சமீபத்திய பதிவுகள்

எய்தவன் தலைகொய்ய எழுந்து வாடா தமிழா! மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்புவோம்: யாழிலிருந்து சனீஸ்வரன்

>> Wednesday, December 2, 2009

 
எய்தவனின் தலை கொய்ய தமிழனுக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை தமிழினம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரி மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் இதுவே சனீஸ்வரனின் வேண்டுகோளாகும்.

இது தொடர்பாக சனீஸ்வரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட அறிக்கை:-

தமிழர்தம் போராட்டத்தை நசுக்கி, சின்னாபின்னமாக்கி வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கியெறிந்து விட்ட பூரிப்பில் சிங்களம் இன்று சொல்லொணா மகிழ்வில் திணறிக் கொண்டிருக்கின்றது.

தமிழன் போராட்ட சக்தியை அழித்துவிட்டோம் என்ற மமதையில் தேர்தல் மேல் தேர்தலாக வைத்து சிங்களம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

தமிழரின் உணர்வோடும் உயிரோடும் இணைந்துவிட்ட மாவீரர் நாளைக் கூட அனுஷ்டிக்க விடாது பேரினவாதம் பல்வேறுபட்ட அழுத்தங்களைப் பிரயோகித்து நிற்கின்றது.

தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் சிங்கள அரசின் கொடுங்கரங்கள் எங்கள் உணர்வுகளை அடக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். 

தாயகத்தில் மக்களெல்லாம் இருண்ட உலகில் இருட்டு அறையில் குருடனைப்போல் உலாவிக் கொண்டிருக்கின்றார்கள். 1990 களுக்குப் பின்னர் பிறந்த தற்போதைய இளைஞர்கள் விடுதலைப் புலிகள் பற்றியோ அவர்களது தியாகம் பற்றியோ அவர்களது வீரம் செறிந்த போராட்டம் பற்றியோ போராட்டத்தின் தேவை, அதன் கருப்பொருள் பற்றியோ அறிய முடியாமல் எடுப்பார் கைப்பிள்ளைகளாக தமிழினத் துரோகிகளின் பின்னாலும் ஆக்கிரமிப்பு படைகளின் பின்னாலும் சென்று கலாசாரம் பண்பாட்டை மறந்து அவற்றை அழிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றார்கள்.

சிங்கள தேசம் தனது குடிமக்களாகிய தமிழர்களுக்கு வழங்கும் அற்ப சொற்ற சலுகைகள், வேலை வாய்ப்புக்கள், கடனுதவிகளைக்கூட துரோக அரசியல்வாதிகள் தாங்கள் ஏதோ அரசுடன் போராடிப் பெற்றுத் தருவது போல் பாசாங்கு காட்டுவதால் அதை நம்பும் இளஞ் சமூகம் அந்த துரோகிகளின் பாசறைகளை தேடிச் சென்று எமது வீரஞ்செறிந்த போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் அவல நிலை தோன்றியுள்ளது.

சமூக ஆர்வலர்கள் இவ்விடயம் பற்றி சிந்திக்காவிட்டால் மாவீரர்களாகிய விடுதலைப் புலிகள் துரோகிகளாகவும் காட்டிக் கொடுப்போரான ஏனையோர் மகத்தானவர்களுமாக இளைஞர் மனதில் பதிய வைக்கப்படும். எதிரியின் பொலிஸ் வேலைக்கு இளஞ்சமூகம் சென்றது இதற்கு ஒரு அரிய உதாரணமாகும். 

தமிழினம் இன்று மௌனத்தில் புழுங்கிக் கொண்டிருக்கின்றது. நடந்து முடிந்தவற்றை ஜீரணிக்க முடியாது மனதுக்குள் புழுங்கிப் புழுங்கிச் செத்துக் கொண்டிருக்கின்றது. நடந்து கொண்டிருப்பது ஒரு கனவாக இருக்கக்கூடாதா? திடீரென தூக்கம் கலைந்து நடந்தது எல்லாம் கனவென உணர முடியாதா என்று தமிழினம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. தங்கள் தலைவன் எங்கிருந்தாவது ஒரு குரலின் மூலம் நான் இருக்கிறேன் என்று கூறிவிடமாட்டானா தளபதிகளும் நலம் என்ற சொல் வந்து காதில் தேனாக பாயாதா என்று என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றது தன்மானத் தமிழினம்.

மே 19 கேட்ட செய்தியின் மூலம் இடியேறு கேட்ட நாகம் போல அதிர்ந்து போயிருக்கும் தமிழினத்தின் மீது தேர்தலாக நடாத்தி வெற்றிப் பெருமிதம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது மகிந்த அன்ட் கொம்பனி அரசு. அதற்கு ஒத்தூதிக் கொண்டிருக்கின்றது கருணா அன்ட் டக்ளஸ் கொம்பனி.

யாழ். மாநகர சபை, வவுனிய நகர சபை தேர்தல்களில் மக்களின் கையறு நிலையை வைத்து அரசியல் செய்து வென்றுவிடலாம் என்று கிணப்பு போட்ட அரசிற்கு ஓரளவாவது எமது மக்கள் பாடம் கற்பித்தது மகிழ்வுதான் ஆனாலும் மாநகரசபையை கைப்பற்றிவிட்டதாக அரசு தம்பட்டம் அடிக்கின்றது. வெறும் ஆயிரத்தி சொச்சம் வாக்குகளில் மேயர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

 புலிகளின் ஆசீர்வாதத்தில் உருவான கூட்டமைப்பு கணிசமான வாக்குகளை எவ்வளவோ இடர்களுக்கு மத்தியில் பெற்றமை மக்கள் இன்னும் புலிகளின் பின்னால்தான் என்பதை பறை சாற்றும். பாக்குமிடமெல்லாம் வெற்றிலைக் கட்சிக்காரர்களின் சுவரொட்டிகளின் மத்தியில் எதுவித பிரசாரத்தையும் முன்னெடுக்காமல் கூட்டமைப்பு லாவகமாக வாக்குகளைப் பெற்றமை புலிகளின் தலைமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருத வேண்டும்.

புத்தளத்து வாக்குகள் வரும் வரையில் யாழ் மாநகரசபையில்கூட கூட்டமைப்பே முன்னணியில் திகழ்ந்தது. இதையெல்லாம் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் மறந்துவிடக்கூடாது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக கட்சி தாவுதல் இனவாத அரசை ஆதரித்தல் என்றெல்லாம் சிந்தியாது தமிழன் வாழ்வியல் பற்றி, ஆயிரமாயிரமாய் இறந்த தமிழுறவுகள் பற்றி சிந்தித்து சரியான தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணம் இதுவாகும். 

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தால் செய்ய முடியாதவற்றை இனிவரும் காலங்களில் சரியான அரசியல் சாணக்கியத்தின் மூலம் செய்ய முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.. மத்தியில் எவர் வந்தாலும் பரவாயில்லை என்று வாளாது இருப்பதில் அர்த்தமில்லை. மத்தியில் இருக்கும் கொடுங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிதயன் அவசியத்தை நான் இங்கு கூறத் தேவையில்லை. இந்த கைங்கரியத்தை செய்வதன் மூலம் பின்வரும் விடயங்களை கையாள முடியும். 

கொடுங்கோலன் மகிந்தனையும் சகோதரக் கொம்பனிகளையும் தோல்வியடையச் செய்வதன் மூலம் அவர்களை வீட்டுக்கு அனுப்பி சட்டச்சிக்கல்களில் அவர்களை மாட்ட முடியும். அவர்களின் பதவிகள் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டதும் அவர்களுக்குரிய தண்டனையை அவர்களே பெற்றுக் கொள்வார்கள் 

கொடுங்கோலன் வீட்டுக்குச் செல்வதன் மூலம் எட்டப்பன் கருணாவும், காக்கை வன்னியன் டக்ளசும், ஏனைய உதிரி காட்டிக் கொடுக்கும் கும்பல்களும் தெருவுக்கு வர ஏதுவாகும். இவர்கள் தெருவுக்கு வந்தால் இவர்களுக்குரிய தண்டனையை சமூகம் பார்த்துக் கொள்ளும். 

எதிரி நாட்டில் இராணுவ ஆட்சியொன்றுக்கு வழி வகுத்தால் தமிழர் போராட்டம் கூர்மையடைய வாய்ப்புகள் கிட்டலாம். 

எதிரியானவன் இரண்டுபட்டால் கடைசி நேரச் சமரின் போது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புகள் போரியல் குற்றங்கள் என்பன வெளிவந்து உரியவர்கள் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வாய்ப்பு உண்டாகும். 

எது எப்படியாயினும் தமிழர்களின் இன்றைய தெரிவு சரத் பொன்சேகாவாகவே இருக்க முடியும். கொன்றவனும் ஏவியவனும் பிரிந்து நிற்கின்றான் இதில் கொன்றவனை விட ஏவியனே கொடுமையானவன். "எய்தவன் இருக்க அம்பை நோவதேன்" என்று ஒரு தமிழ் பழமொழியும் இருக்கின்றது. எய்தவனின் தலை கொய்ய தமிழனுக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை தமிழினம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனவெறி அரசும் ஊது குழல்களும் பலவித சலுகைகளை எதிர்வரும் காலங்களில் தமிழர்களுக்கு வைக்கலாம். அவற்றையெல்லாம் கண்டு மனம் மாறாது மனதில் வெறியேற்றி எதிரி மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் இதுவே சனீஸ்வரனின் வேண்டுகோளாகும். 

"கூழுக்கு வழியின்றிப் போனோமென்றால் குலவீரம் கூடவா இல்லாது போகும்


source:tamilwin


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP