சமீபத்திய பதிவுகள்

எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் திடுக்கிடும் தகவல்

>> Tuesday, September 8, 2009


 
 

சமீபத்தில் வெளியான இலங்கை இராணுவத்தின் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகளை, இலங்கைக்கான ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்டிருந்தது.

அது தொடர்பாக உடனே விசனம் தெரிவித்த நோர்வே அமைச்சரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம், தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அது பொய்யான வீடியோ எனக் கூறியுள்ளார். இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன் தான் பேச இருப்பதாகவும், இது ஒரு போர்க் குற்றம் எனவும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவந்த எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கை அரசின் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு முறை தமிழர்களை ஏமாற்றியிருக்கிறார்.

இவ்வாறு இலங்கை அரசுடன் இவர் சேர்ந்து நாடகமாடுவது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. இவர் முகத்திரை கிழிந்துள்ளது. இவரா சமாதான காலகட்டத்தில் இதய சுத்தியுடன் நடு நிலை வகித்திருப்பார்? அல்லது இதய சுத்தியுடன் சமாதானம் மலரவேன்டும் எனப் பாடுபட்டிருப்பார்? தமிழர்கள் இவரை நம்பியதற்கு, இவர் கொடுத்த பரிசு நம்பிக்கைத் துரோகம்.  இன்று சிங்கள நாளிதழ்களில் எரிக் சொல்ஹெய்ம் இந்தப் படுகொலை வீடியோ பொய்யானவை என்று கூறியதாகச் செய்திவெளியிட்டு கொண்டாட்டத்தில் மிதக்கின்றனர். கோத்தபாய ராஜபக்சவும் இதனை எரிக் சொல்ஹெய்ம் கூறியதாகச் சிங்கள செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அதாவது நாம் இவரைக் கேட்டோமா இந்த வீடியோ பற்றிக் கருத்துக் கூறும்படி? தானாகவே வந்து கருத்துரைத்துப் பின்னர் அக்கருத்தை மறுத்து, உண்மையான சம்பவங்களைப் பொய்யாக்க நினைக்கிறார் எரிக் சொல்ஹெய்ம். இவரை அனைத்துத் தமிழர்களும் ஓரம்கட்டவேன்டும். இவ்வாறான களைகள் முதலில் களையப்பட்டாலே, தமிழர்கள் சுயநிர்ணயம் கிட்டும்.








இன்று சிங்கள நாழிதள்கள் வெளியிட்டுள்ள செய்திகளைத் தாம் கூறவில்லை என்றால், எரிக் சொல்ஹெய்ம் உடனடியாக மறுப்பறிவித்தல் ஒன்றை விடவேன்டும் என்பதே மக்கள் கோரிக்கை. இச் செய்தியை வெளியிட்ட சிங்கள நாழிதழ் ஒன்று இங்கு ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.

 
 
source:athirvu
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP