சமீபத்திய பதிவுகள்

இஸ்லாமினால் ஆய பயனென் கொல்......

>> Tuesday, December 8, 2009


இஸ்லாமினால் ஆய பயனென் கொல்......

பில் வார்னர் தமிழாக்கம் - நல்லான்


[இக்கட்டுரை, பில் வார்னர் (By Bill Warner) என்பவரால் Fruit of Islam, என எழுதப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்].

தமிழாக்கம் - நல்லான்

எந்த கனியும் அந்தந்த மரத்தின் அடியில்தானே விழும். அத்தகைய இனிப்பு மிகு இஸ்லாம் என்று முஸ்லிம்களால் புகழப்படும் இஸ்லாமிய இயக்கத்தில் பொதிந்துள்ள இனிப்புப் பழத்திற்கு இணையான கோட்பாடுகள் எவை? இஸ்லாமிய அரசியல், கலாச்சார கோட்பாடுகளால் விளைந்தவைகள் என்னென்ன? கல்வி கேள்விகளால் பெற்ற அறிவு, அறிவியல், அரசியல், மேலாண்மை, முன்னேற்றம், மனித சமுதாய நல உரிமை -- ஆகியவைகளில் இஸ்லாமிய உலகத்தின் வெற்றி அல்லது தோல்வி, எத்தகையது? இங்கே அவைகளைப்பற்றி சற்று ஆராய்வோம்.

இஸ்லாம் ஒரு முழுமைபெற்ற கலாச்சாரம், ஆகவே அது எல்லா கலாச்சாரங்களைக் காட்டிலும் மிகச்சிறந்தது என குரான் வாயிலாகக் கூறிக் கொள்கிறது. [1]

இனி உலகளவில், அரசியல், பெருளியல், கலாச்சாரம், ஆகியவைகளில், மேற்கூறியவாறு மிகச் சிறந்ததாக கருதப்படும், இஸ்லாம் இயக்கத்தைப் பின்பற்றும் நாடுகளை, தற்காலத்தில் முன்னேற்ற மடைந்த நாடுகளாகக் கூறிக்கொள்ளும் நாடுகளுடன், தக்க ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?

குரான் ஒரு முற்றிலும் பரிபூர்ணமான புத்தகம், அதில் உள்ள அரசியல், அறிவியல், சமூகக் கோட்பாடுகளால், இஸ்லாமைப் பின்பற்றும் முஸ்லிம்களை, நுண்ணறிவு சம்பந்தமான தேர்ச்சிகளில், முஸ்லிமல்லாத காஃபிகளைக் காட்டிலும் மிகச்சிறந்தவர்களாக ஆக்கவல்லது என இஸ்லாமின் நிலைப்பாடு. (Islam claims that the Koran is the perfect book with the perfect political and social doctrine that will make Muslims intellectually superior to kafirs). இதைக்கூறுகையில், நம் நினைவில் கொள்ள வேண்டியது, குரான் என்னும் நூல், எல்லோரைக் காட்டிலும், மிக நுண்ணறிவு படைத்த, சர்வ வல்லமையுள்ள, அல்லாஹ் என்ற இறைவனாலேயே அவர் மேற்பார்வையில், எழுதப்பட்டது. [ஆகவே, மிக பரிபூரணத்துவம் பெற்ற ஒரு கடவுளாலேயே எழுத வைக்கப்பட்டது என்பதால், அவரே நிர்மாணித்த இஸ்லாம் என்னும் இயக்கம் பூரணமான கருத்துகளைத் தானே உள்ளடக்கியிருக்க வேண்டும்?] ஆகவே உலகிலேயே முஸ்லிமளே மிகச்சிறந்த அறிவாளிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருக்கவேண்டும். உலகளவில் இஸ்லாமே மிகச்சிறந்த, பூர்ணத்வம் நிறைந்தது. (Remember that the Koran is the perfect recording of the mind of infinitely intelligent god, Allah, so Muslims should be the absolute leader in knowledge and ideas. Islam is the finest, most perfect idea that can exist).

[ஜிப்ரீல், அல்லது காப்ரியேல் என்னும் அல்லாஹ்வின் பிரத்யேக இராயபாரியின் துணைகொண்டு முகம்மதுவுக்கு வந்த இறைச்செய்தி (வாஹி) யை, முகம்மது தன் நினைவாற்றலால் சொல்லச்சொல்ல, அப்துல்லா இப்னு ஸாத் அபி ஸாரா (Abdullah Ibn Sa'd Abi Sarah) என்ற எழுத்தாளரால் எழுதிவைக்கப்பட்டது. ஏனெனில், முகம்மதுவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது]. [MUSLIMS BELIEF; (19:65); (2:255); (59:22-4); (42:49-50); (11:6); (6:59); (31:34); Mosesà(4:164); (7:143); (19:52); --- (31 :27); (6:115); (4:87); Gabriel à(16:102); Arabic (26:192-95); (2:22); (6:18); (10:-3) ; (42:11); Day of Judgment (89:21-23); (2:253); (11:34); 4:22; 95.8; 5.50 à who is better than Allah; 6.103 incomprehensible; 42:11 all hearing and seeing; 36:83, he commands, desires, says be and it is; 50:38 created heaven and earth in just 6 days;]

[ஆதலால், மேற்கூறிய அடிப்படைகளில், இஸ்லாமே, மிகவும் தலை சிறந்த, முழுமைபெற்ற தத்துவம் என முதல் நிலையாக எடுத்துக் கொள்ளலாமா? கீழ்க் கூறும் இடை நிலை ஆய்வுகளுக்குப் பிறகு, முடிவில் முதல் நிலை ஊகம் சரிதானா என கடை நிலையில் சீர்தூக்கிப்பார்த்துக் கூறலாமா?]

கல்வி கேள்விகளால் பெற்ற அறிவு

அரேபியர்கள் உலக முஸ்லிம்களுக்குள் சிறுபான்மையோர். முஸ்லிம்கள் உலக மக்களுக்குள் சிறுபான்மையோர்.

இஸ்லாமிய கலாச்சாரதைப்பற்றி, ஒட்டுமொத்தமாக முழு விவரத்துடன் அரேபியர்களே உலக முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்கத் தகுதி பெற்றவர்கள் என எடுத்துக் கூற, நம்மிடம் முடிவான தரவுகள் மிகக் குறைந்த அளவில் உள்ளன. [ஏனெனில், முஸ்லிம்கள் உலகிலுள்ள அனேக நாடுகளிலும் பரவி உள்ளனர். எந்த ஒரு நாட்டை முழுவதாக ஒப்பபீட்டுக்கு எடுத்துக் கொள்வது?] அரபு மக்கள் மிகத் தொன்மையான முஸ்லிம்கள்தான்; இதில், எள்ளளவும் சந்தேகமில்லை. இதற்குள், குறிப்பாக, சவுதி அரேபியா, தங்களை ஒரு முழு இஸ்லாமிய நாடாக உரிமையுடன் அழைத்துக் கொள்ளலாம். ஏனெனில், முகம்மதே, சவுதியில் உள்ள மெக்காவில் பிறந்த பூர்வீக உரிமையாலும், அவருக்கு உறவான அரேபிய இனத்தைப் பற்றியும் குறிப்பாக குரானில் உணர்த்திச் சொல்வதாலும், இவ்வாறாகக் கொள்ளலாம். பொத்தம் பொதுவாக அரேபியர்களைத் தனித்தன்மையுள்ள முழுமையான உலக முஸ்லிம்களின் பிரதிநிதித்வ-அளவுகோலாகவும் கொள்ளவும் இயலாது, ஆனால், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், அரபு நாடுகளை ஒரளவிற்கு சம நிலை (பர்யாய) அளவுகோலாகக் கொள்ளலாம்.

அரேபிய சமூகத்தைப்பற்றி உலக நாடுகளுடன் ஆய்வுசெய்து, மதிப்பிட்டு, ஐக்கிய நாடுகள் சபை நான்கு வெளியீடுகளை, (UN Publications) வரிசையாக தொகுத்துள்ளது.

இன்று, தகவல்களை துரிதமாக எடுத்துச் செல்ல பரவலாகத் தெரிந்த புகழ்பெற்ற சாதனம் இணயம் (internet). இங்கிலாந்து மக்கட்தொகையில் 48% சதவீதம் இணயத்துடன் தொடர்புடையவர்கள், அதேசமயம், சவுதி அரேபியாவிலோ, 2% விழுக்காடு மட்டும் தான். [2]

மிக அதிக வருவாய் உள்ள நாடுகளில், ஆயிரத்திற்கு 380 நபர்களிடம் கணினி உள்ளது, மிக அதிக வருவாய் உள்ள அரேபிய நாடுகளில் ஆயிரத்திற்கு 20 பேர்களிடம்தான் கணினி உள்ளது. உலகமுழுவதும் மொத்தமாக எடுத்துக்கொண்டால், 1000 பேர்களுக்கு, சராசரியக 80 பேரிடம் கணினி உள்ளது.

மேற்கூறிய விவரப்படி, வேண்டிய தகவலுக்காக இணயத்துடன் தொடர்பு கொள்ள, மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், சராசரி அரேபிய முஸ்லிம்களுக்கு கணினி உபயோகம் அவ்வளவு கிடையாது. ஏனெனில்,"குழந்தைப் பருவத்திலிருந்தே, அவர்களுக்கு, ஏனைய உலகக் குழந்தைகள் போலல்லாமல், ஒவ்வொரு அரேபியக் குழந்தைக்கும், அறியவேண்டுமென்ற ஆவலை, அல்லது, ஒன்றைப்பற்றி கண்டறிதலுக்காகப் பூர்வாங்க பயணத்தை, ஆராய்தலுக்காக மேற்கொள்ள, வெளிப்படையாக செயலாற்ற முடியாமல், தங்கள் சுய உள்ளுணர்வை, இஸ்லாமிய (கிடுக்கிப்பிடி) கோட்பாடுகளால், அடக்கிவைக்க வேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளனர்". [3]

கல்வி கற்கவேண்டிய பாட திட்டங்களும்,"பகுத்தறிகின்ற, ஆராயும் திறனுடன் சொந்த சிந்தனா சக்தியைக்கொண்டு சுதந்திரமாக, செயல்பட முடியாமல், அதே சமயத்தில், கீழ்ப்படிதல், உத்தரவுப்படி நடத்தல், தாழ்ந்திருத்தல், உட்படுதல், அல்லது இணங்குதல், போன்ற தடுப்புகளால் முடக்கப்பட்டுள்ளன". [4]

சொந்த சிந்தனா சக்தியில் ஆராயும் திறன் முடக்கப்பட்டதால், காப்பிரிமைப் பட்டயங்களில் (Patents) இந்த போக்கு, பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சவுதி அரேபியா, 171 காப்பிரிமைப் பட்டயங்களைப் பெற்றிருக்கிறது, ஆனால், தென் கொரியா என்ற ஒரு (புதிய) சிறு நாடு மட்டுமே, 16328 காப்பிரிமைப் பட்டயங்களை அடைந்திருக்கிறது. [5]

இது ஆராய்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் செலவிடும் நிதி முதலீட்டிலுள்ள குறைபாடுகளால் உண்டான, இயற்கையான விளைவாகும். ஸ்வீடன் ஆராய்ச்சிக்காக, தேசீய மொத்த உற்பத்தித் தொகையில் (GNP), 3.1% செலவிடுகிறது, அரபு நாடுகளோ, 0.2% மட்டுமே செலவிடுகின்றன. [6]

அடிக்கடி மேற்கோளாகக்காட்டப்படும் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1000 குடிமக்களுக்கு, சுவிட்சர்லாந்திலிருந்து 79.9 கட்டுரைகள் என்றும், சவுதி அரேபியாவிலிருந்து, 0.07 கட்டுரைகள் மட்டுமே மேற்கோள் காட்டப்படுகின்றன. [7] அதாவது சவுதி அரேபியாவிலிருந்து ஒரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை மட்டுமே மேற்கோள் காட்டப்படுகிறது.

கல்வி கேள்விகளில் இருக்கவேண்டிய பேராவல், 1970-75 என்ற ஐந்தாண்டு கால வரம்பில், உலகளவில், பிற மொழிகளிலிருந்து 330 புதுப்புதுப் புத்தகங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன, ஆனால், சவுதி அரேபியாவில், 1200 ஆண்டுகளாக 1000 புதுப் புத்தகங்கள் மட்டுமே பிற மொழிகளிலிருந்து அரபு மொழியில், மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. [8]

அதாவது, கடந்த நூற்றாண்டுகளில், ஆண்டொன்றுக்கு ஒரே ஒரு புதுபுத்தகத்திற்கும் கீழாகத்தான் பிற மொழியிலிருந்து அரேபிய மொழியில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது. சவுதிகளை ஒப்பிடும்போது, ஸ்பெயின் நாட்டில் மட்டுமே, 10000 புத்தகங்கள் ஆண்டொன்றுக்கு பிற மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது. தொழில் துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளிலிருந்து, 10 மில்லியன் மக்கள் (ஒரு கோடி மக்கள்) என்ற அளவில், ஆறு (6) அறிவியல் வெளியீடுகள் உண்டாக்கப் படுகின்றன. ஆனால், அரபு நாடுகளில் 0.1 மட்டுமே அறிவியல் வெளியீடுகள் உண்டாக்கப் படுகின்றன. [9]

முஸ்லிமல்லாத காஃபிர் கலாச்சாரத்தைப்பற்றி உயர்வாகச் சுட்டிக்காட்ட பொதுவான எவ்வித சுட்டிக்காட்டும் மானியோ, அல்லது அடையாளமோ, இருப்பதாகத் தெரியவில்லை; ஆனால், ஒன்றே ஒன்று உள்ளது, அதாவது மத சம்பந்த வெளியீடுகள். மொத்தமாக உலக வெளியீடுகளில், 5% வெளியீடுகள், மத சம்பந்தமாக வெளியிடப்படுகின்றன; ஆனால், அரபு நாட்டு மொத்த வெளியீடுகளில், 17% இஸ்லாமிய மத சம்பந்தமாக வெளியிடப் படுகின்றன; அதாவது காஃபிர் நாடுகளைக் காட்டிலும், அரபு நாடுகளில் 340% இஸ்லாமிய மதத்திற் கென்றே புத்தகங்கள் வெளியிட்டாலும், காஃபிர் நாடுகளைக்காட்டிலும் பொதுவாக நுண்ணறிவு சம்பந்தமாக 10% பலன் தான் மற்ற விஷயங்களால் கிடைக்கின்றன.

இதனால், காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகளைக் காட்டிலும், சிறப்பாக உள்ளன என்று கொண்டாடிக்கொள்ள வேண்டாம், ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், முஸ்லிம் நாடுகளோ, காஃபிர் நாடுகளைக் காட்டிலும், இன்னும் மிக மிக சீர்கேடான வகையில் தான் எல்லா விதத்தில் உள்ளன. இஸ்லாமிய நுண்ணறிவு தத்துவம் என்பது, முகம்மதுவை கண்மூடித்தனமாக பின்பற்றுதலே யாகும், மேலும் இஸ்லாமிய நுண்ணறிவென்பது, முடுக்கிவிட்ட இயந்திரங்கள் போல இஸ்லாமிய நூல்களில் உள்ளதை திரும்பத் திரும்ப மனனம் செய்வது மட்டுமே. சுய சிந்தனையில் இது ஒன்றே, நுண்ணறிவு போட்டிக்குரிய தகுதியில், காஃபிர் நாடுகளைக் காட்டிலும் மாதிரி தரத்தில் மிகக் குறைந்து (sub-standard) காணப்படுகிறது. இஸ்லாமிய இயக்கத்தில், எந்த முஸ்லிமும், மிகக் கடினமான, ஆட்சேபகரமான கேள்விகளைக் கேட்கலாகாது, மேலும் இஸ்லாமிய இமாம்களின் அதிகாரத்தை ஆட்சேபிக்கவோ, இஸ்லாம் சம்பந்தமாக எந்த விஷயத்திலும் இமாம்களுக்கு மறுப்பு கூறி, சவால் விடுவதோ நடக்காத காரியம். (Even in religious matters, a Muslim is not supposed to ask difficult questions or challenge the imam).

[இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக, அசவுகரிய கேள்விகளைக் (inconvenient questions) கேட்பதை கனவிலும் நினைக்கக் கூடாதது. அது அல்லாஹ்வின் நிந்தனையில் (Blasphemy) முடியக்கூடாது. அப்படி நடந்தால், சவால் விட்டவர் கதி, அதோ கதிதான்..... பஃத்வா வழங்கப்பட்டு, எதுவும் செய்யப்படலாம். ஆமாம்....உயிருக்கு உத்திரவாதமில்லை. இந்த சங்கடங்களை அனுபவிக்க விரும்பாவிட்டால், அதற்கு ஒரே வழி, வாய்ப்பூட்டை அணிந்து கொள்வது ஒன்றே சாலச்சிறந்தது. So, speak only spoken to.].

அரசாங்க செயலாற்றில் பயனளிக்கும் சக்தி:

"அரசாங்க செயலாற்றில் பயனளிக்கும் சக்தியில், லஞ்ச லாவண்யத்தை சுட்டிக்காட்டும் மானி" ("indicator of government effectiveness and corruption") என்ற ஒரு தலைப்பு, ஐக்கிய நாட்டு சபை அறிக்கையில் உள்ளது. இந்த சுட்டிக்காட்டும் குறிப்பு, 18 மாபெரும் நிருவனங்களிலிருந்து நூற்றுக்கணக்காக அடிக்கடி மாறுதலடைகின்ற 25 அடிப்படைகளில் விசேஷத்வம் நிறைந்த கண்டுணர்தலைக் கொண்டன. அதன்படி, 61% பதிலளித்தவர்கள் அளித்த தகவல்படி, பாரபட்சம் (கனிவு) நிச்சயமாகக் காட்டப்பட்டது எனவும், இதில் குறைந்த பட்சமாக அரசாங்கத்தைச் சேர்ந்த 50% நபர்களுக்காவது, சென்ற ஆண்டில், நடந்த கையூட்டுகளைப்பற்றித் தெரியுமென கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர, இதில் அமையும் சலுகைகளால் விளைந்த லஞ்ச லாவண்யத்தின் முக்கிய வழிகளும் கண்டறியப் பட்டுள்ளன. [10]

சமூக, அரசியல் உரிமைகளை ஒரு அளவுகோல் வாயிலாகக் காட்ட -- செல்வாக்கு, பதில் கூறவேண்டிய பொறுப்புடைமை (Accountability-சான்றாண்மை) போன்ற தொகுப்புகளும் உள்ளன. இதன்படி, வட அமெரிக்கா, உடன்பாடாக (Positive) 1.3 எனவும், அரபு அரசாங்களுக்கெதிராக, எதிர்மறையில் (negative) 1.2 எனவும் காட்டுகிறது. [11]

இந்த சராசரி, எப்போதுமே எதிலும், பட்டியலில் கடைசியாக வரும் ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் மிகக் இழிவாக உள்ளது.

அரசாங்கம் கவிழும் சாத்திய-நிலையைக்காட்ட, (Political stability) அரசியல் ஸ்திரத்வத்தைச் (உறுதி நிலையைச்) சுட்டிக்காட்டும் மானி, ஐரோப்பாவுக்காக, (Positive) 0.7 எனவும், அரபு நாடுகளுக்கெதிராக எதிர்மறையில் (negative) 0.8 எனவும் காட்டுகிறது. [12]

ஒரு அரசாங்கத்தின் செயலாற்றும் சக்தி, அது புரியும் தரமான சேவையைப் பொருத்தது. இதன்படி, வட அமெரிக்காவுக்காக (Positive) 1.7 என்றும், அரபு அரசாங்கங்களுக் கெதிராக எதிர்மறையில் (negative) 0.6 எனவும், மானி காட்டுகிறது. [13]

தொன்றுதொட்டு இருக்கும் அரசாங்க சட்டங்கள் (Rule of Law) சரியாகக் கடைபிடிக்கப்படுகின்றன என்பதின் காரணம், அவைகளில் மக்களுக்கு உள்ள நம்பிக்கை, மேலும் இந்த சட்ட விதிகள்தான் அதிகாரத்தில் உள்ளதென நமக்கெண்பிக்கின்றன. இந்த சட்ட விதியைச்சுட்டிக் காட்டும் மானி, வட அமெரிக்காவுக்காக (Positive) 1.7 என்றும், அரபு அரசாங்கங்களுக்கெதிராக எதிர்மறையில் (negative) 0.4 எனவும் காட்டுகிறது. [14]

லஞ்ச லாவண்யம் ஒரு கட்டுப்பாட்டில் உள்ளதென தெரிவிக்கும் மானி, வட அமெரிக்காவுக்காக (Positive) 1.8 எனவும், அரபு நாடுகளுக்கெதிராக எதிமறையில் (negative) 0.4 எனவும் காட்டுகிறது. [15]

இதில், ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகளைக்காட்டிலும் இன்னும் மோசம்.

அரபு நாடுகளில் லஞ்சமும், தகுதிக் குறைவும் உள்ளதென்பது எதிர்பாராத திகைப்பாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், முகம்மதுவே அரசாங்க நீதி நெறிகளையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் [1400 வருடங்களுக்கு முன்னரே] அரபு மக்களுக்களித்துள்ளார். அவரே ஒரு பழங்குடி இனத்தின் தலைவராக, மக்களை வருத்தும் வரம்பற்ற முழுமையான கொடுங்கோலனாக இருந்தார். இவரே, ஒத்துபோகாத எவரையும் கொலை செய்யவும், பொய் உரைத்தலையும், பித்தலாட்டங்களைப் புரியவும், பிறரை ஏமாற்றுவதே தன் அரசாங்க அடிப்படைக் கொள்கையாக பரிந்துரைத்து, இவைகளை நிலை நாட்டினார். (None of this corruption and incompetence should be a surprise. Mohammed laid down the ethics and philosophy of government. He was a tribal chief who was an absolute tyrant. He advised others to kill, lie and deceive as a basis for establishment of government). ['தக்கியா' என்னும் இஸ்லாமிய புனித ஏமாற்றுதல் – சில குரான் 'தக்கியா' வசனங்கள்:சுராக்கள்- 2:225; 3:28; 16:106; 40:28; 66:02; சில ஹடிஸ்-சுன்னா வசனங்கள் - Al Bukhari -Volume 4, Book 52, Number 271; Al Bukhari -Volume 5, Book 59, Number 369; Al-Bukhari -Volume 3, Book 49, Number 857; Al-Bukhari -Volume 4, Book 52, Number 269; Al-Bukhari-Volume 9, Book 84, Number 64 & 65;] பிறரை அடக்கி ஆள வன்முறையையே ஒரு கருவியாகக் கொண்டார். எவரெவர் முகம்மதுவுடைய தற்காலத் தேவைகளை நிறைவேற்று கிறார்களோ அவர்களுக்கு சலுகைகள் தாராளமாக வழங்கப்பட்டன. அவர் எவ்வாறு தனக்குகந்தவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் செல்வத்தை அள்ளித் தந்தார் என அவர்மீது பல குற்றச்சாட்டுகள் அபரிமிதமாக உள்ளன. அவரை எதிர்த்தவர்களைக் கூசாமல் சதிசெய்து படுகொலை புரிந்தார். இஸ்லாமில் சேரும் எண்ணமுள்ளோருக்கு பணத்தைக்கொடுப்பது அவர் வழக்கம். செல்வாக்கை செல்வம் கொடுத்தே விலைக்கு வாங்கினார். ஆகவே, கையூட்டும், சலுகைகளும் அரசாங்க வழிமுறை என முஸ்லிம்களுக்கு இருக்கும் போது இவைகள் நமக்கு எப்படி வியப்பை அளிக்க முடியும்?. முகம்மதுவே முன்னோடியாக வழிகாட்டினார், இஸ்லாமில் சுன்னா என்பதும் ஒருவித லஞ்சக் களஞ்சியமே. எந்த கனியும் அந்தந்த மரத்தின் அடியில்தான் விழும்.

மனிதவள முன்னேற்றம்.

ஐக்கிய நாட்டு சபை மனிதவள முன்னேற்றத்திற்கு இவ்வாறு வரையறுத்துள்ளது. அதாவது கிடைக்கும் பொருளாதார, அரசியல், சமூக வாய்ப்புகளை மிக நல்லமுறையில் உபயோகித்து தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படச்செய்து கொள்ளுதல் என்பதாகும். உயர்நிலையில் உள்ள நாடுகளில், மிக அதிக மனிதவள முன்னேற்றத்தைக் கண்கூறாகக் காணலாம்.

சமூக அறிவியல் நிபுணர்கள் மனிதவள மேம்பாட்டை ஒரு மதிப்பெண் வாயிலாக (அறிகுறியாக) உபயோகிக்கிறார்கள். இதன்படி, HDI இல், வாழ்வதில் எதிர்பார்ப்பு, கல்வி, சுதந்திரம், செல்வம் இவையத்தனையும் அடங்கும். இதில் நல்ல மதிப்பெண் பூஜ்யம், மிக மோசமான மதிப்பெண் 100. வட அமெரிக்காவின் HDI – 8, அரபு நாடுகளின் மதிப்பெண் 75. [16]

சுதந்திர மதிப்பெண்ணை, அந்தந்த நாட்டு அரசியலில் உள்ள சுதந்திரப்பாங்கை சுட்டிக்காட்ட இதை ஒரு அளவுகோலாக ஐக்கியநாட்டு சபை உபயோகிக்கிறது. இதில் மிக சிறப்பான மதிப்பெண் 1, பூஜ்யம் என்பது மிக மோசமான மதிப்பெண்ணாகும். இதன்படி, வட அமெரிக்கா மதிப்பெண் 0.9, அரபு நாடுகளின் மதிப்பெண் 0.15, ஆகும் [17]

பெண்டிர்:

அரபு நாடுகளில்தான் பெண்டிர் கல்வி மிக குறைந்த அளவு உள்ளது. அரபு நாட்டில் சரிபாதி பெண்களும், ஆண்கள் மூன்றில் ஒருபங்கும், கல்வி அறிவற்றவர்கள், [18] முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் நாடுகளின் சராசரியைக் காட்டிலும், அரபு நாடுகளில், கல்வி அறிவற்றவர்கள் மிக அதிகமாகவே உள்ளனர் [19]

பெண்களின் பண சம்பாதிப்பு மற்ற உலக நாடுகளின் அளவைக்காட்டிலும் குறைந்து காணப்படுகிறது, இதில் 33% அரபு நாட்டுப் பெண்களின் பண சம்பாதிப்பு, சஹாராவுக்குக் கீழ் பிரதேச ஆப்பிரிக்க பெண்டிரைக்காட்டிலும் குறைந்து காணப்படுகிறது. (சஹாரா பாலைவனத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் உலகளவில் மிகத் தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது). [20]

பாராளுமன்றத்தில் அரபு நாட்டுப் பெண்கள் பங்கேற்பு, உலக நாடுகளின் சதவீதத்தைக்காட்டிலும் தாழ்ந்தே காணப்படுகிறது. [21]

மேற்கூறிய முடிவுகள் யாவுமே இஸ்லாமினால் விளைந்த விபரீத பலன்கள். இம்முடிவுகள் யாவும் எதிபார்த்தது தான். முடிவுகளால் எவரும் வியப்படைய முடியாது.

இஸ்லாம் கோட்பாடுகளின்படி, எந்த பெண்ணும், இஸ்லாமுக்காக குழந்தைகளைப் பெற்றுத் தரவும், ஆண்களுக்கு வேண்டும் போதெல்லாம் சுக போகத்திற்காக மட்டுமே.

முடிவுரை:

எந்த கலாச்சாரத்தையும் ஓர் அளவுகோலால் சீர்தூக்கிப்பார்க்கும்போது, அரேபியர்கள், கடைசியிலோ, அல்லது கடைசியிலிருந்து ஒருபடி இன்னும் கீழேதான் மதிப்பிட முடியும். இதற்கு ஒரு நல்ல காரணம் உண்டு – இஸ்லாம்தான். இஸ்லாமின் கலாச்சாரக் கோட்பாடே எல்லாவற்றையும் உருவமைக்கிறது. இஸ்லாம் கற்றுக்கொடுக்கும் கல்வி முறை --அறியாமையையும், புதிதாக எதையும் திறமையுடன் உண்டாக்க இயலாமையையும், குறுகிய மனப்பாங்கையும், மற்றவர்களைப்பற்றி முழு உண்மையும் தெரிந்து கொள்வதற்கு முன்பே, அவர்களைப்பற்றி, தப்பெண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், ஆகியவைகளுடன் கூடிய கலவைதான். இஸ்லாமிய மத கொள்கை, அந்த கோட்பாட்டுக்கே தங்களை முழுமையாக சமர்ப்பித்துக் கொள்ளுதலைக் கற்றுக்கொடுக்கிறது. முழுமையாகச் சமர்ப்பித்துக் கொள்ளுதல் என்பது திரும்பத் திரும்ப சொன்னவைகளையே மீண்டும் கற்பதுதான். இஸ்லாமியர்களால் புனிதமாக்கருதப்படும் ஹடிஸ் இஸ்லாமைப்பற்றி எந்த கேள்வியையும் கேட்பதற்கு அனுமதிக்காது. இஸ்லாமிய கோட்பாடு--இஸ்லாமே எல்லா விஷயத்திலும் மிகச் சிறந்தது, முடிவில் இஸ்லாம் தான் மிக முக்கியம், உலகிலுள்ள மற்ற எதுவும், எவரும் முக்கியமில்லை. மேலாக, காஃபிர்கள் எல்லாவற்றிலும், எப்போதுமே, குற்றவாளிகள், ஆகவே அல்லாவால், வெறுக்கப் படுபவர்கள், என கற்றுக்கொடுக்கிறது. காஃபிர்களிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளக்கூடாது, முக்கியமாக, தொழில் நுட்பக்கலையப் பற்றி ஆராயும் விஞ்ஞானத்தை எதிர்க்கிறது. ஆகவே கற்றுக் கொள்ளக்கூடாது. இஸ்லாமிய அரசியல் கொள்கை என்பது, ஒட்டுமொத்தமாக மக்கள் எல்லோருமே இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அடிமைகள். அப்படி தன்னை இஸ்லாமின் அடிமை என ஒப்புக்கொள்பவனே சிறந்த (இஸ்லாமிய) முஸ்லிம் குடிமகன். இஸ்லாமியத்தால் புனிதமாகக் கருதப்படும் சுன்னாவில் சாராம்சமாக இருப்பது முகம்மது தனது கத்தியால்தான் மிகசக்திமானாக ஆகி, தன் இஷ்டப்படி ஆளத்தகுதிபடைத்தவர் ஆனார். ஆகவே கத்தியே, புத்தியைக் காட்டிலும் சாலச்சிறந்தது. [முகம்மது கூறியது, "எனது வெற்றிகள் அனைத்தும் பயங்கர வன்முறையால் தான் விளைந்தவை". (Hadith: Al-Bukhari, 4.52.220 - Narrated Abu Huraira: Allah's Apostle said, "I have been sent with the shortest expressions bearing the widest meanings, and I have been made victorious with terror (cast in the hearts of the enemy), ..............].

ஆயிரக்கணக்கான பக்கங்களைக்கொண்ட இஸ்லாமியக் கொள்கைகள் அனைத்திலும், தலைவர் முகம்மதுவுக்கே எல்லோரும் கீழ்ப்படியவேண்டும், எனவும் கற்று கொடுக்கிறது. ஆயிரக்கணக்கான இப்பக்கங்களில், மக்களாட்சியைப்பற்றி, மற்றவர்களைக் கலந்தாலோசித்துத் தீர்மானம் எடுப்பதுபற்றி ஒருபக்கத்தின் ஒரு சிறுபகுதியில் உதாரணமாக உள்ளது. (உதாரணம் எப்படி இருக்குமென கூறத் தேவையா?!!) முடிவாக முகம்மது பேசினார், எல்லோரும் கீழ்ப்படிந்தனர். [இனி உலகளவில், அரசியல், பெருளியல், கலாச்சாரம், ஆகியவைகளில், மேற்கூறியவாறு தற்காலத்தில் மிகச்சிறந்ததாக கருதப்படும் முன்னேற்றமடைந்த நாடுகளுடன், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடுகளை, போதிய ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் அல்லவா? அம்முடிவை உங்களுக்கே இனி விட்டு விடுகிறேன்].

[இந்த [....] அடைப்புக்குறியில் (Bracket) உள்ளவைகள் தமிழாக்கத்தின்போது கூடுதல் விளக்கங்களாக தமிழ் மொழியாக்கத்தில் சேர்க்கப்பட்டன.

--


source:http://www.thinnai.com/?module=displaystory&story_id=20910293&format=html-- 

www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous December 8, 2009 at 9:19 AM  

whats the reason for having the name of this blog as TAMILISLAM? this shows your intentions

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP