சமீபத்திய பதிவுகள்

கொஞ்சம் கூகுள் தேடல்

>> Saturday, December 12, 2009

  


கூகுள் தேடல் இஞ்சினில் நாளுக்கு நாள் ஏதாவது சிறப்பு வசதிகள் தரப்படுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய பிங் சர்ச் இஞ்சின் மக்களிடையே மெதுவாக இடம் பிடிப்பதால், கூகுள் தன் வசதிகளைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. கூகுள் 64.6% பேரிடமும், அடுத்த இடத்தில் உள்ள யாஹூ 19.3% பேரிடமும் உள்ளது என்றாலும், கூகுள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுவரை வந்த கூகுள் கூடுதல் வசதிகள் நாம் மனதில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சில கூறுகளை இங்கு காணலாம்.


வழக்கமான தேடுதல் விடைகளுடன், கூகுள் அப்போதைய நேரத்தைக் கூறும் திறன் கொண்டது. நாம் இருக்கும் இடத்தின் நேரம் மட்டுமல்ல; உலகின் எந்த ஊரின் நேரத்தையும் காட்டும். எடுத்துக்காட்டாக time madurai என்று கொடுத்தால் மதுரை நேரத்தையும், time tokyo என்று கொடுத்தால் அதே நேரத்தில் டோக்கியோ நகரின் நேரத்தையும் காட்டும். இது மட்டுமின்றி அந்த ஊரில் நிலவும் சீதோஷ்ண நிலையையும் காட்டும். weather delhi எனக் கொடுத்தால் அந்த ஊரின் சீதோஷ்ணநிலை மற்றும் வர இருக்கும் சீதோஷ்ணநிலை மாற்றங்கள் குறித்தும் தகவல் கிடைக்கும். 


கூகுள் தேடல் விண்டோவினை, கால்குலேட்டர் விண்டோவாகவும் பயன் படுத்தலாம். சயின்டிபிக் கால்குலேட்டராகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இது தரப்படுத்தப்பட்டுள்ளது.94/36* (sqrt 34)^3 என்று கொடுத்தாலும் சரியான விடை கிடைக்கும். சில கணக்கிடும் அடையாளங்களுக்குச் சொற் களையும் தரலாம். எடுத்துக் காட்டாக 96 divided by 36 times (sqrt34)^3 என்றும் தரலாம். 
சில அலகுகளுக்கிடையே மாற்றங்களையும் இதில் கண்டறியலாம்.mm to inch, Fahrenheit to Celsius எனக் கொடுத்து யூனிட் மாற்றத்தையும் அறியலாம். 
ஒரு சிலர் அலுத்துக் கொள்ளலாம். நாம் எதனைக் கொடுத்தாலும், சரியாக அதனை மட்டும் கொடுக்காமல், சார்ந்த அனைத்தையும் தருகிறதே என்று பலர் இது குறித்து சொல்வதைக் கேட்கலாம். நம் தேடல்களைக் குறிப்பிட்ட ஒன்றின் அடிப்படையில் மட்டும் கிடைக்கும்படி தேடலை அமைக்கலாம். அவற்றில் சில:


+ கொடுத்தால் சில குறிப்பிட்ட சொற்களைக் குறிப்பாகத் தேடும்படி அமைக்கலாம். எ.கா

––netbook +11.6 +ion  – (மைனஸ் அடையாளம்) கொடுத்தால் குறிப்பிடும் சொற்களைத் தவிர்த்து தேடுக என்று பொருள். எ.கா. – gaming keyboard logitech இதனை wild card என கம்ப்யூட்டர் சார்ந்த சொற்களுடன் குறிப்பிடுவார்கள். அதாவது தெரியாத சொற்களுக்கான அடையாளம். traditional * foodஎன்று கொடுத்தால் (*) இந்த அடையாளம் உள்ள இடத்தில் வேறு எந்த சொல்லையும் சேர்த்து தேடிக் கொடு என்று பொருள்.



 இந்த அடையாளம் கொடுத்தால் அடுத்துள்ள சொல் வழக்கமாக எந்த சொற்களுடன் ஜோடியாகப் பயன்படுத்தப்படுமோ அவை எல்லாவற்றையும் தேடி எடுத்துக் கொடு என்று கட்டளை அமைக்கிறோம். எ.கா. first computer build ~help  எனக் கொடுத்தால் அது அனைத்து வகையான ஹெல்ப் வகைகளும் பட்டியலிடப்படும்.
.. குறிப்பிட்ட எண் வரிசை தொடர்ச்சியாக வேண்டுமா? எடுத்துக் காட்டாக விலை ரேஞ்ச், தேதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எ.கா. – halo pc $0..$15 ஏதேனும் ஒரு சொல், முதல் எழுத்துக்கள் அடங்கிய சுருக்குச் சொல் போன்றவற்றின் சிறப்பு விளக்கம் பெற



define  என்ற சொல்லைக் கொடுத்துப் பின் பொருள் தேடும் சொல்லைக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக define algorithm / define WHO என்று கொடுக்கலாம்.
குறிப்பிட்ட பைல் வகைகளை மட்டும் தேடிக் கொடுக்கும்படி filetype: என்ற சொல் கொண்டு தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக filetype: pdf எனத் தரலாம். 
ஓர் இணைய தளத்தினைத் தேடக் கட்டளை கொடுக்கையில் அதே பொருளில் உள்ள மற்ற தளங்களைக் காட்டும்படியும் தேடலை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக related:sciencetv.com  என அமைக்கலாம். 
ண்டிtஞு: என்ற சொல் கொடுத்து குறிப்பிட்ட தளத்தில் மட்டும் ஒன்றைத் தேடும்படி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக mango site:vegetables.com எனக் கொடுத்து அந்த தளத்தில் மட்டும் இந்த சொல் எங்கு உள்ளது எனத் தேடலாம். 



மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பரேட்டர் அடையாளங்களை இ�ணைத்தும் கொடுத்துத் தேடலாம். எடுத்துக்காட்டாக +microsoft +yahoo ~talks "Matthew DeCarlo" site:techspot.com எனக் கொடுக்கலாம். 



சாம்சங் தரும் விண்டோஸ் 7 நோட்புக்
என் 140 என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் புதிய நெட்புக் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆறு செல்கள் அடங்கிய இதன் பேட்டரி 11 மணி நேரம் தொடர்ந்து பவர் அளிக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது.
இதன் திரை 10.1 அங்குல அகலத்தில் பள பளப்பில்லாமல் எல்.இ.டி. டிஸ்பிளேயுடன் இருக்கிறது. 3 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. யு.எஸ்.பி.2, புளுடூத் 2.1, 3 இன் 1 மெமரி கார்ட் ரீடர், நெட்புக் கம்ப்யூட்டரை ஆப் ஷட் டவுண் செய்த பின்னரும் மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களை சார்ஜ் செய்யக்கூடிய யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் 250 ஜிபி திறன் கொண்டது. இந்த நெட்புக் கம்ப்யூட்டருக்கு சர்வீஸ் தேவைப்பட்டால் சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர் இடத்திற்கே வந்து எடுத்துச் செல்லும் சேவையை மெட்ரோ நகரங்களில் வழங்கி வருகிறது.
ஓராண்டு வாரண்டியுடன் வரும் இந்த நெட்புக் கம்ப்யூட்டர் விலை ரூ. 24,990


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP