சமீபத்திய பதிவுகள்

இந்த வார டவுண்லோட்

>> Tuesday, December 8, 2009

 
 

ஷ்யூர் டெலீட்
கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் உருவாக்கிய பைல் ஒன்றை டெலீட் செய்துவிட்டீர்கள். அது அழிந்து போய்விட்டதா? நீக்கப்பட்டுவிட்டதா? யாரும் பார்க்க முடியாதபடி காணாமல் போய்விட்டதா? இல்லை, இல்லவே இல்லை. அந்த பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் சென்று தங்கலாம். நீங்கள் புத்திசாலியாய் இருந்தால், அதிலிருந்தும் அழித்துவிட்டிருக்கலாம். ஆனால் அப்போதும் அது கம்ப்யூட்டரிலிருந்து அழிவதில்லை. உங்கள் கம்ப்யூட்டர் அதனை அழிப்பதில்லை. அதற்குப் பதிலாக, அந்த பைல் இருந்த இடத்தை, அடுத்த பைல் வந்து தங்கலாம் என்று அறிவிக்கிறது. எனவே திறமையாக எழுதப்பட்ட ஒரு புரோகிராம் அந்த பைல் இருக்கும் இடத்தை, விதத்தை அறிந்து. பின் மீண்டும் மீட்டு உங்களுக்குத் தரலாம். அல்லது அடுத்தவர்கள் அதனைக் கண்டறியலாம். குறிப்பாக இந்த பைல்களில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களான, பேங்க் அக்கவுண்ட் எண், பாஸ்வேர்ட் ஆகியவை இருந்தால் அவை எந்த நிலையிலும் மற்றவர்களுக்குச் சென்றுவிடக்கூடாது. 
எப்படி ரகசியசெய்தி எழுதிய தாள் ஒன்றை நாம் கிழித்துப் போட்டாலும், பொறுமையான நபர் ஒருவர் அந்த துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, ஒட்டி தகவலைத் தெரிந்து கொள்ளலாமோ, அதே போல கம்ப்யூட்டரில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட ஒரு பைலை யார் வேண்டுமானாலும், சரியான புரோகிராம்கள் வழியாக எடுத்துக் கொள்ளலாம்.
தாள்களை, ஜஸ்ட் கிழிக்காமல் கடுகளவு துண்டுகளாக வெட்டி எறியும் ஷ்ரெடர் போல, நான் அழிக்கும் கம்ப்யூட்டர் பைல்கள் ஆக வேண்டும் என விரும்புகிறீர்களா! கவலையே வேண்டாம். அதற்கெனவே ஒரு சிறந்த புரோகிராம் உள்ளது. அதன் பெயர் Sure Delete. இதன் பதிப்பு 5.1.1., அண்மையில் வெளியானது. இந்த புரோகிராம் பைல்களில் உள்ள டேட்டாவினை நுணுக்கமாக அழிக்கிறது. பைல்களை மட்டுமின்றி ஒரு போல்டர் முழுவதையும் இதே போல் அழிக்க வேண்டும் என விரும்பினாலும் அழிக்கலாம். இந்த புரோகிராம் அழிக்கப்படும் ஒரு பைலின் மீது மாறான தகவல்களை குயிக் வைப் (Quick Wipe) என்ற திட்டத்தில் நான்கு முறை, டிபன்ஸ் துறை என்ற வகையில் ஏழு முறை மற்றும் சூப்பர் செக்யூர் வகையில் 24 முறை என மூன்று வகைகளில் எழுதுகிறது. இதனால் எந்த ரெகவரி பைல் மூலம் முயற்சி செய்தாலும், பைல்களை மீண்டும் எடுக்க முடியாது. ஷ்யூர் டெலீட்FAT12, FAT16, FAT32, and NTFS மற்றும் ஆகிய பைல் பார்மட்டுகளில் முழுமையான முறையில் செயல்படுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரை இதனைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பைல் விரைவில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கும். இதனை இன்ஸ்டால் செய்து இயக்குவதும் எளிதானதாகும். தேவை இல்லை என்றால் கம்ப்யூட்டரிலிருந்து இதனை எடுத்துவிடலாம்.



விண்டோஸ் ஆன்லைன் டிரைவ்
என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். 
குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும். 
இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் (Windows Live SkyDrive) வசதியாகும். 
இந்த டிரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திடலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு. அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட்(Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும். 
இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத்திடும் டிரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் டிரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம். இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் டிரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP