சமீபத்திய பதிவுகள்

மைக்ரோசப்ட் வேர்டு டிப்ஸ்

>> Tuesday, November 17, 2009

 டிப்ஸ் கதம்பம்
 

வேர்டில் பாரா ஒன்றில் கர்சரை வைத்துக் கொண்டு கண்ட்ரோல் +சைபர் அழுத்துங்கள். உடனே அந்த பாராவிற்கு மேலாக 12 பாய்ண்ட் அளவிற்கு ஸ்பேஸ் தரப்படும். மீண்டும் அழுத்தினால் அந்த ஸ்பேஸ் நீக்கப்படும். இது எதற்கு என நீங்கள் எண்ணலாம். டாகுமெண்ட்டில் ஒரு பாரா அடைத்துக் கொண்டு இடம் பிடிப்பதாக நீங்கள் உணர்ந்தால், இந்த கீ தொகுப்பைப் பயன்படுத்தி இடைவெளி உருவாக்கி அதனை நன்றாகப் படிக்கும் வகையில் உருவாக்கலாமே. மேலும் டேபிள்களை உருவாக்குகையில் செல்களைப் பிரிக்கும் கோடுகளுக்கு அருகே டெக்ஸ்ட்களை அமைத்து இருப்போம். இங்கும் தொடக்கத்தில் ஸ்பேஸ் அமைத்தால் அவற்றைப் படிப்பது எளிதாகும். மேலும் பார்ப்பதற்கு அட்டவணை யும் நன்றாக இருக்கும். இதற்கு டேபிளில் அந்த செல்லைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + ஸீரோ அழுத்தினால் போதும். தேவை இல்லை என எண்ணினால் மீண்டும் அழுத்தி நீக்கிவிடலாம்.


வேர்டில் இன்னொருவர் உருவாக்கிய டெக்ஸ்ட்டைப் படித்துக் கொண்டிருக் கிறீர்கள். அதனை அமைத்தவர் அவர் மனம் போன போக்கில் பல ஸ்டைல்களை அதில் திணித்திருக்கிறார். கண்ட இடத்தில் அடிக்கோடு, சாய்வெழுத்து என பார்மட் செய்துள்ளார். உங்களுக்கு இது பிடிக்கவில்லை; நார்மல் டெக்ஸ்ட் இருந்தால் போதும் என்று எண்ணுகிறீர்கள். இதற்காக ஒவ்வொரு சொல்லாகச் சென்று, பார்மட்டிங் நீக்க வேண்டியதில்லை. மொத்தமாக செலக்ட் செய்து கண்ட்ரோல் + ஷிப்ட் +என் அழுத்துங்கள். அனைத்து பார்மட் சமாச்சாரங்களும் நீக்கப்பட்டு, நார்மல் ஸ்டைலில் டெக்ஸ்ட் கிடைக்கும்.


வேர்டில் கண்ட்ரோல்+ சி அழுத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் காப்பி ஆகும் என்பது நமக்குத் தெரியும். கண்ட்ரோல்+ ஷிப்ட்+ சி அழுத்தினால் என்னவாகும்? தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில் உள்ள பார்மட்டிங் ஸ்டைல் மட்டும் காப்பி ஆகும். இதனால் என்ன பிரயோஜனம் என்று எண்ணுகிறீர்களா? இதே ஸ்டைலை இன்னொரு டெக்ஸ்ட்டில் அமைக்கலாம். அந்த டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து, ஜஸ்ட் கண்ட்ரோல் + ஷிப்ட் + வி அழுத்துங்கள். அப்படியே தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் இருந்த ஸ்டைல் இங்கு ஒட்டிக் கொள்ளும். இந்த வேலையை பார்மட் பெயிண்டர் வழியும் செய்யலாம். ஆனால் இரண்டுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. பார்மட் பெயிண்டர் வழி செய்தால், காரியம் முடிந்தவுடன், அதாவது பேஸ்ட் செய்தவுடன், பார்மட் பெயிண்டர் காப்பி செய்த ஸ்டைல் பார்மட்டை மறந்துவிடும். ஆனால் கண்ட்ரோல் + ஷிப்ட்+ சி அழுத்தி செய்தால், வேர்ட் தொகுப்பினை மூடும் வரை அப்படியே இருக்கும். இதனைப் பயன்படுத்தி எந்த டாகுமெண்ட்டில் உள்ள டெக்ஸ்ட்டையும் தேர்ந்தெடுத்து பார்மட்டிங் பேஸ்ட் செய்திடலாம். 


எக்ஸெல் தொகுப்பில் Ctrl + Shift + !  என்ற கீகள் இரண்டு டெசிமல்களில் எண்களைக் காட்டும். எண்களுக்கு இந்திய முறைப்படி கமாக்களை (1,000) அமைக்கும்.
ஒர்க் ஷீட் ஒன்றில் செல்களில் உள்ள டேட்டாவினை பார்மட் செய்திட் எண்ணமா? மெனு சென்று பார்மட் செல் விண்டோ பெற்று பார்மட்டிங் செய்கிறீர்களா? அல்லது செல்களில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் பார்மட் செல்ஸ் தேர்ந்தெடுக்கிறீர்களா! எதுவும் வேண்டாம். முதலில் மாற்றம் மேற்கொள்ளும் செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங் கள். அதன்பின் மெனுவெல்லாம் செல்லாமல் கண்ட்ரோல் ப்ளஸ் 1 (Ctrl+1) கீகளை அழுத்துங்கள். உடனே நீங்கள் இந்த மாற்றங்களை மேற்கொள்ள வழி வகுக்கும் பார்மட் செல்ஸ் விண்டோவிற்கு கூட்டிச் செல்லப்படுவீர்கள்.இணைய தளம் ஒன்றிலிருந்து டெக்ஸ்ட் ஒன்றைக் காப்பி செய்த பின், அதில் உள்ள இணைய தள முகவரிகள் மற்றும் சில சொற்கள் தொகுதி நெளிவுகள் உள்ள அடைப்புக் குறிக்குள் HYPERLINK எனப் போட்டு வருகிறதா? இது படிப்பதற்கு இடையூறாக உள்ளதா? இவை டெக்ஸ்ட்டில் உள்ள பீல்டு மார்க்கர்களே. அந்த சொற்கள் இன்னொரு இடத்திற்கானத் தொடர்பினை ஹைப்பர் லிங்க் எனக் குறிக்கின்றன. அந்த சொற்களை அடைப்புக்குறியோடு தேர்ந்தெடுத்து ஷிப்ட்+ எப்9 அழுத்துங்கள்; உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் கூடுதல் தகவல்கள் மறைந்து நீல வண்ணத்தில் ஹைப்பர்லிங்க் ஆகக் கிடைக்கும்.
வேர்டில் குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன் படுத்துங்கள்.
உங்களிடம் ஸ்குரோல் வீல் உள்ள மவுஸ் இருக்கிறதா? அப்படியானால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் தொகுப்பில் இருக்கையில் ஷிப்ட் கீயை அழுத்திப் பிடித்துக் கொண்டு வீலை உருட்டவும். ஒரு திசையில் உருட்டுகையில், ஒரு பக்கம் முன்னால் செல்லும். இன்னொரு திசையில் உருட்டு கையில் ஒரு பக்கம் பின்னால் செல்லும். இதைச் சோதனை செய்திட ஏதேனும் ஒரு பிரவுசரைத் திறக்கவும். இணையப் பக்கம் ஒன்றுக்குச் சென்று அதில் உள்ள சில லிங்க்குகளைக் கிளிக் செய்து பல பக்கங்கள் செல்லவும். பின் இந்த சோதனையை மேற்கொள்ளவும்.டிப்ஸ்... டிப்ஸ்...
உங்கள் கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி தெரியவேண்டுமா? இணைய இணைப்பில் இருக் கையில், உங்கள் கம்ப்யூட்டர் மிகப் பெரிய நெட்வொர்க்கின் ஓர் அங்கமாக இயங்குகிறது. அது ஒரு தனிப்பட்ட முகவரி மூலம் அடையாளம் காணப்படுகிறது. இதனையே ஐ. பி. முகவரி என அழைக்கிறார்கள். இதனை உங்களுக்கு இன்டர் நெட் இணைப்பு தரும் சேவை நிறுவனம் வழங்குகிறது. இந்த முகவரி என்ன என்று அறிய, Start  பட்டன் அழுத்தி அதில் Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். அதில் cmd  என டைப் செய்து என்டர் அழுத்தவும். உங்களுக்கு டாஸ் விண்டோ சிறியதாகக் கருப்பாகத் தெரியும். அதில் டிரைவின் பெயர் அருகே ஒரு கட்டளைப் புள்ளி துடித்துக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ipconfig  என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் உங்கள் இணைய முகவரி என்ன என்று தெரிய வரும். உடன் மேலும் பல தகவல்களும் காட்டப்படும்.* வேர்டில் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஷிப்ட் + எப்3 அழுத்தினால் அந்த சொல் மூன்று வகைகளில் எழுத்தில் மாற்றம் பெறும். அவை: சொல் முழுவதும் கேப்பிடல் லெட்டர்களாக மாறும்; அல்லது சிறிய எழுத்துக்களாக மாறும்; அல்லது முதல் எழுத்து மட்டும் கேப்பிடல் லெட்டராகவும் மற்றவை சிறிய எழுத்துக்களாகவும் மாறும்.பல புரோகிராம்களில் டூல் பார் சொற்களில் ஓர் எழுத்தில் மட்டும் அடிக்கோடு இடப்பட்டி ருக்கும். இதன் பொருள் என்ன தெரியுமா? ஆல்ட் கீயுடன் இந்த எழுத்திற்கான கீயை அழுத்தினால், அந்த சொல்லுக்கான, கட்டளைக்கான செயல்பாடு மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக பைல் மெனுவில்"E" என்ற எழுத்தில் அடிக்கோடு இட்டபடி எடிட் கட்டளை இருக்கும். Alt + "E" அழுத்தினால் எடிட் செயல்பாடு மேற்கொள்ளப்படும். இத்துடன் இது நிற்கவில்லை. அந்த மெனுவிலும் கட்டளைக் சொற்களில் ஓர் எழுத்தில் அடிக்கோடு இருக்கும். அந்த மெனு சென்ற பின்னர், அதில் உள்ள சொற்களுக்கான கட்டளை நிறைவேற்ற, அந்த எழுத்தை மட்டும அழுத்தினால் போதும். மீண்டும் ஆல்ட் அழுத்தி, அந்த கீயினை அழுத்த வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக Alt + E அழுத்த Edit மெனு கிடைக்கும். பின் மீண்டும் பேஸ்ட் ஸ்பெஷல் கிடைக்க மட்டும் அழுத்தினால் போதும்


source:dinamalar

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP