சமீபத்திய பதிவுகள்

தொழில் நுட்ப அரிச்சுவடி

>> Monday, October 5, 2009


 

கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயன்பாட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில ஆங்கிலச் சொற்களுக்கான விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றை அவ்வப்போது நம் நினைவில் தேக்கிக் கொண்டால், கம்ப்யூட்டர் குறித்த தகவல்களைப் படிக்கும்போது உதவியாக இருக்கும். அதன் பொருள் புரிந்து கொள்வது எளிதாகிவிடும். 



USB(யு.எஸ்.பி.) வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், பிரிண்டர், கீ போர்டு எனக் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டிய எந்த சாதனத்தையும் இணைக்கலாம். 
Quick Launch  : (குயிக் லாஞ்ச்) டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம். 
Wall Paper :  (வால் பேப்பர்) விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கு பேக் கிரவுண்ட் படமாகப் பயன்படுத்தப்படும் இமேஜ். இதன் மூலம் கம்ப்யூட்டர் சொந்தக்காரர் எப்படிப்பட்ட ரசனை உள்ளவர் என அறியலாம். இதில் நிலையான படங்கள் மட்டுமின்றி அசையும் அனிமேஷன் படங்களும் உள்ளன.



Drag and Drop:  (டிராக் அண்ட் ட்ராப்) பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம். 
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையின் கீழாகக் காணப்படும் நீள பார். இதனை மறைத்தும் வைக்கலாம். அந்த இடத்தில் கர்சர் சென்றவுடன் தானாக எழுந்து வருமாறும் செட் செய்திடலாம். இதில் தான் ஸ்டார் பட்டன், குயிக் லாஞ்ச் ஏரியா, பயன்படுத்தப்படும் பைல்களுக்கான டேப்கள், பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள், கடிகார நேரம் ஆகியவை காட்டப்படுகின்றன.
Freeware: : (பிரீவேர்) பெரும்பாலும் இன்டர் நெட்டிலிருந்து டவுண்லோட் செய்திடும் வகையில் கிடைக்கும் இலவச சாப்ட்வேர் புரோகிராம்கள். இதனை நீங்கள் பயன்படுத்து வதோடு மற்றவர்களுக்கும் வழங்கலாம். யாரும் தடை செய்ய மாட்டார்கள்.
Clipboard: (கிளிப் போர்டு) பெர்சனல் கம்ப்யூட்டர் மெமரியின் ஒரு பகுதி. விண்டோஸ் இதனைப் பயன்படுத்தி நாம் புரோகிராம் ஒன்றில் காப்பி மற்றும் கட் செய்திடும் பகுதிகளை பதிந்து வைக்கிறது. 
Driver:  (டிரைவர்) விண்டோஸ் கம்ப்யூட்டரில் உள்ள துணை சாதனத்துடன் தொடர்பு கொள்ள இயங்கும் ஒரு புரோகிராம்.
Motherboard:  (மதர்போர்டு) பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சர்க்யூட் போர்டு. இதில் தான் கம்ப்யூட்டரின் ஒவ்வொரு சாதனமும் இணைக்கப்படுகிறது.



AGPS – Assisted Global Positioning System: : உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்து அதனை இயக்கும் வசதியை உங்களுக்கு மொபைல் இணைப்பு தரும் நிறுவனத்திடம் நீங்கள் பெற்றிருந்து, அதனை இயக்கினால் சாட்டலைட்டிலிருந்து நிறுவனத்தின் சர்வர் வழியே உங்கள் மொபைல் போனில் தகவல்களைப் பெறலாம். இணையப் பக்கங்களைப் பார்வையிடலாம். ஜி.பி.எஸ். வசதி கொண்ட மொபைல் போன்களில் இந்த அஎககு உதவி இல்லாமல் டேட்டா பெறலாம். ஆனால் அதற்கு நேரம் மிக மிக அதிகமாகும். அந்த சிரமத்தை இந்த தொழில் நுட்பம் குறைக்கிறது. ஆனால் உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் தொடர்பு வசதி இருப்பது கட்டாயமாகும்.
EDGE Enhanced Data rates for GSM Evolutionஇதனை எட்ஜ் எனவும் அழைக்கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஜி.பி.ஆர்.எஸ். வகையினைக் காட்டிலும் சற்று மேம்பட்டதாகும். அதனைக் காட்டிலும் சற்று வேகம் அதிகமான பிரவுசிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்தைத் தரும். 
GPRS General Packet Radio Service:  (ஜி.பி.ஆர்.எஸ்.) இது ஒரு மொபைல் டேட்டா சர்வீஸ் வகையாகும். 2ஜி மற்றும் 3ஜி வகை நெட்வொர்க் இணைப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது. டேட்டா பரிமாற்றத்தினை இது தருகிறது. நொடிக்கு 56 கிலோ பிட்ஸ் முதல் 114 கிலோ பிட்ஸ் வரையிலான வேகத்தில் இதன் மூலம் டேட்டாவினைப் பெறலாம். டேட்டாவினைப் பெற உங்கள் மொபைல் போனில் உள்ள பிரவுசர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.
GSM Global System for Mobile communications:  (ஜி.எஸ்.எம்) என்பதன் சுருக்கம். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் அவற்றிற்கான சர்வீஸ் தரும் நிறுவனங்கள் மற்றும் உலகில் உள்ள மற்ற சர்வீஸ் புரவைடர்களுடன் தொடர்பு கொள்ள உதவிடும் தொழில் நுட்பம். இந்த போன்களை சிம் கார்டு இணைத்துப் பயன்படுத்தலாம்.
Bluetooth : புளுடூத் –– வயர் இணைப்பு எதுவுமின்றி இரு தொலை தொடர்பு சாதனங்களுக்கிடையே டேட்டா பரிமாற்றம் மற்றும் சாதனங்களைக் கட்டுப்படுத்த வகை செய்திடும் தொழில் நுட்பம். இதனுடன் சார்ந்த சில தொழில் நுட்ப பிரிவுகளையும் பார்க்கலாம்.



Bluetooth 2.0 + EDR : : என்ற வசதி இணைந்த புளுடூத் செயல்பாடு. புளுடூத் வசதி இயக்கப்பட்ட சாதனங்களுக்கிடையே விரைவாக டேட்டா பரிமாற்றம் ஏற்படுவதனை இதன் மூலம் குறிக்கிறோம்.
WiFi :  (வை–பி) இது வயர் இணைப்பு எதுவுமின்றி நெட்வொர்க் இணைப்பு மேற்கொள்வதைக் குறிக்கிறது. வை–பி இணைப்பு வசதி கொன்ட ரூட்டர்களுடன் மொபைல் போன்கள் இணைப்பு பெறுவதனை இது குறிக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் இது இயக்கத்தில் இருக்கையில் அந்த வகையில் இணைப்பு இயக்கப்பட்ட மொபைல் போன்கள் அதிக வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினைப் பெறலாம்.
CDMA Code division multiple access  (சி.டி.எம்.ஏ) இன்னொரு வகை மொபைல் தொழில் நுட்பம்.இதனைப் பயன்படுத்துகையில் அப்போது கிடைக்கும் முழு அலைவரிசையின் திறனை போன் தொடர்புக்குப் பயன்படுத்த முடியும். இதனால் திறன் கூடிய துல்லிதமான ஒலி கிடைக்கும். டேட்டா பரிமாற்றமும் எளிதாகவும் விரைவாகவும் நடைபெறும். சில சி.டி.எம்.ஏ. மொபைல் போன்களில் சிம் கார்ட் அதன் போர்டில் இணைத்தே தரப்படும். எனவே இதற்கென தனி போன் மாடல்கள் உருவாக்கப்பட்டு விற்பனையாகின்றன. இதனால் இந்த வகை மாடல்கள் ஜி.எஸ்.எம். மாடல்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்த தொழில் நுட்பம் முதல் முதலாக இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் அணியில் இருந்த நாடுகளால் ஜெர்மனி படைகளின் முயற்சிகளை முறியடிக்க தொலை தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட்டது.
WiMAX Worldwide Interoperability for Microwave Access: (வை மாக்ஸ்) இதுவும் ஒரு வயர்லெஸ் டிஜிட்டல் கம்யூனிகேஷன் சிஸ்டமாகும். வை–பியுடன் ஒப்பிடுகையில் இது இன்னும் சற்று பெரிய இடத்தில் இயங்கும். வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பினை இதனால் வழங்க முடியும். இதனை நிலையான ஒரு இடத்தில் அமைத்தால் 50கிமீ தூரம் வரை இதன் செயல்பாடு இருக்கும். நகர்ந்து செல்லும் வாகனங்களில் இதனை அமைத்துச் செயல்படுத்தலாம். அப்போது 5 முதல் 15 கிமீ வரையிலான தூரத்தில் இது செயல்படும்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

புதுப்பாலம் October 5, 2009 at 10:31 PM  

ஔஅருமையான விளக்கம்.

அன்புடன்
இஸ்மாயில் கனி.

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP