சமீபத்திய பதிவுகள்

தொலைக்காட்சியின் தமிழர் செய்திகள்

>> Monday, May 4, 2009

StumbleUpon.com Read more...

பிரபாகரன் ஒரு சுதந்திர போராட்ட வீரர், நாங்கள் அவரை மதிக்கிறோம்; அவர் எம்மினத்திற்காகவே போராடுகிறார்:அவள் மட்டும் அல்ல அகிலமும் சொல்லும் காலம் வரும்

பிரபாகரன் ஒரு சுதந்திர போராட்ட வீரர், நாங்கள் அவரை மதிக்கிறோம்; அவர் எம்மினத்திற்காகவே போராடுகிறார்: வன்னியிலிருந்து தப்பி இந்தியா வந்த இளம் தமிழ் பெண் பேட்டி
பிரபாகரன் எங்கள் தலைவர்;  நாங்கள் அவரை மதிக்கிறோம்; அவர் எங்களுக்காகவே போராடுகிறார். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்.  அவர் நீர்மூழ்கி கப்பல் மூலம் தப்பியிருந்தால் நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்  என வன்னியிலிருந்து தப்பி வந்த இளம் தமிழ் பெண் இந்திய தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது பொய். இப்போதும் குண்டுவீச்சு தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களை பொறுத்த வரை பிரபாகரன் தலைசிறந்த வீரர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டதாக கூறி அவர் உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டார். ஆனால் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்போது நான் நாடற்றவள். ஆனால் நான் இலங்கையில் உள்ள ஈழத்தை சேர்ந்தவள். என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆகவே என்னுடைய உருவத்தை தொலைக்காட்சியில் காட்ட வேண்டாம். நான் திரும்பி எனது சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும்.

சாவதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் உயிரை பலி கொடுப்பதற்கு உரிய காரணம் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணத்திற்காக நான் உயிரிழக்க வேண்டும்.
இலங்கை வன்னிப் பகுதியில் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறுவது பொய். அங்கு இப்போது நடப்பது கொலை, கடத்தல்தான்.

இப்போது கூட வன்னியில் உள்ள எனது தோழியிடம் போனில் பேசினேன். நான் பேசிக் கொண்டிருக்கும் போதே குண்டுவீச்சு தாக்குதல் நடப்பது கேட்டது. விமானங்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளன. எந்தவித ஆதரவுமின்றி தமிழர்கள் சாலையில் படுத்துக்கிடக்கிறார்கள். பாதுகாப்புக்காக ஒவ்வொரு இடமாக அவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.

நாங்கள் ஒருபோதும் வாழ்க்கை நடத்தவில்லை. இந்த தீவில் எப்படியோ நாட்களை கடத்தினோம். நாங்கள் மகிழ்ச்சியோடு வாழக் கூடிய நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்காகத் தான் நாங்கள் இப்போது போரிட்டு கொண்டிருக்கிறோம்.

நாங்கள் பிரபாகரனை மதிக்கிறோம். அவர் எங்கள் தலைவர்; அவர் எங்களுக்காக போரிடுகிறார். அவர் சுதந்திர போராட்ட வீரர். இவ்வாறு அந்த பெண் கூறினார். பிரபாகரன் நீர்மூழ்கி கப்பல் மூலம் தப்பியிருக்கலாம் என கேட்டபோது, "அப்படி நடந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்'' என்றார்.

இலங்கையில் நடைபெறும் கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எங்கள் தாய்நாடான இந்தியாவை கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஆபிரிக்காவிலோ, மத்திய கிழக்கிலோ அல்லது பாலஸ்தீனத்திலோ பிறந்திருக்க வேண்டுமா? என்பதுதான் என்னுடைய கேள்வி என்றும் அந்த தமிழ்பெண் கூறினார்.

StumbleUpon.com Read more...

வீ. ஆனந்தசங்கரி எனக்கு அனுப்பிய மெயில்(மகிந்த ராஜபக்ஷக்கு அனுப்பிய மெயில் காப்பி)


இன்றைக்கு மெயில் திறந்து பார்த்த பொழுது எனக்கு த.வி.கூ விடம் இருந்து ஒரு மெயில் வந்திருந்தது.அதை வாசகர்களுக்கு காண்பிக்க விரும்பி உங்கள் முன் பதிவு செய்கிறேன்.
 
 
 
 
 
 
 
 

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,

அலரி மாளிகை,

கொழும்பு - 03


மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,


வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள்


இலங்கை ஓர் தேசமாக தனது நாணயத்தைக் இழக்காது காப்பாற்றக் கூடிய வகையில் தங்களில் உடன் நடவடிக்கைக்காக நான் கவலையடையும் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தங்கள் நடவடிக்கைகளுக்கு எனது உயிருக்கு பெரும் அச்சுறுததல் இருந்தும் கூட எனது முழு ஒத்துழைப்பை தங்களுக்கு நல்கி தங்களை தப்பாக என்றும் நான் வழி நடத்தவில்லை. நான் ஆதாரமற்று கேள்விப்படுவனவற்றையோ, அல்லது பிறர் கூறும் அனைத்தையுமோ முற்று முழுதாக நம்புகிறவன் அல்ல. 


இன்றும் வன்னியில் அகப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்துக்கு மேல் இருக்கின்றனர் என்று நம்பகமான செய்தி கிடைத்திருக்கின்ற போதும் நிச்சயமாக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் நம்புகின்றேன். முன்பு ஒரு சந்தர்பத்தில் எனது எண்ணிக்கை சரியானதென நிரூபணமானதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். துரதிஷ்டவசமாக விமானத்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து செல், ஆட்டிலறி தாக்குதல்கள் தொடர்கின்றன. அவற்றை உடன் நிறுத்தி அப்பாவி பொது மக்களை காப்பாற்றுங்கள். 


நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஒரு விடயம் யாதெனில் யுத்த நடவடிக்கைகள் பல இடம்பெயர்ந்தோரை கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அதேவேளையில் நலன்புரி நிலையங்களுக்கு தப்பி வந்துள்ளவர்களை பெரும் பயத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்குவதோடு அவர்களின் உறவுகள் பலர் இன்னும் வன்னியில் இருப்பதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். ஓவ்வொரு உயிரும் பெறுமதிமிக்கதால் அப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமை தங்களுக்குண்டு. நான் முன்பு தங்களுக்கு எழுதியது போல சில விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் போது நம் நாடு சர்வதேச சமூகத்தால் பெரும் கண்டனத்துக்குள்ளாகும். 


வன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரை மாதம் 2ம் திகதி 1100 மெற்றிக் தொன் உணவு அங்கே அனுப்பப்பட்டதன் பின் 28ம், 29ம் திகதிகளில் தினம் 30 மெற்றிக் தொன் உணவே சென்றுள்ளது. இந்த இரு நாட்களிலும் அவர்களுக்கு தினம்  கிடைத்துள்ள சீனி 1000 கிலோ கிறாம் மட்டுமே. ஆகவே தயது செய்து உடன் தேவைப்படும் உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 


இக் கடைசி நேரத்திலும் கூட நான் கூறும் ஆலோசனை தங்களுக்கு ஏற்புடையதாயின் அதை அமுல்ப்படுத்த முயற்சியுங்கள். எனது ஆலோசனை யாதெனில் அரசுக்கு ஏற்புடையதான ஓர் சர்வதேச அமைப்பை வன்னிக்கு அனுப்பி மக்களை விடுவிக்குமாறும், ஆயுதங்களுடன் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதாகவும் கூறி அனுப்பி வையுங்கள். இதற்குத் தேவையான இருவார காலக்கெடுவும் கொடுக்கலாம். பொது மக்களை வெளியில் கொண்டுவர அத்தகையதோர் ஏற்பாடு செய்யத் தவறின் முடிவில் நாட்டின் நற்பெயரை நாசம் செய்யும் ஓர் பாரிய அனர்த்தம் தேசிய ரீதியில் ஏற்படவும் கூடும்


நன்றி
 


வீ. ஆனந்தசங்கரி

தலைவர்  த.வி.கூ

StumbleUpon.com Read more...

தற்போதைய இலங்கைச் செய்திகள்

StumbleUpon.com Read more...

இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் பட்டியல்

 
 

 

இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் பிடிஎப் வடிவில்

 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP