சமீபத்திய பதிவுகள்

கம்ப்யூட்டரைத் தாக்கும் வைரஸ் வந்துவிட்டதா?

>> Wednesday, December 9, 2009

 
 

நாள்தோறும் ஏதேனும் வைரஸ் வந்து நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் வைரஸ் பாதிக்காத கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களும், எங்கே வைரஸ் வந்துவிட்டதோ என்ற பயத்தில் கம்ப்யூட்டரை இயக்குகின்றனர். அப்படியானால் எந்த சூழ்நிலையில் வைரஸ் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும்; அப்படி ஒரு வைரஸ் வந்துவிட்டால் என்ன மாதிரியான விளைவுகள் அல்லது பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம். நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறந்ததாகவும், அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவதாகவும் இருந்தால், வைரஸ் பாதித்த பைல்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கையில் அல்லது வைரஸ் பாதித்த பைல்கள் உள்ள சிடி அல்லது பிளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரால் படிக்கப்படுகையில், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு எச்சரிக்கைக் கட்டத்தைக் காட்டி இந்த பைலில் இந்த வைரஸ் இருந்தது. உடனே அது அழிக்கப்பட்டுவிட்டது; அல்லது வைரஸ் உள்ள பைல் இது, இதனை அழித்தால் பைலும் சேர்ந்து அழிந்துவிடும்; என்ன செய்யலாம் என்று கேட்டு ஒரு பாப் அப் மெசேஜ் கட்டம் கிடைக்கும்.



இதெல்லாம் முன்னரே கண்டறியப்பட்டு, வகை பிரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் வகையில் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு உருவாக்கப்பட்டிருந்தால் இந்த எச்சரிக்கை கிடைக்கும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கண்டறிய முடியாத புதியதாக உருவாக்கப்பட்ட வைரஸ் வந்தால் அது ஜம்மென்று நம் கம்ப்யூட்டருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, அதன் அழிவு அல்லது நாச வேலையைத் தொடங்கிவிடும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு அப்டேட் செய்யப்படாமல் இருந்தாலும், வைரஸ்கள் கம்ப்யூட்டருக்குள் வருவது எளிதாகிவிடும். 
அப்படியானால் இது போல புதிய அல்லது ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் கண்காணிப்பிற்குத் தப்பித்து வரும் வைரஸ் அல்லது ஸ்பை புரோகிராம்களான வைரஸ்களை எப்படிக் கண்டறிவது? நம் கம்ப்யூட்டர் செயல்படும் விதத்திலிருந்துதான் கண்டறிய முடியும். அந்த செயல்பாடுகள் எப்படிப் பட்டவையாக இருக்கும் எனப் பார்ப்போம்.
திடீர் திடீர் என நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் மூடப்படுகிறதா? அல்லது திறக்கவே முடியவில்லையா? அப்ளிகேஷன் புரோகிராம்களின் இ.எக்ஸ்.இ. பைல்கள் ஒன்றுக்கு இரண்டாக பல டிரைவ்களில் இடம் பிடித்து எதுவும் திறக்க மறுக்கிறதா? சூப்பர் பாஸ்ட் வேகத்தில் செயல்பட்ட உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள், பாசஞ்சர் வேகத்தைக் காட்டிலும் மெதுவாக இயங்குகின்றனவா? இந்த செயல்பாடுகள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அனுமதியின்றி வந்து தங்கிவிட்ட மால்வேர் அல்லது வைரஸ்களை அடையாளம் காட்டுவன ஆகும்.
இதுவரை உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்பட்டு ஒழுங்காக அச்சிட்டுக் கொடுத்த பிரிண்டர் என்ன கட்டளை கொடுத்தாலும் இயங்க மறுக்கிறதா? நிச்சயமாய் அது வைரஸ் வேலைதான்.
சில டிரைவ்களை நீங்கள் அணுக முடியாது. பைல்களைத் திறக்க முடியாது எனச் சிறிய கட்டங்களில் பாப் அப் மெசேஜ் கிடைக்கிறதா? ஏதோ வைரஸ் பிரச்னை என்றுதான் பொருள்.
ஹார்ட் டிஸ்க் இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த, சின்ன சின்ன அளவில் உருவாக்கி வைத்திருந்த பைல்களில் சில, பெரிய அளவிலான பைல்களாக உருவாகி, டிஸ்க் இடத்தை விழுங்கி நிற்கின்றனவா? நிச்சயமாய் இது வைரஸ் வேலைதான்.
திடீரென உங்கள் இமெயில் முகவரியிலிருந்தே உங்களுக்கு இமெயில் வருகிறதா? அதில் இணைப்பு பைல் ஒன்று திறக்கச் சொல்லி அன்புக் கட்டளை வருகிறதா? அதே நேரத்தில் உங்கள் நண்பர்கள் பலரிடம் இருந்து என்னப்பா ஒரு பைலை அனுப்பி உள்ளாய்; திறந்து பார்க்கலாமா? என்று உஷாரான நண்பர்கள் இமெயில் அனுப்பி உள்ளார்களா? இதுவும் ஒரு மால்வேர் புரோகிராம் வேலைதான். 
மேலே சொல்லப்பட்ட விளைவுகள் நிச்சயமாய் உங்கள் கம்ப்யூட்டரின் வேண்டாத விருந்தாளியை அடையாளம் காட்டும் செயல்களாகும். வைரஸ் அல்லது அது போன்ற புரோகிராம் ஒன்று உங்கள் கம்ப்யூட்டருக்குள், எப்படியோ அனைத்து பாதுகாப்பு வழிகளையும் மீறி வந்துவிட்டது என்று பொருள்.
அப்படியானால் என்ன செய்வது? பதட்டமடைய வேண்டாம். இதற்கு முன் பல முறை கம்ப்யூட்டர் மலரில் இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்திட வேண்டும் என எழுதி உள்ளோம். அந்த வழிகளைப் பின்பற்றவும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP