சமீபத்திய பதிவுகள்

இதுதான் உண்மை-வன்னியிலிருந்து புலிகள் தளபதியின் வீடியோ பேட்டி

>> Sunday, April 5, 2009

Ithuthan Unmai - Vanniyilirunthu Thalapathy Amirthap


StumbleUpon.com Read more...

இந்தியத் தேர்தலும் தமிழகத் தலைவர்களின் கோமாளித்தனமும் ?




நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினை எடுபடாது என்றும் பொதுத் தேர்தலை நிச்சயம் அது பாதிக்காது என்றும் இப்பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்றும் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களும் இவர்களுக்குப் பக்கபலமாக முதல்வர் கலைஞர் கருணாநிதியும் விடுத்த எச்சரிக்கை தூள்தூளாகி, இலங்கைத் தமிழர் இனப்படுகொலை கண்டிக்கப்படுவதுடன் அங்கு போர் நிறுத்தம் அவசிய அவசரம் என்ற உரத்த குரல் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமிருந்து எழும் நிலைக்கு இந்தியப் பொதுத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினை ஒரு கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது! அதே நேரத்தில், பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் ஆற்றவேண்டிய கடமையை, தமிழ்ப் பகை சக்திகளை முறியடிக்க வாக்குரிமையை துருப்புச் சீட்டாக பயன்படுத்த வேண்டிய அவசியத்தை பல்வேறு தமிழ் அமைப்புகளும் ஆவுசெது தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில், தேசிய முற்போக்குத் திராவிட கழக விஜயகாந்த் பிரவேசத்துடன் நான்கு அணிகள் தோன்றிய நிலையில் மின்னாமல் முழங்காமல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஐந்தாவது கட்சியாக தமிழ்நாட்டில் அடியெடுத்து வைத்ததுடன் கட்சித் தலைவி மாயாவதி மதுரை வந்து, தமிழ்நாட்டின் முப்பத்து ஒன்பது தொகுதிகளுக்குமான தனது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு விட்டார்! ஆனால், தமிழகத்தின் மூத்த கட்சிகள் நிலை...? நேற்றுவரை கூட்டணி உடன்பாடு கண்டும் காணாமலும் வேட்பாளர்கள் தெரிவு முடிந்தும் முடியாமலும் தொகுதி உடன்பாடு முறிந்தும் முறியாமலும் ஒரு தேக்க நிலையில் தேர்தல் தேர் அசைய ஆரம்பித்திருக்கும் கட்டத்தில் கட்சித் தலைவர்கள், ஆளை ஆள் தூற்றி உச்ச ஸ்தானத்தில் வசைமாரி பொழியும் காட்சிகளே தினசரி தொலைக்காட்சி "நிகழ்ச்சி'களாக அரங்கேறி வருகின்றன. முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு "தமிழினத் துரோகி' பட்டம் தாராளமாக மாறி மாறி சூட்டப்பட்டு வருகின்றது.

மேலும் வாசிக்க aஅழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP