சமீபத்திய பதிவுகள்

எங்கே நிற்கிறது கூகுள்!

>> Tuesday, October 13, 2009

எங்கே நிற்கிறது கூகுள்!
 


அமெரிக்காவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 9 சதவிகிதம் பேர்,கூகுள் தரும் ஏதாவது ஒரு வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகளில் முதன்மையானது அதனுடைய சர்ச் இஞ்சின், அடுத்ததாக யு–ட்யூப் மற்றும் அடுத்து பிற சேவைகள் வருகின்றன. ஆனால் இன்னும் சில நாடுகளில் கூகுள் சேவை மிக அதிகமாகவே பயன்படுத்தப்படுவதாக இது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்திவரும் காம் ஸ்கோர் (ComScore)  என்னும் நிறுவனம் அறிவித்துள்ளது. அவ்வகையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் பிரேசில்; அடுத்ததாக, நம்புங்கள், இந்தியா. இந்த இரண்டு நாடுகளிலும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 18 நிமிடங்கள் கூகுள் நிறுவன சேவையைப் பயன்படுத்துகின்றனர். கூகுள் சேவையில் 30 நிமிடங்கள் பிரேசில் நாட்டில் உள்ளவர்களாலும், 29 நிமிடங்கள் இந்தியாவில் உள்ளவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.உலக அளவில் இந்த பயன்பாட்டு சதவிகிதம் 9.4 சதவிகிதம் மட்டுமே. கூகுள் நிறுவனத்தின் சோஷியல் இணைய தளமான ஆர்குட் மற்ற நாடுகளில் அவ்வளவாக வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் இந்த இரண்டு நாடுகளிலும் சோஷியல் இணைய தளங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளன. 
பிரேசில் நாட்டில் சர்ச் இஞ்சின் மூலம் மேற்கொள்ளப்படும் தேடல்களில் 90% கூகுள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் இது 88%. 71% நேரம் குகூள் மேப் சேவையில் செலவழிக்கப்படுகிறது. இந்தியாவில் இது 64%. பிளாக்குகளில் பிரேசிலில் 43% செலவழிக்கப்படுகிறது. இந்தியாவில் இது 48% . இந்திய வெப் இமெயில் மார்க்கட்டில் கூகுள் நிறுவனத்தின் மார்க்கட் 50%.  இந்தியாவும் பிரேசில் நாடும் உலகின் எதிர் எதிர் முனைகளில் இருக்கின்றன. ஆனால் எப்படி இணையத்தைப் பொருத்தவரை இணையாக இருக்கின்றன என்ற கேள்வி எழலாம். இன்டர்நெட் பயன்பாட்டினைப் பொருத்தவரை இரண்டு நாடுகளும் ஒரே நேரத்தில் இணையாக வளரத் தொடங்கின. இவை வளரத் தொடங்கிய போதுதான், கூகுள் நுழைந்தது. எனவே அதனையே டிபால்ட் சாதனமாக இரு நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தத் தொடங்கினர்.சீனாவில் கூகுள் இடம் பெறாமல் போனதற்கு அங்குள்ள தேடல் இஞ்சின் பைடு (Baidu)காரணம் ஆகும். சீன மொழியிலேயே இது தேடல் வசதிகளைத் தொடக்கத்தில் இருந்து தருகிறது. அதே போல ரஷ்யாவில் யான்டெக்ஸ் (Yantex)  என்னும் தேடல் இஞ்சின் தான் பிரபலம். ஆனால் இன்டர்நெட் பயன்பாட்டில் இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்திலும், பிரேசில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டும் தான் தற்போது இன்டர்நெட் பயன்பாட்டைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்து வரும் நாடுகள். கூகுள் அமெரிக்காவில் தன் இடத்தை இன்னும் வளர்க்கலாம். வளர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தான் சரியான போட்டி என்பதனைக் காட்டலாம். காசாக ஒரு பிளாஷ் டிரைவ்
எத்தனையோ உருவங்களில் பிளாஷ் டிரைவ்கள் வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அண்மையில் பிரான்ஸைச் சேர்ந்த லா சீ (LaCie)  என்ற நிறுவனம், முற்றிலும் புதிய வகையில் பிளாஷ் டிரைவ் ஒன்றை உருவாக்கி விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது. இது ஒரு நாணய உருவத்தில் உள்ளது. அதனாலேயே இந்த டிரைவிற்கு CurrenKey என்று பெயரிடப்பட்டுள்ளது. வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நாணயம் போல இது உள்ளது. இதன் ஒரு புறத்தில் 4எஆ என அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இன்னொரு புறத்தில் யு.எஸ்.பி. இலச்சினை தரப்பட்டுள்ளது. 
இது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ள பேக்கிங் அமைப்பும் புதுமையாக உள்ளது. பேக்கிங் என்று இல்லாமல் ஒளி ஊடுறுவும் அட்டையில் வைக்கப்பட்டு தரப்படுகிறது. இதற்கான சிடி எதுவும் தரப்படவில்லை. அதனால் இதற்கான டிரைவர் புரோகிராமினை இதன் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ள வேண்டியதுதான். இந்த பிளாஷ் டிரைவினை 5.5 Designers என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனை எளிதாக உங்கள் பாக்கெட்டில் ஒரு நாணயத்தைப் போட்டு எடுத்துக்கொண்டு போவதைப் போல, எடுத்துச் செல்லலாம். இதன் விட்ட அளவு 36 மிமீ. இதன் தடிமன் 9 மிமீ. நாணய வடிவில் இருப்பதால் பக்கத்து யு.எஸ்.பி. போர்ட்டில் வேறு சாதனம் ஏதேனும் செருகப்பட்டிருந்தால், இதனை இணைப்பது கடினமே. இதன் யு.எஸ்.பி. ப்ளக் உள்ளாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துகையில் இந்த ப்ளக்கினை இழுத்துச் செருக வேண்டியுள்ளது. இதன் செயல்பாடு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது. எழுதும் மற்றும் படிக்கும் வேகம் நன்றாகவே இருக்கிறது. குறைவான எடையில், சிறிய அளவில் இருப்பதால், எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிரைவ்களில் இது அதிக வசதி கொண்டதாக உள்ளது.இதனுடைய தனித்தோற்றம் விற்பனைக்கு ஊன்றுகோலாகவும், ஸ்டைலாகப் பயன்படுத்தும் வகையிலும் உள்ளது. ஜிபி கொள்ளளவு திறன் கொண்ட இந்த பிளாஷ் டிரைவ் ரூ. 1,200 ஆகும். ஓராண்டு வாரண்டி தரப்படுகிறது. மற்ற டிரைவ்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம் என்றாலும், புதுமையை விரும்புபவர்களுக்கும், வித்தியாசமான சாதனங்களைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கும் இது ஓர் அருமையான சாதனமாகும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP