந்த எட்டப்பர்கள் இணையத்தளம் என்று மட்டும் நின்றுவிடாது 'உண்மை' உரைக்கும் ஊடகவிலாளன் எனும் ஒரு முகமூடியுடன் தொலைக்காட்சி ஒன்றிற்குள்ளும் நச்சு விதைக்க முற்படும் கிருமியாக உலாவ முற்படுகிறது. மக்களாகிய நாம் இதுபோன்ற கிருமிகளை அடையாளங்கண்டு எந்த வதந்திகளையும் காதில் வாங்காது எமது தமிழ் உணர்வுடன் தொடர்ந்தும் ஒன்றுபட்டு முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் எம் மக்களின் மனித உரிமைகளுக்காகவும் எமது இன விடுதலைக்காகவும் உழைப்போம்.

- சே. சி. லதா


source:nerudal

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP