சமீபத்திய பதிவுகள்

தங்களது அனைத்து வளங்களையும் குவித்து சிறிலங்கா படையினர் இறங்கியுள்ள புதுக்குடியிருப்புக்கான போர்

>> Sunday, February 8, 2009

 
 
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பைக் கைப்பற்றும் தீவிர முயற்சியில் படையினர் இறங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையாக புதுக்குடியிருப்பே இருப்பதாகக் கருதும் படையினர் அதனை சகல முனைகளிலும் சுற்றிவளைக்க முயல்கின்றனர். அனைத்து படையணிகளும் புதுக்குடியிருப்பை நோக்கிய பாரிய நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றபோதும் விடுதலைப் புலிகளின் மிகக் கடுமையான பதில் தாக்குதலால் புதுக்குடியிருப்புக்கான போர் நீண்டு செல்வதாக படைத்தரப்பு கூறுகிறது. இதனால் தங்களது அனைத்து வளங்களையும் இங்கு குவித்து பெரும் போரில் இறங்கியுள்ளனர்.
இந்தப் பகுதியிலேயே நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் சிக்குண்டுள்ளனர். இந்த மக்களின் பாதுகாப்பு குறித்து அரசு சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இங்கு இடம்பெறும் ஷெல், பல்குழல் ரொக்கட் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் தினமும் பெருமளவானோர் கொல்லப்படுகின்றனர். "கிளஸ்ரர்' ரக ஷெல்கள் இந்தப் பகுதிகளில் ஏவப்பட்டுள்ளதாக ஐ.நா.கடும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. ஒரு ஷெல் பல ஷெல்களாகப் பிரிந்து சென்று வெடித்து பேரழிவை ஏற்படுத்தும் கிளஸ்ரர்கள் (கொத்தணிக் குண்டு) யுத்த முனையில் தடை செயப்பட்டதொரு போராயுதமாகும். இதனைப் படையினர் புதுக்குடியிருப்பில் பயன்படுத்தியுள்ளதாக ஐ.நா.அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய போரில் தினமும் பெருமளவு அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் படுகாயமடைகின்றனர். ஆஸ்பத்திரிகள் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுவதால் காயமடைவோரை ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது. ஆஸ்பத்திரிகள் இல்லாமல் போனால் அங்கு மக்களால் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது. மக்களை வெளியேற்றுவதற்காக ஆஸ்பத்திரிகளை படையினர் இலக்கு வைப்பதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிகச் சிலரே மேலதிக சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வெளியிடங்களுக்கு அனுப்பப்படாத நிலையில் தினமும் பலர் இறக்கின்றனர். வன்னியில் அப்பாவி மக்கள் தினமும் சந்திக்கும் பேரவலத்தை எழுத்தில் வடிக்க முடியாது.
தொடர்ந்தும் மக்கள் கொல்லப்படுவதால் புலிகளுக்கே நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. அந்த மக்களை புலிகள் வெளியேற அனுமதித்தால் அப்பாவி மக்களுக்கான இழப்புகளை தடுக்க முடியுமென அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. சர்வதேச நாடுகளும் இலங்கை அரசு கூறுவதற்கேற்ப அந்த மக்களை வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டுமெனக்கூறி புலிகள் மீது கடும் அழுத்தங்களை கொடுக்கின்றன. அங்கு மக்களுக்கான இழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க புலிகள் மீதான இந்த அழுத்தமும் அதிகரிக்கிறது. அதேநேரம் புலிகள் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிப்பதற்காக அரசும் தாக்குதலைத் தீவிரப்படுத்துகிறதே தவிர, அப்பாவி மக்கள் தினமும் கொத்துக் கொத்தாக வீழ்ந்து மடிவது குறித்து சற்றும் பொருட்படுத்தவில்லை. புலிகளுக்கு அழுத்தத்தை அதிகரிப்பதற்காக அப்பாவி மக்களின் உயிர்களைக் காவுகொள்ளவேண்டாமென அரசை வற்புறுத்த சர்வதேச சமூகமும் தயாராயில்லையென்பது இலங்கைக்கு சற்று ஆறுதலாகவேயுள்ளது.
அதேநேரம், புலிகள் வசமிருக்கும் எஞ்சிய நிலப்பரப்பையும் படையினர் கைப்பற்றி விடுவரென்பதால் தொடர்ந்தும் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்துவிட வேண்டுமென இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளன. இணைத்தலைமை நாடுகளின் இந்தக் கோரிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மக்கள் தினமும் பெருமளவில் கொல்லப்பட்டு வரும் நிலையில் அதற்கான கூட்டுப் பொறுப்பிலிருந்து இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சியே இதுவெனத் தெரிவிக்கப்படுவதுடன் அப்பாவி மக்களைக் கொல்வதை நிறுத்துமாறு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க இணைத்தலைமை நாடுகள் முன்வராதது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வன்னிப் போரில் இலங்கை அரசுக்கு இந்தியா பேருதவிகளைப் புரிந்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துமாறு தமிழகத்திலுள்ள ஆறரைக் கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகின்ற போதும் அதனை சற்றும் பொருட்படுத்தாது ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிங்களவர்களுக்காக தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையையும் இந்திய அரசு நிராகரிப்பதாக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்திய அரசு இது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. அடுத்த பொதுத் தேர்தலிலும் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றுவதிலேயே காங்கிரஸ் கட்சி குறியாக இருக்கிறதே தவிர, ஈழத் தமிழர்களுக்காக எதனையும் செயாது அவர்களுக்கு எதிரான போரில் இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்குவதில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தீவிரம் காட்டுகிறார்.
இந்தச் சூழ்நிலையில் முல்லைத்தீவில் போர் உக்கிரமடைந்துள்ளது. விடுதலைப் புலிகளை நூறு சதுர கிலோமீற்றர் நிலப்பகுதிக்குள் முடக்கிவிட்டதாக படைத்தரப்பு கூறுகின்றது. சகல முனைகளூடாகவும் புலிகளின் இறுதிக் கோட்டையான புதுக்குடியிருப்பு நோக்கி பாரிய படைநகர்வுகள் இடம்பெறுகின்றன. ஏழு படையணிகள் இந்தப் படைநகர்வுகளில் ஈடுபட்டுள்ளன. 53 ஆவது படையணி மட்டும் மாங்குளம் மற்றும் ஒலுமடு பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் இவை நிறுத்தப்பட்டுள்ளதால் புதுக்குடியிருப்புப் பகுதியில் தேவையேற்பட்டால் உடனடியாக இவை அங்கு விரைந்து செல்லும். யாழ்.குடாநாட்டில் கிளாலிப் பகுதியில் முன்னர் 53ஆவது படையணி நிலைகொண்டிருந்தது. இந்தப் படையணியே தற்போது மாங்குளத்திற்கு கிழக்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய படையணிகளான 55, 57, 58, 59 மற்றும் மூன்று விசேட படையணிகளும் புதுக்குடியிருப்பை நோக்கிய நகர்வில் ஈடுபட்டுள்ளன. புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டால் இலங்கையின் வரைபடத்தில் புலிகள் வசம் எந்தவொரு பகுதியையும் இல்லாது செய்து விடலாமென அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன. அதேநேரம், புதுக்குடியிருப்புக்கான சமருக்காக அரசு அதிக விலையை கொடுத்து வருகிறது. பலத்த இழப்புகளை படையினர் சந்தித்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் வசமிருந்த ஏழாவதும் கடைசியுமான விமான ஓடுபாதையை புதுக்குடியிருப்பு பகுதியில் கைப்பற்றிவிட்டதால் புலிகளின் வான் புலிகளை முழுமையாக முடக்கிவிட்டதாகவும் அதேபோல் கடற்புலிகளின் கடைசித் தளமாயிருந்த சாலையையும் (முல்லைத்தீவு) கைப்பற்றிவிட்டதால் கடற்புலிகளின் இதுவரை காலச் செயற்பாடுகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் படைத்தரப்பு கூறுகிறது. தற்போது புலிகளின் தரைப் படை மட்டுமே போரில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனையும் விரைவில் அழித்து புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டால் புலிகளின் மரபுவழிப் படையணியின் இதுவரைகால நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துவிடுமெனவும் படைத்தரப்புக் கூறுகின்றது. இதனால் புதுக்குடியிருப்பு நோக்கிய படைநகர்வை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இங்கு தான் புலிகளின் தலைவர்களும் தளபதிகளும் இருப்பதால் புதுக்குடியிருப்பின் வீழ்ச்சியானது புலிகளின் வீழ்ச்சியாகிவிடுமென்றும் அரசு கூறுகிறது. இதற்காக அரசு தனது முழு வளத்தையும் பயன்படுத்தி வருகிறது. புதுக்குடியிருப்பை நோக்கி நகரும் ஒவ்வொரு படையணிக்கும் தேவையான அனைத்து வளங்களும் வழங்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பையும் கைப்பற்றி விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்துவிட்டதான செய்திக்காக அரசு தொடர்ந்தும் காத்திருக்கிறது.
கடற்புலிகளின் இறுதித் தளமான சாலையைக் கைப்பற்றியதன் மூலம் கடற்புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டதாக படையினர் கூறுகின்றனர். முல்லைத்தீவுக்கான போரை ஆரம்பித்த போது முல்லைத்தீவு கடற்பரப்பில் 25 இற்கும் மேற்பட்ட டோராக்களும் பல நீருந்து விசைப் படகுகளும் பெருமளவு அதிவேக தாக்குதல் படகு அணிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. புலிகளின் தலைவர்கள் கடல் வழியாக தப்பிச் செல்வதைத் தடுக்கவும் புலிகளுக்கு கடல்வழியாக ஆயுதங்கள் வருவதைத் தடுக்கவுமே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறியிருந்தது. அதேநேரம், முல்லைத்தீவு கரையிலிருந்து இந்தக் கடற்படைப் படகுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுமிருந்தன. மூன்று பக்கங்களிலும் புலிகள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் நாலாவது பக்கமாக முல்லைத்தீவு கடல் உள்ளது. புலிகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கடல்வழியாலும் தரையிறங்க முற்படுவது போல் படைத்தரப்பு போக்குக் காட்டியது. இதனால் கடற் கரும்புலிகள் முல்லைத்தீவு கடலில் அடுத்தடுத்து இரு தாக்குதலை நடத்தி கடற்படைப் படகுகளை மூழ்கடிக்கவே கடற்படையினர் நடுக்கடலுக்குச் சென்றுவிட்டனர்.
சாலைப் பகுதியை தற்போது கடற்படையினர் கைப்பற்றி விட்டதால் கடற் புலிகளின் அனைத்து நடவடிக்கையும் தடுக்கப்பட்டு விட்டதாகக் கருதும் படையினர், இனி முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளின் பாரிய அச்சுறுத்தல் இருக்கமாட்டாதெனக் கருதுகின்றனர். தற்போது சாலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பத்துக் கிலோ மீற்றருக்கும் குறைவான கரையோரப் பகுதியே புலிகள் வசமுள்ளது. இதனால் இந்தக் கடற்பகுதியில் கடற்புலிகள் ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடமுற்பட்டால் சாலையிலிருந்தும் முல்லைத்தீவு கரையிலிருந்தும் கடற்படையினர் செயற்பட்டு கடற்புலிகளுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி அவர்களது தாக்குதல் திட்டங்களை முளையிலேயே கிள்ளிவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது. இதைவிட, கடற்புலிகளின் பாரிய அச்சுறுத்தல் இல்லாது போவிட்டதால் முல்லைத்தீவு கடலில் கடற்படைப் படகுகள் கரையோரத்தை அண்டி வரவும் முடியுமென படையினர் நம்புகின்றனர். இதன் மூலம் முல்லைத்தீவுப் பகுதியில் புலிகளின் கரையோர நடவடிக்கையையும் முழுமையாக நிறுத்திவிட படையினர் முயல்கின்றனர்.
இலங்கை வரைபடத்தில் புலிகளின் பகுதி தற்போது ஒரு கைபிடி அளவிற்குள் வந்துவிட்டதால் அந்தப் பகுதியையும் மிக விரைவில் கைப்பற்றிவிட முடியுமென படையினர் கூறுகின்றனர். புதுக்குடியிருப்பை நோக்கி தற்போது ஏழு முனைகளிலிருந்து படையினர் சிறிது சிறிதாக முன்னேற முயல்கின்றனர். ஆட்லறிகள், பல்குழல் ரொக்கட்டுகள், பீரங்கிகள், மோட்டார்கள் புலிகளின் பகுதிகளை நோக்கி தொடர்ச்சியாக மழைபோல் குண்டுகளைப் பொழிய யுத்த டாங்கிகள் சகிதம் ஒவ்வொரு முனையிலும் படையினர் பாரிய முன்னகர்வு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தற்போது விடுதலைப் புலிகள் ஒவ்வொரு முனைகளிலும் மிகக் கடும் எதிர்ப்பைக் காட்டுவதால் படை நகர்வுகள் எதிர்பார்த்த வேகத்தைப் பெறவில்லை.
கடைசி யுத்தத்தில் புலிகளும் தங்களது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றனர். வன்னிப் போர் தொடங்கிய பின்னர் இந்திய கடற்படையின் தீவிர கடல் கண்காணிப்பால் புலிகளின் ஆயுதக் கப்பல்களது வருகையில் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இருந்தும் இடையிடையே அவர்கள் ஆயுதங்களைத் தருவித்துமிருந்தனர். என்றாலும் தற்போதைய இறுதிக்கட்டச் சமரில் படையினர் கப்பல் கப்பலாக ஆயுதங்களை இறக்கி மிகத் தாராளமாகப் பயன்படுத்துகையில் புலிகளால் அவ்வாறு தங்கள் ஆயுதவளத்தை பயன்படுத்த முடியவில்லை. வன்னிக்கான போர் தொடங்கிய பின்னர் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டதற்கு இதுவுமொரு காரணம். ஆரம்பத்திலேயே மூர்க்கமாகப் போரிட்டு ஆயுத வளங்களையும் போராளிகளையும் பெருமளவில் இழந்திருந்தால் தற்போது இறுதிக் கட்டச் சமரில் படையினருடன் இந்தளவிற்கு மோத முடியாது போயிருக்குமென்பதுடன் படையினர் வன்னியை எப்போதோ முழுமையாகக் கைப்பற்றியுமிருப்பர்.
புதுக்குடியிருப்புக்கான போரை படையினர் சகல முனைகளினூடாகவும் தீவிரப்படுத்துகையில் ஒவ்வொரு முனையிலும் அதனை எப்படி முறியடிப்பது என்பது குறித்து புலிகளும் தீவிரமாச் சிந்தித்து அதற்கேற்ப செயற்பட முனைகின்றனர். பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று புலிகளின் முழுமையான வீழ்ச்சி குறித்த செய்தியை உலகத்திற்குத் தெரிவிக்க அரசு முற்பட்டிருந்தது. ஆனால், அது சாத்தியப்படவேயில்லை.
கடந்த 1ஆம் திகதி புதுக்குடியிருப்புக்கு தெற்கேயும் நந்திக்கடல் வாவிக்கு மேற்கேயுமுள்ள கேப்பாப்புலவு மற்றும் மன்னக்கண்டல் பகுதிக்குள் புலிகளின் அணிகள் புகுந்தன. சுதந்திரதினத்திற்கு முன் புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைந்துவிட வேண்டுமென்பதற்காக இந்தப் பகுதியில் படையினர் அன்றையதினம் (1ஆம் திகதி) முழு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். போர்த் தளபாடங்கள் அந்தப் பகுதியில் மிகப் பெருமளவில் குவிக்கப்பட்டு மிகப் பெருமளவில் படையினரும் முழு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்த புலிகள் இந்தப் பகுதியில் பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர். 1ஆம் திகதி அதிகாலை ஆரம்பமான இந்தச் சமர் மறுநாள் மாலைக்குப் பின்னரும் தொடர்ந்ததாக படைத்தரப்பு தெரிவித்தது. படையினரின் வாகனங்கள், யுத்த டாங்கிகள், உழவு இயந்திரங்கள் என எல்லாவற்றின் மீதும் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். இதனைப் பின்னர் படைத்தரப்பும் உறுதிப்படுத்தியது. 
பலத்த அழிவுகள் ஏற்பட்டன. புலிகளின் உக்கிர தாக்குதலையடுத்து படையினர் இந்தப் பகுதியில் தங்கள் முன்னரங்க நிலைகளை மீள அமைக்கும் நிலையேற்பட்டது. 59ஆவது படையணியின் பல பிரிவுகளது தலைமையகங்கள் இந்தப் பகுதிகளிலேயே அமைந்திருந்தன. இவையெல்லாம் புலிகளின் கடும் தாக்குதல்களுக்கிலக்காகின. இந்தப் பகுதியில் கடும் சமர் வெடித்தது. புதுக்குடியிருப்புக்கு தெற்கேயும் நந்திக்கடல் வாவிக்கு மேற்கேயும் தொடர்ந்தும் மோதல் நடைபெற்றது. படையினரின் பாதுகாப்பு நிலைகள், அவர்களது வாகனங்களெல்லாம் தாக்குதல்களுக்கிலக்காகின. புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்றுவதற்கு இந்தப் பகுதிகளில் தயாராயிருந்த பெருமளவு படையினர் தாக்குதல்களுக்கிலக்கானார்கள்.
ஒரு கட்டத்தில் இவர்களுக்கு உதவுவதற்காக மாங்குளம் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 53ஆவது படையணியின் கமாண்டோப் பிரிவான எயார் மொபைல் பிரிகேட்டை வரவழைக்க வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் மிகவும் உக்கிரமான சமர் நடந்தது. மறுநாள் 59ஆவது படையணியை வலுப்படுத்தவேண்டிய நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டன. விசேட படையணி 4 ம் கடும் தாக்குதலுக்குள்ளானது. மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டதுடன் முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மீளமைக்கப்பட்டன (பின் நகர்த்தப்பட்டது). ஒட்டுசுட்டானுக்கு வடக்கேயும் புதுக்குடியிருப்புக்கு தெற்கேயும் புலிகள் ஊடுருவியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (3ஆம் திகதி) கரும்புலிகள் இரு பாரிய தாக்குதல்களை நடத்தினர். பெருமளவு வெடிபொருட்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கேப்பாப்புலவில் இரு பகுதிகளில் படையினரின் முன்னரங்க நிலைகள் மீது இரு கரும்புலி வாகனங்கள் பாரிய தற்கொலைத் தாக்குதலை நடத்தின. தற்கொலைத் தாக்குலைத் தொடர்ந்து பெருமளவு புலிகள் படையினரின் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தவே பெரும் சமர் வெடித்தது. பேரழிவுகள் ஏற்பட்டன. எனினும், புலிகளின் நோக்கத்தை தாங்கள் முறியடித்ததாக படைத்தரப்பு கூறியது.
இந்தத் தாக்குதல் மூலம் ஒட்டுசுட்டான் வரை செல்வதும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே நிலைகொண்டுள்ள படையினரின் தொடர்புகளைத் துண்டிப்பதுமே புலிகளது நோக்கமாயிருந்ததாகவும் எனினும் அது கைகூடவில்லையெனவும் படைத்தரப்பு தெரிவித்தது. மிகப் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சமரில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டும் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளதாக இணையத்தளச் செதிகள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்காக படையினர் களஞ்சியப்படுத்தியிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் புலிகள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக "தமிழ்நெற்' இணையத் தளம் தெரிவித்துள்ளது. படையினரின் பகுதிக்குள் அவர்களுக்கான விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 20 இற்கும் மேற்பட்ட வாகனங்களையும் தாங்கள் அழித்துள்ளதாக புலிகள் தெரிவித்ததாக அந்த இணையத் தளங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு புதுக்குடியிருப்புக்கான சமர் மிகத் தீவிரமடைந்துள்ளது. புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளை நோக்கிய நகர்வுகளுக்காக தாங்கள் மேற்கொள்ளும் ஆயத்தங்களை அந்தந்தப் பகுதிகளுக்குள் ஊடுருவி அறியும் புலிகள் அந்தத் தயாரிப்பு வேலைகளை சீர்குலைப்பதற்காக அந்தப் பகுதிகளில் பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்த முயலக்கூடுமென படைத்தரப்பு கருதுகிறது. இதனால் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி இந்தப் பகுதிகளில் புலிகள் ஒன்றுகூடும் இடங்கள் மீது 24 மணி நேரமும் கடும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. புலிகள் ஒன்றுகூடி, படையினர் பெருமளவில் திரண்டுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளிலும் படையினர் இறங்கியுள்ளனர். புலிகளின் பகுதிகள் படையினரின் அனைத்து வகைத் தாக்குதலுக்குமுரிய எல்லைக்குள்ளிருப்பதால் படையினரின் முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் குறிப்பிட்ட தூரம் வரை கனரக ஆயுதங்கள் 24 மணிநேரமும் குண்டுகளைப் பொழிந்து வருகின்றன. புலிகள் பதில் தாக்குதலையும் முறியடிப்பு மற்றும் ஊடறுப்புத் தாக்குதலையும் பெருமளவில் நடத்தக் கூடுமென படையினர் கருதுகின்றனர்.
இதற்கேற்ப அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைகின்றனர். வன்னியில் 99 வீதமான பகுதியைக் கைப்பற்றிவிட்டு ஒரு வீதமான பகுதியை கைப்பற்றுவதில் நெருக்கடிகள் இருப்பதை படையினர் உணர்கின்றனர். இதுவரை காலப் போரில் ஏற்பட்ட இழப்புகளாலும் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதில் பெருமளவு படையினரை நிறுத்தியதாலும் கடைசி நேர யுத்தத்திற்காக குறிப்பிட்டளவு படையினரையே பயன்படுத்தக்கூடிய நிலையுள்ளது. இதனால் களமுனைக்கு தொடர்ந்தும் படையினரை அனுப்பி புலிகளின் எந்த வகைத் தாக்குதலையும் முறியடிக்க படையினர் முயல்கின்றனர். இறுதிப் போரில் புலிகள் தங்கள் வளங்கள் அனைத்தையும் பயன்படுத்த முயல்வரெனப் படையினர் கருதுகின்றனர். அதேநேரம், யுத்தம் மிகக் குறுகலான பகுதிகளில் நடைபெறும் போது கனரக ஆயுதங்களை பயன்படுத்த முடியாத நிலை கூட வரலாம். கனரக ஆயுதத் தாக்குதல் முன்னேறும் படையினரைக் கூட பாதிக்கலாமென்பதால் படையினர் மேலும் முன்னேறும்போது கனரக ஆயுதப் பாவனையை நிறுத்தி சிறிய ரக ஆயுதங்களையே பயன்படுத்த வேண்டியிருக்கும்.
தற்போதைய நிலையில் மக்களுக்கு ஏற்படும் பேரழிவுகள் குறித்து சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ள போதும் யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்ல அரசு தயாரில்லை. யுத்த நிறுத்தம் பற்றி எவர் கோரிக்கை விடுத்தாலும் அவர்கள் புலிகளின் ஆதரவாளர்களென முத்திரை குத்தப்படுகின்றனர். இந்தப் போர் குறித்து எந்த நாட்டது அக்கறையையும் ஏற்றுக்கொள்ள அரசு தயாரில்லை. சில அயல்நாடுகள் போருக்கு பூரண ஆதரவு வழங்குவதால் சர்வதேசத்தின் அழுத்தங்களை அந்த நாடுகளின் ஆதரவுடன் சமாளிக்க அரசு முற்படுகிறது. இதனால் முடிவொன்று கிட்டும் வரை இந்தப் போருக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கப்போவதில்லை என்பது நிச்சயம்.

 

 

StumbleUpon.com Read more...

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மலேசியாவில் இளைஞன் தீக்குளிப்பு

 
 வீரகேசரி நாளேடு 
 
 
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கையரான இளைஞர் ஒருவர் மலேசியாவின் சிரம்பானில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மூலம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று காலை ஜாலான் தம்பின்ரஹாங்கில் உள்ள பிடார கோனரில் இடம்பெற்றுள்ளது.

பெட்ராலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு எரியூட்டிக் கொண்டதாகவும் தீயை அணைக்க வாடகைக் கார் சாரதி ஒருவர் தன்னிடம் இருந்த தண்ணீரை ஊற்றி எரிந்து கொண்டிருந்தவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அத்துடன் மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். எனினும் அம்புலன்ஸ் வண்டி செல்வதற்குள் தீயிட்டுக் கொண்டவர் உயிரிழந்துள்ளார்.

மலேசியாவின் சிரம்பானில் தொழில் செய்து வந்த இலங்கையைச் சேர்ந்த 28 வயதான மடைராஜா என்ற தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் நாட்குறிப்பு ஏடு, கடவுச்சீட்டு, அவரின் புகைப்படம் என்பவற்றை காவற்றுறையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள நாட்குறிப்பு ஏட்டில் இருந்து காவற்றுறையினர் கடிதம் ஒன்றை எடுத்துள்ளனர். இலங்கையில் நிரந்தர போர்நிறுத்தம், உடனடியாக பேச்சுவார்த்தை, அப்பாவித் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒபாமா உடன் இலங்கை செல்வதுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நோர்வே தூதுவர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஆகியோருடன் இலங்கை சென்று இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க உதவ வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர் இந்தக் கடிதத்தில் முன்வைத்துள்ளார்.

இந்த டயரியில் உள்ள கடிதத்தை வைகோவிடம் ஒப்படைக்கவும். அவர் அதனை ஒபாமாவிடம் கொடுத்து இலங்கையின் அப்பாவித் தமிழர்களும் பச்சிளம் குழந்தைகளும் மடிவதை தடுக்க உதவ வேண்டும் என அந்தக் கடிதத்தில எழுதப்பட்டுள்ளது.
 
 
 

 

 
 

StumbleUpon.com Read more...

வன்னி செய்திகள்:BREAKING NEWS DEEPAM TV

StumbleUpon.com Read more...

நட்சத்திர நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸிற்கு மூன்று மாத காலத் தடை

 
  அமெரிக்காவின் நட்சத்திர நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸிற்கு மூன்று மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு பெல்ப்ஸ் எந்தவொரு நீச்சல் போட்டியிலும் பங்குபற்றக் கூடாதென அமெரிக்க விளையாட்டுத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகைப்பிடிப்பதனைப் போன்றதொரு விளம்பரமொன்றில் தோன்றிய காரணத்திற்காக பெல்ப்ஸிற்கு இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் சட்ட விதிகளை பெல்ப்ஸ் மீறவில்லை என்ற போதிலும் பிழையான முன்னுதாரணமாக பெல்ப்ஸ் திகழக் கூடாது என்ற காரணத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நீச்சல் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. மைக்கல் பெல்ப்ஸ் அமெரிக்காவில் மிகவும் பிரபல்யம் பெற்ற ஓர் விளையாட்டு வீரர். அவரை சிறுவர் முதல் பெரியோர் வரையில் பின்பற்றி வருவதாகவும், புகைப்படித்தலை தூண்டும் வகையிலான புகைப்படங்களில் தோன்றுவதன் மூலம் சமூகத்தின்று பிழையான எண்ணக்கருவை பெல்ப்ஸ் வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் இழைத்த தவறையிட்டு பெரும் வேதனையடைவதாகவும், சகலரிடமும் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/vira/sports/head_view.asp?key_c=392

StumbleUpon.com Read more...

breakingnews-காணாமல்போன 750 படையினரை மீட்டுத்தருமாறு பெற்றோர் ஐ.சி.ஆர்.சியிடம் கோரிக்கை

     
 
 
altஇலங்கை இராணுவத்தில் இருந்து காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், தமது  பிள்ளைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தேடிப்பார்க்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

இராணுவ செய்தி ஊடகத்தினால், இவர்கள் விஸ்வமடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டதையடுத்தே அவர்கள் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.
 
கண்டியில் உள்ள, இராணுவத்தில் காணாமல் போனவர்களின் சங்கத்தினால், சர்வதேச செஞ்சிலுவை சஙகத்தின் கொழும்பு கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், சுமார் 750 இராணுவத்தினர் விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 3ம் திகதி பெப்ரவரி மாதம் இலங்கை இராணுவத்தினால் விஸ்வமடு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட  நகர்வினை தாங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், அந்த பிரதேசத்தில் உள்ள தடுப்பு முகாமில் சுமார் 750 க்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
இது தொடர்பான புகைப்படங்கள் இராணுவ இணையத்தளத்தில் காண்பிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அவர்களை விடுவிப்பது தொடர்பில் துரிதமாக செயற்பட வேண்டும் என அந்த கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

http://www.swissmurasam.net/news/breakingnews-/11950--750-----.html

StumbleUpon.com Read more...

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகள் வலிந்த தாக்குதல்: சூப்பர் டோரா மூழ்கடிப்பு: 15 கடற்படையினர் பலி

 
 
முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி நடத்திய வலிந்த தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் சூப்பர் டோரா மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:  முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5:30 நிமிடம் தொடக்கம் 6:00 மணி வரை சிறிலங்கா கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில், கடற்படையினரின் சுப்பர் டோரா கடற்கரும்புலிகளின் தாக்குதலில் முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த 15 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படையினரின் மற்றொரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.  இம்மோதலில் கடற்புலிகள் நால்வரும் கடற்கரும்புலிகள் இருவரும் வீரச்சாவடைந்துள்ளனர்.

 

http://www.tamilwin.com/view.php?2a36QVH4b33P9EMe4d46Wn5cb0bf7GU24d2YYpD4e0d5ZLu0ce02g2hF0cc3tj0Cde

StumbleUpon.com Read more...

ஈழத்தமிழர் பிரச்சனை: ரவிச்சந்திரன் இறுதி கடித நகல்


ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தீக்குளிப்பதற்கு முன்பு தனது இல்லத்தில் இரு பக்கம் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

                   

இந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது,

என் பெயர் எஸ். ரவிச்சந்திரன். த.பெ. சுந்திரமூர்த்தி, 1 ஏ, பிடாரி தெரு, சீர்காழி.

தமிழ் ஈழத்தை காப்பாற்றுவோம். தமிழர்களை தலை நிமிரச்செய்வோம். தமிழனை வாழ வைப்போம். என்றும் அன்புடன் ரவிச்சந்திரன்..

ஈழத்தமிழர் வாழ வழிசெய்யாத இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மானங்கெட்ட தமிழக அரசே என் உயிர் துறந்தால் தரமுடியுமா? என் அருமை தமிழர்களே..

இலங்கை அரசே என் உயிர் தருகிறேன்.  போரை நிறுத்த வேண்டும்.
 
 

StumbleUpon.com Read more...

இந்திராகாந்தி கொலையை மறைத்த ராஜீவ்காந்தி

 



ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சீர்காழி ரவிச்சந்திரனின் உடலுக்கு பெரியார் திராவிட கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெரியார் திராவிட கழகத்தைச் சேர்நத் விடுதலை ராஜேந்திரன் பேசம்போது,

ரவிச்சந்திரன் சார்ந்திருந்த அரசியல் கட்சித் தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் இல்லை என்று. அதே தலைவர் நாளை ஈழத்தில் சாவது தமிழர்கள் இல்லை என்று சொல்லலாம். ராஜீவ் காந்தியின் மரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனையாயிரம் தமிழர்களை கொல்ல வேண்டுமா? இந்திரா காந்தி காலத்தில்தான், விடுதலைப்புலிகளுக்கு பயிற்சிப் பட்டறை நிறுவப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

இந்திராகாந்தி சீக்கியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, விசாரணை செய்த தாக்கர் ஆணையம் ஒரு கருத்துரையை மட்டும் முன் வைத்தது. மரணத்திற்கு முன்பு குண்டு துளைக்காத ஆடை அணிந்து சென்றுகொண்டிருந்தார். ஆனால் அன்று மட்டும் குண்டு துளைக்காத ஆடை இல்லாமலேயே சென்றுள்ளார். இந்த ரகசியம் உதவியாளர் ஆ,.கே.தவான் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இது எப்படி பாதுகாப்பாளராக இருந்த சீக்கியருக்கு தெரிந்தது. ஆகவே ஆர்.கே.தவானை விசாரிக்க வேண்டும் என்று அறிவித்தது.

இந்திராகாந்தி இறப்புக்கு பின் ஆட்சிக்கு வந்த ராஜீவ்காந்தி, தவானை விசாரிக்க மறுத்துவிட்டார். நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையம் அறிவித்தும் தவானை விசாரிக்காதது ஏன்? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதும், அந்த விசாரணை செய்யும் சட்டத்தையே திருப்பி விட்டார். அதன்பிறகு தவானை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆக்கியிருக்கிறார்கள்.

இந்த விசாரணையை யாருக்காக மூடி மறைத்தார். இலங்கையே நிறுத்தச் சொன்னாலும் இந்தியா, போரை நிறுத்துவதாக இல்லை. இதில் பல சூழ்ச்சிகள் இருக்கிறது. புலிகளுக்கு இன்று சர்வதேச தமிழன் தான் நிதி மற்றும் ஆயுத உதவி செய்கிறான். வரும் தேர்தலில் ஈழப்பிரச்சனையை முன் வைத்து சந்திப்போம்
 

StumbleUpon.com Read more...

Makkal Tv Night 10 pm News 07.02.09 (Video Clip)

StumbleUpon.com Read more...

அலை அலையாக தாக்கிய புலிகள்; முறியடிப்பினை நெறிப்படுத்திய சரத் பொன்சேகா: கொழும்பு ஊடகம்

 
 
முல்லைத்தீவு பகுதியில் கடந்த வாரம் தமிழீழ விடுதலைப் புலிகள்  அலை அலையாக வந்து தாக்குதலை நடத்தியதாகவும் இத்தாக்குதலை முறியடிப்பதற்கு இராணுவத் தலைமையகத்தில் இருந்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தாக்குதலை நெறிப்படுத்தியதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக "லக்பிம" வார ஏட்டில்  வெளிவரும் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
சிறிலங்கா அரசாங்கம் தனது  61 ஆவது சுதந்திர நாளை கொண்டாடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கையில் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் பாரிய தாக்குதலினை நடத்தினர்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை பொலித்தீன் பைகளில் பொதி செய்து வருகின்றனர். எனவே முல்லைத்தீவு நீரேரியை கடந்து தாக்குதலினை நடத்தக்கூடும் என கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறையினர் எச்சரித்திருந்தனர்.
59 ஆவது படையணியின் முன்னனி பாதுகாப்பு நிலைகள் கடல் நீரேரியை நோக்கியே அமைந்துள்ளன.
எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.09) அதிகாலை விடுதலைப் புலிகளின் 30 கரும்புலிகள் படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவியிருந்தனர். அவர்கள் படையினரை ஏற்றிச் சென்ற உழவூர்தி மற்றும் பேருந்து என்பனவற்றை முதலில் தாக்கியழித்தனர்.
இதனைத் தொடர்ந்து பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்கள் படையினரின் நிலைகள் மீது மழை போல பொழியப்பட்டன.
எறிகணைகள் வீழந்து வெடித்த போது ஏறத்தாழ 700 தொடக்கம் 1,000 வரையான விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடங்கினர்.
59-3 ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் இந்த மோதலில் சிக்கி கொண்டது.
இதனைத் தொடர்ந்து, படையினர் 3 கிலோ மீற்றர் தூரம் பின்நகர்ந்தனர். மோதல் நடைபெற்ற பகுதிக்கு மேலதிக படையணிகள் நகர்த்தப்பட்டன. 53 ஆவது படையணியின் வான்நகர்வு பிரிகேட்டைச் சேர்ந்த படையினரும் அங்கு நகர்த்தப்பட்டனர்.
 
முல்லைத்தீவு நகரத்தை கைப்பற்றுவதே விடுதலைப் புலிகளின் திட்டம்.

இராணுவம் பெருமளவில் பல்குழல் வெடிகணைகள் மற்றும் பீரங்கி எறிகணை தாக்குதல்களை நடத்தியதுடன் வான்படையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் முதலில் நடத்திய அதிர்ச்சிகரமான தாக்குதலைத் தொடர்ந்து பெருமளவிலான படையினர் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன படையினரின் எண்ணிக்கை சர்ச்சைக்குரிய தகவல் என்பதனால் அதனை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை கடல் நடவடிக்கைகளை வழிநடத்த, கேணல் பானு மற்றும் கேணல் சொர்ணம் ஆகியோர் தரை நடவடிக்கைகளை வழி நடத்தியிருந்தனர்.
 
59 ஆவது படையணியை முல்லைத்தீவு நகரத்தில் இருந்தும், நடவடிக்கை படையணி நான்கை ஒட்டுசுட்டான் வரையிலும் பின்நகர்த்துவதற்கு அவர்கள் முயற்சித்திருந்தனர்.
படையினரின் பதில் நடவடிக்கைகளை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தலைமையகத்தில் இருந்து நேரடியாக நெறிப்படுத்தினார்.
இரண்டாவது நாள் விடுதலைப் புலிகளின் கரும்புலிகள், படையினரின் முன்னணி நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் மூலம் தாக்குதலை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் அணிகள் தாக்குதலை உக்கிரப்படுத்தியிருந்தன. இராணுவம் தனது சிறப்பு அணிகளையும், கொமோண்டோ அணிகளையும் அங்கு நகர்த்தியது.
கடந்த புதன்கிழமை (04.02.09) அதிகாலை வரை மோதல்கள் தொடர்ந்தன.
இராணுவத் தளபதி கடந்த புதன்கிழமை அதிகாலை 3.00 மணிவரை கட்டளை தலைமையகத்தில் இருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார்.
 
எனினும் பாதுகாப்பு அமைச்சு தாக்குதல் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.
விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் தொடர்பாக மூன்று நாட்களாக தகவல் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.
விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்து வருகின்றது.
எனவே தான் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலினை நடத்தியதனை பொதுமக்கள் அறிவதை அரசாங்கம் விரும்பிவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP