சமீபத்திய பதிவுகள்

video:சீமான் கர்ஜனை! மிரண்ட கனடா!

>> Monday, November 30, 2009


 

தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி உயிர்நீத்த போராளிகளின் நினைவுகளை போற்றும் விதமாக ஒவ்வொரு வருஷமும் நவம்பர்- 27-ல் "மாவீரர் நாள்' நிகழ்வுகள் ஈழத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும். மாவீரர் நாளில் பிரபாகரன் நிகழ்த்தும் உரையை உலக நாடுகளே உற்று கவனிக்கும்.

தமிழீழ தேசியத் தலைவருடன் சீமான்

தமிழீழ தேசியத் தலைவருடன் சீமான்

போரினால் ஈழத்தில் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பின்னால்… வருகிற இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வுகள் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து துவங்கியது. உலக முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் அனைத்தும், ஒவ்வொரு நாட்டிலும் பிரபாகரன் பிறந்த நாளையும் மாவீரர் நாளையும் பிரமாண்டப்படுத்தினர்.

கனடா தமிழர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த "மாவீரர் நாள்' நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற சீமான், இந்நிகழ்விற்கு முதல்நாள் டோரொண்டோவில் கனடிய தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் ஏற்பாடு செய்திருந்த "பிரபாகரன் பிறந்த நாள்' நிகழ்வில் கலந்து கொண்டார். ஒரு மண்டபத்தில் நடந்த இவ்விழாவில் ஈழத் தமிழர்களும் இளைஞர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்.

விழாவில் பேசிய சீமான், தனக்கே உரிய வழக்கமான பாணியில் ஏக கர்ஜனை செய்ய… உடனடியாக அவரை இந்தியா வுக்கு திருப்பி அனுப்பி விட்டது கனடிய அரசு. இந்த சம்பவத் தால் ஏகத்துக்கும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

""இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வு, சர்வதேச நாடுகள் முழுமைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாவீரர் நாளில் ஈழ இளைஞர்களிடம் உருவாகும் தமிழீழ எழுச்சியை, அழிக்கத் திட்டமிட்டு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனது தூதரகம் மூலம் அந்தந்த நாட்டின் அரசாங்கத்தோடு ஒரு இணக்கப்பாட்டை முன்கூட்டியே ஏற்படுத்திக் கொண்டது சிங்கள ராஜபக்சே அரசு.

அப்படிப்பட்ட ஒரு இணக்கப்பாட்டை கனடா அரசோடு இங்குள்ள சிங்கள தூதரக மும் போட்டுக் கொண்டது. ஏற்கனவே சிங்கள தூதரகத்திற்கும் கனடா அரசுக்கும் "நல்ல புரிதல்' உண்டு. அதன் அடிப்படையிலே, நிகழ்வு துவங்குவதற்கு முன்பே, கனடிய உளவுத்துறை யினர் மண்டபத்திற்கு வந்து கண்காணிக்கத் துவங்கினர். இதற்காக தமிழ்மொழி அறிந்த ஒரு அதிகாரியையும் அழைத்து வந்திருந்தனர். இங்குள்ள சிங்கள தூதரகம், இந்த அதிகாரியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

விழா துவங்கியதும் அந்த அதிகாரி சொல்ல சொல்ல ஒவ்வொரு நிகழ்வை யும் குறிப்பெடுத்தனர் உளவுத் துறையினர். சீமான் பேசிய பேச்சுக்களும் அவ்வாறே குறிப்பெடுக்கப்பட்டது. விழா முடிந்ததும் தனது அறைக்கு சென்றுவிட்டார் சீமான். அடுத்த சில மணி நேரங்களில் கனடா அரசு ஒரு முடிவை மேற்கொண்டு, அதிரடியாக சீமானை திருப்பி அனுப்பிவிட்டது. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படியே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நினைக்கிறோம். மாவீரர் நாள் நிகழ் வில் சீமான் பேசுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை" என்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்களான கனடிய தமிழ் இளைஞர்கள்.

அப்படி என்ன பேசினார் சீமான்?

""கனடாவிற்கு எதற்காக வந்தேன், தன்னிடம் பிரபாகரன் கட்டளையிட்டது என்ன, "நாம் தமிழர்' இயக்க செயல்பாடுகள், தமிழீழத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களின் தியாகம் என்பது குறித்தெல்லாம் உணர்ச்சி பொங்க பேசிய சீமான், ""புலிகளை ஒழித்து விட்டோம், போராட்டம் ஓய்ந்துவிட்டது, போர் நின்று விட்டது என்று நினைக்கிறான் ராஜபக்சே. உலகத்திலுள்ள தமிழர்கள் அத்தனைபேரையும் புலிகளாக மாற்றிவிட்டு… ஒழித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் ராஜபக்சே. புலி என்றால் யார் என்றே அவனுக்குத் தெரியவில்லை. சீமான் புலி. அவன் செத்தால் அவன் தம்பி புலி.

"சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் 50 பேர் பலியானார்கள். 500 பேர் புலியானார்கள்' என்பார் சோலை. அப்படி புலியானவர் களடா நாங்கள். அது தெரியாமல் போர் நின்றுவிட்டது, போராட்டம் ஓய்ந்து விட்டது, புலிகளை அழித்துவிட்டோம் என்கின்றான். ஆனா அப்படி இல்லை. இனி என் தலைவன் (பிரபாகரன்) கையில் இல்லை போர். தம்பிகள் கைகளில் இருக்கிறது.

ஒரு பள்ளிக்கூடத்தில் குண்டு போட்டாயா? 100 சிங்கள பள்ளிகள் மீது குண்டு போட்டிருந் தோமேயானால்… தமிழச்சியின் மார் அறுக்கி றாயா? சிங்களச்சியின் மாரை அறுத்தெறிந்திருப் போமேயானால்… அவனுக்கும் அந்த வலி தெரிந்திருக்கும். சர்வதேச சமூகத்தாருக்கும் வலித்திருக்கும். இதையெல்லாம் செய்யாத என் தலைவன் பயங்கரவாதி. இதையெல்லாம் செய்த ராஜபக்சே ஜனநாயகவாதியா?

இனி மரபுவழி போர் கிடையாது. இனி எங்கள் நிலப்பரப்பிலும் (ஈழம்) சண்டை கிடை யாது. இலங்கை தலைநகர் கொழும்பில்தான் சண்டை. 1000 கரும்புலிகள் போதும். வாரத்திற்கு ஒரு குண்டு. ஒரு கரும்புலி சிதறினால் 1000 சிங்களவன் சிதற வேண்டும். தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பான் கரும்புலி. நாம் தனித்தனியாக சிறு நெருப்பாக சிதறிக் கிடந்தது போதும். ஒன்றிணைந்து ஒரு பெரு நெருப்பாக மாற வேண்டும். என் இழப்பு, சிங்களவனுக்கு 100 மடங்கு இழப்பு என்பது போல் நம் வெறி மாற வேண்டும். அவன் ஒரு வெட்டு என்றால் நாம் 100 வெட்டு வெட்ட வேண்டும் ஓய்ந்து விடக்கூடாது. விடுதலைப் போராட்டம் இனி நம் கையில்தான் இருக்கிறது. நம் வலிமையை பார்த்துதான் தலைவர் விரைவாக வருவதும் மெதுவாக வருவதும் இருக்கிறது. வேக வேகமாக களமாட தயாராகுங்கள் என் தம்பிகளே! விடுதலையை வென்றெடுக்க வேண்டும். தமிழீழம் உருவாகியே தீரும்" என்றார் மிக ஆவேசமாக.

தனது 46 நிமிட ஆவேச பேச்சில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் தமிழகத்தையும் கடுமையாக விமர்சித்த சீமான், எது பயங்கரவாதம் என்பது குறித்தும் சர்வதேச சமூகத்திடம் நிறைய கேள்விகளை எழுப்பினார். சீமானின் ஆவேசத்தை கண்டு ஆர்ப்பரித்தது கனடாவில் உள்ள ஈழத் தமிழினம்.

""நிகழ்வில் பேசிய சீமானின் பேச்சுக்களை கனட அரசிடம் உளவுத்துறையினர் ரிப்போர்ட்டாக தர, அந்த ரிப்போர்ட்டின்படி "கனடா பார்டர்ஸ் சர்வீஸ் ஏஜென்சி' என்கிற இமிக்ரேஷன் டிபார்ட்மென்ட்டிடம் ஆக்ஷன் எடுக்கும்படி கேட்டுக் கொண்டது கனடா அரசாங்கம். அதன்பேரில் அதன் அதிகாரிகள், சீமான் தங்கியிருந்த அறைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கைக்குள் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும், சிங்களவர்கள் வாழவே கூடாது, ஒரு பள்ளிக்கூடம் மீது குண்டு விழுந்தால் 100 பள்ளிக்கூடம் மீது குண்டு வீசுவோம் என்று பேசியுள்ளீர்கள்.

எங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை ஆதரித்து இங்கு அசாதா ரணமான சூழலை உருவாக்குகிறீர்கள். அதனால், நீங்கள் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல், உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால், சீமானும் அவரது வழக்கறி ஞர் ஹதாயத் நஹாமியும் "30-ந்தேதி வரை விசா இருக்கிறது' என்று வாதாடினர். ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரை ஏர்போர்ட்டுக்கு அழைத்து வந்து திருப்பி அனுப்பினர்" என்கின்றன கனடாவில் இருந்து கிடைக்கிற தகவல்கள்.

சீமானின் வழக்கறிஞரான ஹதாயத் நஹாமி, ""இமிக்ரேஷன் அதிகாரிகளின் நோக்கம், சீமானை உடனடியாக கனடாவை விட்டு வெளியேற்றிவிட வேண்டுமென்பதிலேயே இருந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசக்கூடாது என்பதையே திரும்பத் திரும்ப சொன்னார்கள்" என்கிறார்.

ஏர்போர்ட்டில் இருந்த சீமான், ""தமிழின விடுதலைக்காக போராடும் அனைவரையும் ஒடுக்க வேண்டுமென்பதில் சிங்கள இனவாதம் தீவிரமாக இருக்கிறது. அதனால் போராடும் எங்கள் மீது அடக்கு முறைகளை ஏவிவிட்டிருக்கிறது. ராஜபக்சே சகோ தரர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே, நான் பேசவிருந்த மாவீரர் நாள் உரையை தடுத்து நிறுத்தி கனடா அரசு என்னைத் திருப்பி அனுப்பி யுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தமிழீழ விடுதலைக்காக என் போராட்டம் தொடரும்" என்றார் உறுதி தளராமல்.

கனடாவில் சீமான் ஆற்றிய உரை













source:nakkheeran

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP