சமீபத்திய பதிவுகள்

ராஜீவ்வை கொன்றது சோனியாவே

>> Thursday, October 15, 2009

ராஜீவ்வை கொன்றது சோனியாவே - சுப்பிரமண்யன் சுவாமி

 



ரீபெரும்புதூரில் மே 21, 1991 அன்று திரு ராஜீவ் காந்தியைக் கொடூரமாக கொலை செய்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்து அந்த கொலையைச் சாத்தியமாக்கியவர்கள் யார் என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் எப்பொழுதுமே வலியுறுத்தி வந்துள்ளேன். இது சம்பந்தமாக நான் ராஜீவ் கொலையைப் பற்றி சென்ற ஆண்டு(மே 2000) எழுதியிருந்த ஆங்கிலப் பதிப்பில் மூன்று கேள்விகளை எழுப்பியிருக்கிறேன்.

1. முதலாவதாக, ஏப்ரல் 1991இல் தோ்தல் பிரசார துவக்கக் கூட்டத்திற்குப் பின்பே அப்பொழுது ராஜீவ் கட்சியின் கூட்டணி கட்சித் தலைவர்களான செல்வி ஜெயலலிதா மற்றும் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இருவரும் ராஜீவ் மீண்டும் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாடு வர தேவையோஅவசியமோ இல்லை என்று தீர்மானித்திருந்தும், அவரை மீண்டும் தமிழ்நாடு வருவதற்கு (அதுவும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கு) வற்புறுத்தியது யார்?

2. ராஜீவை மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரச் செய்தது மட்டுமின்றி, அவரது சுற்றுப் பயண விபரங்களைத் துல்லியமாக கொலையாளிகள் முன்கூட்டியே அறியும்படிச் செய்து அதன்மூலம் கொலை நிகழ்வதை சாத்தியமாக்கியது யார்? வழக்கு விசாரணையில் தண்டனை அளிக்கப்பட்டவர்களே, அம்மாதிரி முன் தகவல் இல்லாமல் தங்களால் கெலை திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

3. கடைசியாக, பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்த ராஜவ் காந்தியின் மிக அருகில் செல்வதற்கு முன்பு, மனித வெடிகுண்டான தனு, "மெட்டல் டிடெக்டர்" மற்றும் பல சோதனகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்மாதிரியான சோதனைக்கு உட்படாமலே தணு இருந்ததால் தான் ராஜீவின் மின அருகில் செல்ல முடிந்திருக்கிறது. நான் மத்திய சட்ட அமைச்சராக இருந்த போது(27.05.1991) அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷனின் கூற்றுப்படி கொலை திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறைகள் அல்ல. ஆனால், தகவல்கள் சதிகாரர்களுக்குச் செல்வதைத் தடுக்கப் படாதது என்பதாகும். தணுவிற்கு ராஜீவின் மிக அருகாமையில் செல்ல வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனவே, ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்ட திடலில் இருந்து எந்த நபரின் உதவியால் தணு அவ்வாறு ராஜீவின் மிக அருகாமையில் செல்ல முடிந்தது?

மேற்கூறிய கேள்விகளுக்கு மிகுந்த ஆராய்ச்சியின் பயனாக எனக்கு இப்பொழுது பதில் காண முடிகறது. என்னுடைய கணிப்பை நிரூபிக்கும் வகையில் தக்க ஆதரங்கள் உள்ளன.

முதலாவதாக ராஜீவ் தமிழ் நாட்டுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியவர் திருமதி சோனியாதான். ராஜீவ் செல்லாவிடடால் தேர்தல் வெற்றிக்கான புகழ் ஜெயலலிதாவுக்கு சென்று விடும் என்பது அவருடைய நிலையாக இருந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது இந்த வாதம் சரியான தானவே படும். ஆனல், சோனியாவின் எண்ணம் பழுதாகவே இருந்தது. இல்லையெனில் அவர் ஏன் ஜெயின் கமிஷனின் விசாரணையில் கொலையாளிகளுக்கு எதிராக இருந்த ஆதாரங்களை அர்ஜூன்சிங் போன்றவர்கள் மூலமாக திரை திருப்ப முயன்றிருக்க வேண்டும்? சோனியாவின் தாயாரான திருமதி பௌலா மைனோவுக்கும் அவருடைய குடும்ப நண்பரான திரு. ஓட்டோவியோ க்வட்ரோச்சிக்கும் கொலையாளிகளுக்கும் நெடு நாளைய தொடர்பு உண்டு என்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் அதுசமயம் ராஜீவ் காந்தியின் சுற்றுப் பயண விபரங்களைத் தயாரிக்கும் பொறுப்பு மார்க்கரெட் அச்வத் நாராயணன் என்பவருடன் நெருக்கமான அரசியல் உறவு உண்டு. இந்த அச்வத் நாராயணின் உதவியாளர் வீட்டில்தான் பிரதான குற்றவாளியான சிவராசன் ஒளிந்து கொண்டார். ஆல்வா, அர்ஜூன்சிங், மணி சங்கர் ஐயர் ஆகியோர்தான் ராஜூவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டுமென வற்புறுத்தியதாகத் தெரிகிறது. தேர்தல் பிரசார யுக்திகளில் சாதாரணமாக தோ்தல் காலங்களல் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை விட்டுவிட்டு கட்சியின் செல்வாக்குக் குறைவாக உள்ள இடங்களில் மட்டுமே பிரசாரத்தை தீவிரப்படுத்துவது இயல்பு.

இரண்டாவது கேள்வியைப் பொறுத்தமட்டில், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பிரமாணப் பத்திரம்(அஃபிடவிட்) வித்தியாசமாக உள்ளது. அந்த அஃபிடவிட்டில் பெங்களுரைச் சேர்ந்த ஜே.ரங்கநாத், தன்னுடைய வீட்டில் ஒிந்து காண்டிருந்த சிவராசனுக்கு திருமதி மார்க்ரெட் ஆல்வாதான் ராஜீவின் சுற்றுப்பயண விபரத்தை கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார். சாதாரணமாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு நபரின் கூற்றை யாவரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ரங்கநாத் விஷயத்திலோ, காங்கிரஸ் காரிய கமிட்டி , அவர் தண்டனையை அனபவித்து வெளியே வந்ததும் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி உள்துறை அமச்சர் எல்.கே.அத்வானிக்குக் கடிதம் எழுத அர்ஜீன் சிங்கிற்கு அதிகாரம் அறித்தது!

அதன் உட்கருத்து என்னவென்றால், காங்கிரஸ் கட்சி ரங்கநாத்தை ஒப்டியானால்ியத்துவம் வாய்ந்த நபராக கருதியது. அப்படியானால், மார்க்கரெட் ஆல்வாவைப் பற்றி அவர் தாக்கல் செய்த வாக்கு பிரமாணம் என்னவாயிற்று? இதற்கு காங்கிரசிடம் பதிலேதுமில்லை. ஆகவே, மார்க்கரெட் ஆல்வாதான் ராஜீவின் சுற்றுப் பயண விபரத்தைத் தெரியப்படுத்தி அதன்மூலம் புலிகள் இயக்கம் கொலையைத் திட்டமிட்டபடி செய்ய முடிந்தது என்பது புலப்படுகின்றது. திருமதி ஆல்வா இன்று சோனியா காந்தியின் பிரதான ஆலோசகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

மேலும், தண்டனை பெற்றவர்களில் ஒருவரான ஆதிரை என்ற பெண்மணியைப் பற்றிய விசாரணை அரைகுறையாகவே இருந்திருக்கிறது. இந்தப் பெண், கைது கைது செய்யப்பட்ட போது தில்லிக்கு அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரைக் கண்பதங்காக வந்திருந்ததாகத் தெரிகிறது. யார் அந்த தலைவர்? மார்க்கரெட் ஆல்வாவா?

மூன்றாவதாக, காங்கிரஸ் தலைவர்களே ஸ்ரீபெரும்புதூரில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குழப்பி விட்டிருந்தனர் என்பது தற்பொழுது ஆதாரப்புர்வமாக நிரூபணமாகியிருக்கிறது. அதனால்தான் மனித வெடிகுண்டான தணு என்ற பெண ராஜீவுக்கு மிக அருகாமையில் சென்று குண்டை வெடிக்கச் செய்ய முடிந்தது. இந்த விஷயத்தில், தணுவின் திட்டத்தை அறியாமலே கூட சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குழப்பிவிட்டிருக்கலாம் அல்லது தெரிந்தே கூட செய்திருக்கலாம். நிச்சயமாக இவ்விவகாரத்தில் பணம் புகுந்து விளையாடிருக்க வேண்டும்.

ராஜீவ் கொலை செய்யப்பட்டது தேசத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு நெடிய குற்றமாகும். ஆகவே, கொலையை நிகழ்த்தியவர்கள் தண்டக்கப்ட்டிருந்தாலும், அதற்கு உதவியாக இருந்த நபர்கள் அவருடைய சொத்தில் பாத்தியதை உள்ளவர்களாகவும் உலவி வருகிறார்கள். திருமதி சோனியா, அவருடையை தாயார், அர்ஜூன்சிங் மற்றும் மார்க்கரெட் ஆல்வா ஆகியோருடையை பங்கை மத்திய புலனாய்வுத் துறை
தீவிரமாக விசாரித்தால், பல உண்மைகள் வெளிவரும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.


சுப்ரமணியன் சுவாமி

மார்ச், 23, 2001.
1, லால் பகதூர் சாலை,
பீபீகுளம், மதுரை.

("ராஜீவ் காந்தி கொலை - விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும்" புத்தகத்திற்காக சுப்ரமணியன் சுவாமி எழுதிய முன்னுரையின் சுருக்கம்)


source:defeatcongress.com

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP