சமீபத்திய பதிவுகள்

முதல்வர் ராஜசேகர ரெட்டியின் இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது

>> Thursday, September 3, 2009

 

ஐதராபாத் : ஹெலிகாப்டரில் சென்ற ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். அவருடன் இருந்த 4 பேர் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜசேகர ரெட்டியின் இறுதி்ச்சடங்கு நாளை நடக்கிறது. மீட்கப்பட்ட உடல்கள் கர்னூலுக்கு கொண்டு வரப்படுகின்றன. முதல்வர் மரணத்தை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் மேலிடமும் உறுதி செய்துள்ளது. மாயமான ஹெலிகாப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ விமானபடை அதிகாரி கூறினார்.  



நேற்று காலை 8.30 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், 9.30 மணிக்கு ரேடியோ தொடர்பை இழந்தது. நல்லமலா வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போதுதான் மாயாமாகி விட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த அதிகாரிகள் யாரிடமும் செயற்கைகோள் போன் இல்லை. இதுவும் நிர்வாகத்தினருக்கு ஹெலிகாப்டரை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.



கர்னூலுக்கு கிழக்கே 40 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள இப்பகுதியை முதலில் ராணுவ ஹெலிகாப்டர்கள் கண்டுபிடித்தது. கண்டுபிடிக்கப்பட்ட உடன்  ஹெலிகாப்டர் எந்த நிலையில் இருந்தது விமானம் விபத்தில் சிக்கியதா என்ற கேள்விக்கு விமான அதிகாரி முதலில் உறுதியான தகவல் ஏதும் கூற மறுத்து விட்டனர்.



துணை ராணுவ கமாண்டோக்கள்:  ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதியில் துணை ராணுவ கமாண்டோக்கள் இறக்கி விடப்பட்டனர்.  கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா - ரோலபெண்டா இடையே உள்ள அடந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டரும், உடல்களும் கிடந்தன.



‌சிதைந்து ‌போன உடல்கள் : ஹெலிகாப்டர் உருக்குலைந்து கிடந்த இடத்தில் 5 பேர் உடல்களும் சிதைந்து அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தது. உடல்கள் மீட்கப்பட்டு ஐதராபாத் கொண்டு வரப்படும்.பின்னர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் நாளை ( வெள்ளிக்கிழமை ) இறுதிச்சடங்கு நடக்கிறது.



பிரதமர் அவசர ஆலோசனை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் உயர் மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.சோனியாவும் பங்கேற்கிறார்.



தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை : ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தது தமிழக மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என  கூறியுள்ளார்.  தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி , கனிமொழி புறப்பட்டு செல்கின்றனர்.

source:dinamalar
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP