சமீபத்திய பதிவுகள்

KP இன் கைது சொல்லும் பாடம்

>> Sunday, August 9, 2009

 

kpKP எனப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதனின் கைது என்பது சிறீலங்கா உளவுப்பிரிவு, இந்திய றோ உளவுப் பிரிவு மற்றும் ஏலவே அவரின் நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக கண்காணித்துக் கொண்டிருந்த சர்வதேச உளவுப் பிரிவுகளின் கூட்டு நடவடிக்கையின் பெயரில் இடம்பெற்றுள்ளது.

இதில் எதுவும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் தென்கிழக்காசியாவில் தாய்லாந்து.. மலேசியா.. சிங்கப்பூர்.. இந்தோனிசியா.. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு உரிய அமைப்புக்களினதும் மற்றும் மாபியா குழுக்களினதும் செயற்பாடுகள் நிகழும் மையங்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் அந்தந்த நாடுகள் மீது உலக நாடுகளின் உளவுப் பிரிவுகளின் தொழிற்பாடுகள் கண்காணிப்புக்கள் தீவிரமாக இருப்பது ஒன்றும் ரகசியமும் அல்ல புதுமையும் அல்ல.

அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக உலகின் முன்னணி நாடுகளால் தடை செய்யப்பட முதலில் இருந்தே அந்த இயக்கத்தின் செயற்பாடுகளை உலகின் முன்னணி உளவுப் பிரிவுகள் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டன. அது விடுதலைப்புலிகளுக்கும் தெரியும்.

ஆனால் அன்று விடுதலைப்புலிகளிடம் தமக்கென ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்ததால் இந்த உளவுப் படைகளின் செயற்பாடுகள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் சர்வதேச செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் அளவுக்கு அவ்வளவு தீவிரமாக இருக்கவில்லை. ஆனால் இன்று நிலைமை அப்படியன்று.

விடுதலைப்புலிகள் தாயகத்தில் தமது கட்டுப்பாடுகளை இழந்து பலவீனமா ஒரு நிலையில் இருக்கும் வேளையில் அவர்களை மீள எழுச்சி கொள்ள விடாது தடுக்க விரும்பும் சிங்கள மற்றும் பிராந்திய, சர்வதேச சக்திகளின் கூட்டு நடவடிக்கையின் பெயரில் இடம்பெற்றதே இக் கைது ஆகும். இது உண்மையில் விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை தடுக்க அவர்கள் மீள எழுச்சி கொள்வதை தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் முதல் பெரிய எடுப்பிலான கூட்டு நடவடிக்கையாகும்.

ஏலவே அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதப்பட்டியலில் இட்ட பின் தனித்தனியேயும் கூட்டாகவும் சில கைதுகளைச் செய்துள்ளன. இந்தியா ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னும் பின்னும் என்று விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான நடவடிக்கைகளை எடுத்தே வந்துள்ளது. இதற்கு உதாரணமாக பலவற்றைச் சொல்லலாம் குறிப்பாகச் சொல்வதென்றால் 1985 வாக்கில் புளொட் இயக்கத்திற்கு பெருமளவு ஆயுதங்களைக் கொண்டு வந்த கப்பலை இந்திய இந்திரா காந்தி அரசு மடக்கிப் பிடித்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு துரிதப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தி இலங்கைத் தீவில் சிங்கள ஆதிக்கத்தை உறுதி செய்து கொண்டது.

எனவே இக்கைது தொடர்பில் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பது அல்ல தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் விடுதலைப் போராட்டத்தினை பாதுகாத்து முன்னெடுப்பதற்கு தற்போதைய இவ் இக்கட்டான இந்த சூழலில் அவசியமானது.

விடுதலைப்புலிகள் உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக மிகவும் கட்டுப்பட்டோடு போராடினர் போராடுகின்றனர் என்பது உலக நாடுகளுக்குத் தெரியும். விடுதலைப்புலிகளின் கடந்த 35 வருட காலப் போராட்டத்தில் அவர்கள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் எதனையும் செய்ததில்லை. பழிவாங்கல் தாக்குதல் அன்றிய பொதுமக்கள் மீது என்று தாக்குதல்களை திட்டமிட்டு அவர்கள் மேற்கொண்டதில்லை. தமிழ் மக்களின் அரசியல் உரிமையையே அவர்கள் வலியுறுத்தினர். அதனை தனிநாட்டை உருவாக்குவதன் மூலம் அடையவே பாடுபட்டனர். அதுமட்டுமன்றி..

போதைப் பொருள் கடத்தல் மற்றும் கள்ளக் கடத்தல்கள்.. வன்முறைகளுக்கு எதிரானவர்களாகவே விடுதலைப்புலிகளின் செயற்பாடு உள்ளூரில் இருந்தது. அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் சிறீலங்கா காவல்துறையுடன் இணைந்து குற்றங்களைத் தடுப்பதிலும் உதவியுள்ளனர். சிறீலங்காவின் வங்கிகள், நீதித்துறை மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் விடுதலைப்புலிகள் நேரடித்தலையீடு செய்ததில்லை. அல்லது அவற்றை முடக்கியதில்லை.

இருந்தும் விடுதலைப்புலிகளை சர்வதேச அளவில் பயங்கரவாதிகளாக இனங்காட்டப்பட வேண்டிய தேவை பிராந்திய மற்றும் வல்லாதிக்க சக்திகளுக்கும், சிறீலங்கா சிங்கள அரசுக்கும் இருந்தே வந்துள்ளது. அதில் இராணுவ பரிமானங்கள்.. பொருளாதார பரிமானங்கள்.. பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் என்று பல விடயங்கள் அடங்கி இருக்கின்றன.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இந்தக் கைதைத் தொடர்ந்து தமிழ் உரிமைப் போராட்டம் சந்திக்க இருக்கும் புதிய சவாலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியே நாம் இப்போது சிந்திக்க வேண்டும்.

பத்மநாதன் கைது செய்யப்பட்டது போன்ற பாணியில் முன்னர் பல விடுதலை இயக்கங்களின் தலைவர்கள் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கூட கொலம்பிய, அமெரிக்க ஆதரவு கொடுங்கோண்மை அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடும் பார்க் (FARC) இயக்கத்தின் தலைவர்கள் கூட அமெரிக்க மற்றும் கொலம்பிய உளவுப்படையினரின் திடீர் நடவடிக்கை மூலம் வெனிசுயுலா நாட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதுடன் சிலர் சிறை பிடிக்கவும் செய்யப்பட்டனர்.

இப்படி பல நிகழ்வுகள் உலகில் நடந்தேறியுள்ளன. அவற்றை எல்லாம் பற்றி அன்று நாம் கவனம் செலுத்தாததால்.. எமக்கு இந்தக் கைது புதிதாகத் தெரிந்தாலும் உளவுப்படைகளின் வரலாற்றில் இது பழமையானது. ஆனால் சிறீலங்காவிற்கு சிங்களவர்களுக்கு இது புதுமையானது. தமிழர்களை பூரணமாக வென்றுவிட்டதானது.அதுதான் பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர்.

உண்மையில்.. நாம் இந்த இக்கட்டான தருணத்தில் கவனிக்க வேண்டியது.. எப்படி இந்தச் சவாலில் இருந்து எப்படி வெளி வருவது என்பது பற்றியே..!

அதற்குரிய வழிமுறைகளை ஆராய்வதும் செயற்படுத்துவதுமே இன்று தமிழ் மக்களின் முன் உள்ள தேவை ஆகும்.

1. விடுதலைப்புலிகளின் தலைமை சர்வதேச உளவுப் பிரிவுகளின் கண்காணிப்பில் இல்லாதவர்களின் கைக்கு போய் சேர வேண்டும். அவர்கள் தேசிய தலைவர் போன்று உறுதியாகச் செயற்படக் கூடியவர்களாக.. விலை போகாதவர்களாக இளைய தலைமுறையினரைக் கொண்டவர்களாக உலகிற்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

2. விடுதலைப்புலிகளின் மக்கள் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தவிர ஏனையவை பகிரங்கப்படுத்தப்படக் கூடாது.

3. விடுதலைப்புலிகளின் கடந்த கால ரகசியச் செயற்பாடுகள் இடங்கள் மீள ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும்.

4. தமிழ் மக்கள் தமக்கென்றான ஒரு வலுனான உளவு அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பில் புதிய தலைமுறையினர் அதிகம் உலகிற்கு அறிமுகமற்றோர் உறுதியான தமிழீழப் பற்றுள்ளோர்.. உயிரைக் கூட தாயக விடுதலைக்கு கொடுக்கக் கூடிய உறுதியுள்ளோர் வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் இணைந்து செயற்பட வேண்டும்.

5. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் புல்லுருவிகளை இனங்காண கண்காணிக்க என்று தனியான ஒரு நம்பிக்கைக்குரிய உளவு அமைப்பு பிரதான உளவு அமைப்புடன் சேர்த்து உருவாக்கப்பட வேண்டும்.

6. விடுதலைப்புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களை அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துணித்திறன் வாய்ந்த இளைஞர்களைக் கொண்ட ஒரு பாதுகாப்பு வலையமைப்பை சர்வதேசம் எங்கும் தமிழர்கள் உருவாக்கி ரகசியமாக அதை இயக்கிக் கொள்ள வேண்டும்.

7. இஸ்ரேலிய யூதர்கள் பாணியில் தமிழர்கள் இனத்துக்கும் தேசத்துக்கும் உயிரினும் மேலால் நம்பிக்கையோடு பணியாற்ற முன் வர வேண்டும். அதற்கு சுயவிளம்பரம்.. சுயநலன்.. சுய புகழீட்டல் போன்ற விடயங்களை இயன்ற வரை இல்லாது ஒழிக்க வேண்டும்.

இவ்வாறான பல வழிமுறைகள் ஆராயப்பட்டு நாம் சிங்கள அரசும் அந்நிய சக்திகளும் எமக்கு எதிராக பிண்ணியுள்ள மிகப்பெரிய சதி வலையில் இருந்து எம்மினத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் .. தமிழ் மக்களின் போராடு வலுவான விடுதலைப்புலிகளையும் காத்துக் கொள்ள முயல்வதே இன்றைய உடனடித் தேவை.

அதைவிடுத்து.. கவலைப்படுவதும்.. துரோகிகள் என்று திட்டித்திரிவதும்.. இணையங்களில் உப்புச்சப்பற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதித் திரிவதும்.. அதனூடு தகவல்களை அறிந்தும் அறியாமல் எதிரிகளுக்கு வழங்குவதும்.. எதிரிகளின் பிரச்சாரத்துக்கு முண்டு கொடுத்து அவற்றைக் காவித்திரிந்து மக்களின் மனவோட்டங்களைப் பலவீனப்படுத்துவம் அல்ல இன்றைய அவசியம்… தேவை..!

இதை.. விரைந்து உணருங்கள் மக்களே.. இன்றே செயற்படுங்கள். துரித கதியில்..!

இன்றேல் உங்கள் கண் முன்னாலேயே இன்னும் இன்னும் பல வியப்புக்களை எதிரி நிகழ்த்திக்காட்டுவதை பார்த்துக் கொண்டு ஒப்பாரி வைக்கும் நிலையே உங்கள் சொத்தாக இருக்கும்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP