சமீபத்திய பதிவுகள்

சிக்ஸ்த் சென்ஸ் இந்தியன்!

>> Thursday, December 3, 2009

 

ந்தேகமே இல்லை... இந்தியாவும் இந்தியர்களும் இந்த உலகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியம். இந்தி யரான ஆர்யபட்டா சைபர் கண்டுபிடித்த பிறகுதான் கணிதம் 40 கால் பாய்ச்சலில் பரிணமித்தது. இப்போது இந்த சைபர் யுகத்திலும் ஓர் இந்தியனின் கண்டுபிடிப்பு தான் டாக் ஆஃப் த வேர்ல்டு!

சில மாதங்களுக்கு முன் விகடனின் 'வருங்காலம்' பகுதி யில் சுட்டிக்காட்டப்பட்ட பொறி இன்று நெருப்புப் பிழம் பாக வடிவம் எடுத்துள்ளது. ப்ரணவ் மிஸ்ட்ரி - 'உலகத் தில் இதுவரை வாழ்ந்த மூன்று சிறந்த கண்டுபிடிப்பா ளர்களுள் ப்ரணவ் நிச்சயம் ஒருவர்!' என்பது ஒரு வரி அறிமுகம். உலகின் தலைசிறந்த அறிவியல் ஆய்வுக்கூடம் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் ஆய்வுக்கூடம். அங்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை வணிகரீதியில் உருவாக்கு வதுபற்றி ஆய்வு செய்வது எம்.ஐ.டி. பரிசோதனைக்கூடம். அதன் டாக்டரேட் மாணவரான ப்ரணவ் கண்டுபிடித் திருப்பது 'சிக்ஸ்த் சென்ஸ்'. ஆறாவது அறிவு. கிட்டத்தட்ட மனிதனின் கைகளில் இருக்கும், மூளையின் செயல் திற னுக்கு ஒப்பான ஒரு கருவி. சிம்பிளாக, உங்கள் உள்ளங் கையில் ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரைப் புதைத்துவைத்திருப்பதற்கு ஒப்பான ஒரு டெக்னாலஜி. பேப்பர் லேப்டாப் என்கி றார்கள் சுருக்கமாக.

தொப்பி அல்லது கண்ணாடியில் அணிந்துகொள்ளக்கூடிய ஒரு கேமரா, சின்ன புரொஜெக்டர், கீ-செயின் வடிவில் பாக்கெட்டுக்குள் அடங்கும் ஒரு சின்ன மெஷின், விரல் முனைகளில் பொருத்திக்கொள்ளும் வளையங்கள். இவ்வளவுதான் சிக்ஸ்த் சென்ஸ். உங்கள் கண் பார்வை பதியும் இடங்களில் லென்ஸ் பதியுமாறு அந்தக் கேமராவைப் பொருத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் பார்க்கும் எந்தப் பொருள் அல்லது சம்பவம்பற்றி உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்றாலும், விரல் சொடுக்கினால், விவரங்கள் வீடியோ வடிவில் புள்ளிவிவரங்களுடன் உங்கள் உள்ளங்கையையே திரையாக்கிக் காட்சிகளாக விரியும். வெள்ளைத்தாள், சுவர், துணி, பாலிதீன் உறை, கண்ணாடி என எதிரில் இருக்கும் எந்தப் பொருளின் மீதும் விவரங்களைப் புரொஜெக்ட் செய்யலாம். தேவைப்படும் மாற்றங்களையும் எடிட் செய்து பதிவேற்றி உலகத்துக்கு உண்மைகள் சொல்லலாம். கம்ப்யூட்டர் படிப்புகளில் ஊறித் திளைத்து பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான் இந்த டெக்னாலஜியைப்

பயன்படுத்த முடியும் என்பது இல்லை. அடிப்படைஆங் கிலம் தெரிந்த, செல்போன் இயக்கத் தெரிந்த எவரும் அதே லாகவத்தோடு இந்த சிக்ஸ்த் சென்ஸைப் பொருத்தி உப யோகப்படுத்தலாம் என்பது இன்னொரு ஹைலைட். 
'ஹேய்... புரொஜெக்டர், கேமரா, சென் ஸார் எல்லாம் முந்தியே இருக்கிறதுதானேப்பா! அந்த மூன்றையும் ஒருங்கிணைத்திருக் கிறான். இதற்கு ஏன் இத்தனை உற்சாகக் கூக்குரல்?' எனக் கேட்கும் ஜீனியஸ்களே... ஒரு நிமிடம்!

தரமான நிறுவனத்தின் மிகக் குறைந்தபட்ச நினைவுத் திறன், வேகம்கொண்ட ஒரு மேசைக் கணினி யின் விலையே குறைந்த பட்சம் 20 ஆயிரத்தில் இருந்துதான் துவங்கும். ஆனால், கிட்டத்தட்ட உலகத்தையே உள்ளங்கையில் அடைக்கும் இந்த டெக்னா லஜியின் விலை 15 ஆயிரத்துக்குள்தான். அதிலும் அந்த டெக்னாலஜி ரகசியத்தை உலகத்துக்கு இலவசமாக அளிக்கப் போகிறேன் என்று ப்ரணவ் அறிவித்திருப்பதுதான் சிலிக்கன் வேலியின் இன்றைய நம்ப முடியாத பரபர விவாதம்.

விண்டோஸ் என்ற ஒற்றை மென்பொருள் மூலம் பில் கேட்ஸ் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனது போல, இந்த சிக்ஸ்த் சென்ஸ் மூலம் ப்ரணவ் அவரைக் காட்டிலும் கோடிகளில் டாலர்களைக் குவிக்கலாம். அந்த வாய்ப்பைத்தான் 'ஜஸ்ட் லைக் தட்' உதா சீனப்படுத்தியிருக்கிறார் ப்ரணவ். ''உலகின் போக்கைத் தீர்மானிக்கும் மல்ட்டி நேஷனல் நிறுவனங்கள் இந்த டெக்னாலஜிக்கு என்னி டம் விலை பேசின. ஆனால், சிக்ஸ்த் சென்ஸை உலகின் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதுதான் என் கனவு. அதைச் சாத்தியப் படுத்தும் ஆசையுள்ள எவருடனும் கை கோக்க ஆவலாக உள்ளேன். இந்தியஅரசாங் கம் ஆர்வம் காட்டினால் முதல் முன்னுரிமை அவர்களுக்குத்தான்!'' என்று அறிவித்துள்ளார் ப்ரணவ்.

யார் இந்த ப்ரணவ்?

குஜராத்தைச் சேர்ந்த 28 வயது ப்ரணவ், மும்பை ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்று அமெ ரிக்கா சென்றவர். மைக்ரோசாஃப்ட்டில் சில காலம் பணிபுரிந்துள்ளார். இதற்கு முன்னரே 3டி பேனா, குறிப்புத்தாள் கணினி, பிசிக்கல் மேப் என விளையாடியவர். ''என் அப்பாதான் என் ரோல் மாடல். சின்ன வயதில் மற்றவர்கள் காஸ்ட்லி வீடியோ கேம்களை விளையாடு வார்கள். அவ்வளவு செலவழிக்க முடியாத என் அப்பா, தானே ஒரு வீடியோ கேம் தயாரித்தார். சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் எனக்கே எனக்கேயான வீடியோ கேம் என்ற உணர்வு தந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை. அந்த உணர்வுதான் இன்று வரை என்னைச் செலுத்திக்கொண்டு இருக்கிறது!'' என்கிறார் ப்ரணவ்!

 


source:vikatan

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP