சமீபத்திய பதிவுகள்

மொகரம் ஊர்வலத்தில் தற்கொலை தாக்குதல்: 67 பேர் பலி

>> Tuesday, December 29, 2009

 

பாகிஸ்தானில் கராச்சி நகரில் மொகரம் தினத்தையொட்டி ஷியா முஸ்லிம்கள் ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலத்தில் ஊடுருவிய தற்கொலை தீவிரவாதி ஒருவன் தன் உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். 

இந்த சம்பவத்தில் 30 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். 137 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 37 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இல்லாமல் பலியானார்கள்.

 இந்த தாக்குதல் சம்பவத்தினால் ஆத்திரம் அடைந்த மக்கள் கார்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனர்.




--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

nerkuppai thumbi December 29, 2009 at 5:58 PM  

முஸ்லிம்கள் கொஞ்சம் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தம் இஸ்லாம் மதத்திற்குள்ளேயே வேற்று ஒரு பிரிவை சுன்னி பிரிவினர் பொறுத்துக் கொள்ளாமல் தாக்கினால் , வேற்று மதத்தினரை எவ்வாறு சகித்துக் கொள்வார்கள்? உலகத்தில், பல மதங்கள், பிரிவுகள், இனங்கள், மொழிகள், சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அனைவரும், இறை உணர்வு பெற்று இருக்க வேண்டும், வீடுபேறு அடைய வேண்டும், என்று நினைப்பது நல்லதே . ஆனால் அவர்கள் அனைவரும் எம்மைப் போன்ற மத வழியையே பின்பற்ற வேண்டும் என நினைப்பது சரியல்லவே? இஸ்லாமிய முறையில், நல்ல கருத்துக்கள் கண்டு, மத மாற்றம் செய்து, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்து, சமீப காலம் வரை, ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் முஸ்லிம் ஆகியவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.
இந்த காலக் கட்டத்தில், பொருளாதாரக் காரணங்களே மனிதர்களின் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது; இறை நம்பிக்கை அல்ல என்பதே வருத்தப் பட வைக்கும் உண்மை.
எனவே , இஸ்லாமியர் இடையே பிற பிரிவு சகிப்புத்தன்மை, பிற நம்பிக்கை சகிப்புத்தன்மை, பெரிய அளவில் துவங்க வேண்டும்.
வேற்று நம்பிக்கை மனிதர்களை, வெடி குண்டு போட்டு களைந்தெடுப்போம் என எண்ணுதல் இறைவனின் மன்னிப்பு பெறாது. (இதை ஜிஹாத் எனவே பொது மன்னிப்பு உண்டு எனக் கருதுவது சரி அல்ல அல்லவா?)
இந்த கருத்தை பல ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; இப்போது ப்ளாக் உலகு இதை நேருக்கு நேர் இல்லாமல், மனம் புண் படாமல் சொல்ல வாய்ப்பு தருகிறது.
தயவு செய்து, இந்த கருத்தை இந்த வலைப்பதிவைக் காணும் அனைத்து நம்பிக்கையாளர்களும் படித்து, இந்த கருத்து பரவலாக ஒப்புக் கொள்ளப் பட வேண்டும் என முயல வேண்டும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP